எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்ஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி! ஐந்தாவது படம் இரண்டு நாட்களுக்கு முன் அவரது பிறந்த நாளான ஜூன் 21, 2010 அன்று எடுக்கப்பட்டது என்று விமல் சொல்கிறார்.

அன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்

 1. விமல் says:

  அன்புடன் RV-க்கு

  நன்றி

  – விமல்

 2. raju says:

  RV,Vimal

  S.s.rajendran seems to have preserved himself rather well-assuming the present photo is the “latest” photo.

  Raju-dubai

 3. விமல் says:

  பட வரிசையில் உள்ள 5-வது படம் அவருடைய பிறந்த நாளான ஜூன் 21,2010 அன்று எடுக்கப்பட்டது.

  நன்றி

  – விமல்

 4. vijayan says:

  இந்திய பாராளுமன்றத்திற்கே இடைதேர்தல் வர காரணமானவர் என்ற வகையில் இலட்சிய நடிகரை,சேடப்பட்டி சிங்கக்குட்டியை யாராலும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா.

 5. ராஜன் says:

  ஆர் வி

  நீங்களும் டை அடித்து விக் வைத்து மேக்கப் போட்டு பட்டுச் சொக்காய் எல்லாம் போட்டு வந்தால் 80 வயதிலும் 20 வயது ஆர் வி போலவே இருப்பீர்கள் :)) எஸ் எஸ் ஆரின் மகன் தண்ணீர் தண்ணீர் படத்தில் நிருபர் வேடத்தில் நடித்தார் என்று நினைக்கிறேன் முத்துராமன், சிவாஜி வாரிசுகள் போல இவர் வாரிசுகள் சினிமாவில் வரவில்லை. இவர் மட்டும் அவ்வப் பொழுது ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து விலகி சேர்ந்து பத்திரிகைகளில் பேர் வருமாறு பார்த்துக் கொள்கிறார். அதன் பிறகு ஆளைக் காணோம்.

  ராஜன்

 6. BaalHanuman says:

  அன்புள்ள ராஜன்,

  தமிழ்மகன் சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்தித்த அனுபவங்களைக் கூறுகிறார்…

  பழைய ஞாபகங்களும் புதிய ஞாபகங்களும்
  =============================================
  எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை’, ‘வானம்பாடி’யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.

  இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.

  மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.

  கிளம்பும்போது “நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே” என்றார் என்னிடமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: