தமிழில் 32 ஆர்ட் படம்


ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு லிஸ்ட். பாஸ்டன் பாலா தமிழில் 32 ஆர்ட் படம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

சந்தியா ராகம் – பார்த்தேன், இப்போது சரியாக நினைவில்லை.
வீடு – நல்ல படம். அர்ச்சனா கஷ்டப்பட்டு வீடு கட்டுவார், கடைசியில் அதில் ஏதோ போலி பத்திரப் பிரச்சினை. யதார்த்தமாக இருக்கும்.
உன்னைப் போல் ஒருவன் – இது ஜெயகாந்தன் படமா இல்லை கமல் படமா தெரியவில்லை. கமல் படத்தை இந்த மாதிரி லிஸ்டில் சேர்க்கக் கூடாது. ஹிந்தி ஒரிஜினல் ஆன A Wednesday நிச்சயமாக சேர்க்கலாம்.
உதிரிப் பூக்கள் – மிஸ் ஆன படம்.
முள்ளும் மலரும் – படம் வந்தபோது நான் டீனேஜர். அப்போது ரொம்ப பிடித்திருந்தது. இப்ப பிடிக்குமா தெரியாது. ரஜினிக்கு தான் நடித்த படங்களில் பிடித்தது இதுதானாம்.
உச்சி வெயில் – பார்த்தததில்லை.
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. பக்ஸ் விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.
அவள் அப்படித்தான் – மிஸ் ஆன படம்.
அழியாத கோலங்கள் – அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படம் இல்லை. பார்க்கலாம்.
கண் சிவந்தால் மண் சிவக்கும் – பார்த்ததில்லை.
மெட்டி – பார்த்ததில்லை.
ராஜ பார்வை – முதல் முறை பார்த்தபோது கடைசியில் சூப்பர் என்று கத்தினேன். இப்போதும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
மகா நதி – நல்ல கருவை மிகைப்படுத்துதல், ஊரில் இருக்கும் எல்லா பிரச்சினையையும் இழுத்து போடுதல் என்று கமல் கெடுத்துவிட்டார்.
குணா – நல்ல படம்.
அந்த நாள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் நினைவுகள் இங்கே.
முதல் மரியாதை – நான் இன்னும் பார்க்கவில்லை. என்ஜாய் செய்தது கூடப் படித்த பாலமுரளி சிவாஜியை நக்கல் அடித்ததும் பாரதிராஜா பக்தன் சுப்பராயன் படத்தை defend செய்ததும்தான். பாலமுரளியால் ஒரு சீனை சிரிக்காமல் சொல்லவே முடியாது. ராதா ஸ்டேஷனில் காலை வைக்க சிவாஜிக்கு கட் செய்வார்கள். அவருக்கு அப்படியே உடம்பு துடிக்கும். இதைப் பற்றி பேசும்போது அவன் உருண்டு புரண்டு கெக்கேபிக்கே என்று நிறுத்த முடியாமல் சிரிப்பான். சுப்பராயனுக்கு கடுப்பு ஏறிக்கொண்டே போகும். காலேஜ் நாட்கள் திரும்ப வராது.
ஹே ராம் – சில பல இடங்களில் யதார்த்தம் இல்லைதான். என்றாலும் நல்ல படம்.
ஒருத்தி – கேள்விப்பட்டது கூட இல்லை.
நாயகன் – நல்ல படம்.
மொழி – இன்னொரு நல்ல படம்.
சுப்பிரமணியபுரம் – விமர்சனம் இங்கே.
சென்னை 28 – எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லமாட்டேன்.
ஆயுத எழுத்து – எனக்கு பிடித்திருந்தது.
வெயில் – நல்ல படம்
புதுப்பேட்டை – இது எப்படி இங்கே?
பருத்திவீரன் – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.
அஞ்சாதே – நல்ல படம்.
நண்பா நண்பா – கேள்விப்பட்டது கூட இல்லை.
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள் – இதெல்லாம் எப்ப வந்தது?
சங்க நாதம் – இப்படி ஒரு படமா?
அக்ரஹாரத்தில் கழுதை – நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கத்தான் முடியவில்லை.

தண்ணீர் தண்ணீர், யாருக்காக அழுதான் இரண்டையும் விட்டுவிட்டார். பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நூல் வேலி, அவர்கள் படத்தையும் consider செய்யலாம். தாகம், குடிசை, மறுபக்கம் என்று சில படங்களைப் பற்றி சொல்வார்கள், நான் பார்த்ததில்லை.

இந்த லிஸ்டில் ஜெயகாந்தன் படமாக இருக்கிறதே! விட்டால் மகேந்திரன்

நீங்கள் ஆர்ட் படம் என்று எதை கருதுகிறீர்கள்? ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன? உங்கள் எண்ணங்களை எழுதினால் பேசலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பாஸ்டன் பாலா லிஸ்ட்
அந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
சுப்ரமணியபுரம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to தமிழில் 32 ஆர்ட் படம்

 1. natbas says:

  ரொம்ப நாளைக்கு அப்புறமா?! அவர் அதைப் பதிவு பண்ணினது ஜூலை 27, 2010 அன்றைக்கு…

  இப்படி எவ்வளவு நாள் ஆனப் பின்னாலும் புதுசு மாதிரி இருந்து நம் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் எழுச்சி கொடுப்பது ஒரு கலை என்று நினைக்கிறேன். அந்த மாதிரி படங்களை கலைப் படங்கள் என்று சொல்லலாமோ என்னவோ?

 2. vimal says:

  உதிரிப் பூக்கள் – உண்மையாகவே மிஸ் பண்ணி விட்டீர்கள். மிகவும் அருமையான ஒரு படம்
  முள்ளும் மலரும் – சூப்பர் பிலிம்

  லிஸ்டில் விடுபட்ட படங்கள்.
  1. எங்கேயோ கேட்ட குரல்
  2. நண்டு
  3. கல்லுக்குள் ஈரம்

 3. knvijayan says:

  1978 -இல் “கருணை உள்ளம் ” என்ற படம் A .பீம்சிங் இயக்கத்தில் வந்தது,இது ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல என்ற குறுநாவலின் சினிமா வடிவம்.ஸ்ரீகாந்த் (ஒரிஜினல்)நாயகனாக வாழ்ந்திருப்பார்.நல்ல படம்.இது ஆர்ட் பிலிம் ஜாதியில் வராதா.

  • RV says:

   விஜயன், நான் கருணை இல்லம் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. நீங்கள் இதைப் பற்றி எழுதினால் பதிப்பிக்கிறேன்.

   விமல், பசி நல்ல சாய்ஸாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை. மறுபடியும் சுமாரான படம்தான் (ஒரிஜினல் அர்த் திரைப்படம் அருமை.) சிவப்பு மல்லி திரைப்படத்தை நான் பார்த்ததில்லை, ஆனால் தேறாது என்றுதான் நினைக்கிறேன். எங்கேயோ கேட்ட குரல் நிச்சயமாக் இல்லை. நண்டு நான் பார்த்ததில்லை.

   பாஸ்கர், நான் லிஸ்ட் போட்டு நாளாகிவிட்டது என்று சொல்ல வந்தேன்.

 4. Veerarajan says:

  எந்த படத்தையும் பார்க்காமல் இது தேராது அது தேராது என்று சொல்ல உமக்கு என்ன தெரியுமய்யா.
  எத்தனை கலைஞர்களின் உழைப்பாகும்.
  1965ல் வெளிவந்த ‘உன்னை போல் ஒருவன்’ ஜெயகாந்தன் இயக்க, பிரபாகரன் கதாநாயகனாகவும்,
  காந்திமதி கதாநாயகியாகவும் நடிதிருந்தார்கள்.
  உம்மை போன்ற மசாலா ரசிகர்கலால் பல கலை படைப்புகள் வெலியே தெரியாமல் போய்விட்டன.
  முதலில் படங்களை பார்த்து பிரகு கருத்துக்களை பறிமாறவும்.

  வீரராஜன்
  பெங்களூர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: