எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!


‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறுகிறார்…..

எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்.ஜி.ஆரைத் தத்தெடுத்து வளர்த்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.  அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.
https://i1.wp.com/www.mgrhome.org/Pictures/image005.gif
பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான  விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை  அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.  அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது!


ஆசிரியர்: ஜெயராமன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சமையல்
ISBN எண்: 978-81-8476-103-0
விலை:  ரூ. 45விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!
தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!
தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.
வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு–>படிப்பு

நடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்…


ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாக…..
https://i0.wp.com/lh5.ggpht.com/sharevivek/SH3P95HwqmI/AAAAAAAAB3s/xxjgrlT5sdE/kaviyarasar_thumb.jpg
சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

கவியரசு கண்ணதாசன்

https://i0.wp.com/www.sangam.org/2008/11/images/Sivajiwithhispalsonhisweddingday1952May1.jpg

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கம்: சிவாஜி பற்றி வைரமுத்து

எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?


தமிழ்மகன் கூறுகிறார்…..

தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.

https://i1.wp.com/archives.chennaionline.com/chennaicitizen/images/06mar-ph01.jpg

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.

எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.

72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.

https://i1.wp.com/www.hindu.com/mp/2005/10/06/images/2005100600670301.jpg

கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.

வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.

“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.

“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.

மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.

இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

ஒரு விசித்திரப் பிரச்சினை


என்னால் இப்போது படங்களை வர்ட்பிரஸ்ஸில் அப்லோட் செய்யமுடியவில்லை. பதிவோடு ஒன்றிரண்டு படங்களை போடுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும். அதுவும் அன்றும் இன்றும் சீரிஸில் படம் இல்லாமல் எப்படி? பிரச்சினை தீரும் வரை ததிங்கினத்தோம்தான்…

“அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன்


அங்காடித் தெரு நல்ல படம். தமிழுக்கு சிறந்த படம். பார்த்த யாரும் இது வரை படம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் அந்தப் படத்தில் ஜாதி, மதக் கண்ணோட்டத்தில் குறை கண்டவர்கள் உண்டு. கடை முதலாளி பூஜை செய்யும் ஹிந்துவாக காட்டப்படுகிறாரே, அவரை நமாஸ் செய்யும் முஸ்லிமாக காட்ட முடியுமா, தைரியம் உண்டா என்ற கேட்டவர்களைத் தெரியும். பெரியவளாகி நிற்கும் பெண்ணை வீட்டுக்கு வெளியே அடைத்து வைப்பது ஒரு பிராமணப் பெண்ணாகத்தான் காட்டுவார்கள், வேறு எந்த ஜாதிப் பெண்ணாகவும் காட்டமாட்டார்கள், பிராமணக் குடும்பங்களில் இன்று யாரும் அப்படி தீட்டு பார்ப்பதில்லை என்றும் அப்படி அடைத்து வைக்கும் மனநிலை உள்ள பிராமணக் குடும்பத்தில் வேலைக்காரி இல்லை, வீட்டுப் பெண்ணுக்கும் அதே நிலைதான், அதை காட்டாமல் வேண்டுமென்றே ஒருதலைப் பட்சமாக காட்சி அமைத்திருக்கிறார்கள் என்றும் கேட்பவர்கள் உண்டு.

கடை முதலாளி ஹிந்து என்றால் மொத்த ஹிந்துக்களையும் இழிவுபடுத்துவது என்று பொருள் கொள்வது தவறு. தீட்டு பார்க்கும் பிராமணக் குடும்பம் என்று காட்டினால் எல்லா பிராமணர்களையும் இழிவுபடுத்துவது அல்ல. அப்படி நீங்கள் யோசித்தால் உங்கள் லாஜிக்படி தீட்டு காட்சியில் அதை அங்கீகரித்து பூஜைக்குரிய விஷயமாக காட்டி இருப்பது ஹிந்து மதத்தை பெருமைபடுத்துவது போல இல்லையா என்று நான் நண்பர்களிடம் (மட்டும்) வாதிட்டிருக்கிறேன். ஜெயமோகன் என்னை விட நன்றாக பேச எழுதத் தெரிந்தவர். அவரிடம் இதைப் பற்றி யாரோ கேட்க, அவர் பிளந்து கட்டி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

ஜெயமோகன் எழுதி இருப்பதில் எனக்கு ஒன்று மட்டும்தான் உதைக்கிறது –

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

– இங்கே அவர் பார்த்த பழகிய 4, 40, 400, 4000 பிராமணர்களை வைத்து எல்லா பிராமணர்களையும் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார்! 🙂

“மூர்க்கமான இனக்குழுக்கள்” என்று அவர் எழுதி இருப்பதில் (நியாயமான) பயம் தெரிகிறது. இந்த பயம் இல்லாமல் என்று எழுத முடிகிறதோ, அன்றுதான் இந்தியா ஒரு ஜனநாயக, கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமுடியும். அந்த நிலை இன்று உலகில் எங்கும் இல்லை. மேலை நாடுகளில் கூட. கருத்து சுதந்திரம் முதல் சட்ட திருத்தத்தால் (First Amendment) பாதுக்காகப்பட்டிருக்கும் அமெரிக்காவில் கூட இன்று அது 100% இல்லை. அந்த பயமே இந்த கேள்வியை ஜெயமோகனிடம் கேட்டவரின், இப்படி யோசிப்பவர்களின் உண்மையான பிரச்சினை. ஜெயமோகன் சொல்லி இருப்பது போல அது பாமரத்தனமான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. எல்லா குழுக்களையும் ஒரே மாதிரி நடத்த முடியவில்லை. அதற்கு ஆயிரம் வரலாற்று காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு unfairness இருக்கத்தானே செய்கிறது? ராமர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்கும் கலைஞர் ரம்ஜான் கஞ்சி குடித்தால் எரிச்சல் வரத்தானே செய்யும்? அந்த unfairness-ஐ acknowledge செய்ய வேண்டும், வரலாற்று காரணங்களை பற்றி மேலும் மேலும் பேச வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அவன் மனதை மாற்ற வேண்டும், நாமும் இதுதான் சாக்கு என்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை நிறுத்தக் கூடாது என்று விளக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல், கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
ஜெயமோகனின் விளக்கம்
அங்காடித் தெரு – விமர்சனம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்

சேரன் – அன்றும் இன்றும்


கொஞ்ச நாளாக காணாமல் போய்விட்டேன். பர்சனல் வேலைகள் அதிகமாகும்போது முதல் பலிதான் ப்ளாக்தான். நண்பர் விமல் பொறுத்து பொறுத்துப் பார்த்தார், இன்று மெயில் அனுப்பிவிட்டார்!

இந்த முறை இயக்குனர், நடிகர் சேரன். சேரன் பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசிய கீதம் என்று பல படங்களை இயக்கியவர். ஆட்டோக்ராஃப், தவமாய் தவமிருந்து படங்களை இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். இப்போது ராமன் தேடிய சீதை மாதிரி படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விமல் எங்கிருந்துதான் இந்த படங்களை தேடித் பிடிக்கிறாரோ? நன்றி, விமல்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
ஆனந்த் பாபு – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்

வெல் டன் அப்பா (Well Done Abba)


ரொம்ப நாளாச்சு ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதி. இன்றைக்கு ஒன்று.

ஏதோ ஒரு படத்தில் வடிவேலு கிணறைக் காணோம் என்று போலீசில் புகார் செய்வார். (என்ன படம்?) இந்த படத்துக்கு அதுதான் கதை.

அர்மான் அலி பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க கிராமத்துக்கு திரும்பி வருகிறார். ஊரில் தண்ணீர் பஞ்சம். அரசு கிணறு வெட்ட மான்யம் கொடுக்கிறதே, அதை வைத்து கிணறு வெட்டி ஊரின் கஷ்டத்தை குறைக்கலாம் என்று நினைக்கிறார். மான்யம் வாங்க தாசில்தார், கிளார்க், எஞ்சினியர் எல்லாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் அர்மான் அலி விழிக்கிறார். முதல் கட்ட மான்யத்தில் கொடுப்பதாக ஒத்துக் கொண்ட லஞ்சத்தை கொடுத்துவிட்டுப் பார்த்தால் கிணறு வெட்ட பணம் போதாது. கிணற்றை வெட்டினால்தான் அது மான்யம்; இல்லாவிட்டால் அது லோன், திருப்பித் தர வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் அர்மான் அலி விழிக்கிறார். பொய் ஃபோட்டோக்களை வைத்து அடுத்த கட்ட மானியம் வாங்கி அதை வைத்து முதல் கட்ட வேலையை முடிக்குமாறு எஞ்சினியர் சொல்கிறார். திருப்பி லோன், லஞ்சம், லோன், லஞ்சம் என்று போகிறது. எல்லா பணமும் வந்து கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்த பிறகு கிணறு வெட்ட தரையில் மேல் போட்ட வெள்ளை வட்டம்தான் மிச்சம். கடுப்பாகும் அர்மான் அலியும் அவர் மகளும் கிணறு காணவில்லை என்று புகார் செய்கிறார்கள். கிணறு இருந்த ஃபோட்டோ இருக்கிறது, அதைப் பார்த்ததாக கையெழுத்துப் போட்ட எஞ்சினியர் இருக்கிறார், அங்கே தண்ணீர் அருமையாக இருந்ததாக எழுதிக் கொடுத்த ஊர் பஞ்சாயத்து தலைவி இருக்கிறாள், எல்லா ஆதாரமும் இருக்கிறது, கிணறு மட்டும் இல்லை. இப்படி இந்த ஏரியாவில் 70 கிணறு “இருப்பதாகத்” தெரிகிறது. போராட்டம், மந்திரி சமாளிப்பு, கடைசியில் மந்திரி மீண்டும் கிணறை கட்டித் தருகிறார்.

நல்ல நடிப்பு, நல்ல கதை எல்லாம் இருக்கிறது. அதுவும் மந்திரியாக வருபவர், எஞ்சினியர், அர்மான் அலியாக நடிக்கும் பொமன் இரானி நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் விறுவிறுப்பு இல்லை. என்னவோ அத்தைப் பாட்டி கதை போல மெதுவாக செல்கிறது. நடுவில் ஒரு காதல், ஒரு மாமா, அராபிய ஷேக்குகள் ஏழை முஸ்லிம் பெண்களை கல்யாணம் செய்து கொள்வது என்று கிளைக் கதைகள் எல்லாம் இழுவையாக இருக்கிறது.

மேரி பன்னோ ஹோஷியார் பாட்டு நன்றாக இருக்கிறது. பழைய பாட்டு எதையோ நினைவுபடுத்துகிறது, ஆனால் என்ன என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் என் தலையில் இருக்கும் கொஞ்சம் முடியாவது மிஞ்சும்.

நினைவு வந்துவிட்டது. சையான் ஜூட்டோன் கா படா சர்தாஜ் நிக்லா என்ற பாட்டு, தோ ஆங்கேன் பாரா ஹாத் திரைப்படத்திலிருந்து.

(தோ ஆங்கேன் பாரா ஹாத் தமிழில் எம்ஜிஆர் நடித்து பல்லாண்டு வாழ்க என்று வந்தது. மாசி மாசக் கடைசியிலே பாட்டில் வரும் டொய்ங் டொய்ங் இசையை இதில் கேட்கலாம்.)

2009-இல் வந்த படம். பொமன் இரானி (இரண்டு ரோல்), மினிஷா லம்பா, சமீர் தத்தானி, ரவி கிஷன், சலீம் கவுஸ், இலா அருண், சோனாலி குல்கர்னி, ரஜத் கபூர், யஷ்பால் ஷர்மா, ராஜேந்திர குப்தா என்று பலர் நடித்திருக்கிறார்கள். சாந்தனு மொய்த்ரா இசை.

எனக்கு பொதுவாக ஷ்யாம் பெனகல் இயக்கிய திரைப்படங்கள் பிடிக்கும். கல்யுக் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. அங்குர், நிஷாந்த், மந்தன், ஜூனூன் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. இந்த படமும் above average, பார்க்கக் கூடிய படம்தான். ஆனால் அவருடைய பொற்காலம் முடிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பத்துக்கு 6.5 மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

ஆனந்த் பாபு – அன்றும் இன்றும்போன ஸ்ரீகாந்த் போஸ்டுக்கு எக்கச்சக்க ஹிட். ஸ்ரீகாந்துக்கு இத்தனை விசிறிகளா!

இந்த முறை நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. ஆனந்த் பாபு எண்பதுகளின் பிரபு தேவா. அவரது நடனத் திறமைக்காகவே அவருக்கு ஓரளவு சான்ஸ் கிடைத்தது.

ஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்

(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்


ஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி! மனிதர் எங்கிருந்துதான் இதை எல்லாம் கண்டுபிடிக்கிறாரோ தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்

மோகன்லால் – அன்றும் இன்றும்


ஃபோட்டோ அனுப்பிய விமலுக்கு நன்றி! அன்றும் இன்றும் பக்கமே ஏறக்குறைய விமலின் பக்கம்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்