“அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன்


அங்காடித் தெரு நல்ல படம். தமிழுக்கு சிறந்த படம். பார்த்த யாரும் இது வரை படம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் அந்தப் படத்தில் ஜாதி, மதக் கண்ணோட்டத்தில் குறை கண்டவர்கள் உண்டு. கடை முதலாளி பூஜை செய்யும் ஹிந்துவாக காட்டப்படுகிறாரே, அவரை நமாஸ் செய்யும் முஸ்லிமாக காட்ட முடியுமா, தைரியம் உண்டா என்ற கேட்டவர்களைத் தெரியும். பெரியவளாகி நிற்கும் பெண்ணை வீட்டுக்கு வெளியே அடைத்து வைப்பது ஒரு பிராமணப் பெண்ணாகத்தான் காட்டுவார்கள், வேறு எந்த ஜாதிப் பெண்ணாகவும் காட்டமாட்டார்கள், பிராமணக் குடும்பங்களில் இன்று யாரும் அப்படி தீட்டு பார்ப்பதில்லை என்றும் அப்படி அடைத்து வைக்கும் மனநிலை உள்ள பிராமணக் குடும்பத்தில் வேலைக்காரி இல்லை, வீட்டுப் பெண்ணுக்கும் அதே நிலைதான், அதை காட்டாமல் வேண்டுமென்றே ஒருதலைப் பட்சமாக காட்சி அமைத்திருக்கிறார்கள் என்றும் கேட்பவர்கள் உண்டு.

கடை முதலாளி ஹிந்து என்றால் மொத்த ஹிந்துக்களையும் இழிவுபடுத்துவது என்று பொருள் கொள்வது தவறு. தீட்டு பார்க்கும் பிராமணக் குடும்பம் என்று காட்டினால் எல்லா பிராமணர்களையும் இழிவுபடுத்துவது அல்ல. அப்படி நீங்கள் யோசித்தால் உங்கள் லாஜிக்படி தீட்டு காட்சியில் அதை அங்கீகரித்து பூஜைக்குரிய விஷயமாக காட்டி இருப்பது ஹிந்து மதத்தை பெருமைபடுத்துவது போல இல்லையா என்று நான் நண்பர்களிடம் (மட்டும்) வாதிட்டிருக்கிறேன். ஜெயமோகன் என்னை விட நன்றாக பேச எழுதத் தெரிந்தவர். அவரிடம் இதைப் பற்றி யாரோ கேட்க, அவர் பிளந்து கட்டி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

ஜெயமோகன் எழுதி இருப்பதில் எனக்கு ஒன்று மட்டும்தான் உதைக்கிறது –

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

– இங்கே அவர் பார்த்த பழகிய 4, 40, 400, 4000 பிராமணர்களை வைத்து எல்லா பிராமணர்களையும் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார்! 🙂

“மூர்க்கமான இனக்குழுக்கள்” என்று அவர் எழுதி இருப்பதில் (நியாயமான) பயம் தெரிகிறது. இந்த பயம் இல்லாமல் என்று எழுத முடிகிறதோ, அன்றுதான் இந்தியா ஒரு ஜனநாயக, கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமுடியும். அந்த நிலை இன்று உலகில் எங்கும் இல்லை. மேலை நாடுகளில் கூட. கருத்து சுதந்திரம் முதல் சட்ட திருத்தத்தால் (First Amendment) பாதுக்காகப்பட்டிருக்கும் அமெரிக்காவில் கூட இன்று அது 100% இல்லை. அந்த பயமே இந்த கேள்வியை ஜெயமோகனிடம் கேட்டவரின், இப்படி யோசிப்பவர்களின் உண்மையான பிரச்சினை. ஜெயமோகன் சொல்லி இருப்பது போல அது பாமரத்தனமான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. எல்லா குழுக்களையும் ஒரே மாதிரி நடத்த முடியவில்லை. அதற்கு ஆயிரம் வரலாற்று காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு unfairness இருக்கத்தானே செய்கிறது? ராமர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்கும் கலைஞர் ரம்ஜான் கஞ்சி குடித்தால் எரிச்சல் வரத்தானே செய்யும்? அந்த unfairness-ஐ acknowledge செய்ய வேண்டும், வரலாற்று காரணங்களை பற்றி மேலும் மேலும் பேச வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அவன் மனதை மாற்ற வேண்டும், நாமும் இதுதான் சாக்கு என்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை நிறுத்தக் கூடாது என்று விளக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல், கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
ஜெயமோகனின் விளக்கம்
அங்காடித் தெரு – விமர்சனம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

30 Responses to “அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன்

 1. Pingback: Tweets that mention “அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன் « அவார்டா கொடுக்கறாங்க? -- Topsy.com

 2. Kamaraj,M says:

  saadha kaakaava sonna andankakaikku kovam varudhu.

  • RV says:

   குலசை சேகர், முன் முடிவுகளோடு எதையும் படிக்காதீர்கள். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

   காமராஜ், யார் சாதா, யார் அண்டம்?

 3. kulasaisekar says:

  I haven’t seen Angadiththeru. But I came to know from reviews it deals with a bold theme of contemporary Chennai. After reading yours, I went and read Jemohan’s

  I found you beating about the bush. Your blogpost is a veiled support to brahmins like heyram.

  Why dont your say directly that brahmins and their life style shouldn’t be criticised. If crticised, others’ too should be criticised. Why brahmins only?

  That exactly is the heyram raised and jemo answered in his ponderous way.

  His defense is that he has been criticising negatively every caste groups if occasion demands it. His point is that the ‘occasion’ is more important than the sensitivities of people under criticism like heyram’s and your brahmnins.

  I think jemo has a right to say that; and a right to practise that.

  You emerge in your counter criticism of that practice as a old fashioned obscrutist brahmin.

 4. ram says:

  http://www.jeyamohan.in/?p=7499

  நான் கேள்வி கேட்டதற்கான விளக்கத்தை , மீண்டும் சென்று பார்க்கவும். இன்னும் ஜெ மோ எனது கருத்தை பிளந்து கட்ட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் வழிமொழியலாம்.

  http://www.hayyram.blogspot.com

  • RV says:

   ராம், நீங்கள் ஒரு அடிபட்ட மனநிலையில் இருப்பது தெரிகிறது. இந்த நிலையில் பேசுவதும் வாதிப்பதிலும் அர்த்தம் இருக்காது என்று நினைக்கிறேன். உங்கள் மனதை என் வார்த்தைகளின் கடுமை கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன்.

   ஆனால் வருத்தம் வார்த்தைகள் கடுமையாக வந்து விழுந்துவிட்டனவோ என்ற சந்தேகத்தால் மட்டுமே. கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயமோகன் கருத்துகளை ஏறக்குறைய முழுதுமாக ஏற்கிறேன். வித்தியாசப்படுவது ஒரே விஷயத்தில் மட்டுமே. நானும் அவரைப் போல ஒரு காலத்தில் அந்த ஜாதியை சொல்வாயா மாதிரி கேள்விகள் முட்டாள்தனமானவை என்று நினைத்தவன்தான். இன்றும் அதில் முட்டாள்தனம் நிரம்பி இருப்பதை காண்கிறேன், ஆனால் இன்று அப்படி கேட்பவர்களின் ஆதங்கமும் ஓரளவு புரிகிறது. எனக்கு இரண்டு குழந்தைகள். சின்னப் பெண்ணுக்கு ஊட்டிவிட்டால் பெரியவள் எனக்கும் ஊட்டிவிடு என்பாள். அது உன் வயதில் தேவை இல்லை, அப்படி ஊட்டிவிடுவது உன்னை சிறு குழந்தையாக காட்டும், இது பாமரத்தனம், சின்னப்பிள்ளைத்தனம் என்றெல்லாம் விளக்கினால் அவள் புரிந்து கொள்ளப்போவதில்லை. அவளுக்கு தெரிவது ஒரு பெண்ணுக்கு மட்டும் செல்லம் கொடுத்து ஊட்டிவிடுவதில் உள்ள unfairness மட்டுமே.

   நான் உங்களை நிராகரிக்கிறேன், உங்களுடன் பேசுவதைத் தவிர்க்கிறேன் என்று இருக்க வேண்டாம். அதனால் ஒரு முறை சுருக்கமாக:
   1. ஒரு பிராமண மாமி தீட்டு பார்த்து சிறு பெண்ணை நாயைப் போல அடைத்து வைத்தால் இது பிராமணர்களின் குணம் என்று அர்த்தம் இல்லை. ஒரு பிராமண மாமியின் குணம் என்றுதான் கொள்ள வேண்டும். குரானை மதிக்கும் ஒசாமா தீவிரவாதி என்றால் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளா? உங்களுக்கு ஜெயமோகன் ஒரு அடிமுட்டாள் என்று தோன்றினால் அதை கிளீன் ஷேவ் செய்தவர்கள் அடிமுட்டாள்கள் என்று generalize செய்வீர்களா? இதைத்தான் ஜெயமோகன் இப்படி பிளந்து கட்டி இருக்கிறார் – // ஒரு தலித் அல்லது தேவர் அல்லது பிராமண கதாபாத்திரம் எதிர்மறையாகக் காட்டப்பட்டால் உடனே ஒட்டுமொத்த தலித் அல்லது தேவர் அல்லது பிராமணர்களையும் அது குற்றம்சாட்டுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இலலமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்? //

   2. ஜெயமோகனின் முதல் நாவலான ரப்பரில் நாடார் கதாபாத்திரங்கள் எதிர்மறை பாத்திரங்கள். ஏழாம் உலகத்தில் போத்தி. விஷ்ணுபுரத்தில் பிராமணர்கள் உட்பட பலதரப்பட்ட ஜாதிக்காரர்கள் எதிர்மறை பாத்திரங்கள். உங்கள் எண்ணம் என்ன? அவர் ஜாதி அடையாளம் இல்லாமல்தான் இந்த பாத்திரங்களை படைத்திருக்க வேண்டுமா? மன்னிக்க வேண்டும் ராம், அப்படி நினைப்பது பரம முட்டாள்தனம்.

   3. ஜெயமோகன் இங்கே பிராமணர்களைப் பற்றி // நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான். // இப்படி சொல்கிறார். ஒரே ஒரு பிராமண மாமியின் கதாபாத்திரத்தைக் வைத்து பிராமணர்களை கொடுமைக்காரர்கள் என்று சொல்கிறாரே என்று வருந்தும் நீங்கள் பொதுவாக பிராமணர்கள் அறிவுத்தள சமநிலை கொண்டவர்கள், மென்மையானவர்கள் என்று எல்லா பிராமணர்களையும் புகழ்ந்து பேசுவதைக் கண்டு ஏன் பூரிக்கவில்லை? நெகடிவ் கதாபாத்திரங்களை, பிராமணர்கள் மேல் விமர்சனம் கூட இல்லை, விமர்சனத்தின் நிழல் எங்கே படும் என்று மட்டும்தான் தேடிக் கொண்டிருப்பது உங்களுக்கே வெட்டி வேலையாக தெரியவில்லையா?

   4. வாய்ப்பு கிடைத்தால் பிராமணர்களை எல்லாரும் இழிவுபடுத்துகிறார்கள் என்ற ஆதங்கம் உங்களிடம் இருக்கிறது. அந்த ஆதங்கம் ஓரளவு நியாயமானதே. இணையத்தில் கொஞ்சம் மேய்ந்தாலும் இது தெளிவாகத் தெரிகிற ஒரு விஷயமே. நான் இவங்களெல்லாம் பிராந்தன்கள் என்ற முடிவுக்கு வந்து பல நாட்களாகிவிட்டன. பொதுவாக நான் பிராந்தன்களை பொருட்படுத்துவதில்லை, அதனால் நீங்களும் பொருட்படுத்தக்கூடாது என்பது இல்லை. திராவிட இயக்கத்தின் நிழலில் தமிழ்நாடு ஒரு ஐம்பது அறுபது வருஷமாக இருக்கிறது, அந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் பிராமண வெறுப்பும் ஒன்று. அப்படிப்பட்ட சூழல் உங்களிடம் ஒரு paranoia-ஐ உண்டாக்கி விட்டதோ என்று தோன்றுகிறது. இல்லை என்றால் ஒரு கதாபாத்திரத்தை இப்படி generalize செய்யமாட்டீர்கள்!

 5. kulasaisekar says:

  Ram

  Your only, or the dominant point, in your letter to Jemohan is that: Why ony Brahmins are criticised?

  He has answered that he has criticised all caste groups; and, as regards your caste, the tamil brahmins, he has criticised positively as well as negatively. He says people like you, who who feel they are the protectors of the honor of their caste groups, take offence quickly when their caste group is criticised negatively.

  According to him, he does criticise a case group only when the occasion demands it. In other words, he has no hidden or personal agenda against any community, like Dravidian groups who have such agenda against your caste.

  I go by him. Not by you who remain isolated as a casteist man who comes to defend your caste, fully rooted in your caste. Life is broad, and if we are rooted in one place, we are liable to miss many a positive aspect of life. Advising ? No. Just pointing out what hinders us from seeing wholly.

  Kulasai Sekar

 6. ராஜன் says:

  ஆர் வி

  நீங்கள் பிரச்சினையின் முழு பரிமாணம், ஆழம் புரியாமல் மேம்போக்காக எழுதியிருக்கிறீர்கள். பிரச்சினைகளை ஒற்றை பரிமாணத்தில் தட்டையாக அணுகுகிறீர்கள். இந்த விஷயத்திற்கு வெறுமே ஒரு பார்வை மட்டும் கிடையாது. நீங்களும் ஜெயமோகனும் ஒற்றைப் படையாக இந்தப் பிரச்சினையை அணுகுகிறீர்கள். ஜெயமோகனுடன் நான் ஒரு சில இடங்களில் வேறு படுகிறேன். ராம் சற்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். நிதானமாக யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதின் நியாயம் புரியும். இது குறித்து ஒரு விளக்கமான பதில் எழுத வேண்டும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதி ஜெயமோகன் தளத்திலும் இங்கும் பதிக்கிறேன்.

  எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது. அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார். அதை மட்டும் நான் இங்கு உங்களுக்கு நினைவு படுத்தி விட்டு மீண்டும் வருகிறேன்.

  அன்புடன்
  ராஜன்

  • RV says:

   ராஜன், ஒரு பிராமணப் பெண்ணை கொஞ்சம் – கொஞ்சம் மட்டுமே – எதிர்மறையாக சித்தரித்தால் அது எல்லா பிராமணர்களையும் அந்த மாதிரி சித்தரிப்பதாக பொருள் கொள்ளக் கூடாது என்று ஜெயமோகன் சொல்கிறார், நானும் அதை முழுமையாக ஆமோதிக்கிறேன். எனக்கு இதில் வேறு பரிமாணங்கள் எதுவும் தெரியவில்லை; நீங்கள் எதிர் கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்பினால் வரவேற்கிறேன்! சோவின் நிலை எனக்கு புரிகிறது, ஆனால் நானும் ஜெயமோகனும் அதே நிலையை எடுக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லையே!

   சாரதா, ஸ்ரீனிவாஸ், அங்கவை/சங்கவை பற்றிய எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

 7. சாரதா says:

  என்னுடைய இந்தப்பதிவு எந்த அளவுக்கு இந்த தலைப்புடன் ஒத்துப்போகிறது என்று தெரியவில்லை, இருந்தாலும் பதிவிடுகிறேன்….

  ரஜினி நடித்த ‘சிவாஜி’ திரைப்படத்தில் அங்கவை, சங்கவை என்று இரண்டு பாத்திரங்கள் வரும். உடனே ஒரு அமைப்பினர் ‘ஆகா… அங்கவை, சங்கவை என்பது அதியமானின் மகள்கள் அல்லவா?. ஆகா அதியமானையும் அவன் புதல்விகளையும் இவர்கள் அவமானப்படுத்திவிட்டனர்’ என்று கொதித்தெழுந்தனர். ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்குப்போடப்போவதாக அறிக்கை விட்டனர். அவர்களின் கொதிப்பு உண்மையில் பைத்தியக்காரத்தனமாக இருந்தது என்பதே உண்மை. காரணம்..? அதில் ‘அதியமானின் மகள்களான அங்கவை, சங்கவை’ என்று சொல்லப்படவில்லை. ஜஸ்ட் இரு கதாபாத்திரங்களின் பெயர்கள் அவ்வளவுதான்.

  எத்தனையோ சினிமாக்களில் வில்லன்களின் பெயர்கள் பரமசிவன், வேலாயுதம், வெங்கடாசலம் என்றெல்லாம் வருகின்றனவே. உடனே அவர்கள் எல்லாம் கடவுளை நிந்தித்து விட்டார்கள் என்று யாரும் கொதித்தெழுந்தார்களா?. அப்படியே எழுந்தாலும் அதில் அர்த்தம் உள்ளதா?. நகைப்புக்கிடமானதுதானே.

  ஆகவே இந்த ‘அங்கவை, சங்கவை சர்ச்சை’ எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றைத்தான். அதாவது, நாட்டில் ரொம்பப்பேருக்கு வேலை வெட்டி எதுமில்லை என்பதைத்தான்.

 8. BaalHanuman says:

  ஒரு மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஷங்கர், இது அவரது தொடர் வெற்றிகளின் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

  தனது சினிமா தொழிலை சிறப்பாகச் செய்யும் ஷங்கர் அங்கங்கே சில சமூக அவலங்களை அன்றாட நிகழ்வுகளையும் பத்திரிக்கை செய்திகளையும், சில விழிப்புணர்வு வசனங்களையும், காட்சி அமைவுகளின் மூலம் உணர செய்திருப்பார்.

  இருந்தும் “அங்கவை, சங்கவை” பெயரை பயன்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய சர்ச்சை. அவன் தமிழனே அல்ல ஆரியன்.அதனால் தான் அங்கவை, சங்கவையை கருப்பாக காட்டினான் என்று வலைதளம் வரை ஒலித்தது, அதற்கு காரணம் என்ன? ஷங்கர் மட்டும் காரணமா? அப்படி என்றால் அதில் நடித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா தமிழ் விரோதியா? அல்லது இவர்கள் அவரை விட தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் அறிந்தவர்களா? உச்சக்குரலில் கூச்சலிட்டவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு அங்கவை
  அல்லது சங்கவை என்று பெயர் வைத்துள்ளனர்?

  என்னைப் பொருத்தமட்டில் நான் ஷங்கருக்கு நன்றி சொல்வேன், “அங்கவை, சங்கவை” என்ற பெயர்களை பட்டிதொட்டியிலுள்ள பாமரத் தமிழனும் இன்று அறிய முடிந்தமைக்கும், எதிர்காலத்தில் பலர் இப்பெயர்களைச் சூட்டிக்கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்கும்…

 9. kulasaisekar says:

  Saradha and Balhanuman missed an important and bitter point in the depiction of the two girls Angavai and Sangkavai in the feature film.

  The names recall the daughters of the poupular Tamil king. It wouldn’t have been insulting if the girls had been shown to be fair; or, at least commonly acceptable figures.

  Instead, they are shown to be dark skinned girls. In standards of beauty even among dark-skinned girls, they are ugly.

  Further, the father is offering them free to the man as they are commodities for the asking. No father will cheapen fatherhood like that.

  Kaakkaikku than kunju ponkunju.

  The depiction hurt different sections of Tamil society differently:

  1. Tamil scholars for abuse of the names of the ancient king who is highly vernerated as an ideal king.
  2. Tamil community as a whole. The community has a large number of dark skinned girls. All of them will feel ashamed to have such girls as daughters. False shame is attached to skin color and false pride attached to fair skin, in this culture. The aggravates the decadent thinking of society.
  3. The general culture of the society where fathers should not treat his own girl children cheap.
  4. The contrast with fair skinned girls.

  In sum, it has hurt parents who have dark-skinned girls; dark skinned tamilians in general; culture where daughters are prize possession before marriage.

  Therefore, you cant treat the whole episode cavalierly. The director, the script writer and the actor who is a well known Tamil scholar today, are all to be held guilty; and lambasted.

  In the West, censors will proscribe such film, or such episode, holding it a racist slur on dark skinned people !

  But, we. in India, wont.

  As aptly summed up by Ramachandra Guha in today Hindustan Times lead article:

  “Is it a manifestation of the feudal culture within the allegedly democratic government of India, or is it rather the handiwork of a particular individual, seeking to please the richest and most powerful people in India? Gore Vidal once remarked of his adopted country, Italy, that occasionally it combined the worst of capitalism and the worst of socialism. I should say of my one and only homeland that sometimes it combines the worst features of capitalism, socialism and feudalism.”

  • RV says:

   குலசை சேகர், உங்கள் மறுமொழியை வன்மையாக மறுக்கிறேன்.

   // The names recall the daughters of the poupular Tamil king. It wouldn’t have been insulting if the girls had been shown to be fair; or, at least commonly acceptable figures… // இளவரசிகள் பேரை வைத்தால் அவர்களை வெள்ளையாக, “அழகாக” காட்ட வேண்டும் என்கிறீர்களா? அப்பா பழகிப் பாருங்கள் என்று சொல்வது கொஞ்சம் அசாதாரணமே. ஆனால் அந்த அசாதரனத்துக்காக இந்த சீன் விமர்சிக்கப்படவில்லை. படமே அசாதாரண நிகழ்ச்சிகளால் ஆனது. இதில் ஒரு சீன் அசாதாரணம், லாஜிக் இல்லை என்று எப்படி விமர்சிப்பது?

   ஹீரோயின் வெள்ளையாக “அழகாக” இருக்கிறார். ஆனால் ஒரு சீனில் வரும் துணை நடிகைகளை வேண்டுமென்றே கறுப்பாக “அழகு” இல்லாதவராக காட்டி தமிழ் பெண்களை மொத்தமாக அவமானப்படுத்திவிட்டார்கள். அதுவும் பிராமண எழுத்தாளர் சுஜாதா இந்த சீனை எழுதிவிட்டார். (பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்பது sub-text ) என்றே உங்களைப் போல பலரும் பொங்குகிரீர்கள். கருப்பு அசிங்கம் என்று நீங்கள் நம்பிக் கொள்ளுங்கள். அது உங்கள் பிரச்சினை, ஆனால் உங்கல் உரிமை.

   // Tamil scholars for abuse of the names of the ancient king who is highly vernerated as an ideal king. // இதற்கும் “Mohammad is an idiot” என்ற பேரில் கதையோ கட்டுரையோ வந்ததற்காக பத்திரிகையை பெங்களூரில் பத்து வருஷத்துக்கு முன் எரித்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அந்த பத்திரிகைக்காரர்களும் அது ஒரு கதாபாத்திரத்தின் பேர் என்று சொல்லிப் பார்த்தார்கள், ஒன்றும் எடுபடவில்லை, கட்டிடடம் எரிந்துதான் போயிற்று.

   // All of them will feel ashamed to have such girls as daughters. // பிரச்சினை அப்படி தவரகா அவமானப்படுபவர்களுடையதா இல்லை சுஜாதா, சங்கர், சா. பாப்பையாவுடையதா?

   இதற்கும் பிராமண மாமியை காட்டி பிராமண ஜாதியை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று குமுருவதற்கும் என்ன வித்தியாசம்? ஒரு விஷயத்தில் உங்கள் மூளை வேலை செய்கிறது. இன்னொரு விஷயத்தில் உங்கள் மூளைக்கு பதிலாக உணர்ச்சிகளா?

 10. kulasaisekar says:

  “குலசை சேகர், முன் முடிவுகளோடு எதையும் படிக்காதீர்கள். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.”

  I was just saying what Jemo replied to ram. I did not add anything of my own. Where is the question of pre-conceived notions, when the notions are not my own?

  • RV says:

   // Your blogpost is a veiled support to brahmins like heyram. // குலசை சேகர், உங்கள் முதல் மறுமொழியிலிருந் சாம்பிளுக்கு ஒன்று. இது யாருடைய notion?

 11. ராஜன் says:

  “எனக்கு இதில் வேறு பரிமாணங்கள் எதுவும் தெரியவில்லை”

  அப்படித் தெரியாமல் போவதுதான் இங்கு பிரச்சினையே 🙂 நான் விவரமாக எழுத வேண்டும். வார இறுதியில் நேரம் கிடைத்தால் விரிவாக விளக்குகிறேன். நான் ஜெயமோகன் அப்படி காண்பித்தது குற்றம் தப்பு என்றெல்லாம் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வரும் விஷயம் வேறு. என் பதில் வரும் வரை பொறுமை காக்கவும் 🙂

  அன்புடன்
  ராஜன்

 12. ram says:

  திரு ஆர்.வி
  உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் (அல்லது தங்களை அப்படி காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்), அறிவு ஜீவிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்
  ப்ராமணரைத் அவமதித்தால் ஆமாம் சாமி போடுகிறீர்கள். நானும் அப்படித்தான் என்று ஜால்றா போடுகிறீர்கள். ஆனால் அதே அவமதிப்பை ஒருவர் ஜாதிக்காழ்புணர்ச்சியுடன் ஜாதீய ரீதியாகச் செய்தால் அதனோடு மோதி சண்டை போடுகிறீர்கள். நான் ப்ராமணன் என்ற நினைப்பும் ப்ராமணன் இல்லை என்று பூனூலை மறைத்துக்கொள்ளும் தன்மையும் ஒரே நேரத்தில் இருப்பவர்களின் மனோபாவம் இது. உங்களைப்
  போன்றவர்கள் ப்ராமணர்களுக்கு மட்டுமல்ல இந்து மதத்திற்கும் ஆபத்தானவர்கள். நிற்க.

  //இல்லை என்றால் ஒரு கதாபாத்திரத்தை இப்படி generalize செய்யமாட்டீர்கள்!// . நீங்கள் ராஜன் கூறியதைப் போல தட்டையாகவே நான் கூறிய விஷயத்தை அனுகுகிறீர்கள். எனது கருத்தை நீங்களும் ஜெயமோகனும் சேர்ந்து அவரே குறிப்பிடுவது போலான முன் முடிவுகளுடனேயே படித்தும் புரிந்தும் கொண்டுவிட்டீர்கள். நான் ஜெயமோகன் தளத்திலேயே சொன்னதை இங்கே மீண்டும் கூறுகிறேன். ஒரு படத்தின் ஒரு காட்சியைப் பார்த்து கோபப்படும் முட்டாள் நானில்லை. ஏராளமான படங்கள் இருக்கின்றன. அங்காடித்தெருவில் சம்பந்தப்பட்டவருடன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ள எனக்கு தளம் கிடைத்தது, மற்றவர்களிடம் கிடைக்கவில்லை. அவ்வளவே!

  //ஒரு பிராமண மாமி தீட்டு பார்த்து சிறு பெண்ணை நாயைப் போல அடைத்து வைத்தால் இது பிராமணர்களின் குணம் என்று அர்த்தம் இல்லை// அது சரி தான். நான் கேட்கவருவதெல்லாம் அந்த ஒரு பாத்திரத்திற்கும் அவருக்கு ப்ராமண மாமி தான் தோன்றுகிறதே ஏன்? என்பது தான்.
  வேலைக்காரர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்க வேண்டும் (நாய் கூண்டில் அல்ல) என்பது சமூகத்தின் பொது புத்தியே!
  ஆனால் அதற்கு திருவல்லிக்கேனி மாமிவீடு தான் தனக்கு ஞாபகம் வரும் என்று ஜெயமோகன் நினைத்தால், அந்த ஆழ்மன பதிவை
  ஏன் என்று கேட்கத்தான் தோன்றும். எதிர்மறையாக கேள்வி கேட்டாலே பாமர ஆத்மா என்று முடிவு செய்துகொள்வதும் தட்டையான
  அனுகுமுறையாகத்தான் என்று தோன்றுகிறது.
  அதுவும் நாய்க்கூண்டு ஜாஸ்தியாக உங்களுக்கே படவில்லையா?

  எத்தனை கதைகள் கதாநாயகியை ப்ராமண பெண்ணாக உருவகித்து எடுத்திருக்கிறார்கள். இப்படி படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் திராவிட அரசியல் சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு ப்ராமணர் பகை அவர்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் உறவு. சராசரி ஆண்மகனுக்கும் ஒரு சிவத்த ப்ராமணப் பெண் தன்னைக் காதலித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஏக்க சுபாவம் இருக்கலாம்.
  ஜாதீய ரீதியாக ஒரு ப்ராமணன் திராவிட அரசியல் சிந்தனை கொண்டவனிடம் விவாதித்தாலே அவனது முதல் கேள்வி உன் வீட்டுப் பெண்ணை எனக்குத் தருவாயா? என்பது தானே! அதாவது ப்ராமணப் பெண்களை பெண்டாட வேண்டும் என்ற ஆழ்மன பொம்பளைப் பொறுக்கித் தனத்திற்கு இவர்கள் புரட்சி என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். அதற்குத் தீனி போடுவதாகவே சினிமா ஹீரோயினை ப்ராமண பெண்ணாக சித்தரித்து படம் எடுக்கிறார்கள். தங்களால் அடையமுடியாத
  விஷயத்தைப் கற்பனையில் அடைந்துகொள்வது போன்ற ஒரு சுயமைதுன மனோபாவம். பள்ளிக்கூட மாணவர்கள் சினிமா நடிகையை
  நினைத்து சுயமைதுனம் செய்துகொள்வது போன்றது. ஆனால் முஸ்லீம்கள் தன் குலப்பெண்களை நினைத்து சினிமாக்காரன் சுயமைதுனம் செய்வதை விரும்பவில்லை. ஒரே குண்டு போட்டு கொல்வேன் என்று மிரட்டினார்கள். முஸ்லீம் பெண்களை கற்பனை கதாநாயகியாக நினைப்பதை சினிமாக்காரர்கள் அன்றோடு விட்டார்கள். முஸ்லீகளின் வழிதான் சரி என்று முஸ்லீம்களுக்கு உறுதிகூறிவிட்டார்கள்.

  10 க்கு 8 படங்கள் ப்ராமண கதாநாயகியாகவே காட்டுவதற்கு இந்த சுயமைதுன உணர்வே காரணம் என்றால் சத்தியமாக மிகையாகாது. இதன் உளவியல் தாக்கம் இன்றைய ப்ராமண வீடுகளில் நன்றகாவே ப்ரதிபலிக்கிறது. பெரும்பாலான ப்ராமணப் பெண்கள் ப்ராமண ஆண்களைத் தவிற வேறுஜாதி ஆண்களை காதலிப்பதே தனக்குள்ளிருக்கும் ஹீரோயின்
  மனோபாவத்திற்கு வெளிப்பாடாக நினைக்கிறார்கள். ஓடிப்போகிறார்கள். நாகரீக வாழ்வின் வெளிப்பாடு என்றும் காலத்தின் கட்டாயம் என்றும் அதை எடுத்துக் கொண்டாலும் ப்ராமண வீடுகளில் “சினிமாவைப் பார்த்து தான் கெட்டுப்போறதுகள் சனியன்கள். எல்லா சினிமாலயும் ப்ராமணப் பொன்னும் அம்மாப்பாவை எதுத்து கல்யாணம்பன்ற மாதிரிதானே கமிக்கறான். பின்ன எப்படி உருப்படும்” என்கிற பேச்சு பரவலாக இருப்பது உங்களுக்குத் தெரியாதோ என்னமோ? ஆனால் முஸ்லீம்கள் இந்த உளவியல் தாக்கம் தம் குலப் பெண்களுக்கு வரும் என்பதை எதிர்பார்த்தார்கள். ஒரு முஸ்லீம் பெண் வேற்று மத ஆண்களை காதலிப்பதாக தொடர்ந்து காண்பித்தால் தம் வீட்டிப் பெண்கள் தங்கள் வழக்கத்திற்கு விரோதமாக நடக்க இது தூண்டுதலாக அமையும் என்று தீர்மானித்தார்கள். அதைத் தடுத்தார்கள்.

  அந்த உணர்வும் உரிமையும் ப்ராமணருக்கு இருக்கக்கூடாது என்கிறீர்களா? தொடர்ந்து ப்ராமணப் பெண்களும் அவர்தம் கலாச்சாரமும்
  சினிமாவில் திட்டமிட்டு கட்டம் கட்டப்படுவதை நீங்கள் உணரவில்லையா? இன்னுமா சுரணை இல்லை. அப்படி ஒரு அறிவு ஜீவி வாழ்க்கை தான் தேவையா? நான் ஒன்றும் குண்டு போட சொல்லவில்லையே! அல்லது சினிமாக்காரர்களே இதை நிறுத்துங்கள் என்று அவர்கள் கையைப் பிடிக்கவில்லையே! ஆனால் இதைப்பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள் என்று சுய உணர்வு
  கொள்ளும்படி கேட்கிறேன். மறுபரிசீலனைச் செய்யும் படி கேட்கிறேன். அதனால் நான் பாமரன் ஆகிறேன்.

  தெரியாமல் தான் கேட்கிறேன். மூன்றுமணி நேரம் ஓடும் கற்பனை கதைக்கு கூட ஜாதியில்லாமல் படம் எடுக்க முடியாத
  சினிமாக்காரர்கள் சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாய்கூசாமல் எப்படித்தான் பேசிக்கொள்கிறார்களோ!
  அந்த அறிவு ஜீவிகள் வெட்கப்பட வேண்டும்!

  • RV says:

   அன்புள்ள ராம்,
   நீங்கள் இருக்கும் மனநிலையில் வாதிடுவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகிறேன். உங்கள் பல நல்ல மறுமொழிகளை முன்னால் படித்திருக்கிறேன், இப்போது கோபம், வருத்தம் உங்கள் கண்களை மறைக்கிறது என்றே தோன்றுகிறது. இப்போது லாஜிக், கீஜிக் என்றெல்லாம் உங்கள் மறுமொழியில் தேட முடியாது. வேறு எப்போதாவாது பேசுவோம்.

   சாரதா, // அவர்கள், ஒரு முஸ்லீம் பெண் இந்துப்பையனைக்காதலித்து ஓடிப்போவதைத்தான் எதிர்த்தார்களே தவிர (பிராமணர் மணிரத்னம் எடுத்த ‘பம்பாய்’ படம்), // அப்படி எதிர்ப்பதும் தவறே! இதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

   மனிதன், உங்கள் தளத்தின் பெயர் offensive ஆக இருப்பதால் உங்கள் இன்னொரு மறுமொழியை இங்கே அனுமதிபபற்கில்லை.

 13. Manithan says:

  This ram seems to be an immatured person. He is a crying baby repeating the same thing though he was given a fitting reply.

 14. சாரதா says:

  //எத்தனை கதைகள் கதாநாயகியை ப்ராமண பெண்ணாக உருவகித்து எடுத்திருக்கிறார்கள். இப்படி படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் திராவிட அரசியல் சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். //

  இந்தக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  காரணம் பிராமணர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை எடுத்தவர்கள், அதில் நடித்தவர்கள் எல்லாம் பிராமணர்களே. ‘அரங்கேற்றம்’, ‘பரிட்சைக்கு நேரமாச்சு’, ‘மீண்டும் கோகிலா’, ‘சிம்லா ஸ்பெஷல்’ என அனைத்தும் எடுக்கப்பட்டது பிராமணர்களாலேயே. இதில் இன்னொரு வேடிக்கை பிராமணரான கே.பாலச்சந்தர் ‘அரங்கேற்றத்’தில் ஒரு பிராமணப்பெண்ணை விலைமாதாக காட்டியபோது வாயை மூடிக்கொண்டிருந்த பிராமணர்கள், ‘சாவித்திரி’ என்ற படத்தில் ஒரு பிராமணப்பெண் சந்தர்ப்ப வசத்தால் கெட்டுப்போவதாகக் காட்டியபோது கொதித்தெழுந்தனர். (காரணம் அதை எடுத்தவர் ஒரு பிராமணரல்லாதவர், நிச்சயமாக திராவிட இயக்கத்தவர் அல்ல). அப்படீன்னா பிராமணப்பெண்ணைக் கொச்சைப்படுத்தி படமெடுக்க பிராமண இயக்குனருக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக அர்த்தமா?.

 15. சாரதா says:

  //முஸ்லீம்கள் இந்த உளவியல் தாக்கம் தம் குலப் பெண்களுக்கு வரும் என்பதை எதிர்பார்த்தார்கள். ஒரு முஸ்லீம் பெண் வேற்று மத ஆண்களை காதலிப்பதாக தொடர்ந்து காண்பித்தால் தம் வீட்டிப் பெண்கள் தங்கள் வழக்கத்திற்கு விரோதமாக நடக்க இது தூண்டுதலாக அமையும் என்று தீர்மானித்தார்கள். அதைத் தடுத்தார்கள்.

  அந்த உணர்வும் உரிமையும் ப்ராமணருக்கு இருக்கக்கூடாது என்கிறீர்களா? //

  நீங்கள் மதத்தையும் ஜாதியையும் ஒன்றாகப்போட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்.

  அவர்கள், ஒரு முஸ்லீம் பெண் இந்துப்பையனைக்காதலித்து ஓடிப்போவதைத்தான் எதிர்த்தார்களே தவிர (பிராமணர் மணிரத்னம் எடுத்த ‘பம்பாய்’ படம்), ஒரு ராவுத்தர் வீட்டுப்பெண் ஒரு மரைக்காயர் வீட்டுப்பையனைக் காதலிப்பதாக படம் எடுப்பதை தடுக்கவில்லை.

  ஆனால் நீங்கள் ஒரு ‘இந்து’ பிராமணப்பெண் இன்னொரு ‘இந்து’ முதலியார் பையனை, அல்லது ‘இந்து’ ஆதி திராவிடர்’ பையனை காதலிப்பதாகக் காட்டுவதையே எதிர்க்கிறீர்கள்.

  சுருக்கமாகச்சொன்னால் அவர்கள ஒரு முஸ்லீம் பெண் ஒரு இந்துப்பையனோடு ஓடுவதை எதிர்த்தால், நீங்கள் ஒரு ஒரு இந்துப்பெண் இன்னொரு இந்துப்பையனோடு ஓடுவதையே எதிர்க்கிறீர்கள். ஜாதி உங்கள் கண்ணை மறைக்கிறது என்பதையே உங்கள் ஆக்ரோஷமான போஸ்ட் காட்டுகிறது.

 16. ram says:

  சாரதா!

  பாலச்சந்தர் பற்றி மட்டுமல்ல பாக்கியராஜ் மற்றும் பலரைப் பற்றிய விமர்சனங்களையும் நீங்கள் கீழ்கண்ட எனது கட்டுரையில் காணலாம்.

  http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

  நான் குறிப்பிட்டது ப்ராமண சமூகத்தினரின் அடையாளங்களையும் பாஷைகளையும் வைத்தே படம் எடுப்பவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தில் இது ஒரு வகை தான்.

  //நீங்கள் மதத்தையும் ஜாதியையும் ஒன்றாகப்போட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்// குழந்தைத்தனமாக பேசுகிறீர்கள். பிரிவுகள் என்று வந்துவிட்ட பிறகு மதம் என்ன ஜாதியென்ன? அதில் ஒரு பிரிவினரை சினிமாவில் காட்டவே பயப்படுவோம் இன்னொரு பிரிவினரை இஷ்டம் போல காட்டுவோம் என்றால் என்ன அர்த்தம் என்பது தான் எனது கேள்வி. உதாரணமாக தேவர் ஜாதி என்றாலே மீசை வைத்து அறிவாள் தூக்கி மனிதர்களை வெட்டும் கொலைகாரர்களாகத் தான் காட்ட வேண்டும் என்று ஒரு மரபு. அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் நாகரீகத் தேவர்களே கிடையாதா என்ன? இவைகளை புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையென்றால் ஆர் வியின் வழியில் உங்களையும் ப்ராந்தர்கள் என்று விட்டு விடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

 17. சாரதா says:

  //ஜாதீய ரீதியாக ஒரு ப்ராமணன் திராவிட அரசியல் சிந்தனை கொண்டவனிடம் விவாதித்தாலே அவனது முதல் கேள்வி உன் வீட்டுப் பெண்ணை எனக்குத் தருவாயா? என்பது தானே!//

  அப்படிக்கேட்டால் அது காம விகாரமாகத்தெரிகிறது. அதற்கு மாறாக இப்படிக்கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?. சென்னையில் பரதநாட்டியப்பள்ளி நடத்திவரும் உலகமறிந்த, உலகப்புகழ்பெற்ற ஒரு பரதநாட்டியக்கலைஞரின் (யாரென்று சொல்லவேண்டியதில்லை, புரிந்திருக்கும்) பள்ளியில், ஒரு ஆதிதிராவிடப்பெண் பரதநாட்டியம் பயில விரும்பினால் சேர்த்துக்கொள்வாரா?. குறைந்தபட்சம் அந்தப்பள்ளியின் தலைவாசலைத்தாண்டி உள்ளே போக அனுமதிப்பாரா?.

 18. சாரதா says:

  //ஜாதீய ரீதியாக ஒரு ப்ராமணன் திராவிட அரசியல் சிந்தனை கொண்டவனிடம் விவாதித்தாலே அவனது முதல் கேள்வி உன் வீட்டுப் பெண்ணை எனக்குத் தருவாயா? என்பது தானே! அதாவது ப்ராமணப் பெண்களை பெண்டாட வேண்டும் என்ற ஆழ்மன பொம்பளைப் பொறுக்கித் தனத்திற்கு இவர்கள் புரட்சி என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். அதற்குத் தீனி போடுவதாகவே சினிமா ஹீரோயினை ப்ராமண பெண்ணாக சித்தரித்து படம் எடுக்கிறார்கள்.//

  …..எடுக்கிறார்கள்… எடுக்கிறார்கள்… என்றால் யார்?. எடுப்பவரைக் கண்டிக்கலாம் என்று திரும்பிப் பார்த்தால், எடுத்தவர் பிரமணராக இருக்கவே எதிர்ப்பு நீர்த்துப்போகிறது. அதனால்தான், முஸ்லீம்கள் ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்கும் விஷயத்தை நாம் காலம் காலமாக, பக்கம் பக்கமாக வலைப்பூவில் மாய்ந்து மாய்ந்து எழுதவேண்டியுள்ளது. ‘எடுப்பவன் எவனாக இருந்தாலும் தடுப்போம்’ என்று துணியுங்கள். மேட்டர் அடங்கிப்போகும்.

  இன்னொன்றும் நெருடுகிறது. அப்படி பிராமணப்பெண்களைக் கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடிப்பவர்களும் பிராமணப்பெண்களாகவே இருக்கிறார்கள். ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்கமாட்டோம்’ என்று அவர்களும் முடிவெடுக்கத்தயாராயில்லை. இப்படியிருக்க அடுத்தவர்கள் மேல் பாய்ந்து என்ன பயன்?.

  பிராமணர் அல்லாத ஒரு பாரதிராஜா, தன் படத்தில் ஒரு கிறித்துவப்பெண், ஒரு பிராமின் பையனோடு ஓடுவதாகக் காண்பிக்கவில்லையா (அலைகள் ஓய்வதில்லை). அப்போது மட்டும் இனித்ததே.. ஏன்?.

 19. Robin says:

  //பிராமணர் அல்லாத ஒரு பாரதிராஜா, தன் படத்தில் ஒரு கிறித்துவப்பெண், ஒரு பிராமின் பையனோடு ஓடுவதாகக் காண்பிக்கவில்லையா (அலைகள் ஓய்வதில்லை). அப்போது மட்டும் இனித்ததே.. ஏன்?.// சரியான கேள்வி.

  கிறிஸ்தவப் பெண் இந்துப் பையனை கல்யாணம் செய்வது இந்துப் பெண் கிறிஸ்தவப் பையனை கல்யாணம் செய்வது எல்லாம் இன்றைக்கும் நடந்து கொண்டிருப்பதுதான். இதைப் போல பார்ப்பனர்கள் மற்ற ஜாதியினரை திருமணம் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். காதலுக்கு கண்ணில்லை, அவ்வளவுதான். இதையேதான் திரைப்படங்களிலும் காட்டுகிறார்கள். இதில் வருத்தப்படுவதற்கோ அழுது புலம்புவதற்கோ எந்த காரணமும் இல்லை.

 20. ராஜன் says:

  ஆர் வி

  நான் ஜெயமோகன் தளத்தில் இட்டிருக்கும் ஒரு நீண்ட விளக்கத்தை இங்கும் பதிக்கிறேன்

  அன்புடன்
  ராஜன்

  #

  அன்புள்ள ஜெயமோகன்

  இந்த பிரச்சினை சற்று ஆழமானது. அதற்குள் போவதற்குள் நான் சில தன்னிலை விளக்கங்களைத் தந்து விடுகிறேன்.

  1 முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன். நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது. ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின் “இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது. அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

  http://solvanam.com/?p=௭௫௭௫
  http://solvanam.com/?p=௭௫௮௮

  நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

  2 இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

  ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம். இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு. ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

  இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்

  அன்புடன்
  ராஜன்

  By Rajan on Aug 2, 2010
  # Your comment is awaiting moderation.

  முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

  தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும். சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள். ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

  ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

  இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

  நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

  ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை. அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

  சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

  பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

  இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

  இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

  இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

  மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள். ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

  சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

  ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை. கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

  எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும். ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

  தொடரும்..

  அன்புடன்
  ராஜன்

  By Rajan on Aug 2, 2010
  # Your comment is awaiting moderation.

  அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன். மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள். ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

  அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

  http://solvanam.com/?p=7588

  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

  ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும். இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான். ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள். உண்மைதான். அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

  இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது. இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

  இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

  எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது. அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார். சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

  என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

  ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

  நான் எதையாவது சரியாகச் சொல்லியிராவிட்டாலோ புரியும் வண்ணம் விளக்கியிருக்காவிட்டாலோ தயவு செய்து தப்பாகப் புரிந்து கொள்ளாமல் என் விளக்கத்தை மீண்டும் ஒரு முறை கோரவும்

  அன்புடன்
  ராஜன்

 21. சாரதா says:

  உங்களது நீண்ட விளக்கம் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தினாலும், பல கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. அதற்குள் போவதற்கு முன்னால்……

  பிராமணர்கள் உட்பட எந்த ஒரு ஜாதியையும் மதத்தையும் இழிவுபடுத்தி, அல்லது கிண்டல் செய்து படமெடுக்கப்படுவதை வன்மையாக மறுப்பவள், எதிர்ப்பவள் நான். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைக் கருவாகக்கொண்டு ஜாதி/மத நுழைவின்றி நல்ல படங்களையெடுக்கலாம். அதைவிடுத்து, ஜாதீயத்தை நுழைத்து, அதை வைத்து ஒரு சாராரை கிண்டல் செய்து (நீங்கள் சொலவ்து போல, அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்) படமெடுப்பது முதுகெலும்பில்ல்லாதவர்கள் செயல். குறிப்பாக இந்நேரத்தில் பிராமண் இயக்குனர்களை இதில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த விரும்புகிறேன். மற்றெவரையும் விட அதிகமதிகம் தங்கள் ஜாதியையே கிண்டலடித்து படமெடுப்பவர்கள் அவர்களே. அவர்கள் அந்த ஜாதியாம், அதனால் அவர்களுக்கு அந்த உரிமையுண்டாம். அதை துவக்கத்திலேயே கண்டிக்காமல் விட்டது நம் குற்றம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்பது என் எண்ணம். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் ஒட்டுமொத்த பெண்கள் இனத்தையே கேலிக்குள்ளாக்குகின்றனர்.

  தவிர, கெட்டவர்கள் எல்லாம் பிராமணர்களாகவே காண்பிக்கப்படுவதும் கிடையாது. ஏராளமான கிராமத்துப் படங்களில் தேவர் இனத்தைச்சேர்ந்தவர்கள் கொலைவெறிபிடித்தவர்களாகவும், அரேபிய ஷேக்குகள் பெண்களுக்காக அலையும் பொம்பளைப் பொறுக்கிகளாகவும் காண்பிக்கப்பட்டுள்ளனர். (அதனால் பிராமணர்களை அப்படிக்காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. வேறு யாரையும் காண்பிப்பதில்லை என்ற உங்கள் வாதத்துக்கே இந்த வரிகள்). ஒரு மணிரத்னம், ஒரே ஒரு (பம்பாய்) படத்தில், ஒரு முஸ்லீம் பெண் விரகதாபம் பிடித்து ஓடுவதாக எடுத்தார். என்ன ஆச்சு?. ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டார். அதுபோல பிராமணப்பெண்களை இழிவுபடுத்திப் படமெடுப்போர் மீது தாக்குதல் நடத்த ஏ.கே.47 சகிதம் போங்கள் என்று சொல்லவில்லை. அட்லீஸ்ட் ஒரு பத்துப்பேர் போய் சட்டையைப் பிடிக்கலாமல்லவா?.

  ஒரு பிராமணராக அல்லாது ஒட்டுமொத்த இந்துக்களுக்காக வாதாடுகிறேன் என்கிறீர்கள். இதற்கு மற்ற இந்துக்களின் ஆதரவு கிடைக்காவண்ணம், மற்ற இந்துக்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டவர்கள் யார்?. ஒரு மதத்துக்குள்ளேயே தங்களை மட்டும் ‘சுப்பீரியர்’ என்று வகைப்படுத்திக்கொண்டு, மற்ற இந்துக்களின் வெறுப்புக்குஆளானவர்கள் யார்?. தீண்டாமை போன்ற தீண்டத்தகாத விஷயங்களைப்பிடித்து தொங்கியது யார்?. இட ஒதுக்கீடு போன்ற தலைவலிகளெல்லாம், யாரால் வந்து சேர்ந்தது?. (ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் கொடுப்பதில் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொள்ள வேண்டுமே தவிர, மத அடிப்படையில் அல்ல என்பதை பூரணமாக ஆதரிக்கிறேன். இவ்வகையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வன்மையாக எதிர்க்கிறேன்)

  நீங்கள் சொல்வது போல ஆவணி அவிட்டம் அன்று பூணூல் போட்டு வருபவரைக்கிண்டல் செய்வது யார்?. அல்லாவை வணங்கும் முஸ்லீமா?. ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்துவனா?. குருநானக்கைப் போற்றும் சீக்கியனா?. இல்லையே. கற்பகாம்பாளைக்க்கும்பிடும் இந்துவைக் கேலிசெய்பவன், கருமாரியம்மனைக் கும்பிடும் இன்னொரு இந்து. அல்லது கடவுளே இல்லை என்று சொல்லும் இன்னொரு நாத்திக இந்து. ஒருமதத்துக்குள்ளே ஓராயிரம் பிரிவை, வேண்டாம் அட்லீஸ்ட் நான்கு பிரிவாய்ப் பிரித்தது யார். இப்போது தலையில் இருந்து தோன்றியவனுக்கும் காலிலிருந்து தோன்றியவனுக்கும்தான் பிரச்சினையே தவிர, வெளியிலிருந்து வந்தவனுக்கல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. முதலில் இந்தப்பதிவுக்கு என்ன வருகிறதென்று பார்க்கிறேன்….

 22. ராஜன் says:

  சாரதா

  ”பிராமணர்கள் உட்பட எந்த ஒரு ஜாதியையும் மதத்தையும் இழிவுபடுத்தி, அல்லது கிண்டல் செய்து படமெடுக்கப்படுவதை வன்மையாக மறுப்பவள்,”

  நன்றி. எனது நிலையும் அதே.

  ” எதிர்ப்பவள் நான். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைக் கருவாகக்கொண்டு ஜாதி/மத நுழைவின்றி நல்ல படங்களையெடுக்கலாம். அதைவிடுத்து, ஜாதீயத்தை நுழைத்து, அதை வைத்து ஒரு சாராரை கிண்டல் செய்து (நீங்கள் சொலவ்து போல, அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்) படமெடுப்பது ”

  ஒரு சில இடங்களில் ஒரு சில கதைகளின் களன் கருதி, அதற்கான அவேஸ்யம் உண்டெங்கில் ஜாதிகளை சித்தரிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. அதற்கு படைப்பு நேர்மையும் தேவையும் தேவை. ஆனால் அதையுமே எல்லா ஜாதிகளையுமே ஒரே விதத்தில் பாவிக்கும் மலையாள சினிமா போன்ற ஒரு சூழல் வேண்டும், அப்படியாகப் பட்ட சூழல் இல்லாத இடத்தில் எந்த ஜாதியையுமே காண்பிக்காமல் இருப்பதே நன்று.

  ”முதுகெலும்பில்ல்லாதவர்கள் செயல். குறிப்பாக இந்நேரத்தில் பிராமண் இயக்குனர்களை இதில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த விரும்புகிறேன். மற்றெவரையும் விட அதிகமதிகம் தங்கள் ஜாதியையே கிண்டலடித்து படமெடுப்பவர்கள் அவர்களே. அவர்கள் அந்த ஜாதியாம், அதனால் அவர்களுக்கு அந்த உரிமையுண்டாம். அதை துவக்கத்திலேயே கண்டிக்காமல் விட்டது நம் குற்றம்.”

  ஆம் முற்றிலும் உண்மை. பாலச்சந்தர்களையும் கமலஹாசன்களையும் ஆரம்பத்திலேயே எச்சரிக்காததன் விளைவே இன்றைய நிலை என்பதில் எவ்வித வேறுபாடும் எனக்கும் இல்லை.

  ”தவிர, கெட்டவர்கள் எல்லாம் பிராமணர்களாகவே காண்பிக்கப்படுவதும் கிடையாது.”
  அப்படி நானும் சொல்லவில்லையே

  ” ஏராளமான கிராமத்துப் படங்களில் தேவர் இனத்தைச்சேர்ந்தவர்கள் கொலைவெறிபிடித்தவர்களாகவும், அரேபிய ஷேக்குகள் பெண்களுக்காக அலையும் பொம்பளைப் பொறுக்கிகளாகவும் காண்பிக்கப்பட்டுள்ளனர். (அதனால் பிராமணர்களை அப்படிக்காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. வேறு யாரையும் காண்பிப்பதில்லை என்ற உங்கள் வாதத்துக்கே இந்த வரிகள்).”

  அப்படியே அவர்கள் சித்தரிக்கப் பட்டாலும் மக்கள் மனதில் அவ்வாறாகவே பதிவதில்லை என்பதே நான் சொல்ல வந்தது,. மீண்டும் ஒரு முறை படியுங்கள். பிராமணர்கள் மீதான திராவிட இயக்கங்களினால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வெறுப்பினாலும் காழ்ப்பினாலும் சினிமாவிலும் அவ்விதமாகக் காட்டப் படும் பொழுது அந்த வெறுப்பு மேலும் வலுப்படுத்தப் படுகிறது என்பது மட்டுமே என் குற்றசாட்டு

  ” ஒரு மணிரத்னம், ஒரே ஒரு (பம்பாய்) படத்தில், ஒரு முஸ்லீம் பெண் விரகதாபம் பிடித்து ஓடுவதாக எடுத்தார். என்ன ஆச்சு?. ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டார். அதுபோல பிராமணப்பெண்களை இழிவுபடுத்திப் படமெடுப்போர் மீது தாக்குதல் நடத்த ஏ.கே.47 சகிதம் போங்கள் என்று சொல்லவில்லை. அட்லீஸ்ட் ஒரு பத்துப்பேர் போய் சட்டையைப் பிடிக்கலாமல்லவா?.”

  தேவையில்ல. அந்த இயக்குனர்களுக்கு இதனால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்லி ஒரு சிறிய கடிதம் இமெயில் அனுப்பினால் கூட போதுமானது. பிராமணர்களிடம் போய் ஒற்றுமையை எதிர்பார்ப்பதும் பத்து பேராகச் சேரச் சொல்வதும் டூ மச் என்பது உங்களுக்குத் தெரியாது. பத்து பேர் என்ன ரெண்டு பேர் கூட ஒரு நல்ல காரியத்திற்காகக் கூட ஒன்று சேர மாட்டார்கள் அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட சாபங்களில் ஒன்று :)) இணையத்தில் பிராமணர்களை ஆபாசமாகத் திட்டுவதில் பாதிப் பேர் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு எழுதும் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்

  தொடரும்

 23. ராஜன் says:

  சாரதா

  “ஒரு பிராமணராக அல்லாது ஒட்டுமொத்த இந்துக்களுக்காக வாதாடுகிறேன் என்கிறீர்கள். ”

  மன்னிக்கவும் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறேன்? மீண்டும் சரியாகப் படிக்கவும். நான் உதாரணமாக அப்படி இருந்தால் தப்பில்லை என்பதற்காகச் சொல்லியிருக்கிறேன். நான் வாதாடினால் தப்பில்லை என்று சொல்லியிருக்கிறேன்.

  ”இதற்கு மற்ற இந்துக்களின் ஆதரவு கிடைக்காவண்ணம், மற்ற இந்துக்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டவர்கள் யார்?. ”
  இது முற்றிலும் வேறு விஷயம். இதற்கான பதில் பிராமணர்களும், பிரிட்டிஷ்காரர்களும், பிராமணரல்லாத பிற முன்னேறிய ஜாதிகளும். இதை விவரிக்கப் புகுந்தால் அது மிகப் பெரிய கட்டுரையாக மாறி விடும். இது குறித்து தமிழ் இந்து தளத்தில் மிக விரிவாக பல்வேறு கட்டுரைகள் உள்ளன. அவசியம் படிக்கவும்
  ஒரு மதத்துக்குள்ளேயே தங்களை மட்டும் ‘சுப்பீரியர்’ என்று வகைப்படுத்திக்கொண்டு, மற்ற இந்துக்களின் வெறுப்புக்குஆளானவர்கள் யார்?. தீண்டாமை போன்ற தீண்டத்தகாத விஷயங்களைப்பிடித்து தொங்கியது யார்?. இட ஒதுக்கீடு போன்ற தலைவலிகளெல்லாம், யாரால் வந்து சேர்ந்தது?. (ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் கொடுப்பதில் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொள்ள வேண்டுமே தவிர, மத அடிப்படையில் அல்ல என்பதை பூரணமாக ஆதரிக்கிறேன். இவ்வகையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வன்மையாக எதிர்க்கிறேன்)

  ”நீங்கள் சொல்வது போல ஆவணி அவிட்டம் அன்று பூணூல் போட்டு வருபவரைக்கிண்டல் செய்வது யார்?. அல்லாவை வணங்கும் முஸ்லீமா?. ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்துவனா?. குருநானக்கைப் போற்றும் சீக்கியனா?. இல்லையே. கற்பகாம்பாளைக்க்கும்பிடும் இந்துவைக் கேலிசெய்பவன், கருமாரியம்மனைக் கும்பிடும் இன்னொரு இந்து. அல்லது கடவுளே இல்லை என்று சொல்லும் இன்னொரு நாத்திக இந்து. ஒருமதத்துக்குள்ளே ஓராயிரம் பிரிவை, வேண்டாம் அட்லீஸ்ட் நான்கு பிரிவாய்ப் பிரித்தது யார். இப்போது தலையில் இருந்து தோன்றியவனுக்கும் காலிலிருந்து” தோன்றியவனுக்கும்தான் பிரச்சினையே தவிர, வெளியிலிருந்து வந்தவனுக்கல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. முதலில் இந்தப்பதிவுக்கு என்ன வருகிறதென்று பார்க்கிறேன்….”

  இதுவும் விவரமாக பேசப் பட வேண்டிய ஒரு விஷயம். நிச்சயம் ஒரு இந்துவை கேலி செய்பவன் மற்றொரு இந்துவே. ஒரு இந்துவை அடிமையாகத் தீண்டத்தகாதவனாக நடத்துபவன் மற்றொரு இந்துவே. அதை நான் மறுக்கவில்லை. அதற்கான காரணர்கள் யாராக இருந்தாலும் இன்று அதை எப்படிப் போக்க வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டியதே முக்கியம். அப்படி பிரிவினையை அகலப் படுத்தியதில் கிறிஸ்துவ மிஷநரிகளுக்கும் முக்கிய பங்குண்டு. இன்று வேறுமைகளைக் களைந்து எப்படி ஒன்று படுவது என்பதே நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வியாகும்.

  மற்றப்டி உங்கள் பதிலுக்கு நன்றி

  அன்புடன்
  ராஜன்

சாரதா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: