பசங்க திரைப்படத்துக்கு விருதுகள்


2009-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழிலிருந்து பசங்க திரைப்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. இந்த ஒரு தமிழ் படத்துக்குத்தான் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் “ஹீரோவாக” நடித்த கிஷோரும், “வில்லனாக” நடித்த ஸ்ரீராமும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சிறந்த திரைக்கதைக்கான விருதை (இயக்குனர்) பாண்டியராஜ் பெற்றிருக்கிறார். சிறந்த தமிழ் படமாகவும் (தயாரிப்பாளர் சசிகுமார்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

பக்ஸுக்கு பிடித்த படம். பக்ஸ், விமர்சனம் எழுதுகிறாயா?

பழசி ராஜா திரைப்படத்துக்காக இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் (shared with Amit Trivedi for Dev D). ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியும் இந்த படத்திற்காக சிறந்த ஒலி அமைப்பு விருது பெறுகிறார் (Shared with Subhash Sahoo for Kaminey and Anup Dev for 3 Idiots). படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டும் (shared with Kaminey and Kutty Srank) கிடைத்திருக்கிறது. படத்திலிருந்து ஒரு பாட்டு கீழே.

2009-இன் சிறந்த படமாக மம்முட்டி நடித்து ஷாஜி கருண் இயக்கிய குட்டி ஸ்ரான்க் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. குட்டி ஸ்ரான்க் திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் (அஞ்சலி சுக்லா), சிறந்த திரைக்கதை (பி. எஃப். மாத்யூஸ்+ஹரிகிருஷ்ணா, award shared with Pasanga and a Kannada movie), சிறந்த ஆடை அலங்காரம் (ஜெயகுமார்), மற்றும் ஸ்பெஷல் ஜூரி அவார்டும் கிடைத்திருக்கிறது.

3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த பாப்புலர் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. லாகூர் என்ற படம் இயக்குனருக்கு (சஞ்சய் பூரண் சிங் சவுஹான்) சிறந்த முதல் படமாகவும், டெல்லி-6 தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் விருதும், வெல் டன் அப்பா (ஷ்யாம் பெனகல்) சமுதாய பிரச்சினைகளை சிறப்பாக காட்டியதற்கும் விருதுகளை வென்றிருக்கின்றன. லாகூரில் நடித்ததற்காக ஃபரூக் ஷேக் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வென்றிருக்கிறார்.

அபோஹோமன் என்ற வங்காள மொழி திரைப்படத்தை இயக்கிய ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குனர் விருதை வென்றிருக்கிறார். இதே படத்தில் நடித்த அனன்யா சட்டர்ஜிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்திருக்கிறது.

அமிதாபுக்கு பா படத்துக்காக சிறந்த நடிகர் விருது. இதே படத்தில் நடித்த அருந்ததி நாகுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும் கிடைத்திருக்கிறது. சிறந்த மேக்கப்புக்கான அவார்டும் (கிறிஸ்டியன் டின்ஸ்லி+டொமினி டில்) இந்த படத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் சிறந்த ஹிந்தி மொழி படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசின் அறிவிப்பை இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய பதிவுகள்:
விருதுகள் பற்றிய இந்திய அரசின் அறிவிப்பு
விருது பற்றி பாண்டியராஜ்
வெல் டன் அப்பா
3 இடியட்ஸ்(3 Idiots), விகடன் விமர்சனம், Lessons from 3 Idiots

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to பசங்க திரைப்படத்துக்கு விருதுகள்

 1. விமல் says:

  உழைப்புக்கு பலன்: டைரக்டர் பாண்டிராஜ்
  ————————————————————————–

  பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

  பசங்க’ படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சிக்கு வசனம் எழுத அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது, சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

  (குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சி >>> படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி. அருமையான அதே சமயம் இயல்பான, எதார்த்தமான வசனம். திருமணம் ஆன ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய சீன்)

 2. விமல் says:

  தூக்கி ஓரங்கட்டிய கதைக்கு தேசிய விருது
  ————————————————————————————–

  இயக்குனர் பாண்டிராஜ் பேசியது :
  —————————————

  “பசங்க படத்தின் கதையினை முதலில்
  யாருமே படமாக எடுக்க முன்வரவில்லை. அதனால், ஒரு பெரிய இயக்குனராக சாதித்து அதன் பிறகு இதை எடுக்கலாம் என்று இந்தக் கதையை தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

  அப்போதுதான் நண்பர்களின் மூலமாக சசிக்குமார் சாரின் நட்பு கிடைத்தது.
  அவரிடம் இந்தக் கதையை சொன்னேன்.
  உடனே படத்தை தயாரிக்க சம்மதித்தார்.

  ‘இந்தப் படம் வெற்றிப் பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும். அதற்காகவே இதை எடுக்கலாம்’ என்றார்.
  அவர் தந்த ஊக்கத்துக்கு பின்புதான் இந்தப் படத்தை எடுத்தோம்.அவர் தான் இந்த விருதுகளுக்கெல்லாம் மூலகாரணம்.
  அவருக்கு எனது முதல் நன்றி.

  படம் வெளிவந்தப்பின் இந்தப் படம் அருமையான படம் என்று அனைவரும் பாராட்டினார்கள்.
  அனைத்து பத்திரிகைகளும் இந்த படத்தின் சிறப்பினை மக்களிடம் கொண்டு சென்றன. பத்திரிகை மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் படமும் பெரிய வெற்றி பெற்றது.
  இப்போது பசங்கப் படத்திற்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன.

  எனது முதல் படத்திலேயே, சிறப்பாக வசனம் எழுதியதற்காக எனக்கு விருது கிடைத்தது, உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.

  பசங்க’ படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன்.
  பசங்களுக்கான வசனம் எழுதும் போது நானே பசங்களாக மாறிவிட்டேன்.
  பசங்களின் மனசு ஒரு விஷயத்தை எப்படி பார்க்குமோ அதே மனநிலையில் இருந்து அந்த விஷயங்களை பார்த்தேன்.

  அன்புக்கரசுக்கும், ஜீவாவுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசியவிருது கிடைத்துள்ளது.
  இதில் அவர்களை விட எனக்குதான் அதிக சந்தோஷம்.‘பசங்க’ படத்தில் இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள்.
  இந்தப் படத்தில் இருவரும் கடுமையாக உழைத்தார்கள்.
  அவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் கிடைத்ததுதான் இந்த விருது.

  இவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக நடித்திருந்தார்கள். அனைவருக்குமே இந்த விருதில் பங்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”

  —————————————————–

  பசங்க’ படத்தில், கைத்தட்டி பாராட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் பாண்டிராஜ்.

  தேசிய விருது பெற்ற அனைவரையும் கைத்தட்டி பாராட்டுவோம்.

 3. விமல் says:

  இயக்குனர் பாண்டிராஜ்
  —————————————-
  சினிமாவில் 14 வருட போராட்டத்துக்கு பிறகு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள விராச்சிலை,

  சிறு வயதிலேயே சினிமா ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவர்களுக்கு நான் சினிமாவுக்கு போவதில் இஷ்டம் இல்லை. ஏதாவது ஒரு வேலையில் நான் சேர வேண்டும் என்று பிரியப்பட்டனர். அவர்களுக்காக சேலத்தில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் சேர்ந்து வேலை பார்த்தேன். அந்த வேலையில் என்னால் இருக்க பிடிக்கவில்லை.

  பெற்றோரிடம் இதுபற்றி சொன்னேன். என் விருப்பப்படி என்னை விட்டு விடுங்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்னை வந்தேன்.

  ஏ.வி.எம். நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக 1 1/2 வருடம் வேலை பார்த்தேன்.
  பிறகு பாக்யராஜ் நடத்திய பத்திரிகையில் சில காலம் பணியாற்றினேன்.

  அதன் பிறகு இயக்குனர்கள் சேரன், தங்கர்பச்சான் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

  பசங்க கதையை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தேன். அதை படமாக்க நிறைய தயாரிப்பாளர்களை அணுகிகேட்டேன். அவர்கள் இதெல்லாம் ஒரு கதையா என ஏளனம் செய்து விரட்டினர். சோர்ந்து போகவில்லை. நண்பர்கள் சிலர் இயக்குனர் சசிகுமாரை போய் பார் என்றனர். அவரிடம் போய் பசங்க கதையை சொன்னேன். சசிகுமாருக்கு பிடித்து போனது. உடனே தயாரிக்க முன் வந்தார். எனக்கு களம் தந்த சசிகுமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

 4. RV says:

  இளையராஜா சொன்னதை இங்கே தந்தற்கு நன்றி, விமல்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: