தேசிய விருது பெற்ற பசங்க இயக்குனர் பாண்டியராஜ்


விமல் அனுப்பிய மறுமொழிகளை பதிவாகத் தொகுத்திருக்கிறேன். ஓவர் டு விமல்!

தூக்கி ஓரங்கட்டிய கதைக்கு தேசிய விருது

இயக்குனர் பாண்டிராஜ் பேசியது :

சினிமாவில் 14 வருட போராட்டத்துக்கு பிறகுதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள விராச்சிலை. சிறு வயதிலேயே சினிமா ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவர்களுக்கு நான் சினிமாவுக்கு போவதில் இஷ்டம் இல்லை. ஏதாவது ஒரு வேலையில் நான் சேர வேண்டும் என்று பிரியப்பட்டனர். அவர்களுக்காக சேலத்தில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் சேர்ந்து வேலை பார்த்தேன். அந்த வேலையில் என்னால் இருக்க பிடிக்கவில்லை. பெற்றோரிடம் இது பற்றி சொன்னேன். என் விருப்பப்படி என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்னை வந்தேன்.

ஏ.வி.எம். நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக 1 1/2 வருடம் வேலை பார்த்தேன். பிறகு பாக்யராஜ் நடத்திய பத்திரிகையில் சில காலம் பணியாற்றினேன். அதன் பிறகு இயக்குனர்கள் சேரன், தங்கர்பச்சான் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

பசங்க கதையை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தேன். அதை படமாக்க நிறைய தயாரிப்பாளர்களை அணுகி கேட்டேன். அவர்கள் இதெல்லாம் ஒரு கதையா என ஏளனம் செய்து விரட்டினர். சோர்ந்து போகவில்லை. நண்பர்கள் சிலர் இயக்குனர் சசிகுமாரை போய் பார் என்றனர். அவரிடம் போய் பசங்க கதையை சொன்னேன். சசிகுமாருக்கு பிடித்து போனது. உடனே தயாரிக்க முன் வந்தார். எனக்கு களம் தந்த சசிகுமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

பசங்க படத்தின் கதையினை முதலில் யாருமே படமாக எடுக்க முன்வரவில்லை. அதனால், ஒரு பெரிய இயக்குனராக சாதித்து அதன் பிறகு இதை எடுக்கலாம் என்று இந்தக் கதையை தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

அப்போதுதான் நண்பர்களின் மூலமாக சசிக்குமார் சாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். உடனே படத்தை தயாரிக்க சம்மதித்தார்.

‘இந்தப் படம் வெற்றிப் பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும். அதற்காகவே இதை எடுக்கலாம்’ என்றார். அவர் தந்த ஊக்கத்துக்கு பின்புதான் இந்தப் படத்தை எடுத்தோம்.அவர்தான் இந்த விருதுகளுக்கெல்லாம் மூலகாரணம். அவருக்கு எனது முதல் நன்றி.

படம் வெளிவந்தபின் இந்தப் படம் அருமையான படம் என்று அனைவரும் பாராட்டினார்கள். அனைத்து பத்திரிகைகளும் இந்த படத்தின் சிறப்பினை மக்களிடம் கொண்டு சென்றன. பத்திரிகை மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் படமும் பெரிய வெற்றி பெற்றது. இப்போது பசங்க படத்திற்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. எனது முதல் படத்திலேயே, சிறப்பாக வசனம் எழுதியதற்காக எனக்கு விருது கிடைத்தது, உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.

பசங்க படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். பசங்களுக்கான வசனம் எழுதும் போது நானே பசங்களாக மாறிவிட்டேன். பசங்களின் மனசு ஒரு விஷயத்தை எப்படி பார்க்குமோ அதே மனநிலையில் இருந்து அந்த விஷயங்களை பார்த்தேன்.

பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

பசங்க படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சிக்கு வசனம் எழுத அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது, சந்தோஷமாக இருக்கிறது

அன்புக்கரசுக்கும், ஜீவாவுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. இதில் அவர்களை விட எனக்குதான் அதிக சந்தோஷம்.‘பசங்க’ படத்தில் இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள். இந்தப் படத்தில் இருவரும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் கிடைத்ததுதான் இந்த விருது.

இவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக நடித்திருந்தார்கள். அனைவருக்குமே இந்த விருதில் பங்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பசங்க திரைப்படத்தில், கைத்தட்டி பாராட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் பாண்டிராஜ்.

தேசிய விருது பெற்ற அனைவரையும் கைத்தட்டி பாராட்டுவோம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்+கவுரவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: பசங்க படத்துக்கு தேசிய விருதுகள்