Peepli Live – சினிமா விமர்சனம்


https://i0.wp.com/l.yimg.com/k/im_siggHdgKjsjfvgD5BLSwvfNgyg---y660-x616-q75-n0/omg/us/img/a2/0d/5153_3584859227.jpg
நேற்று நான் பார்த்த ஒரு அருமையான படம் – Peepli Live.
http://thm-a01.yimg.com/nimage/cdf396a5c7d16fc4http://thm-a03.yimg.com/nimage/21ffe9422e54424c
அறிமுக இயக்குனர் அனுஷா ரிஸ்வி யின் இயக்கத்தில், ஆமீர் கான் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த அரசியல் நையாண்டி படம் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் ஏழை விவசாயிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ஊடகங்களையும் அரசியல் கட்சிகளையும் சாடுகிறது.
https://i2.wp.com/l.yimg.com/k/im_siggKHUd4_lyB91TacgdOap8dA---y660-x616-q75-n0/omg/us/img/e4/9d/9349_7893825624.jpg

பீப்லி என்ற ஒரு சிறிய கிராமத்தில் கதை துவங்குகிறது.  இரு ஏழை விவசாயிகளான நத்தா (Omkar Das Manikpuri ), புதியா ( Raghuvir Yadav) இருவரும் தங்கள் நிலத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றனர்.  மிகுந்த வறுமையில் வாடும் அவர்களுக்கு ஒரு  திட்டம் தோன்றுகிறது.  வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒரு லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கிறது.  இதைப் பயன் படுத்திக் கொள்ள நத்தா தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறான்.  ஆனால் இந்தத் திட்டத்தை அவன் செயல்படுத்துவதற்கு முன் இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவி விடுகிறது.
https://i2.wp.com/www.filmicafe.com/admin/movie-photo/images/still8-1591634943.jpg
டி.ஆர்.பி ரேட்டிங் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பல்வேறு செய்தி நிறுவனங்களும்,  வோட்டு வங்கியைக் குறி வைக்கும் பல்வேறு ஜாதிக் கட்சி தலைவர்களும் அந்தச் சிறிய கிராமத்துக்கு படை எடுக்கின்றனர்.  நத்தாவின் தற்கொலை முயற்சியைத் தடுக்க அரசாங்கம் ‘லால் பகதூர்’  பரிசை அறிவிக்கிறது.  அந்தப் பரிசு ஒரு பிரம்மாண்டமான கைக் குழாய் (hand pump ).  ஒன்றுக்கும் உபயோகமில்லாத அந்தக் கைக்குழாய் அக்கம்பக்கத்து ஏழைச் சிறுவர்கள் விளையாடவே உபயோகப்படுகிறது.  உள்ளூர் அரசியல்வாதி வேறு தன் பங்குக்கு அந்தக் குடும்பத்துக்கு ஒரு பெரிய கலர் டி.வியை பரிசளிக்கிறார்.
https://i1.wp.com/l.yimg.com/k/im_siggTdVUXYM2kZrbN1xWOt_ZWQ---y660-x616-q75-n0/omg/us/img/a9/9f/2272_8842542037.jpg
படத்துடன் ஒன்றிய அதன் இசை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
https://i0.wp.com/l.yimg.com/k/im_siggvyFGTfTzczR30jXMGdJnyQ---y660-x616-q75-n0/omg/us/img/47/e5/6398_6412914589.jpg

சதா புலம்பிக்கொண்டும், குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும் நத்தாவின் மனைவி,  மனைவியைத் திட்டிக்கொண்டே இருக்கும் அவனது தாய்,  யார் எந்தக் கேள்வி கேட்டாலும், உயர்நீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கச் சொல்லும் விவசாயத் துறை உயர் மந்திரி என்று பல சுவையான கதா பாத்திரங்கள்.  இதற்கு நடுவே நடக்கும் ஒரு வாக்கெடுப்பில்,  நத்தாவின் இன்றைய நிலைமைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்ற நையாண்டி.  படத்தின் முடிவில்,  இந்தப் பிரச்னைக்கு தீர்வு என்று எதையும் இயக்குனர் ரிஸ்வி கூறாமல்,  முடிவை open ending ஆக விட்டு விடுகிறார்.

1997 முதல் 2007 வரை மொத்தம் 182 ,000 ஏழை விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்ற குறிப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTNQcRba5hjMuae4U6OW2wsiT0A274qGGWUlLR9zxuzflK8Grc&t=1&usg=__ZnBSlHItlp5PyBLZiaSiITzMqG8=
Dark humor என்ற வகையில் வரும் இந்தப் படத்தை promote செய்ய இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆமீர் கான் தன் மனைவி கிரண் ராவுடன் சமீபத்தில் இங்கு Los Angeles -இல் உள்ள U . S . C  (University  of Southern California) வந்திருந்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

10 Responses to Peepli Live – சினிமா விமர்சனம்

 1. kumaran says:

  Make it full. It seems to be partial.

 2. திரைப்படம் இந்தியாவின் குறிப்பாக மஹாராஸ்டிரா மற்றும் மத்திய இந்தியாவின் நிலையினை தெளிவாக குறிக்கிறது. ஆமிர் தனது படங்கள் மூலம் மெல்லிய புரட்சியை விதைக்கிறார் (கடந்த சில வருடங்களாகவே).

  இவரது பாணியை நம்மவர்களும் பின்பற்றினால் நன்று, ராஜ்நீதி விமர்சனத்தில் குறிபிட்டது போன்றே, இது போன்ற படங்கள் தமிழில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். கலை கலாச்சார படங்களை காட்டிலும் நடப்பில் உள்ள சமுதாயத்தில் உள்ள பிரச்சினை களை மைய்யமாக கொண்டு வரும் திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உருவாக்கும். இது போன்று தமிழில் வருமா என்று தெரியவில்லை!

  நடிப்பவர்களும், திரை தயாரிப்பாளர்களும் அரசியல் ஜாடை மற்றும் வாடையுடனே இருப்பதால் நம்பிக்கை இல்லை.

  தொடரட்டும் உங்கள் பணி
  வாழ்த்துக்கள்
  இராமன அழகிய மணவாளன்

  • srinivas uppili says:

   பகிவுக்கு நன்றி, இராமன் அழகிய மணவாளன்..
   இது போன்ற சமூகப் பொறுப்புள்ள படங்கள் தமிழில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

 3. //1997 முதல் 2007 வரை மொத்தம் 182 ,000 ஏழை விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்ற குறிப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது.//

  படம் முடிந்துவிட்டது தற்கொலை தொடர்கிறது.

  – ஜெகதீஸ்வரன்,
  http://sagotharan.wordpress.com/

 4. ராஜன் says:

  ”நத்தாவின் இன்றைய நிலைமைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்ற நையாண்டி.”

  என்னடா, அமீர்கான் தயாரிப்பு என்கிறீர்கள், நீங்கள் வேறு பாராட்டுகிறீர்கள் இந்தப் பகுதியைக் காணோமே என்று தேடிக் கொண்டே வந்தேன் கடைசியாகச் சொல்லி என்னை ஏமாற்றாமல் என் எதிர்பார்பை நீங்களும் அமீர் கானும் பூர்த்தி செய்து விட்டீர்கள் :)) இப்படித் தீவீரமான விஷயங்களை எல்லாம் நையாண்டி செய்து நீர்த்துப் போக்க விட்டு விட்டால் நாளைக்கு குண்டு வெடிக்கும் பொழுது எல்லோரும் சிரித்துக் கொண்டு போகலாம் அல்லவா?

  அன்புடன்
  ராஜன்.

 5. RV says:

  ஸ்ரீனிவாஸ், நல்ல விமர்சனம், அதுவும் நீங்களே எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

 6. knvijayan says:

  political satire படங்களை ரசிக்க ஓரளவாவது பாஷை புரியவேண்டும்,இந்த படத்தில் பயன்படுத்தப்படும் இந்தி , போஜ்புரி என்று நினைக்கிறேன்,(திராவிட கட்சிகளை பிடிக்காதது போலவே எனக்கு இந்தியும் பிடிக்காது)ஏதோ மனம் ஒன்றாமல் பார்த்தேன்.இந்த பிரச்சனை ஏனோ எனக்கு ஷ்யாம் பெனேகல் படங்களில் வந்தது இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: