காற்றினிலே வரும் கீதம் – விகடன் விமர்சனம்


எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.

இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%

படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.

கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். எந்த படத்துக்கும் அறுபது மார்க் கூட போட்டதாக நினைவில்லை. முள்ளும் மலரும் மட்டும்தான் அறுபதை தாண்டியது என்று நினைக்கிறேன்.

விமல் அப்படி வந்த ஒரு விமர்சனத்தை ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார். இவர் இதை எல்லாம் எங்கே பிடிக்கிறாரோ தெரியவில்லை! விகடனுக்கும் விமலுக்கும் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் 78-இலோ என்னவோ வந்தது என்று நினைக்கிறேன். பஞ்சு அருணாசலம் கதை வசனம். எஸ்.பி. முத்துராமன் இயக்கம். இளையராஜா இசை. முத்துராமன் ஹீரோ, கவிதா நாயகி. ராஜு இது கவிதாவின் முதல் படம் என்று தகவல் தருகிறார். படம் ஓடவில்லையோ?

பாட்டெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஹிட் ஆனது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது எந்த பாட்டும் நினைவில்லை. நினைவிருப்பவர்கள் சொல்லலாம். விமல் பாட்டுகளின் லிஸ்டை தந்திருக்கிறார் –

 1. கண்டேன் எங்கும் (வாணி ஜெயராம் பாடியது)
 2. கண்டேன் எங்கும் (எஸ். ஜானகி பாடியது) – இந்த பாட்டை இங்கே டவுன்லோட் செய்யலாம்.
 3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தையரே தையா (ஜெயச்சந்திரன் பாடியது)
 4. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் (ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி பாடியது)

நண்பர் சிமுலேஷன் சித்திரச் செவ்வானம் பாட்டுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். (பாட்டுதான், வீடியோ இல்லை, பாட்டு பூராவும் இளையராஜா ஃபோட்டோ காட்டுகிறார்கள்.) அது சாவித்திரி (அபூர்வ) ராகத்தில் அமைந்த பாட்டாம். வெகு சில சினிமாப் பாட்டுக்களே இந்த ராகத்தில் உள்ளனவாம். என்னென்ன பாட்டுகள் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த சுட்டியைப் பார்க்கவும்.

விமலுக்கு கண்டேன் எங்கும் பாட்டு மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பாட்டின் வரிகளையும் தந்திருக்கிறார்.

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே
வருவாய் அன்பே என்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ
நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாரும் இல்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இது தானே
எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: சாவித்திரி ராக சினிமாப் பாட்டுகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to காற்றினிலே வரும் கீதம் – விகடன் விமர்சனம்

 1. ஒரு வானவில் போலே – பாட்டு மட்டும் கிடைத்தது. ஒரிஜினல் வீடியோ கிடைக்கவில்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. விமல் says:

  நான்கு அருமையான பாடல்கள் உள்ளன.
  நான்குமே முத்தான பாடல்கள்.

  1. கண்டேன் எங்கும் (வாணி ஜெயராம் பாடியது)
  2. கண்டேன் எங்கும் (S.ஜானகி பாடியது)
  3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தையரே தையா (P.ஜெயச்சந்திரன் பாடியது)
  4. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் (P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி பாடியது)

  – விமல்

  • விமல் says:

   கண்டேன் எங்கும் (S.ஜானகி பாடியது)

   mp3 song டவுன்லோட் செய்ய
   http://music.cooltoad.com/music/song.php?id=463783

   பாடல் வரிகள்
   ————-
   கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
   காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
   காற்றினிலே வரும் கீதம்

   கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
   காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
   காற்றினிலே வரும் கீதம்

   தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
   தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
   தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
   தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
   காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
   அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
   நினைத்தேனே அழைத்தேனே
   வருவாய் அன்பே என்று இங்கே இன்று

   அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
   கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
   காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
   காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

   வனக்கிளியே ஏக்கம் ஏனோ
   கருங்குயிலே மோகம் தானோ
   தூக்கமும் இல்லை துவளுது முல்லை
   தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
   பனி வாடை விலகாதோ
   நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
   அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

   கள்ளமில்லை கபடமில்லை
   காவலுக்கு யாரும் இல்லை
   யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
   கொடி மொட்டு மலர்ந்ததம்மா
   என் வீடு இது தானே
   எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

   அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
   காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
   காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
   காற்றினிலே வரும் கீதம்

 3. விமல் says:

  // ***
  எந்த படத்துக்கும் அறுபது மார்க் கூட போட்டதாக நினைவில்லை.
  *** //

  60 மார்க் மற்றும் அதற்கு மேலே மார்க் பெற்ற படங்கள்.

  1. நாயகன்
  2. அஞ்சலி
  3. முதல் மரியாதை
  4, இந்தியன் ??? (சரியாக நினைவு இல்லை)

  அப்போதெல்லாம் விகடனில் வரும் விமர்சனம் மற்றும் மார்க்கை பார்த்துதான் படத்திற்கே போவோம்.

  10-15 வருடங்களுக்கு முன்பெல்லாம் விகடன் வரும் நாள் அன்று எங்கள் அப்பா எப்போது விகடன் வாங்கி வருவார் என்று வாசலை பார்த்து கொண்டு உட்கார்ந்து இருந்த நாள் நினைவிற்கு வருகிறது. புத்தகம் வந்தவுடன் நான், நீ என்று போட்டி போட்டு கொண்டு நான் மற்றும் என் அண்ணாக்கள் இருவரும் (நாங்கள் மொத்தம் மூன்று பேர்) போட்டி போட்டு கொண்டு படிப்போம். அதில் முதலில் படிப்பது விகடன் விமர்சனம் தான்.

  அதெல்லாம் ஒரு காலம், நினைத்தாலே மனம் ஏங்குகிறது.

  அதில் வெளி வந்த பல நல்ல கதை, மற்றும் கட்டுரைகளை (சினிமா பேட்டி மற்றும் விமர்சனங்களை கூட) எடுத்து bind பண்ணி புத்தகமாக வைத்து உள்ளோம். இப்போது கூட எடுத்து படிப்போம்.

  இப்போது எல்லாம் விகடன் அட்டை படத்தை பார்த்தால் புத்தகத்தை வாங்குவதற்கே வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அத்தனை மோசமாக இருக்கிறது. வாங்குவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது. அதுவும் சுஜாதா கட்டுரைகள் விகடனில் வருவது நின்றவுடன் வாங்குவதை நிறுத்தி விட்டோம்.

  – விமல்

 4. விமல் says:

  விகடன் விமர்சனங்கள் – (03.09.1978) – முள்ளும் மலரும்
  —- x —- x —– x —-
  தலைப்பிலேயே இலக்கிய மணம் கமழ்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரடனான அண்ணனையும் பூப்போன்ற தங்கையையும் ‘முள்ளும் மலரும்’ என்ற தலைப்பு குறிப்பிடுவதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்பதையே அது குறிக்கிறதோ?

  தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத்திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கிறோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடுகிறார்.

  மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு
  திரும்பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ”நான் வரமாட்டேன், போ!” என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ”நீ என்னை அடிச்சுடுடா” என்று கெஞ்சுவதும் அருமை.

  எஞ்சினீயர் தன்னை மணந்துகொள்ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்… அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித் திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்!

  சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரிகளுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.

  சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது ‘படாபட்’டுக்கு! வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.

  காலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!

  நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத் திருக்கிறார் இளையராஜா. ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் ‘லேலே… லேலே…’ கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான ‘மூட்’ உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.

  இதுவரை கதை-வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு…

  எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள்மூட்ட, ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல்வதா…

  நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சிதமாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா…

  இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்!

  சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரையில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!
  —- x —- x —– x —-
  நெஞ்சை கனக்க வைக்கும் படங்களில் இதுவும் ஒன்று. மேலும் உதிரி பூக்கள் (RV.. இந்த படத்தை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்) , மூன்றாம் பிறை மற்றும் நாயகன்.

  – விமல்

 5. raju says:

  Kavita’s debut movie in tamil is this one…kaartinile varum geetahm.

 6. Simulation says:

  சித்திரச் செவ்வானம் சுட்டி இங்கே:-

  எனக்கு இது ஏன் பேவரைட் பாட்டு என்றால் காரணம் இங்கே
  http://simulationpadaippugal.blogspot.com/2010/02/02.html

  – சிமுலேஷன்

  • RV says:

   சிமுலேஷன், சுட்டிக்கு நன்றி, அதையும் இணைத்துவிட்டேன். தயாராத் தைய்யா என்பதற்கு முன் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லையே? என்னவோ புயலென வாரி தண்டென வாரி என்பது மாதிரி இருக்கிறது, அப்படி இருக்க முடியாது!

 7. arulalan says:

  Ananda vikatan reviews were started from august 1977. First movie was kavikuil and got 35 out of 100. Only to-day april 27 2012during my children summer holidays i read this page. vikatan gave for two movies more than 60. 16 vayadhinilae in which kamal got 90%. Lakshmi got 90% for oru nadigai nadakam paarkiraal.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: