அங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் – ராஜனுக்கு எதிர்வினை


முன்கதை: அங்காடித் தெருவின் பிராமண மாமி கதாபாத்திரம் பிராமணர்களை தாழ்வாக சித்தரிக்கிறது என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். அப்படி குறைப்பட்ட ஒருவருக்கு ஜெயமோகன் ஒரு பதில் எழுதி இருந்தார். அவர் பிய்த்து உதறி இருந்ததை நான் அனேகமாக ஆமோதிக்கிறேன். நண்பர் ராஜனுக்கு ஜெயமோகன் மற்றும் என் கருத்தில் முழு இசைவில்லை, அதனால் ஒரு வலிமையான மறுமொழி எழுதி இருந்தார். என் எதிர்வினை கீழே.

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். ராஜன் சொல்வது போல பிராமணன் என்பதற்காக அடி வாங்கிய எந்த ஆணையும், பிராமணப் பெண் என்பதற்காக ஈவ் டீசிங் செய்யப்பட எந்த பெண்ணையும் எனக்கு பர்சனலாக தெரியாதுதான். ஆனால் அப்படி ஒரே ஒரு பிராமணன் நடத்தப்பட்டிருந்தாலும் அது ஜாதிக் கொடுமையே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட ஜாதிக் கொடுமைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

ராஜன் சொல்வதும் (பச்சை கலர்) என் எதிர்வினைகளும் சுருக்கமாக:

 • ஒரு படைப்பில் (புனைகதை, சினிமா) ஜாதியை குறிப்பிடுவது அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு உத்தி.
 • ராஜனை போன்ற பரந்த படிப்பு, நல்ல சினிமா ரசனை உள்ளவர்கள் இதை எல்லாம் விளக்க வேண்டிய தேவையே இல்லை.

 • ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக பிராமணர்களை மட்டுமே இழிவாக, கேலிக்குரியவர்களாக, நெகடிவ் பாத்திரங்களாக காட்டுகிறார்கள். ஜாதி தாண்டிய கல்யாணம் என்று வந்தால் பிராமண பெண்கள் பிற ஜாதி, மத ஆண்கள் பின்னால் அலைகிறார்கள்.
 • ஏற்றுக் கொள்வதற்கில்லை.
  தமிழ் சினிமாவில் ஜாதி பின்புலம் காட்டுவது தொண்ணூறுகளுக்கு முன் அபூர்வம். தொண்ணூறுகளுக்கு பின் வந்த பல படங்களில் நெகடிவ் பாத்திரங்களில் ஜாதி அடையாளம் அழுத்தமாக காட்டப்படுகிறது. தேவர் மகனின் நாசர்; சின்னக் கவுண்டரின் சலீம் கவுஸ்; விஜயகாந்த் படங்களின் இஸ்லாமிய தீவிரவாதிகள்; விஜயின் பல படங்களில் ஹீரோ கிருஸ்துவ பெண்ணை காதலிக்கிறார். சமீபத்தில் வந்த உன்னைப் போல் ஒருவன் படத்தில் தீவிரவாதிகள் முஸ்லிம்கள். (ஹிந்து ஆயுத வியாபாரி மட்டுமே). ஏன் அங்காடித் தெருவில் கூட கடை முதலாளி, அண்ணாச்சி, ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் நாடார்கள். நாடார்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். பிராமண மாமி என்று கூடத்தான் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை (என்று நினைக்கிறேன்). புடவை, பேச்சை வைத்தே அவர் பிராமணர் என்று தெரிந்து கொள்கிறோம்.
  எங்கே ஒரு நெகடிவ் ரோல் பிராமண பின்புலத்தோடு காட்டப்படுகிறது என்று ஒரு chip on the shoulder மனநிலையோடு தேடாதீர்கள்!

 • அப்படி இழிவுபடுத்தி காண்பிப்பது லும்பன்களுக்கு பிராமண பெண்களையும் (ஆண்களையும்) நிஜ வாழ்க்கையில் உரசிப் பார்க்கும் தைரியத்தை அளிக்கிறது.
 • ஏற்றுக் கொள்வதற்கில்லை.
  கடந்த இருபது வருஷங்களாக மலையாள பிட்டு படங்கள் முக்குக்கு முக்கு ஓடுகின்றன. நாலு தெருவுக்கு ஒரு நாயர் டீக்கடை இருக்கிறது. அங்கேதான் இளைஞர்கள் அம்முகிறார்கள். சேச்சிகள் நிலை மோசமாக இருக்கிறதா என்ன?
  இடுப்பை தடவும் ரவுடி பிராமணப் பெண் இடுப்பு என்று தேடுவதில்லை. அழகான, கவர்ச்சியான, இளம்பெண்ணின் இடுப்பு என்று வேண்டுமானால் தேடலாம். போன பத்து, அட வேண்டாம் ஐம்பது வருஷங்களில் ஈவ் டீசிங் கேஸ்களில் என்ன பிராமணப் பெண்கள் அதிகப்படியாகவா பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? பொதுவாக ஈவ் டீசிங் அதிகரித்திருக்கிறது, அதில் நிச்சயமாக சில பிராமணப் பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதை பிராமணப் பெண்கள் மீது உரசுவது மட்டுமே அதிகரித்திருக்கிறது என்று பேசுவது வெறும் paranoia.
  மேலும் ராஜன் குறிப்பிடுவது போல மூலைக்கு மூலை பிராமணர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

 • தமிழகத்தின் சமூக சூழ்நிலை, திராவிட இயக்க பாரம்பரியம் இதற்கு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் ஊக்கம் அளிக்கிறது.
 • திராவிட இயக்கம் பிராமண எதிர்ப்பின் மீது கட்டப்பட்ட ஒரு இயக்கம். இதுவே அதன் மிகப் பெரிய பலவீனம். ஆனால் இன்று திராவிட இயக்கம் உயிரோடு இருக்கிறதா?
  இன்று ஒரு திராவிடக் கட்சியின் தலைவி பிராமண ஜெயலலிதா. இன்னொரு கட்சியின் தலைவர் மட்டும் எப்போதாவது பிராமண எதிர்ப்பு சவுண்ட் விடுவார், வேறு யாரும் கண்டுகொள்வதில்லை. (பிராமண எதிர்ப்பு இன்று கருணாநிதி மனதில் நீறு பூத்த நெருப்பு.) தி.க. மட்டுமே இன்றும் பிராமண எதிர்ப்பை விடாதவர்கள். அது செத்துப் போன ஒரு சமூக இயக்கம். தி.க.வுக்கு தமிழகத்தில் இன்னும் தாக்கம் இருக்கிறது, சாதாரண தமிழனுக்கு தி.க. ஒரு பொருட்டு என்று ராஜன் கூட சொல்லமாட்டார்!
  இணையத்தின் கதை வேறு. இங்கே பிராமண எதிர்ப்பு சர்வசாதாரணமே. ஆனால் அது ஒரு vocal minority-இடம் மட்டுமே காணப்படுகிறது. அதிகமாக சத்தம் போடுவதால் பெரும் கூட்டம் மாதிரி தெரிகிறது. என் கருத்தில் ஒரு 5% பதிவர்கள் இப்படி இருந்தால் அதிகம். (நான் ராஜன் அளவுக்கு இணையத்தில் மேய்பவன் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.)

 • என்றைக்கு எந்த ஜாதி மதத்தினரையும் நம்பகத் தன்மைக்காக சித்தரிக்கும் நிலை ஏற்படுகிறதோ அன்றுதான் பிராமணரையும் இப்படி காட்ட வேண்டும், அதுவே நியாயமானது.
 • ராஜனின் லாஜிக் எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு “அவனை திருந்த சொல்லு, நான் திருந்தறேன்” என்பது எப்போதுமே சரிப்படுவதில்லை.

  ராஜனைப் போல விலாவாரியாக எழுத எனக்கு திறமையும் இல்லை, பொறுமையும் இல்லை. இவ்வளவு நீளம் எழுதியதே மூச்சு வாங்குகிறது. இது நல்ல ஒரு விவாதத்தை தூண்டினால் சந்தோஷம்!

  பற்றி RV
  Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

  41 Responses to அங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் – ராஜனுக்கு எதிர்வினை

  1. bmurali80 says:

   தர்க்கம் மீறிய வாதமாகத் தான் ராஜன் எழுதியதை என்னால் பார்க்க முடிகிறது (Over generalization and self pity). வரிக்குவரி மாறுபட வேண்டியுள்ளதால் அப்பதிவில் கருத்து தெரிவிக்க வில்லை.

   • ராஜன் says:

    முரளி

    உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. யூதர்கள் ஹோலோகாஸ்ட் பற்றி பேசும் பொழுதெல்லாம் மற்றவர்களால் “சும்மா சும்மா சுயபச்சதாபத்தில் கிடந்து உழன்று கொண்டு புலம்புகிறார்கள்” என்ற பதிலே மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டது. அவரவர் வலி அவரவருக்கு. எனது பின்புலம் அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கு இருக்காது. வலியும் வேதனையும் அவரவருக்கு வராத வரை அடுத்தவன் வலி எப்பொழுதுமே புலம்பல்தானே? ஆகவே உங்களுக்கு செல்ஃப் பிட்டியானது எனக்கு வலி. ஒரு சிலர் வலியை வெளியில் சொல்லி விடுவார்கள் ஒரு சிலர் அவமானம் என்று நினைத்துச் சொல்ல மாட்டார்கள் இன்னும் ஒரு சிலர் அப்படி வெளியில் சொன்னால் நம்மை தவறாக எண்ணி விடுவார்களோ நம் அடையாளம் வெளியில் திரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வலியே இல்லையென்று சாதிப்பார்கள், வலிக்கிறது என்று சொல்பவனைப் பார்த்து செல்ஃப் பிட்டி என்று ஏளனம் செய்து தன் அடையாள மறைப்பை உறுதி செய்து திருப்தி அடைந்து கொள்வார்கள். அதற்காக என் கருத்தைச் சொல்லவே கூடாது என்று நினைப்பதும் சொல்ல ஆரம்பிக்கும் முன்னாலேயே புலம்பல் என்று இடது கையால் ஒதுக்குவதும் அராஜகம். ஆகவே அவரவர் பார்வை அவரவருக்கு. நான் இது குறித்து ஒரு இடத்தில் ஒரு விவாதம் சம்பந்தமாக என் நிலையை மட்டுமே சொன்னேன். உடனே புலம்பல் என்று தாக்கக் கிளம்பி விடுகிறீர்கள். உண்மையைச் சொல்லும் யாருமே புலம்பல்வாதியாகத் அடையாளம் காணப் படுவது புதிதல்லவே. வலி இருப்பவன் புலம்புகிறான் இல்லாதவன் சொகுசாக உட்கார்ந்து கொண்டு ”செல்ஃப் பிட்டி” என்று கமெண்ட் போட்டு விட்டு கனவான் பட்டம் வாங்கிக் கொண்டு போகலாம்.

    ராஜன்

  2. ராஜன் says:

   ஆர் வி

   என் மீத நேரமெல்லாம் இது போன்ற புரியாத பதில்களுக்குப் பதில் போட்டே வீணாகிறது ) இருந்தாலும் ஒரு முறையாவது நான் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளி விட்டீர்கள். பதில் மிக நீளமாக இருக்கும். நிச்சயம் நான் பதில் சொன்னால் அது உங்களையும் இன்னும் பலரையும் காயப் படுத்தவும் செய்யும் ஏனென்றால் நான் உண்மையை சற்று ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விடுபவன். ஆகவே அதையும் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே எனது பதிலை அளிக்க இயலும். இப்பொழுதைக்கு உங்கள் பதில் வழக்கமான உங்கள் பிற பதில்கள் போலவே மேலோட்டமானதுமாகவும், சரியான அல்லது ஆழமான புரிதல் இல்லாததாகவும், உண்மையான நேரடி கள அனுபவம் இல்லாததாகவும், சமூகப் புரிதல் அனுபவம் இல்லாத மேம்போக்கான பதில்களாகவும், போலியான ஒரு வித அடையாள பயம் கொண்டதாகவும் இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லி விட்டு என் நீளமான பதிலை நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் அளிக்கிறேன். அது வரை பொறுக்கவும்.

   அன்புடன்
   ராஜன்

  3. எனது பதிவு http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
   ”பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். “அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது” என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

   இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். மூன்று மூன்று மாணவர்களாக ஒரு குழுவை உருவாக்கி நேர்க்காணல் நடந்தது. என்னுடன் கூட வேறு இருவர் நேர்க்காணப்பட்டனர். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், “நீங்கள் பார்ப்பனரா?” என்று.”ஆம் ஐயா” என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?” என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் “நிச்சயமாக ஐயா” என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். “அடப் போடா மயிரே போச்சு” என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை.

   இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும். செயலாற்றும்போது மற்றவர் அனுமதியையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். என் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல.

   நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்”.

   கோலங்கள் சீரியலில் யாரையுமே சாதி கூறாது காட்டினார்கள், ஒரு பாத்திரம் தவிர. அதையும் ஐயங்காராகக் காட்டி, அதன் குடும்பத்தில் இருப்பவர்கள் பெண்ணைக் கூட்டிக் கொடுப்பவர்கள், துரோகம் செய்பவர்கள் என்றெல்லாம் காட்டினார்கள். கிட்டத்தட்ட 100 எபிசோடுகளில் அப்பாத்திரம் வருகிறது. ஏன்? பாப்பான்னாக்க இளிச்சவாயனா?

   நான் கூறுவது என்னவென்றால் காட்டினால் எல்லாரையும் சாதியால் அடையாளப்படுத்துங்கள். அதிகம் எதிர்வினை புரிவதில்லை என்பதற்காக பார்ப்பன சாதியை மட்டும் குறிக்காதீர்கள். சமயம் போல இருக்காது, எவனாவது அவ்வாறு காட்டுப்வர்களை உடல்ரீதியாக தாக்கும் காலமும் வந்தால் வரலாம். அப்போது அது தவறு என போலியாக நான் கூறமாட்டேன்.

   இவ்வாறு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய இடங்களில் காலணாவுக்கு பிரயோசனமில்லாத இணைய தாசில்தார்களாக செயல்படும் சிலருக்காக அடக்கி வாசிக்கும் பார்ப்பனர்களைத்தான் நான் அதிகம் குற்றம் சாட்டுவேன்.

   அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை பற்றியும் தேவையானால் பாப்பார புத்தி எனச்சாடும் நிலை வர அதிக காலம் பிடிக்காது (உதாரணம் ஜ்யோவ்ராம் சுந்தர், ரோசா வசந்த், சிவராம், நரசிம் ஆகியோர்).

   அன்புடன்,
   டோண்டு ராகவன்

   • RV says:

    டோண்டு,

    பல முறை பேசிய மாதிரி உங்களுடன் பாதி உடன்பாடு. பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று சொல்வதில் எந்த சிறுமையும் இல்லை என்பதை முழுவதாக ஏற்கிறேன். அதில் பெருமை என்று சொல்வதை நிராகரிக்கிறேன். பெருமை அடைவதும் சிறுமை கொள்வதும் நான், என் குடும்பத்தினர் செய்த செயல்களுக்கு மட்டுமே; கண்ட்ரோலில் இல்லாத விஷயங்களுக்கு பெருமைப்படுவதிலோ, சிறுமை அடைவதிலோ அர்த்தமே இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். கறுப்பு முடி, மாநிறம், பிராமண ஜாதி, தமிழனாக, இந்தியனாக, ஹிந்துவாக, ஆணாக, மனிதனாக பிறந்ததில் எல்லாம் எனக்கு பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை. என் செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பு என்று சொல்கிறீர்கள், அது வரை சரி. ஆனால் பார்ப்பன ஜாதியில் பிறந்தது உங்கள் செயல் அல்ல, அதில் பெருமை கொள்வது எனக்கு முரண்பாடாகவே தெரிகிறது.

    கோலங்கள் சீரியலில் ஒரு ஒரு பாத்திரத்துக்கு மட்டும் ஜாதீய பின்புலம் என்று நீங்கள் விவரிப்பதை மட்டும் வைத்துப் பார்த்தால் உறுத்தத்தான் செய்கிறது. நான் பார்த்ததில்லை, பார்க்கவும் போவதில்லை, அதனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் எ வெனஸ்டே (தமிழில் உன்னைப் போல் ஒருவன்) தீவிரவாதிகளுக்கு மட்டும் மத பின்புலம் காட்டப்படுவது எனக்கு உறுத்தவில்லை என்று நிச்சயமாக சொல்வேன். அது நம்பகத் தன்மைக்காகவே என்றே எனக்கு தெளிவாகத் தெரிந்தது. (தமிழை விட ஹிந்தி படம்தான் இப்போது நினைவிருக்கிறது.)

  4. ராஜன் says:

   ஆர் வி வீணாக வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் அப்புறம் குத்துது குடையுது என்று என்னைச் சொல்லக் கூடாது 🙂

   முதலில் முதல் மூன்று பதில்களுக்கு என் பதில்:

   # ஒரு படைப்பில் (புனைகதை, சினிமா) ஜாதியை குறிப்பிடுவது அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு உத்தி.

   ராஜனை போன்ற பரந்த படிப்பு, நல்ல சினிமா ரசனை உள்ளவர்கள் இதை எல்லாம் விளக்க வேண்டிய தேவையே இல்லை.
   ————————————

   முதலில் இந்த விளக்கத்துக்குத் தேவை என்ன என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?

   நான் தான் மீண்டும் மீண்டும் இதன் அவசியம் குறித்துச் சொல்லியிருக்கிறேனே அப்புறம் என்ன எனக்கே இந்த விளக்கம்? நான் எப்பொழுது படைப்புக்குத் தகுந்த பாத்திரம் தேவையில்லை என்று சொன்னேன்? என் பதிலில் இருந்து சுட்டிக் காண்பிக்க முடியுமா? நான் முழுதும் ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்திற்கு ஏராளமான மலையாளப் படங்களை உதாரணமாகக் காண்பித்து நான் மீண்டும் மீண்டும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயத்தை நான் ஏதோ மறுத்திருப்பது போல எனக்கே விளக்கம் சொல்வதின் அர்த்தம் என்ன? இது திரிப்பு அல்லவா? ஆகவே முதலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்றே படிக்காமல் விவாதம் புரிந்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. மீண்டும் ஒரு முறை நான் எழுதியதை கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு படித்துப் பார்க்கவும்:

   1. நான் எப்பொழுதுமே ஒரு படைப்புக்குத் தேவையான பாத்திரத்தின் நம்பகத்தன்மைக்காக ஒரு உள்நோக்கம் இல்லாத படைப்பாளி எந்தவொரு ஜாதியையும், மதத்தினரையும், கட்சியினரையும் பயன்படுத்தலாம் சித்தரிக்கலாம் என்பதை ஒன்றுக்கும் மேற்பட்ட உதாரணம் கொடுத்து மாங்கு மாங்கு என்று நான் விளக்கியிருக்க நான் ஏதோ அப்படிக் காண்ப்பிப்பதை எதிர்ப்பவன் போல எனக்கே விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

   என் பதிலைப் படிக்காதவர்கள் என்ன நினைப்பார்கள்? ஆகவே இந்த விளக்கத்தை உரிய விளக்கங்களுடன் நீங்கள் வாபஸ் வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

   நான் ஜெயமோகன் போன்ற ஒரு உள்நோக்கம் இல்லாத படைப்பாளியின் உரிமையை கேள்வி கேட்க்கவில்லை. ஒரு படத்தின் நம்பகத்தன்மைக்குத் தேவையான எதையும் பயன் படுத்தும் அவரது நோக்கத்தையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக அப்படி வைப்பதில் தவறில்லை என்றும் சொல்லியிருக்கிறேன். அப்படி பல வரிகளில் பல வார்த்தைகளைச் சொன்னதையே இப்படி திரிக்க முடிகிறது என்றால் நான் எங்கு போய் முட்டிக் கொள்வது?

   நான் சொல்ல வந்தது அப்படி ஜெயமோகனோ வேறு எந்த உள்நோக்கம் இல்லாத படைப்பாளியோ அவர் படைப்புக்குத் தகுந்த நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் எவ்விதப் பாத்திரச் சித்தரிப்பையும் நான் எதிர்க்கவில்லை கேள்விக்குள்ளாக்கவில்லை விமர்சிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை நான் எழுதியதைத் தெளிவாகப் படிக்கவும். எளிய தமிழில்தான் எழுதியுள்ளேன். உங்கள் முதல் விளக்கத்தையே நான் திரிக்கப் பட்ட ஒன்று என்று சொல்லி நிராகரிக்கிறேன்.

   திருமலைக்கே லட்டா?

   தொடரும்…….

   அன்புடன்
   ராஜன்

   • RV says:

    என்னங்க, சரியா படிக்கலியா? பச்சை கலரில் இருப்பது நீங்கள் சொன்னது, கீழே இருப்பது என் விளக்கம். நீங்கள்தான் // ஒரு படைப்பில் (புனைகதை, சினிமா) ஜாதியை குறிப்பிடுவது அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு உத்தி. // என்று எழுதி இருக்கிறீர்கள் என்றும் நான் அதை உங்கள் போன்றவர் சொல்லத் தேவையே இல்லை என்றும் எழுதி இருக்கிறேன். குழம்பிட்டீங்க்களோ? (இல்லை குழப்பிட்டேனோ?) சரி இப்போது கூட ஒரு வரி எழுதி இருக்கிறேன் – பச்சை கலர் உங்கள் கூற்று என்று. 🙂

    • ராஜன் says:

     நான் என்ன எனக்காகவா அதைச் சொன்னேன். படிப்பவர்கள் நலனிற்காகச் சொன்னது அல்லவா அது? அதை நீங்கள் மேற்கோள் காட்டி நான் சொல்ல வேண்டிய அவசியேமே கிடையாது என்று நீங்கள் சொல்லும் பொழுது அதன் அர்த்தம் திரிபாகிறது. அதை நீக்கி விடலாம்.

     அன்புடன்
     ராஜன்

  5. ராஜன் says:

   # ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக பிராமணர்களை மட்டுமே இழிவாக, கேலிக்குரியவர்களாக, நெகடிவ் பாத்திரங்களாக காட்டுகிறார்கள். ஜாதி தாண்டிய கல்யாணம் என்று வந்தால் பிராமண பெண்கள் பிற ஜாதி, மத ஆண்கள் பின்னால் அலைகிறார்கள்.

   ஏற்றுக் கொள்வதற்கில்லை.

   தமிழ் சினிமாவில் ஜாதி பின்புலம் காட்டுவது தொண்ணூறுகளுக்கு முன் அபூர்வம். தொண்ணூறுகளுக்கு பின் வந்த பல படங்களில் நெகடிவ் பாத்திரங்களில் ஜாதி அடையாளம் அழுத்தமாக காட்டப்படுகிறது. தேவர் மகனின் நாசர்; சின்னக் கவுண்டரின் சலீம் கவுஸ்; விஜயகாந்த் படங்களின் இஸ்லாமிய தீவிரவாதிகள்; விஜயின் பல படங்களில் ஹீரோ கிருஸ்துவ பெண்ணை காதலிக்கிறார். சமீபத்தில் வந்த உன்னைப் போல் ஒருவன் படத்தில் தீவிரவாதிகள் முஸ்லிம்கள். (ஹிந்து ஆயுத வியாபாரி மட்டுமே). ஏன் அங்காடித் தெருவில் கூட கடை முதலாளி, அண்ணாச்சி, ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் நாடார்கள். நாடார்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். பிராமண மாமி என்று கூடத்தான் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை (என்று நினைக்கிறேன்). புடவை, பேச்சை வைத்தே அவர் பிராமணர் என்று தெரிந்து கொள்கிறோம்.
   எங்கே ஒரு நெகடிவ் ரோல் பிராமண பின்புலத்தோடு காட்டப்படுகிறது என்று ஒரு chip on the shoulder மனநிலையோடு தேடாதீர்கள்!
   ————————————

   ஜாதி தாண்டிய கல்யாணம் என்று வந்தால் பிராமண பெண்கள் பிற ஜாதி, மத ஆண்கள் பின்னால் அலைகிறார்கள்.

   அப்படி என்று நான் எங்கே சொன்னேன்? என் பதிலில் இருந்து நிரூபிக்க முடியுமா? நான் சொல்லாத கருத்தையும் ஏன் சொன்னதாகத் திரித்திருக்கிறீர்கள்? முதல் விளக்கத்திற்கான தேவையும் இந்த பதிலும் நான் சொல்லாதவை. நான் சொல்லாதவற்றை என் வாயினில் திணிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒன்று நான் இப்படிச் சொன்னதற்கோ அல்லது படத்திற்கு நம்பகத்தன்மையான காட்சி வேண்டாம் என்று சொன்னதற்கோ ஆதாரம் காண்பியுங்கள், மேலும் ”ஜாதி தாண்டிய கல்யாணம் என்று வந்தால் பிராமண பெண்கள் பிற ஜாதி, மத ஆண்கள் பின்னால் அலைகிறார்கள்.” என்று நான் எங்கு எப்பொழுது சொன்னேன் என்பதையும் நிரூபியுங்கள் இல்லாவிட்டால் இந்த வாசகங்களை வாபஸ் வாங்குங்கள். யார் சொன்னதையோ என் வாயில் திணிக்கக் கூடாது.

   நீங்கள் சொன்னது
   ——————————————–
   நெகடிவ் பாத்திரங்களில் ஜாதி அடையாளம் அழுத்தமாக காட்டப்படுகிறது. தேவர் மகனின் நாசர்; சின்னக் கவுண்டரின் சலீம் கவுஸ்; விஜயகாந்த் படங்களின் இஸ்லாமிய தீவிரவாதிகள்; விஜயின் பல படங்களில் ஹீரோ கிருஸ்துவ பெண்ணை காதலிக்கிறார்.
   —————————————-

   மன்னிக்கவும் எல்லாவற்றையுமே தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். முதலில் ஒரு தேவர் மகனில் ஒரு நாசர் பாத்திரத்தைக் காண்பிக்கும் பொழுது கவுண்ட்டர் (ஜாதி அல்ல) வெயிட்டாக ஒரு சிவாஜியையும், ஒரு கமலையும் காண்பித்து மேலும் போற்றிப்பாடடி பெண்ணே பாட்டும் வைத்து விடுகிறார்கள். ஒரு விஜயகாந்த் படத்தில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியைக் காண்பிக்கும் பொழுது பதிலுக்கு நாலு நல்ல இஸ்லாமியர்களைக் காண்பித்து அவர்களும் உயிர் தியாகம் செய்வதையும் காண்பித்து விடுகிறார்கள். விஜய் யாரைக் காதலித்தால் எனக்கென்ன? நான் எங்காவது யாரும் பிராமணப் பெண்களை யாரும் காதலிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனா என்ன? மீண்டும் ஒரு திரிப்பு. நான் லவ் ஜிகாதை வேறு காரணங்களுக்காக கண்டித்திருக்கிறேன். ஒரு படத்தில் ஒரு விஜய் ஒரு பிராமணப் பெண்ணைக் காதலித்தால் அப்படிக் காண்பிப்பது தவறு என்று நான் எங்கே சொன்னேன்? ஆதாரம் உண்டா? இல்லையென்றால் இந்தத் திரித்தலையும் நீங்கள் வாபஸ் வாங்க வேண்டும். நான் நேற்று எழுதிய ஒரு பதிலையே இவ்வளவு திரித்தால் ஒரு வருடம் முன்பு எழுதியதை என்னன்ன செய்வீர்களோ தெரியாது.

   தயவு செய்து நான் ஜெயமோகன் பதிவில் எழுதியதை நீங்களும் இங்கு எடுத்துப் போட்டிருப்பதை ஒரு முறையாவது படித்து விட்டு வந்து என்னை ஏதேனும் கேட்டிருந்தால் புண்ணியமாகப் போகும். முதலி அதைச் செய்யுங்கள் ஆர் வி.

   நான் என்ன சொல்லியிருக்கிறேன். தமிழ் படங்களில் தேவர் போன்ற ஜாதியினரையும் பெயரைச் சொல்லாமல் நெகடிவ் பாத்திரத்தில் காட்டுகிறார்கள்தான். அதே போல தலித் மக்களையும் பெயர் சொல்லாமல் காட்டுகிறார்கள்தான் உண்மைதான். பார்ப்பவர்களுக்கு அவர்கள் என்ன ஜாதி என்பதெல்லாம் தேவர் மகன் போன்ற ஒரு சில படங்களில் வெளிப்படையாகச் சொல்லப் படும் பொழுதுதான் புரிகிறது. மற்ற படங்களில் அவர்கள் பெயரில்லாத ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. மேலும் தேவர் மகன் போன்ற படங்களில் அப்படி ஒரு பாத்திரத்தை நெகட்டிவாகக் காட்டும் பொழுது பதிலுக்கு நூறு தியாகத் திருவுருவங்களைக் காண்பித்து சமன் படுத்தி விடுவார்கள். இங்கு முஸ்லீம்களை குல்லாவுடனும், தாடியுடனும் பெயருடனும் காண்பிக்கும் பொழுது மட்டுமே அவர்கள் மதத்தைச் சுட்டுகிறார்கள் அப்படி யாரையேனும் ஒரு பயங்கரவாதியாகவோ தேசத் துரோகியாகவோ வேறொரு முஸ்லீம் பாத்திரத்தை வலுக்கட்டாயமாகச் சேர்த்து அவரை தேச பக்தராகவும் தியாகியாகவும் காட்டாமல் போகவே மாட்டார்கள். அப்படி ஏதேனும் ஒரு சினிமாவை எனக்குக் காண்பிக்க முடியுமா? போய் தேடிப் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள். அப்படிக் காண்பிக்கப் படும் பாத்திரங்கள் எல்லாம் கதைக்கும் படைப்புக்கும் நிஜமாகவே தேவைப் படும் யதார்த்தச் சித்தரிப்புக்களா என்பதையும் சொல்லுங்கள். நான் காத்திருக்கிறேன்.

   நான் சொல்லியதை நீங்கள் முதலில் படிக்கவே இல்லை. நான் இப்படி படங்களில் பிற ஜாதி மதத்தினர் காண்பிக்கப் படுவதை மறுக்கவேயில்லை. அவர்கள் அப்படிக் காண்பிக்கப் படும் பொழுது

   அ) அவர்களுக்கு நேராக நல்ல பாத்திரங்களையும் காண்பித்து சமனிலைப் படுத்தி விடுவார்கள்

   ஆ) அப்படியே காண்பித்தாலும் மக்களுக்கு அவர்கள் மீது எவ்வித வெறுப்பும் உருவாகாது. அது ஒரு தனிப்பட்ட பாத்திரம் என்று ஏற்றுக் கொண்டு போய் விடுவார்கள் ஏனென்றால் அவர்கள் யார் மீதும் 70 வருட காலமாக இனவெறுப்பு வளர்க்கப் படவில்லை. காழ்ப்புணர்வு போதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அப்படியே எதிர்மறையாக ஒரு சிலர் காண்பிக்கப் பட்டாலும் அது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான எதிர்மறையான காழ்ப்பாக அது மாறுவதில்லை. இதை நான் பல வாக்கியங்களில் பல முறை சொன்ன பிறகும் அதையெல்லாம் படிக்காமல் மீண்டும் இங்கு ஆரம்பம் முதல் ஆரம்பித்தால், சீதைக்கு ராமன் பெரியப்பா என்றால் நான் எங்கு போய் மாட்டிக் கொள்வது?

   தொடரும்..

   அன்புடன்
   ராஜன்

  6. ராஜன் says:

   ஏன் அங்காடித் தெருவில் கூட கடை முதலாளி, அண்ணாச்சி, ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் நாடார்கள். நாடார்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். பிராமண மாமி என்று கூடத்தான் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை (என்று நினைக்கிறேன்). புடவை, பேச்சை வைத்தே அவர் பிராமணர் என்று தெரிந்து கொள்கிறோம்.
   எங்கே ஒரு நெகடிவ் ரோல் பிராமண பின்புலத்தோடு காட்டப்படுகிறது என்று ஒரு chip on the shoulder மனநிலையோடு தேடாதீர்கள்!
   —————————

   ஆர் வி

   முதலில் நான் அங்காடித் தெருவில் எந்தக் காட்சியும் உள்நோக்கத்துடன் வைக்கப் பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டவேயில்லை. அப்படி நான் எங்காவது சொல்லியிருந்தால் காட்டுங்கள். நான் ஜெயமோகனின் உள்நோக்கத்தைக் குறை காண்கவில்லை. மாறாக இத்தனை வருடங்களாக பிராமண வெறுப்பு என்னும் மாயையையில் வளர்க்கப் பட்ட தமிழ் மக்களுக்கு அவ்வாறு தோன்றக் கூடும் என்ற என் ஐயத்தை, அச்சத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன். இரண்டும் வேறு வேறு

   அண்ணாச்சி என்பது தென் பகுதிகளில் பொதுவாக தன்னை விட மூத்தவர்களையோ அல்லது வயது தீர்மானிக்க முடியாதவர்களையோ அல்லது கடைக்கு வரும் கஸ்டமர்களை மரியாதையாகவோ அழைக்கப் படும் ஒரு விகுதி என்பதையும் அது நாடார்களை மட்டுமே குறிக்கப் பயன் படுத்தப் படும் ஒரு சொல் அல்ல என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விமர்சனத்தை வைக்கும் முன் தயவு செய்து அதன் பின்புலத்தைச் சற்று புரிந்து கொள்ளுங்கள். கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் என்ற தி மு க மந்திரியை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அண்ணாச்சி என்றாலே அவர்தான். அவர்தான் அண்ணாச்சி அண்ணாச்ச்சிதான் அவர். அவர் நாடார் அல்லவே. அவர் தெலுங்கு பேசும் ரெட்டியார். அவர் வீடு விருதுநகரில் இருந்தபடியால் அவர் கட்சியில் செல்வாக்காக இருந்த படியால் அவர் அண்ணாச்சி என்றே அந்தப் பகுதியின் பொதுவான வழக்கத்தில் அழைக்கப் பட்டார். திருநெல்வேலி ஜங்ஷனிலோ டவுணிலோ எந்தவொரு கடைக்குள் நீங்கள் போனாலும் நான் போனாலும் அங்கிருக்கும் பையனுக்கோ ஹோட்டல் சர்வருக்கோ நீங்களும் அண்ணாச்சிதான் நானும் அண்ணாச்சிதான், பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் நீங்களும் சார்வாள்தான் நானும் சார்வாள்தான். ஒரு விஷயத்தை அணுகும் முன் அதன் பூகோளம், சமூகம், வரலாறு,வட்டார வழக்கு, பழக்க வழக்கம் எல்லாம் தெரிந்து கொண்டு பேச வேண்டும் இல்லாவிட்டால் பேசக் கூடாது.

   ஆகவே பொதுவான மக்களுக்கு எல்லாம் அண்ணாச்சி என்றால் அது ஒரு ஜாதியைக் குறிக்கும் சொல் அல்ல அது ஒரு பொதுவான மரியாதையைக் குறிக்கும் விளிப்பெயர் மட்டுமே. அன்று நீங்களும் நானும் இந்தப் படம் பார்க்கும் பொழுதே நீங்களோ அல்லது இன்னும் இருவரோ “அப்படியா அண்ணாச்சி என்றால் அது நாடாரா?” என்று கேட்டதாக நினைவு. ஆக இந்தப் படத்தில் இப்படி வைக்கப் பட்டிருக்கும் பாத்திரத்தின் ஜாதி ”நாடார்” என்பது யாராவது வெளிப்படையாகச் சொன்னாலன்றி தமிழ் நாட்டின் பெருவாரியான மக்களுக்குத் தெரியாது. ஆகவே கடை முதலாளி நாடார் ஜாதியைச் சேர்ந்தவராகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பது ஒரு வித யூகமே அன்றி யாரும் கோர்ட்டுக்குப் போய் விட முடியாது. அண்ணாச்சி என்பது ஒரு பொது விகுதி என்று சொல்லி தப்பித்து விடலாம். அதுவே நாடார் என்று முதலாளியின் பெயருடன் சேர்த்துச் சொல்லியிருந்தால் மட்டுமே அது ஒரு ஜாதியைக் குறித்ததாகக் கருதப் பட்டிருக்கும்.

   ஆனால் ஒரு மந்திரம் சொல்லும் ஆச்சாரமான நபரை பூணுலுடன் காண்பிப்பதும் பிராமணர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பேச்சு மொழியைக் காண்பித்திருப்பதும் நிச்சயம் அவர்கள் பிராமணக் குடும்பத்தினர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதி செய்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அப்படியே எதிர்மறை குணம் உள்ள இருவரையுமே ஜாதிப் பெயர் சொல்லியே காண்பித்திருந்தாலுமே இருவரையும் காண்பவர்கள் எடுத்துக் கொள்ளும் விதம் வேறு வேறு. அங்குதான் 70 வருட தீராவிட இயக்கங்கள் விதைத்த வெறுப்பு விஷம் வேலை செய்கிறது. ஆனால் இதே கதையை மலையாளத்தில் காண்பித்திருந்தால் அண்ணாச்சி என்று மழுப்பவெல்லாம் தேவையில்லை நாடார் என்று பெயர் சொல்லியே காண்பிக்கலாம், அது போல பிராமணரையும் ஐயர் என்று பெயர் சொல்லியே அழைக்கலாம். இருவரையும் ஜாதிப் பெயர் சொன்னாலுமே பார்க்கும் மக்கள் சரியான விதத்தில் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். பல மலையாளப் படங்களில் நாயர், மேனோன், பட்டர் (தமிழ் பிராமின்), நம்பூதிரி, பணிக்கர் என்று ஜாதிப் பெயர் சொல்லியே பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பாத்திரங்கள் காண்பிக்கப் படுவதை எல்லா சர்வ சாதாரணமாகக் காணலாம். அங்கு பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை கொல்லு என்று போதித்த விஷக் கிருமிகள் கிடையாது. மூச்சுக்கு முன்னூறு தடவை பாப்பாத்தி பாப்பான் என்று ஏசும் முதல்வர் கிடையாது. அக்ரஹாரத்தைத் தீவைத்து பிராமணர்களைக் கொல்லு என்று தலையங்கம் எழுதிய ஈனப் பிறவிகள் கிடையாது ஆகவே அங்கு ஜாதி ரீதியாக வளர்க்கப் படும் வெறுப்பும் இங்கு இருப்பது போல கிடையாது. ஆகவே ஒரு ஜாதியின் பெயரால் ஒரு நெகடிவ் பாத்திரத்தை தமிழில் காண்பிப்பதற்கும் பிற மொழிகளில் காண்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறேன்.

   இப்பொழுதாவது புரிகிறதா நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. ஆக யதார்த்தம் கருதி மலையாள மொழி படத்தில் ஒரு ஜாதியைக் காண்பிப்பதற்கும் தமிழ் மொழியில் காண்பிப்பதற்கும் நிறைய சமூக நோய் கூறு மனநிலையின் வித்யாசங்கள் உள்ளன. அதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் மட்டையடிப்பது அழகல்ல

   தொடரும்

   அன்புடன்
   ராஜன்

  7. virutcham says:

   சாதி குறித்த எனது பதிவு
   http://www.virutcham.com/?p=1412
   உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

  8. சாரதா says:

   //மேலும் தேவர் மகன் போன்ற படங்களில் அப்படி ஒரு பாத்திரத்தை நெகட்டிவாகக் காட்டும் பொழுது பதிலுக்கு நூறு தியாகத் திருவுருவங்களைக் காண்பித்து சமன் படுத்தி விடுவார்கள். இங்கு முஸ்லீம்களை குல்லாவுடனும், தாடியுடனும் பெயருடனும் காண்பிக்கும் பொழுது மட்டுமே அவர்கள் மதத்தைச் சுட்டுகிறார்கள் அப்படி யாரையேனும் ஒரு பயங்கரவாதியாகவோ தேசத் துரோகியாகவோ வேறொரு முஸ்லீம் பாத்திரத்தை வலுக்கட்டாயமாகச் சேர்த்து அவரை தேச பக்தராகவும் தியாகியாகவும் காட்டாமல் போகவே மாட்டார்கள். அப்படி ஏதேனும் ஒரு சினிமாவை எனக்குக் காண்பிக்க முடியுமா?//

   அப்படீன்னா, இதுவரைக்கும் எந்தப்படத்திலும் பிராமணர்களை நல்லவர்களாகக் காண்பித்ததே இல்லை?. அப்படியா?. தமிழில் வந்திருக்கும் பல்லாயிரம் படங்களில், மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை படங்களைப் பார்த்திருப்பீர்கள்?. ஒரே படத்தில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், பிராமணர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கப்பட்ட படங்கள் எத்தனை வேண்டும்?. தேவர்களை ஜாதிவெறி பிடித்தவர்களாகவும், அவர்களை அடக்க வரும் பிராமண அதிகாரிகளை நல்லவர்களாகவும் காண்பித்த படங்கள் எத்தனை வேண்டும்?.

   //பல மலையாளப் படங்களில் நாயர், மேனோன், பட்டர் (தமிழ் பிராமின்), நம்பூதிரி, பணிக்கர் என்று ஜாதிப் பெயர் சொல்லியே பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பாத்திரங்கள் காண்பிக்கப் படுவதை எல்லா சர்வ சாதாரணமாகக் காணலாம். அங்கு பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை கொல்லு என்று போதித்த விஷக் கிருமிகள் கிடையாது. மூச்சுக்கு முன்னூறு தடவை பாப்பாத்தி பாப்பான் என்று ஏசும் முதல்வர் கிடையாது. அக்ரஹாரத்தைத் தீவைத்து பிராமணர்களைக் கொல்லு என்று தலையங்கம் எழுதிய ஈனப் பிறவிகள் கிடையாது//

   அப்படிப்பட்ட முதல்வர் வசனமெழுதிய படங்களில் கூட, பிராமண இயக்குனர்கள் தங்கள் ஜாதியை இழிவுபடுத்தி படமெடுத்ததுபோல, அவர் பிராமண இனத்தைக்கேலி செய்ததில்லை.

   //கோலங்கள் சீரியலில் யாரையுமே சாதி கூறாது காட்டினார்கள், ஒரு பாத்திரம் தவிர. அதையும் ஐயங்காராகக் காட்டி, அதன் குடும்பத்தில் இருப்பவர்கள் பெண்ணைக் கூட்டிக் கொடுப்பவர்கள், துரோகம் செய்பவர்கள் என்றெல்லாம் காட்டினார்கள். கிட்டத்தட்ட 100 எபிசோடுகளில் அப்பாத்திரம் வருகிறது. ஏன்? பாப்பான்னாக்க இளிச்சவாயனா?//

   நிச்சயம் இளிச்சவாயர்கள்தான். அதாவது பணத்துக்கு பல்லிளிச்ச வாயர்கள். நானும் அந்த ‘கோலங்கள்’ சீரியலைப்பார்த்தேன். ‘அப்பளாச்சாரி’ குடும்பம் என்ற அந்த எபிசோட்டில் நடித்த அத்தனைபேரும் நிஜமான பிராமணர்கள். ‘தங்கள் இனத்தைக்கிண்டல் செய்து அந்த இயக்குனர் காட்சியமைக்கிறாரே, அதில் நாம் நடிக்கக்கூடாது’ என்று அவர்களுக்குத்தோணாதது ஏன்?. உங்களில் கொழுந்துவிட்டெரியும் இனப்பற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு இல்லாததால்தானே அந்த (வேற்று ஜாதி) இயக்குனர் துணிந்து அப்படிப்பட்ட காட்சிகளைத் திணிக்க முடிகிறது?. இதற்கு நீங்கள் சொல்லும் ஒரே சால்ஜாப்பு பிராமணர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாது என்பதுதானே.

   • சாரதா says:

    பெயர் குறிப்பிட மறந்துவிட்டேன்…

    முதலிரண்டு பதில்கள் ராஜன் சாருக்கு…

    மூன்றாவது (கோலங்கள்) பதில் டோண்டு ராகவன் சாருக்கு…

  9. ram says:

   //எபிசோட்டில் நடித்த அத்தனைபேரும் நிஜமான பிராமணர்கள். ‘தங்கள் இனத்தைக்கிண்டல் செய்து அந்த இயக்குனர் காட்சியமைக்கிறாரே, அதில் நாம் நடிக்கக்கூடாது’ என்று அவர்களுக்குத்தோணாதது ஏன்?. // சாரதாக்கா! அவங்கல்லாம் ஆர் வி யைப் போல அறிவு ஜீவி ப்ராமணர்களாக இருப்பார்கள்!

  10. kulasai sekar says:

   Dondu Ragavan !

   RV has said a person should be proud of what he, as an individual, has achieved in his life. Not of what he has been born with, or got it by accident.

   You have said all tamil parpnars should be proud of their births in their caste.

   Do you agree with RV or not?

  11. kulasai sekar says:

   “நிச்சயம் இளிச்சவாயர்கள்தான். அதாவது பணத்துக்கு பல்லிளிச்ச வாயர்கள். நானும் அந்த ‘கோலங்கள்’ சீரியலைப்பார்த்தேன். ‘அப்பளாச்சாரி’ குடும்பம் என்ற அந்த எபிசோட்டில் நடித்த அத்தனைபேரும் நிஜமான பிராமணர்கள். ‘தங்கள் இனத்தைக்கிண்டல் செய்து அந்த இயக்குனர் காட்சியமைக்கிறாரே, அதில் நாம் நடிக்கக்கூடாது’ என்று அவர்களுக்குத்தோணாதது ஏன்?. உங்களில் கொழுந்துவிட்டெரியும் இனப்பற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு இல்லாததால்தானே அந்த (வேற்று ஜாதி) இயக்குனர் துணிந்து அப்படிப்பட்ட காட்சிகளைத் திணிக்க முடிகிறது?. இதற்கு நீங்கள் சொல்லும் ஒரே சால்ஜாப்பு பிராமணர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாது என்பதுதானே”

   Basic flaw.

   As an actor, a person has an identity. As an individual, he has another that may be anything: as a caste man, or a professional, or a social activist etc.

   Artists has a universal characteristic: they value their persona as an artist more than any other personae. Most persons even completely annihilate or lost tract of other personae. Some forget their families, or sacrifice their family welfare for their art.

   The Tamil parpanars, as writers or literateurs or artists in audio visual media, are being caged by Saratha, Dondu Raagavan, Ram and the fiery Thirumalai Rajan here. You are handcuffing them and accusing them of not being like you: being a casteist.

   Arent you being childish to expect others like you?

   A muslim can don the role of an orthodox brahmin, as apsar did it in Enge brahmanan? serial, and perform the role with aplomb. He may even cherishe the memory life long. If the role blames the muslims for anything, he, as an actor, will perform it wholeheartedly.

   It is in fact, what Hindus, call, dharma. The dharma of an artist reigns supreme. That is sacred for him: his breath of life. No more no less!

   Therefore, KB, or the actors who played the roles of anti – brahmins, have adhered to the dharma. For them, their art is one and only love. Not the stupidity called caste.

   Thirumalai Rajan and his ilk can become fanatically attached to the identity of a brahmin. They can live for the caste. Agonised over their negative portrayals. No objection. But dont think artists should be like you.

   Yet more point to ponder here. You are taking seriously an accident of your birth. Why should I ? Caste is a poltical and social fiction, which you believe is a real entity. You are living with a Big Fat Lie. Why should I?

   You know, KB is a brahmin. Suppose you have not come to know it. There are so many whose castes are unknown to the outside world. There are many brhmins among communist leaders and there are so many Telugu, Bihari and Bengali brahmins among maoists. In fact, it is they who are leading the movement today. The slain Azad whose murder is a bone of contention today among politicians, is a Telugu brahimin.

   Will they care to know which caste they were born in? If they do, then their places should be in RV blog agonising over the negative portrayal of brahmins?

   Go and tell Hyder Ali, the fugitive from law, involved in Madurai Police Station bomb blast. ‘You are born to Tanjor brahmin parents. Look, jeyamohan has portrayed our caste badly’

   Let Rajan tell him and get the response and write here!

   I am writing here. No one knows which caste I was born in by accident. Nor do I care. But I know the caste.

   If someone mocks at the caste, I care not a bit.

   மயிராய்ப்போச்சு !

  12. ராஜன் says:

   ஆர் வி

   நான் அடுத்த பதிலுக்குப் போகும் முன் ஒரு சின்ன கேள்வி பதில்

   “சேட்டு” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் மனதில் ஓடும் பிம்பங்களைத் தொகுத்து வரைக

   நன்றி
   ராஜன்

   சேகர்

   நான் சொல்லாததையெல்லாம் என் பெயரில் திரிக்கிறீர்கள். நான் எங்கும் எந்த நடிகரும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லவில்லைல் நான் என் ஜாதி சார்பாகப் பேசுகிறேன் என்றும் சொல்லவில்லை. நான் சொல்ல வந்ததெல்லாம் தமிழ் நாட்டில் நிலவும் இன வெறுப்புக்கு எப்படி ஒரு சில சினிமாக்கள் தூபம் போடுகின்றன என்பது பற்றி மட்டுமே. என் ஜாதி அடையாளத்தினால் எனக்குப் பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை நான் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை. நான் யாருக்காகவும் பேசவில்லை. நான் பாதிக்கப் பட்டிருக்கிறேன் அதனால் என் மீது உங்களைப் போன்ற இன வெறியர்கள் காழ்ப்பினை அவிழ்த்து விடும் பொழுது ஐ செர்ட்டைன்லி கேர் அபவுட் மை சேஃப்டி.

   என் மீது அபாண்டமான பொய்யை அவிழ்த்து விடுவதற்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும் இல்லாவிட்டால் மரியாதை தெரியாத வெறுப்பாளரான உங்களுக்கு நான் எவ்வித பதிலும் அளிக்கப் போவதில்லை.

  13. RV says:

   அரை மணி நேரம் கஷ்டப்பட்டு எழுதிய மறுமொழியை கூகிள் தின்றுவிட்டது, நாளைக்கு பார்ப்போம்…

  14. ram says:

   //அரை மணி நேரம் கஷ்டப்பட்டு எழுதிய மறுமொழியை கூகிள் தின்றுவிட்டது, நாளைக்கு பார்ப்போம்// நோட் பேடில் தட்டச்சி சேவிவிட்டு பின்னர் போடுவது நலம்.

  15. எனது எண்ணங்கள் எல்லாம் தனது பார்ப்பனத்தன்மையை மறைத்து, ஊராருடன் சேர்ந்து சகபார்ப்பனரைத் திட்டும் தொடைநடுங்கி பார்ப்பனர்களுக்காவே இடப்பட்டன.

   அவர்களுக்காகத்தான் கூறினேன், பார்ப்பனன் என்பதற்காக வெட்கப்படாதீர்கள், என்னைப் பாருங்கள் நான் பெருமைப் படுகிறேன் என்றேன் அவ்வளவே. அதற்கு மேல் நான் சொன்னதற்கு வேறு பொருள் கிடையாது.

   கோலங்கள் விஷயத்தில் அந்த குறிப்பிட்ட குடும்பம் பற்றிய நிகழ்ச்சிகள் கதையில் பாதியில் செயற்கையாக திணிக்கப்பட்டு திடீரென நடுவில் ஒரு விளக்கமுமில்லாது மறைந்தே போயின. அம்மாதிரியான அரைகுறை செயல்களில் தேவையில்லாது ஒரு குறிப்பிட்ட சாதியை புகுத்தியதைத்தான் ஆட்சேபித்தேன். அந்த ரோல்களில் நடித்தவர்களுடன் எனக்கு என்ன கருத்து வேற்றுமை இருக்க முடியும்?

   மறுபடியும் சொல்கிறேன், இம்மாதிரி பார்ப்பனர்களை சீண்டும் யாரேனும் ஒருவர் செருப்படி வாங்கப் போகிறார். அது நடந்தால் அது பற்றி வருத்தம் தெரிவிக்க மாட்டேன்.

   டோண்டு ராகவன்

  16. ram says:

   //தனது பார்ப்பனத்தன்மையை மறைத்து, ஊராருடன் சேர்ந்து சகபார்ப்பனரைத் திட்டும் தொடைநடுங்கி பார்ப்பனர்களுக்காவே// சரியாகச் சொன்னீர்கள். பாலச்சந்தரின் அரங்கேற்றம் படமே அப்படிப்பட்ட தொடைநடுங்கித்தனத்தை அறிவுஜீவித்தனமாக வெளிக்காட்டிக்கொள்ள முனைந்த படைப்பாகவே பார்க்கிறேன். ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

  17. BaalHanuman says:

   டோண்டு ராகவன் சார் / ராம்,

   very well said…

  18. ராஜன் says:

   தொடரும் பதில்கள்…..

   ஆர் வி சொன்னது
   —————————–
   ஏற்றுக் கொள்வதற்கில்லை.
   கடந்த இருபது வருஷங்களாக மலையாள பிட்டு படங்கள் முக்குக்கு முக்கு ஓடுகின்றன. நாலு தெருவுக்கு ஒரு நாயர் டீக்கடை இருக்கிறது. அங்கேதான் இளைஞர்கள் அம்முகிறார்கள். சேச்சிகள் நிலை மோசமாக இருக்கிறதா என்ன?
   ———————————-

   தவறான உதாரணம் ஆர் வி. உங்களுக்கு தமிழ் நாட்டு நிலவரம் என்ன என்பது பற்றிய அறிவு சுத்தமாக இல்லை என்பது தெரிகிறது. ஆம் மலையாள செக்ஸ் படங்களைப் பார்த்து தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விடலைப் பையன்கள் ஏன் வயதானவர்கள் மனதிலும் கூட கேரளப் பெண்கள் என்றால் எளிதாக வந்து விடுவார்கள் அவர்களுக்கு கற்பு எல்லாம் கிடையாது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நீங்கள் சொல்லும் சினிமாக்களே. இவை போன்ற சினிமா பார்த்து விட்டு வரும் பொறுக்கிகள் பல வேளைகளில் எதிரில் வர நேர்ந்து விட்ட பல மலையாளப் பெண்களின் மார்புகளைக் கசக்கியுள்ளார்கள். நான் நேரே பார்த்திருக்கிறேன். ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரே மலையாளப் படத்தை வி சி ஆரில் பார்த்து விட்டு பல்கலையில் வேலை பார்த்த ஒரு மலையாள லெக்சரரை படுக்கைக்கு அழைத்ததும் அந்தப் பெண் என்னிடம் சொல்லியே எனக்குத் தெரியும். போதுமா. ஆம் தமிழ் நாட்டில் மலையாளப் பெண்களை செக்ஸ் பாம்ப்களாகப் பார்க்கும் ஒரு வித நோய் மனநிலை இவ்வாறான படங்களால் ஏற்பட்டுள்ளது அதனால் பாதிக்கப் பட்ட சம்பங்களை நேரில் கண்ட அனுபவங்களும் எனக்கு உண்டு போதுமா? நேரில் சந்திக்கும் பொழுது அந்த சம்பவங்களின் முழு விபரங்களையும் சொல்கிறேன்

   ஏன் அவர்கள் எல்லாம் இப்படி புலம்புவதில்லை என்று அடுத்த கேள்வியை நீங்கள் கேட்க்கலாம். அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க்க வேண்டும். அவர்களுக்கு இது ஒரு தொந்தரவு அதோடு நின்று விடுகிறது. அரசியல் ரீதியாக ஒரு மாநிலத்தின் முதல்வரே கேரளப் பெண்களை அசிங்கமாகப் பேசுவதில்லை. ஆனால் தமிழ் நாட்டுப் பிராமணர்கள் சினிமாவில் அசிங்கப் படுவதுடன் அரசியல்வாதிகளாலும் மிகக் கேவலமாக ஆபாசமாக தாக்கப் படுகிறார்கள். http://www.idlyvadai.com இன்றைய செய்தியை ஒரு சாம்ப்பிளுக்குப் பார்க்கவும். விகடன் பத்திரிகையின் சீனிவாசனை கருணாநிதி எவ்வளவு ஆங்காரத்துடன் ஜாதிப் பெயர் சொல்லி திட்டுவதை கவனிக்கவும். பாப்பாத்தி என்று திட்டி இந்த ஆள் முரசொலியில் எழுதாத நாள் இல்லை. ஆகவே மலையாளிகளின் நிலை வெறும் செக்ஸ் வக்கிரங்களை எதிர்கொள்வதுடன் நின்று விடுகிறது. பிராமணர்கள் அதையும் தாண்டி பெரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

   ஆகவே உதாரணம் அளிக்கும் முன்னால் உங்களுக்கு அனுபபூர்வமாகத் தெரிந்த உதாரணங்களை மட்டுமே கொடுக்கவும்.

   ஆர் வி சொன்னது

   இடுப்பை தடவும் ரவுடி பிராமணப் பெண் இடுப்பு என்று தேடுவதில்லை. அழகான, கவர்ச்சியான, இளம்பெண்ணின் இடுப்பு என்று வேண்டுமானால் தேடலாம். போன பத்து, அட வேண்டாம் ஐம்பது வருஷங்களில் ஈவ் டீசிங் கேஸ்களில் என்ன பிராமணப் பெண்கள் அதிகப்படியாகவா பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? பொதுவாக ஈவ் டீசிங் அதிகரித்திருக்கிறது, அதில் நிச்சயமாக சில பிராமணப் பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதை பிராமணப் பெண்கள் மீது உரசுவது மட்டுமே அதிகரித்திருக்கிறது என்று பேசுவது வெறும் paranoia.

   ஓ அப்படியா ஆர் வி? வெறும் பரோனியாவா? அடுத்த முறை சென்னை செல்லும் பொழுது உங்கள் உறவினர்கள் வீட்டில் வேலைக்குப் போகும் பெண்களோ கல்லூரி செல்லும் பெண்களோ இருப்பின் தயவு செய்து அவர்களிடம் ஒரு நேர்முகம் காணவும். அப்படி பட்ட உறவினர்கள் உங்களுக்கு இல்லாவிட்டால் என்னிடம் சொல்லவும் ஒரு நூறு அட்ரஸ் தருகிறேன் நீங்களே நேரில் சென்று அறிந்து கொள்ளவும். பொதுவாகப் பாதிக்கப் படும் பெண்கள் அவமானங்களை சகித்துக் கொண்டு வீடு திரும்புகின்றார்கள். அவர்களுக்குத் தெரியும் ஒரு பிராமணப் பெண் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றால் அங்கு இன்னும் அசிங்கமாக நடத்தப் படுவாள் என்பது. அப்ப உங்கள் கணக்குப் படி ஒரு சிலர் மட்டும் ஈவ் டீஸிங் செய்யப் பட்டால் உங்களுக்கு ஓ கே அப்படித்தானே? என்ன ஆர் வி எதையாவது யோசித்துதான் எழுதுகிறீர்களா? விவாதம் செய்வதற்காக அநியாயமாகச் சொல்லக் கூடாது. தமிழகம் முழுவதும் நடக்கிறது. உங்களுக்கு புள்ளி விபரம்தான் வேண்டும் என்றால் அதை நான் நேரடியாகவே உங்களுக்குத் தரத் தயார்.

   ஆர் வி சொல்வது

   மேலும் ராஜன் குறிப்பிடுவது போல மூலைக்கு மூலை பிராமணர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

   அப்படியா? ஓவரா? எது ஓவர் இல்லை. சரி மூலைக்கு மூலை இல்லை ஒரு நூறு ஊர்களில் நடக்கிறது என்றால் உங்களுக்கு அது சரியா? நிச்சயம் தாக்குதல்கள் நடக்கின்றன. அதை மறுப்பதன் மூலம் நீங்களும் அந்த ரவுடித்தனத்திற்கு ஒத்துழைப்புத் தருகிறீர்கள். ஹோலோகாஸ்ட் நடக்கவேயில்லை என்று சொல்வதையே இன்று ஐரோப்பாவில் குற்றமாக அறிவித்திருக்கிறார்கள் என்பது தெரியுமா? சரி நான் இனிமேல் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் விளக்கமாக ஆதாரம் அளித்தால் உடனே கண்டித்து விடப் போகிறீர்களா?

   உங்களுக்கு உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழ் நாட்டு அளவிலும் என்ன நடக்கிறது என்ற பொது அறிவு சுத்தமாகக் கிடையாது. இப்படித்தான் லவ் ஜிகாத் என்ற ஒன்று நடப்பதே கிடையாது எனது கற்பனை என்று நீங்கள் தமிழ் இந்துவில் சொன்னீர்கள். அதற்கு நான் உங்களுக்கு எத்தனையோ ஆதாரம் அனுப்பி வைத்தேன். முத்தாய்ப்பாக கேரள முதன் மந்திரி அச்சுதானந்தமேனனே இப்பொழுது கேரளத்தில் 4000த்துக்கும் அதிகமான பெண்கள் லவ் ஜிகாத் மூலமாக ஏமாற்றி மதம் மாற வைக்கப் பட்டுள்ள உண்மையை சொன்ன ஆதாரத்தையும் உங்களுக்கு அளித்தேன். மேலும் கேரள ஹைக்கோர்ட் ஜட்ஜ்கள் சொன்ன ஆதாரத்தையும் உங்களுக்கு அளித்தேன். அதன் பின்னால் கூட ஆம் லவ் ஜிகாத் உண்மையில் நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளக் கூடிய நேர்மை அல்லது நேரம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே எதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியாது ஆனால் அது நடக்கவேயில்லை என்று அது பற்றி கருத்து மட்டும் சொல்வீர்கள் அப்படித்தானே? அது நேர்மையான செயல் அல்ல ஆர் வி.

   சமீபத்தில் சு சுவாமி பற்றி எழுதும் பொழுது அவர் ஏதோ மேல் விஷாரம் பற்றிச் சொன்னார் அப்படி ஏதேனும் நடந்ததா என்ன என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போலக் கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு நிஜமான அக்கறை இருந்திருந்தால் தமிழ் இந்துவில் அது பற்றி வந்திருந்த முழு ரிப்போர்ட்டையோ ஒரு சின்ன கூகுள் இட்டிருந்தால் அது குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையோ படித்திருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேடிப் படிக்கும் ஆர்வமோ அக்கறையோ பொறுப்போ இருப்பதில்லை ஆனால் அது பற்றி எந்த விபரமும் தெரியாமல் சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒரு கருத்து மட்டும் போடுகிறீர்கள் இது என்னவிதமான இணைய நேர்மை ஆர் வி. தயவு செய்து ஒரு கருத்தை வெளியிடும் முன்னால் அது பற்றி நன்கு அலசி ஆராய்ந்து தீரப் படித்து விட்டு உண்மை நிலை அறிந்து கருத்துச் சொல்லுங்கள். நீங்கள் மறுத்த பல விஷயங்களுக்கும் என்னால் ஆதாரம் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியும். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு உங்கள் நிலையைத் திருத்திக் கொள்ளும் பொறுப்பு உங்களிடம் இருப்பதில்லை. லவ் ஜிகாத் போன்றே இந்த மூலைக்கு மூலைக்கும் என்னால் ஆதாரம் அளிக்க முடியும்? அப்படி அளித்தால் மட்டும் உடனே அதைக் கண்டிக்கவோ அல்லது ராஜன் சொன்னது சரியென்றோ ஒத்துக் கொள்ளவா போகிறீர்கள்? மூலைக்கு மூலை நடக்காவிட்டாலும் கூட ஒரே ஒரு இடத்தில் நடந்தாலும் கூட அது அராஜகம் தானே? ஏன் இப்படி புள்ளி விபரம் கேட்டு அதன் படி தீர்மானம் செய்யும் வழக்கத்திற்குச் சென்றீர்கள்?

   தொடரும்…….

  19. ராஜன் says:

   அடுத்து போட்ட மிக நீண்ட மிகக் காட்டமான என் பதில் எப்படியோ காணாமல் போய் நான் தளத்தில் இருந்து வெளியே போய் விட்டேன். நாளை மீண்டும் அடிப்பேன்.

  20. ram says:

   தமிழ் நாட்டில் அவஸ்தைப்படுவதிலிருந்து தப்பித்து அமெரிக்கா ஆஸ்திரேலியா அப்பிரிக்கா என்று ஓடி மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களுக்கு தப்பிப் பிழைக்க முடியாமல் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்திருக்கும் ப்ராமணர்களின் நிலை பற்றி எதுவும் உணர்வதற்கு சாத்தியமில்லை. ஆர் வி போலவே அரை வேக்காடாக அறிவுஜீவித்தனம் பேசுவார்கள் அவ்வளவுதான். அறிவு ஜீவி ப்ராமணராக இல்லாமல் சாதாரண உணர்ச்சிகள் கொண்ட பாமர ப்ராமணராக இருந்தால் ஆர்வி போன்றவர்களால் அதை யோசிக்க முடியும். ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த அறுபது வயது அப்பாவி ப்ராமணக் கிழவனை வெட்டிப்போட்டார்களே! சினிமாக்காரர்கள் ப்ராமணரைத் தொடர்ந்து கொடுமைக்காரர்களாகவும் ஜாதி வெறியர்களாகவும் காட்டுவதால் வந்த விளைவு இது என்பதை உங்களால் உணர முடியுமா? ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை! இது போன்ற வெறி பிடித்தவர்கள் மனதில் ஏற்கனவே ப்ராமணன் தான் கொடுமைக்காரன் என்றும் வேற்று நாட்டிலிருந்து படையெடுத்து வந்து நம்மை அழித்தவர்கள் என்றும் கூறப்பட்டு உரையேற்றப்பட்டு வளர்க்கப் பட்டவர்கள். ப்ராமணர்களை மேலும் கொடுமைக்காரர்களாகவே ஜெயமோகன் போன்றவர்கள் உருவகித்து எழுதினாலோ சினிமாக்களில் மேலும் மேலும் தொடர்ந்து காண்பித்தாலோ அதனால் இந்த வெறியர்கள் மேலும் வெறிகொள்வார்களே! இது போன்ற காட்சிகளால் உந்தப்பட்டு இன்னொரு மேற்கு மாம்பலம் பகுதியிலோ ஸ்ரீ ரங்கத்திலோ மற்றொரு ப்ராமணர் வெட்டப்பட்டாலோ , ஒரு ப்ராமணப்பெண் மானபங்கம் செய்யப்பட்டாலோ அதற்கு எழுத்தாளர்களோ, சினிமாக்காரர்களோ அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கி சபாஷ் போடும் ஆர் வி யோ பொறுப்பேற்பீர்களா?

   ஒரு முறை பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து புறப்பட தையாரானது. தூரத்திலிருந்து ஒரு பிராமணப் பெரியவர் ஓடி வந்தார். அதற்குள் பேருந்து நகர்ந்து விடவே நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கத்திக் கொண்டே அருகே வந்து அடித்துப் பிடித்து ஏறினார். ஐயோ பாவம் பெரியவருக்கு என்ன அவசரமோ என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் கல கலவென சிரிப்புச் சத்தம் கேட்டது. அருகாமையில் நின்றிருந்த கல்லூரி யுவதிகள் மூன்று பேர் குடுமி வைத்த அந்த பெரியவர் பேருந்தை நோக்கி நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கூறி ஓடி வந்ததைப் பார்த்து பொத்துக் கொண்டு சிரித்தார்கள். அவர்கள் அந்தக் காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியைப் போல் பார்த்திருக்கிறார்கள். ப்ராமணப் பெரியவரின் அவஸ்தை இவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியதன் விளைவு தமிழ் சினிமா தான். நடிகர் விவேக் முதல் பலதரப்பட்ட நடிகர்களும் குடுமி வைத்த ப்ராமணரைக் காட்டியே சிரிப்பு மூட்டி பழக்கப்படுத்தி விட்டதால் இந்த குடுமி வைத்த பிராமணரைப் பார்த்த உடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் இந்த யுவதிகள். அவசரத்தின் அவஸ்தையில் ஓடும் ஒரு வயதானப் பெரியவர் என்ற பச்சாதாபம் கூட அவர்களிடம் உண்டாகவில்லை. இந்த உளவியல் தாக்கத்தையும் அவஸ்தையையும் நேரில் அருகாமையில் இருந்து பார்த்தால் தான் ஆர் வி போன்ற அறிவு ஜீவிகளுக்குப் புரியும். அல்லது அவர் குடுமி வைத்து தமிழகத் தெருவில் நடந்து பார்க்கட்டும். ஒரு ப்ராமணர் எண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். மும்பையில் புரோகிதம் பண்ணும் அவர் குடுமியுடன் மின்சார ரயிலில் செல்லும் போது பின்னாலிருந்த ஒருவன் அவரது குடுமியைப் பிடித்துப் பார்த்திருக்கிறான். திரும்பிப்பார்த்த இவரைப் பார்த்து நக்கலாக சிரித்திருக்கிறான். இவர் அவனைப் பார்த்து “என் உடம்பில் எல்லா இடத்திலும் முடியிருக்கு, தொட்டுப்பாக்கனுமா?” என்று கடுப்பாகக் கேட்க அவன் இடத்தை காலி செய்துவிட்டான். அந்த துணிவு ப்ராமணர்களுக்கு இருக்க வேண்டும். அதை விடுத்து அவமதிப்பவர்களுக்கே ஜால்ரா போடும் ஆர் வி க்கள் இருக்கும் வரை பிராமணர்களுக்கு விடிவு கிடைக்காது.

  21. 🙂 இப்போதைக்கு இந்த குறி அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. ராஜன் சொல்கிற கருத்துக்கள் எனக்கு சிலவற்றைத் தவிர மிகவும் நியாயமாகவும் உண்மையாகவுமே இருக்கின்றன. நான் இன்னும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தாலும் இன்று ஞாயிறு என்பதால் வழக்கம் போல் வெளியே கிளம்புவதால் பிறகு எழுத நினைக்கிறேன்.
   நன்றி!

  22. virutcham says:

   @RV
   உங்களை தமிழ் இந்து தளத்திலும் இங்கும் ரவுண்டு கட்டிக்கிட்டு இருக்காங்க. நீங்க s ஆயிடீங்களா என்ன? இல்லை பதிலை பதிவாவே தயார் செய்தி கிட்டு இருக்கீங்களா.( சும்மா . weekend enjoy செய்துகிட்டு இருக்கீங்கன்னு புரியுது. மெதுவா வாங்க.)
   chillsam உங்களுக்கு அவங்க தளத்திலே ஒரு பாராட்டு அறிக்கையே வாசிச்சு இருக்காங்க. enjoy

   • RV says:

    விருட்சம், ராஜன் அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. முன்னால் எழுதியதை வேறு கூகிள் தின்றுவிட்டதால் உண்டான சோம்பேறித்தனம் வேறு. அவர் எழுதி முடிக்கட்டும், ஒரேயடியாக எழுதிவிடலாம் என்று காத்திருக்கிறேன். சில்சாம் பற்றி ஏதோ சொன்னீர்கள், சுட்டி தர முடியுமா?

    நல்லதந்தி, காத்திருக்கிறோம்!

    டோண்டு, உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் அடிக்கடி நீ அம்பியாக இருக்க வேண்டும், குடுமியாக இருக்க வேண்டும், அதனால்தான் இப்படி எழுதுகிறாய் என்று நடந்த “கருத்துப் பரிமாற்றங்களால்” கடுப்பாகி எந்த மறுமொழி எழுதினாலும் முதல் வரியில் நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று எழுதும் பழக்கம் எனக்கும் இருந்தது. ஆனாலும் சிறுமை இல்லை என்று மட்டுமே எழுத வேண்டும் என்று நினைப்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. இது நமக்குள் இசைவு இல்லாத ஒரு புள்ளி என்று விட்டுவிடுவோம்.

  23. RV says:

   முதலில் சில விஷயங்களை தெளிவாக்கிவிடுகிறேன். ராஜன் நல்ல நண்பர். இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கூட வீட்டுக்கு வந்து நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார். இங்கே நாங்கள் வாதிப்பதைக் கண்டு ஏதோ எங்களுக்குள் ஜென்ம விரோதம் என்று நினைத்துவிட வேண்டாம்.

   இரண்டாவதாக எனக்கு ராஜன் இதை உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறார் என்று தோன்றுகிறது. This issue pushes his buttons. அந்த நிலையில் இருப்பவரிடம் வாதம் செய்வதில் பெரிதாக அர்த்தம் இருப்பதில்லை. எந்த நிலையிலும் வாதம் செய்து ஒருவர் மனதை மாற்றிவிட முடியும் என்று நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் சொல்வதை காது கொடுத்தாவது கேட்பார்கள். இப்படி உணர்ச்சிவசப்பட்டிருக்கும்போது வாதங்களை படிக்கும்போது/கேட்கும்போதே இதை எப்படி மறுக்கலாம் என்றுதான் மனதில் சிந்தனை ஓடும். ராஜன் இந்த நிலையில்தான் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. நான் இதை எழுதி ராஜன் மனதை மாற்றி விட முடியும் என்று நினைக்கவில்லை. என் கருத்தை வைக்கிறேன், அவ்வளவுதான்.

   உதாரணமாக // ஒரு படைப்பில் (புனைகதை, சினிமா) ஜாதியை குறிப்பிடுவது அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு உத்தி. // என்று ராஜன் சொல்கிறார் என்று எழுதி இருந்தேன். அதையே எப்படி எழுதலாம், எனக்கே என்ன விளக்கம் என்று கேட்கிறார். நான் மீண்டும் ஒரு முறை அது உங்கள் கருத்து என்றுதான் சொல்லி இருக்கிறேன் என்று சுட்டிக் காட்டியதும் அடுத்தவர்கள் குழம்புவார்கள் என்கிறார். ராஜனைத் தவிர வேறு யாரும் குழம்பவில்லை என்பது தெளிவு. இதை அவரது பட்டன் அழுந்தி இருப்பதின் ஒரு வெளிப்பாடாகவே நினைக்க வேண்டி இருக்கிறது.

   ராஜன் மேலும் எழுதுகிறார் – // ஜாதி தாண்டிய கல்யாணம் என்று வந்தால் பிராமண பெண்கள் பிற ஜாதி, மத ஆண்கள் பின்னால் அலைகிறார்கள் – அப்படி என்று நான் எங்கே சொன்னேன்? // விரக தாபம், பிராமண பெண்கள் என்று எழுதியது ராஜன்தான்; ஆனால் பிற ஜாதி மத ஆண்கள் என்று அவர் குறிப்பிட்டு எழுதவில்லை. வேறு ஏதோ மறுமொழியில் (இங்கோ, ஜெயமோகன் தளத்திலோ) படித்துவிட்டு நான்தான் இரண்டையும் சேர்த்துவிட்டேன்.
   நெகடிவ் ரோல்களில் வேறு ஜாதியினர் காண்பிக்கப்பட்டால் கவுண்டர்வெயிட்டாக ஒரு நல்லவரையும் காண்பித்துவிடுவார்கள் என்று ஒரு வாதத்தை வைக்கிறார்; இது இந்த மறுமொழிகளில்தான் முதல் முறையாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னால் பிற ஜாதியினர் நெகடிவ் ரோல்களில் காட்டப்படுவதில்லை என்றுதான் ராஜன் சொல்லிக் கொண்டிருந்தார்.
   சரி கவுண்டர்வெயிட் வாதத்தை எடுத்துக் கொள்வோம்; பிராமணர்களை இழிவாக “இது நம்ம ஆளு” படத்தில் காட்டப்பட்டதாக சொல்வார்கள். அதில் சோமயாஜுலு பாத்திரம் கவுண்டர்வெயிட் இல்லையா?
   விஜயகாந்த் படங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு கவுண்டர்வெயிட் காட்டப்படுவது மிக அபூர்வம். எனக்கு அப்படி கவுண்டர்வெயிட் காட்டப்பட்டதாக நினைவு வருவது ஒரே ஒரு படமே.ராஜன் நல்ல படங்களை மட்டும் பார்ப்பவர், விஜயகாந்த் படங்களை பார்த்திருக்க மாட்டார். 🙂
   கவுண்டர்வெயிட் தாண்டியும் அவர் ஒரு வாதத்தை வைக்கிறார் – பிற ஜாதி மதத்தினர் நெகடிவ் ரோல்களில் காண்பிக்கப்பட்டாலும், பிரச்சினை இல்லை; ஏனென்றால் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கற்றுக் கொடுக்கப்படவில்லை. பிராமணர்கள் என்றால் மட்டுமே பிரச்சினை. இதை லாஜிகலாக முன்னே கொண்டு போனால் எல்லா ஜாதி மதக்காரகளையும் நெகடிவ் ரோலில் காட்டலாம், பிராமணர்களை மட்டும் கூடாது! நான் பதிவாக போட்ட மறுமொழியில் எல்லாரையும் நெகடிவ் ரோலில் காட்டும்போதுதான் பிராமணர்களை காட்டலாம் என்று சொன்னார்; இப்போது எல்லாரையும் காட்டினாலும் பிராமணர்களை நெகடிவாக காட்டக்கூடாது என்கிறார்; நாளைக்கு என்ன, பிராமணர்களை உத்தமர்களாக காண்பிக்க வேண்டும் என்பாரா? 🙂
   இப்படி பிறரை “இழிவாக” காட்டினால் பிரச்சினை இல்லை என்றெல்லாம் எழுதிவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து மலையாளப் படங்கள் பார்த்து சேச்சிகளை தப்பாக நினைக்கிறார்கள் என்றும் எழுதுகிறார். ஒரு வேலை எம்ஜிஆரை மலையாளத்தான் என்று கலைஞர் திட்டிகொண்டிருந்ததால் ஒரு காழ்ப்புணர்ச்சி உண்டாகி இருக்குமோ?

   ராஜனின் வாதங்களில் உள்ள பிரச்சினை anecdotal evidence -ஐ பொதுவான உண்மையாக கொள்வதுதான். அவருக்கு சில கேரளப் பெண்கள் மீது நடந்த பாலியல் தாக்குதல்கள் தெரியும் போல. அதை வைத்து அவர் பொதுவாக சேச்சிகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடக்கிறது என்று முடிவுக்கு வருகிறார். நம்மையும் வரச் சொல்கிறார். தமிழ் நாட்டில் போன வருஷம் ஆயிரம் ஈவ் டீசிங் கேஸ்கள் பதிவு செய்யப்பட்டன, அதில் கேரளப் பெண்கள் மீது நடந்தவை நூறு, ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கேரளப்பென்கள் ஒரு சதவிகிதம்தான் என்று சொனால் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரம். எனக்கு ஒரு டிரைவரை தெரியும், அவர் சேச்சிகளைப் பற்றி கேவலமாக பேசுவார், பக்கத்து வீட்டு கேரளப் பெண் கையை பிடித்து இழுத்தார், அதனால் கேரளப் பெண்களை தமிழர்கள் “கேஸ்” என்று கருதுகிறார்கள் என்றால் அது ஒத்துக்கொள்ளக் கூடிய ஆதாரம் இல்லை. என்ன ராஜன் தமிழ்நாடு பூராவும் போய் இதற்காக ஒரு கருத்துக் கணிப்பா நடத்தினார்? தனக்கு பர்சனலாக தெரிந்த நாலோ, அட நாற்பதோ கேசை வைத்து ஆறரை கோடி மக்கள் பற்றி ஒரு முடிவுக்கு எப்படி வருவது? அதுவும் அவர்கள் புலம்புவதில்லை என்று ராஜனே ஒத்துக் கொள்கிறார், ஆனாலும் அவர்கள் நிலை பொதுவாக மோசமாக இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டும் என்கிறார்.

   // உங்களுக்கு அனுபபூர்வமாகத் தெரிந்த உதாரணங்களை மட்டுமே கொடுக்கவும். // பிரச்சினையே இதுதான்; அனுபவபூர்வமாக தெரிவது ஒரு microcosm மட்டுமே. (ராஜனுக்கு என்னை விட பெரிய microcosm ஆக இருக்கலாம்.) அதை வைத்து பொதுவான முடிவுகளுக்கு வருவது எப்படி? உதாரணமாக ராஜன் கேட்கிறார் – உங்கள் உறவினர்களிடம் கேளுங்கள் என்று – என் உறவினர்கள் யாரும் பிராமண பெண்கள் என்று சீண்டப்பட்டதில்லை. (அழகான பெண்கள் என்றோ, வெள்ளையாக இருக்கிறார்கள் என்றோ சீண்டப்பட்டிருக்கிரார்கள்) இந்த அனுபவத்தை மட்டும் வைத்து நான் ஒரு பொதுவான முடிவுக்கு வரலாமா? அப்படி வந்தால் அதை ராஜன் ஏற்றுக் கொள்வாரா?

   நிச்சயம் பிராமணர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன என்று எழுதி இருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை அதை எங்கே சொல்லி இருக்கிறேன், இதை எங்கே சொல்லி இருக்கிறேன் என்று கேட்பவர் நான் பிராமணர்கள் மீது ஜாதியை வைத்து “தாக்குதல்கள்” நடப்பதில்லை என்று என்று எங்கே எழுதினேன், அதை எங்கே படித்தார் என்றும் சொல்லலாம். 🙂 பிராமணர்கள் மீது இணையத்தில் நடக்கும் தாக்குதல்களை இந்த, தொடர்புள்ள பதிவு, மறுமொழிகளில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் ராஜன் மூலைக்கு மூலை தாக்குதல் என்று சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன். அடிக்கடி ஹோலோகாஸ்டைப் பற்றி வேறு எழுதுகிறார், அதை இங்கே ஏன் இழுக்கிறார் என்று தெரியவில்லை. இன்று பிராமணர்கள் மீது நடக்கும் “தாக்குதல்களை” ஹோலோகாஸ்டுடன் ஒப்பிடுவது ஹோலோகாஸ்டை கேவலப்படுத்துவது. ஜலதொஷத்துக்கும் கான்சருக்கும் வித்தியாசம் இல்லையா?

   வார்த்தைக்கு வார்த்தை அதை எங்கே சொல்லி இருக்கிறேன், இதை எங்கே சொல்லி இருக்கிறேன் என்று எழுதுபவர், என்னவோ அண்ணாச்சி என்று சொன்னதால்தான் அது நாடார் என்று நான் முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். அதை நான் எங்கே சொன்னேன் என்று தெரியவில்லை. 🙂 நாடார் என்பது சினிமாவில் மட்டுமல்ல, சினிமா தாண்டிய செய்திகளிலிருந்தும் தெரிகிறது. தமிழ்நாட்டின் பண்பாட்டு சூழலை அறியாமல் வளர்ந்த தமிழர்களுக்கு – வெளிநாட்டில் பிறந்து வளரும் இன்றைய ஜெனரேஷனுக்கு – வேண்டுமானால் அது புரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு பூணூலும் மந்திரமும் பார்த்தால் பிராமணர்கள் என்று மட்டும் புரிந்துவிடுமா?

   பல குண்டு வீச்சு சம்பவங்களில் முஸ்லிம்கள் குற்றவாளிகள் இருப்பதால் எல்லா முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்றும் “சில” தமிழர்கள் நினைக்கலாம். அது அவர்கள் பார்வையின் கோளாறு. இதற்காக சினிமாவில் வரும் தீவிரவாதிகளுக்கு கவுண்டர்வேயிட் கொடுக்கப்பட வேண்டும் என்றோ, இல்லை அவர்களை முஸ்லிம்களாக சித்தரிக்கக்கூடாது என்றோ நான் நினைக்கவில்லை. விஜயகாந்தும் நினைக்கவில்லை. 🙂

   தமிழ் சினிமாவில் பிராமணர்களை “இழிவாக” சித்தரிப்பதால் அநேக தமிழர்கள் பிராமணர்களை இழிவாக கருதுகிறார்கள் என்று நான் எண்ணவில்லை. “சில” தமிழர்கள் கருதலாம். பிராந்தன்கள்!

  24. ராஜன் says:

   ஆர் வி

   விரிவான பதில் எழுதி சென்ற முறை அழிந்து போனதற்குப் பிறகு ஆர்வம் போய் விட்டது. மீண்டும் மீண்டும் புரியாமலேயே பேசுகிறீர்கள். நான் ஒரு உதாரணத்திற்காக ஹோலோகாஸ்ட் பற்றிச் சொன்னால் ஹோலோகாஸ்டையும் தமிழ் நாட்டு பிராமணர்களையும் நான் ஒப்பிடுவதாக அபாண்டமாகச் சொல்கிறீர்கள். திரித்தல்களுக்குப் பதில் சொல்லி அலுத்து விட்டது.

   வார்த்தைகளை வளைத்து வளைத்துப் பேசுவதனால் விதண்டாவாதமே வளரும் அன்றி உருப்படியான விவாதம் வளராது. கருணாநிதியின் பிராமணத் துவேஷம் குறைந்து விட்டது என்று நீங்கள் எழுதுவதைப் படித்த பின்னரும் எதையுமே தெரிந்து கொள்ளாமல் விவாதம் பண்ண வரும் உங்களுடன் பேசுவது வீண் என்று புரிந்து விட்டது.

   நேற்று கூட கருணாநிதி பாப்பாத்தி, பாப்பான், ஐயர், மொட்டைச்சி, முண்டச்சி என்றெல்லாம் அர்ச்சனை செய்திருக்கிறார். ஒரு முதல்வர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் இவ்வளவு தூரம் தினம் தினம் விஷம் கக்குகிறார் அது அவர் பத்திரிகையில் அவரே எழுதி தினம் தினம் தலையங்கமாக வருகிறது. இருந்தாலும் நீங்கள் சொல்கிறீர்கள் கருணாநிதிக்கு பிராமணக் காழ்ப்பு இல்லை என்று. கூடவே இன்னொருவர் வந்து அவர் அப்படியெல்லாம் சினிமா எடுக்கவில்லை என்று ஒத்து ஊதுகிறார்கள். அவருக்கு ஒரு வேளை முண்டச்சி என்று எழுதுவது கண்ணியமான செயலாகத் தோன்றலாம். அல்லது அவர் எழுதவில்லை அவர் கை எழுதினால் அதற்கு அவர் என்ன செய்வார் என்று முன்பு ரெக்கார்ட் டான்ஸ் பார்ப்பது அவர் குற்றம் அல்ல டான்ஸ் மாஸ்டர் குற்றம் என்று சொன்னது போல இதற்கும் ஏதேனும் ஜால்ராவுடன் வருவார்.

   ஒரு நாட்டின் முதல்வர் இவ்வளவு குரோதம் காண்பிக்கிறார். இந்தக் குரோதம் ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து தினம் தினம் ஏறுகிறது அது பிராமணர்களின் மீது தாக்குதலாக மாற அதிக நேரம் எடுக்காது. அப்படி ஒரு சூழல்தான் தமிழ் நாட்டில் இன்று நிலவுகிறது. ஆனால் எதைப் பற்றியும் தெரியாமல் எதையுமே அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளாமல் நீங்கள் ஏட்டுச் சுரைக்காயாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி ஒரு மாநிலத்தில் முதல்வரே ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது மட்டும் வன்மம் வைத்து குரோதத்தையும் வெறுப்பையும் வளர்ப்பதை நீங்கள் எங்காவது கேட்டதுண்டா? உங்களுக்கு அவர் அப்படி எழுதுது பேசுவது கூடத் தெரியாது என்று நீங்கள் சொல்லும் பொழுது பிரச்சினையின் ஆணி வேர் பற்றியே ஒரு அறிவும் உங்களுக்கு இல்லாத பொழுது இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு தூரம் நான் உங்களுடன் பேசியதே நேர விரயம்.

   சம்மரைஸ் செய்து விடுகிறேன்:

   1. நான் சொல்வது மக்களுடன் பழகி, அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை தினமும் நூற்றுக்கணக்கான பேர்களுடன் தொடர்பு கொண்டு பெற்ற சமூக அறிவு, அடிபட்டு பெற்ற அனுபவம் சார்ந்த அறிவு. அந்த அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன் தமிழ் நாட்டில் தி க , தி மு க ரவுடிக் கும்பல்களால் ஆரம்பித்த காழ்ப்புணர்வு சினிமாக்களால் மேலும் தூபம் போடப் படுகிறது. எந்தவொரு இனக்குழுவின் மீதான வன்மமும் இதே பாணியில்தான் உலகம் முழுக்க வளர்க்கப் பட்டது சமீபத்திய உதாரணம் டுட்சிக்குக்களும், டுட்ட்டுக்களுக்குமான ஒன்று. உங்களுக்கு உள்ளூரில் கருணாநிதியின் இன வெறுப்பே தெரியாத பொழுது உங்களிடம் போய் என்ன வரலாற்றைப் பேசுவது.

   2. பிற ஜாதியினரை ஜாதியின் பெயரைச் சொல்லி ஒரு நாட்டின் முதல்வர் வசை பாடுவதில்லை. ஜாதியின் பெயரைச் சொல்லி பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதில்லை. அப்படி ஆபாசமாகா பிற ஜாதியின் பெயரைச் சொல்லி எடுக்கப் பட்ட ஒரு சினிமாவின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டேன் உங்களால் சொல்ல முடியவில்லை. அப்படியே காட்டப் பட்டிருந்தாலும் அரசியல் ரீதியாக வன்மத்திற்கு உள்ளாகி வரும் ஒரு ஜாதியினரின் பிரச்சினை வேறு. இந்த அடிப்படையைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை

   3. எந்தவொரு நாட்டின் முக்கிய பிரச்சினையிலும் உங்களுக்கு நேரடியான அனுபவங்களோ அது குறித்த விபரங்களோ தெரிவதில்லை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஆனால் அது நடக்கவில்லை என்று மட்டும் முதலில் சொல்லி விடுகிறீர்கள். தமிழ் இணையத்தைப் படிக்காமலேயே கருத்து சொல்கிறீர்கள். லவ் ஜிகாத் என்றால் என்னவென்று புரியாமலேயே அது நடக்கவேயில்லை என்று ஊருக்கு முன்னால் வந்து சான்றிதழ் கொடுக்கிறீர்கள். தெருவுக்குள் வந்து இந்துக்களைத் திட்டினால் அது தவறு அல்ல என்று சர்ட்டிஃபிகேட் வழங்குகிறீர்கள் இன்று அப்படிச் செய்தவர்களைப் போலீசார் கைது செய்த செய்தியைப் போட்டிருக்கிறார்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டீர்கள். ஆக உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சினைதான் அது எப்படியாவது முற்போக்கு லேபிள் பெறுவது

   உங்கள் அடையாளத்தை மறைக்க படாத பாடு படுகிறீர்கள். நீங்களும் நானும் இன்ன ஜாதியில் பிறக்க நேர்ந்தது ஒரு விபத்து. நாம் கேட்டுக் கொண்டு அது நேரவில்லை. அதற்கு நாம் பொறுப்பும் அல்ல. அப்படிப் பிறந்ததினால் எனக்கு எவ்விதப் பெருமையும் இல்லை. சிறுமையும் இல்லை என்று நான் எண்ணுகிறேன். அப்படிப் பிறந்து விட்டதாலேயே குற்ற உணர்வும் அவமான உணர்வும் நான் அடைவதில்லை. நீங்கள் அடைகிறீர்கள். சிறுமை இருப்பதாக நீங்கள் மானசீகமாக உங்களுக்கே தெரியாமல் அடி மனதில் எண்ணுகிறீர்கள். அந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்சை மறைக்க பிராமணர்களையும் அது தொடர்பானவர்களையும் அடிக்கடி விமர்சித்து அதைப் பற்றியே அடிக்கடி பேசிப் பேசி உங்களை அதில் இருந்து வெளியேறி விட்டவனாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள். ஊருக்காக வாழ்கிறீர்கள்.

   அதன் காரணமாக நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த பிராமணர் பிரச்சினைகளையே பேசிப் பேசி உங்களது முற்போக்கு நிலையை நிறுவ முயலுகிறீர்கள். இது சார்ந்த பிரச்சினைகளை மாதம் ஒரு முறை தேர்ந்தெடுத்து உங்கள் முற்போக்குக் கருத்தைச் சொல்ல ஒரு மேடையாக ஜெயந்திரரைப் போன்றவர்களை பயன் படுத்திக் கொள்கிறீர்கள்.

   என் பிறப்பு என் விபத்து. அதற்காக நான் யாரையும் வெறுப்பதும் தாழ்வாக நினைப்பதும் கிடையாது அதே காரணத்தினால் என்னை அசிங்கமாக நடத்துபவர்களுக்கு பயந்து கொண்டு என்னையே நான் சிறுமைப் படுத்திக் கொள்வதும் கிடையாது. நான் எதையும் மறைக்கவில்லை மாறாக அப்படி பிறக்க நேர்ந்து விட்டதால் என்னை தாக்குபவர்களை நான் கடுமையாகத் திருப்பித் தாக்குகிறேன் எனக்கு எந்த வித முற்போக்கு அடையாளங்களும் தேவைப் படவில்லை. நான் அப்படிப் பிறக்க நேர்ந்ததினால் எனக்கு ரெண்டு கொம்புகள் கிடையாது அதே நேரத்தில் அங்கு பிறக்க நேர்ந்ததால் என்னை ஏளனமாகவோ கேவலமாகவோ நடத்துபவர்களை நான் கடுமையாகத் திருப்பித் தாக்குகிறேன். நான் முற்போக்கு பட்டங்களைப் பற்றிக் கவலைப் படாமல் எனது அனுபவம் வழி நான் பெற்ற, வாழ்க்கையில் கூர்மையான பார்வைகள் அவதானிப்பு மூலம் நான் பெற்ற அனுபவங்கள் தந்த உண்மைகளின் அடிப்படையில் பிறர் என்ன நினைப்பார்களோ என்று கவலைப் படாமல் உள்ளத்தில் பட்ட உண்மைகளை மட்டுமே சொல்கிறேன். நிச்சயம் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவிற்கு எனக்கு அனுபவங்கள் நிறைய உண்டு.

   தமிழ் நாட்டில் தொடர்ந்து செய்யப் பட்டு வரும் இனவெறிப் பிரச்சாரத்தினால் இன அழிப்பு நேரும் சாத்தியம் இருக்கிறது என்பதையும் நான் நம்புகிறேன். அதற்கான சூழலை தமிழ் சினிமாவும் உருவாக்கி வருகின்றன என்பது என் தீர்மானமான கருத்து.

   உங்களைப் பீடித்திருப்பது முற்போக்கோ ஃபோபியா. உங்களை மட்டும் அல்ல பெரும்பாலான பிராமணர்களை இந்த நோய் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்கப் பட்டிருப்பவர்கள் தங்கள் பிறந்த ஜாதியின் காரணமாக தங்களைத் தாங்களே சிறுமையாக எண்ணிக் கொண்டு அதில் இருந்து வெளியேறும் முகமாக குணா கமலஹாசன் தன் மூஞ்சியை வெறுப்பது போல வெறுத்துக் கொண்டு, தங்களுக்கு ஒரு முற்போக்கு இமேஜ் வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள். இணையத்தில் இன்று கடுமையான பிராமணத் துவேஷம் செய்யும் பலரும் இந்த நோய் முற்றிப் போனவர்கள்தான். உங்களுக்கு அந்த அளவுக்கு முற்றவில்லை என்பது ஒரு ஆறுதலே.

   உண்மை என்பது நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் லிபரல் கண்ணாடியையும் தாண்டியது. அதை நீங்கள் பார்க்க விரும்புவதில்லை. எதைச் சொன்னால் உங்களுக்கு ஒரு முற்போக்குப் போர்வை கிட்டுமோ அதை மட்டுமே காண விருப்பப் படுகிறீர்கள் அதை மட்டுமே பேசுவீர்கள். உண்மைகளை ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிரூபித்தாலும் அதை காண விரும்ப மாட்டீர்கள்.

   ஆரம்ப காலத்தில் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போன வாலியை பூணூல் போடக் கூடாது, நாமம் போடக் கூடாது என்று கடும் வெறுப்புடன் அவமானப் படுத்தினார்கள் அதற்காக பிழைப்பிற்காக தன்னை மறைத்துக் கொள்ள ஆரம்பித்து ஆரம்பித்து குறுகி குறுகி இன்று மண்புழுவை விட மலப்புழுவை விடக் கேவலமான ஒரு பிறவியாக அந்த வாலி மாறி விட்டார். எங்கே சமூகம் நம்மை ஏளனம் செய்து விடுமோ நம்மைத் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உண்மைக்குப் புறம்பாகப் பேசிப் பேசி அதையே உண்மை என்று நம்பவும் ஆரம்பித்து விட்டீர்கள். இது ஒரு மனவியல் சார்ந்த பிரச்சினையே. நான் நானாக இருக்க மட்டுமே விரும்புகிறேன் நீங்களோ முற்போக்குவாதியாக உங்களைக் காண்பித்துக் கொண்டு அதன் மூலமாக தப்பி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் அனுபவம் இன்று உங்களுக்கு இல்லை நாளைக்கு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம். அவரவர் அனுபவங்கள் அவரவர் பார்வைகள் அவரவருக்கு.

   இதையெல்லாம் சொல்லாமல் நான் வெறும் சினிமா, சமையல், சாப்பாடு, விளையாட்டு, வேடிக்கை, ஜோக்ஸ் மட்டுமே பேசிக் கொண்டிருந்திருப்பேனாயின் ஒரு ஜெண்ட்டில்மேனாக, ஒரு முற்போக்காளனாக அடையாளம் கண்டு கொள்ளப் பட்டு அனைவரிடமும் நல்ல பேர் வாங்கிக் கொண்டு போயிருந்திருப்பேன். என் அனுபவம் வழி வந்த உண்மைகளைச் சொல்வதால் நான் இன்று ஜாதி வெறியனாகப் பிற்போக்காளனாக அடையாளம் காணப் படுவேன் என்பதை நன்கு அறிந்தேதான் இதையெல்லாம் சொல்கிறேன் ஏனென்றால் நான் என்றும் இமேஜுக்காக எதையும் சொல்பவனல்ல.

   இனி இந்த விவாதத்தைத் தொடரும் உத்தேசம் இல்லை. என் விடுமுறையும் முடிந்து விட்டது. இனி இணையத்தில் எழுத நேரம் கிடையாது. பார்த சினிமாக்களைப் பற்றி நேரம் கிடைக்கும் பொழுது எழுதினால் அனுப்பி வைக்கிறேன்.

   அன்புடன்
   ராஜன்

   • RV says:

    ராஜன்,

    உண்மையை சொல்லப் போனால் எனக்கும் என் முதல் மறுமொழியை கூகிள் தின்ற பிறகு பதில் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது. சரி பதில் சொல்லவில்லை என்று இருக்க வேண்டாமே என்றுதான் எழுதினேன். இதையும் எழுத சுத்தமாக ஆர்வம் இல்லை, இருந்தாலும் சில தகவல் பிழைகளை திருத்தி ஆக வேண்டிய நிலை.

    ௧. கலைஞர் டெக்னிக்கை பயன்படுத்துகிறீர்கள். அவர்தான் வாதங்களுக்கு பதில் சொல்லமாட்டார், வாதிடுபவனுக்கு என்ன வியாதி, ஜாதி, என்று ஒரு டான்ஜெண்டில் போய்க்கொண்டே இருப்பார். உங்களைப் போன்றவர்களே வாதங்களை – அனுபவபூர்வமகா பார்ப்பதின் குறைபாடுகள், கவுண்டர்வேயிட், etc . – விட்டுவிட்டு வாதிடுபவர்களின் உண்மையான/இல்லாத குணாதியசங்கள் – முற்போக்கு லேபில், குற்ற உணர்வு, காம்ப்ளெக்ஸ் என்று போனால் கலைஞர் வியாதியைக் கண்டு கவலைப்படத்தான் வேண்டும்.
    ௨. தகவல் பிழை – இணையத்தில் நான் எங்கும் அடையாளத்தை மறைத்ததில்லை. ஒரு காலத்தில் எங்காவது மறுமொழி எழுதினால் நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்றுதான் முதல் வரி இருக்கும். அப்போதெல்லாம் ஜாதி அடையாளத்தை சொல்வதால் நீ ஜாதி வெறி பிடித்தவன் என்று சொல்வார்கள், இப்போது நீங்கள் இந்த extreme -இலிருந்து ஆரம்பிக்கிறீர்கள்.

    மிச்சம் புதிதாக முக்கியமாக எழுத எதுவும் இல்லை.

  25. ராஜன் says:

   ஆர் வி

   கருணாநிதிக்கும் எனக்கும் உள்ள முக்கிய வேறுபாடு நான் எடுத்தவுடன் முற்போக்கு பற்றி குறிப்பிடவில்லை ஒரு மிக நீண்ட விவாதம் நடத்திய பின் கட்டக் கடைசியில்தான் குறிப்பிட்டுள்ளேன். கருணாநிதி என்றால் எடுத்தவுடனேயே பாப்பாரப் பயலே பாப்பாத்தியே என்றுதான் துவங்குவார். நான் உங்களைக் குற்றம் சாட்டவில்லை. உங்களை அறியாமலேயே இப்படி ஒரு ஃபோபியா உங்களிடம் உருவாகிவிடுகிறது நீங்கள் அறியாமலேயே பாவித்து விடுகிறீர்கள் என்கிறேன். நீங்கள் அடையாளத்தை மறைத்தீர்கள் என்றும் சொல்லவில்லை. அந்த அடையாளம் வித பழியை உங்கள் மேல் ஏற்றுவதாக எண்ணிக் கொண்டு அந்தப் பழியில் இருந்து, அது கொடுக்கும் ஸ்டிக்மாவில் இருந்து எப்படியாவது வெளியேற முயன்று அதற்காக ஒரு சில வாதங்களைப் பிடிவாதமாக செயற்கையாக வைக்கிறீர்கள் என்று மட்டுமே சொல்கிறேன். இதே நோய் இன்று ஈ வெ ரா வை பெரியார் என்று அழைக்கும் எந்தவொரு நபருக்கும் இருக்கிறது. இது உங்களிடம் சற்று குறைவாக உள்ளது. நீங்கள் இன்னும் ஞாநி, கமலஹாசன், வாலி அளவுக்கு போகவில்லை. அதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டும் :))

   நான் சொல்ல வந்தது சரியாகச் சொல்லப் படவில்லை. நம் மனசாட்சிப் படி யாரையும் இழிவாக நினைக்காமல், ஜாதி வேற்றுமை பாராமல், உயர்வு தாழ்வு பேணாமல், அடுத்தவரின் ஜாதி தகுதி பார்த்து அவர்களை இகழ்வதோ போற்றுவதோ செய்யாமல் அவர்களின் செயல்களை வைத்தே எடை போட்டாலே போதுமானது, நாம் நாமாக இருந்தாலே போதுமானது. நம் மனசாட்சியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் மீது ஸ்டிக்மா விழுந்து விட்டது என்று எண்ணிக் கொண்டு ஒரு ஃபாசிஸ்டை, ஒரு இன வெறியனை, ஒரு அயோக்யனைப் போய் தேவையில்லாமல் சமூக சீர்த்திருத்தவாதி, பெரியார் என்று பொய்யாகப் புகழும் கேவலத்திற்கு நாம் இறங்கத் தேவையில்லை என்பதே நான் சொல்ல வருவது. போரடிக்குதுங்க வேற ஏதாவது டாப்பிக் ஆரம்பிங்க :))

   அன்புடன்
   ராஜன்

  26. Rasool says:

   //இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது// Rajan, can u give me the statistics of how many students got 1 lakh for this year and on which scheme? And what about SC/STs,BC&MBC reservations, scholarships? Are they not Hindus?Instead of asking so called govt aids for poor brahmins, don’t tell lies like Hindu fanatics.

  27. ராஜன் says:

   ரசூல்

   நான் சொல்வதில் எந்தவிதப் பொய்யும் இல்லை. ஒரு லட்சம் என்பது தவறான தகவலாக இருக்கலாம் ஆனால் கொடுக்கப் படும் பணம் ஏழை எஸ் சி மாணவர்களுக்குக் கொடுக்கப் படுவதை விட அதிகமானது. மேலும் வருடத்திற்கு 2 லட்சம் பெறும் முஸ்லீம்களும் (இவர்களில் பாதி கணக்குக் காட்டுபவர்கள் இல்லை, பர்மா பஜாரில் கள்ளச் சாமான்கள் விற்பவர்கள் எல்லாம் ஏழைகள் பிரிவில் வருவார்கள்) அது ஒரு ரூபாயாக கூட இருக்கட்டுமே? சிறுபான்மையினரில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே ஒரு பொதுவான அரசு தனியாக காசு கொடுக்கும் என்றால் அது அராஜகம். அது மத ரீதியான காழ்ப்பை மேலும் வளர்க்கவே உதவும். நிச்சயம் தமிழ் நாடு அரசு ஓட்டுப் பொறுக்குவதற்காக பிரிவினையையும் மத மாற்றத்தையும் வளர்க்கிறது. ஏழைகளில் என்ன கிறிஸ்துவன், முஸ்லீம் என்ற பேதம்? எந்தவொரு ரிசர்வேஷன் ஸ்காலர்ஷிப்பும் இந்த அளவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதைப் பற்றி மிக விரிவாக வந்த கட்டுரைகளைப் படித்து விட்டு பேசவும். தமிழக அரசு செய்வது பச்சை அயோக்யத்தனம், மனசாட்சி இல்லாம நீங்கள் அதை ஆதரிக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களினால்தான் மதக் கலவரங்களும் பரஸ்பர வெறுப்பும் பரவுகின்றன. புள்ளி விபரங்களைக் கீழ்க்கண்ட பதிவுகளில் படித்து விட்டு மேலும் அதே தளத்தில் உங்கள் விவாதத்தினை தொடரவும். மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் அராஜக சட்டத்தை நான் எதிர்ப்பதினால் நான் ஃபனடிக்காக இருந்தால் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன். இந்த தந்திரமான திட்டம் மூலம் உங்களைப் போன்றவர்களின் ஓட்டுக்களைப் பொறுக்க அரசாங்கம் போடும் அயோக்யத் திட்டம். உங்களுக்கு இப்படி மதத்தின் பெயரால் இந்துக்களை வஞ்சனை செய்து இந்தக் காசைப் பெறுவது அவமானமாகத் தெரியவில்லையா? இந்துக்களின் வரிப்பணத்தில் அவர்களை ஏமாற்றி விட்டுத் தரப்படும் இந்த வஞ்சகமான லஞ்சம்,அராஜகமான ஒரு பிச்சைப் பணம் என்று குரான் சொல்லித் தரவில்லையா? மக்கள் மனதில் பிரிவினையையும் மத மாற்றத்தையும் தூண்டும் ஒரு திட்டம் மூலமாக நிதி பெறுவது கேவலமான ஒரு செயலாகக் கூடவா உங்களுக்குத் தெரிவதில்லை? கருணாநிதியின் இந்து விரோத மதமாற்ற பிரிவினை வளர்க்கும் இந்த திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கீழ்க்கண்ட விபரங்களைப் படித்து விட்டு உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் இது நியாயமா என்று. நியாயம் என்று நீங்கள் கருதினால் உங்களிடம் பேச எனக்கு ஏதுமில்லை.

   http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

   http://www.tamilhindu.com/2010/07/tn-bjp-july-struggle-for-the-rights-of-hindu-poor/

   http://ezhila.blogspot.com/2010/08/blog-post.html

  28. ராஜன் says:

   தி க காலவதியாகி விட்டது என்று சொன்ன ஆர் வி க்கு இதை சமர்ப்பிக்கிறேன்

   தந்தை பெரியார் அவர்கள் கல்விக் கூடங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் அறவே
   இருக்கக்கூடாது என்றே பாடு பட்டு சுயமரியாதை இயக்கத்தை- திரா விடர்
   கழகத்தை வளர்த்து வந்தவர்கள்.

   கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகள் இருந்தால் நம் பிள்ளைகள் – மாணவர்கள்
   கல்வி என்பது பற்றி ஒழிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்ப தால்,
   விடுதலையில் அது ஒரு தலைப் பாகவே வெளிவருவது நமது முதல்வர் கள் அவர்கள்
   அறியாதது அல்ல.

   முக்கிய பொறுப்பான கல்வி பீடங் களுக்கோ, உத்தியோகங்களுக்கோ
   பார்ப்பனர்களைக் கொண்டு வந்து போடுவது நண்டைச் சுட்டு நரியைக் காவல்
   வைத்த கதை என்றும் தந்தை பெரியார் அவர்கள் எழுதிடத் தயங்கிய தில்லை.

   திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு ஒரு பார்ப்பன அம்மை யாரை
   துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என்று விடுதலையில் இரண்டு முறைகளுக்கு
   மேல் எழுதியும், மீறி, அவர் அப்பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக
   நியமிக்கப்பட்டதன் விளைவு, உடனடியாகக் கைமேல் பலனாகத் தெரியத்
   துவங்கிவிட்டது என்பதை மிகுந்த வேதனையுடன் மாண்புமிகு முதலமைச்சர்
   அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வது எமது கசப்பான கடமையாகும்.

   பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள பார்ப்பனரல்லாத பேராசிரியர்கள்,
   ஊழியர்கள் இப்போதே குமுற ஆரம் பித்து விட்டனர்; நமக்கு ஏராளமான தகவல்கள்
   குவிந்த வண்ணம் உள்ளன.

   குறிப்பாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும்
   பெரியார் உயராய்வு மய்யம், அறிஞர் அண்ணா இருக்கை, பாரதிதாசன் உயராய்வு
   மய்யம், கலைஞர் வளர்தமிழ் மன்றம் இவற்றிற்குத் துறைத் தலைவர் களாக
   இருந்தவர்கள் நீக்கப்பட்டுள்ள னர். இந்த நிலையில் அந்தத் துறைகளின்
   செயல்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன எனத் தெரிய வருகிறது.

   இது போன்ற துறைகளுக்கு அனு பவம் வாய்ந்த மூத்த பேராசிரியர்கள்
   தேவைப்படுவார்கள். இதற்குள் வயது வரம்பைப் (திட்டமிட்டே) புகுத்தி அவசரம்
   அவசரமாக பார்ப்பன அம்மையார் துணைவேந்தராகப் பதவியேற்ற குறுகிய
   காலத்திற்குள்ளாகவே முக்கியத்துவம் வாய்ந்த – திராவிடர் இயக்கத்துக்குச்
   சம்பந்தப்பட்ட துறைகளை முடக்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?

   தொடக்க நிலையிலேயே பார்ப்பன அம்மையாரின் துரைத்தனம், மூத்த தமிழினப்
   பேராசிரியர்கள் மீதும், முக்கிய தமிழினத் துறைகள் மீதும் பாய
   ஆரம்பித்துவிட்டதே!

   அடுத்தடுத்து என்ன நடக்குமோ!

   முதலமைச்சர் அவர்களின் முக்கியக் கவனத்துக்கும், பரிசீலனைக்கும் இவற்
   றைத் தெரிவித்துக் கொள்வதும், பரி காரம் தேடுவதும் திராவிடர் கழகத்தின்
   முக்கியக் கடமையாகக் கருதுகிறோம்.

   – கி.வீரமணி
   தலைவர்,

   • RV says:

    ராஜன், வீரமணி சவுண்ட் விடுவதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியுமா? வீரமணி இப்படி சொல்லிவிட்டார் என்று தமிழ்நாட்டில் எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை பேர் கவலைப்படுவார்கள்?

  29. ராஜன் says:

   அப்படியா? தமிழ் நாடு வீரமணி குறித்த உங்கள் பொது அறிவு புல்லரிக்க வைக்கிறது.

   • RV says:

    ராஜன், என் பொது அறிவு கிடக்கட்டும். தி.க. செத்துப்போன ஒரு இயக்கம் என்பதற்கு எதிர்வினையாக வீரமணியின் ஒரு ஸ்டேட்மெண்டை ஆதாரமாக தருகிறீர்கள். அந்த ஸ்டேட்மெண்டை எத்தனை தமிழர்கள் படிப்பார்கள், எத்தனை பேர் அதைப் பற்றி சிந்திப்பார்கள் என்று கேட்டால், எனக்கு பொது அறிவு இல்லை என்று முடித்து விடுகிறீர்கள். இப்படி முடிப்பதற்கு ஏன் ஆதாரம் எல்லாம் கொடுக்கும் சிரமம்? முதலிலேயே அதை சொல்லிவிட்டால் இரண்டு பேருக்கும் நேரம் மிச்சம்!

  30. ராஜன் says:

   ஆர் வி

   ஆதாரம்தானே வேண்டும் நான் கொடுத்தவுடன் நீங்கள் அவற்றையெல்லாம் பொறுமையாகப் படித்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளப் போகொறீர்களா என்ன? ஆர் டி ஐ பயன்படுத்தி ஒரு சில ஸ்டடிஸ்டிக்ஸ் சேகரித்து வைத்திருக்கிறோம் அதையெல்லாம் உங்களுக்கு நான் தரலாம்தான் ஆனால் அதைப் படித்து விட்டு உங்கள் தீர்மானம் எதுவும் மாறப் போவதில்லை. வீரமணியை யாரும் பொருட்படுத்துகிறார்களா என்ற கேள்வியே மிகவும் அபத்தமான ஒன்று. இருந்தாலும் அதற்கான பதில் ஆம் என்பதே. வீரமணி என்பது இங்கு ஒரு நபர் அல்ல தமிழ் நாட்டின் பெரும்பான்மையான அழுகிப் போன மனநிலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரமணியின் கருத்தை ஒட்டியே தமிழ் நாடு அரசே இயங்குகின்றது. ஆகவே வீரமணி சொல்வதுதான் அங்கு சட்டமாகவே உள்ளது. இதெல்லாம் அடிப்படையான விஷயம் இது கூட உங்களுக்குத் தெரியவில்லை என்னும் பொழுது எதைச் சொல்வது? ஆதாரம் உள்ளது அரசாங்கமே கொடுத்துள்ளது தாராளமாக நேரில் சந்தித்தே அளிக்கிறேன்.

   அன்புடன்
   ராஜன்

   • RV says:

    ராஜன், தி.க.வுக்கு இன்று எந்த தாக்கமும் இல்லை, அது ஒரு செத்துப் போன இயக்கம் என்பது என் வாதம். // வீரமணியை யாரும் பொருட்படுத்துகிறார்களா என்ற கேள்வியே மிகவும் அபத்தமான ஒன்று. //என்று எழுதுகிறீர்கள். ஒரு இயக்கத்தின், “தலைவரின்” தாக்கம் என்றால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொருட்படுத்தப்பட்டால்தான் தாக்கம். இல்லை என்றால் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றும் வேலைதான். நீங்கள் தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு, வீரமணியின் தாக்கம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள். வீரமணிக்கு தாக்கம் இருக்கிறது, அதனால் தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு இருக்கிறது என்று சொன்னால் – பிராமண எதிர்ப்பின் quantity பற்றி நமக்கும் வேறுபாடு இருந்தாலும் – வாதத்தின் லாஜிக் சரி வருகிறது. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு இருக்கிறது, அதனால் வீரமணிக்கு தாக்கம் இருக்கிறது, வீரமணி பொருட்படுத்தப்படுகிராரா இல்லையா என்ற கேள்வியே அபத்தம் என்று நீங்கள் சொன்னால், முன்பே சொன்ன மாதிரி this issue presses your buttons என்ற முடிவுதான் எனக்கு உறுதி ஆகிறது. நமக்குள் இதில் இசைவில்லை, வேறு ஏதாவது பேசுவோமே?

    P.S. உங்கள் கருத்துகளை நீங்கள் எழுதினால் பதிவாக போடத் தயாராக இருக்கிறேன். 🙂

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: