பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)


விமல் அனுப்பிய சிவாஜி பாட்டு சீரிஸில் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட்

சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்பிபி பாட வந்த போது…

பொட்டு வைத்த முகமோ என்ற பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்பிபியைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்கவேண்டும் என்று எஸ்பிபி மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். சிவாஜிக்குப் பாடப் போகும் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார். பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். எஸ்பிபிக்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.

ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

அந்தக் காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டிஎம்எஸ் அவர்கள்தான். டிஎம்எஸ். பாடல் பதிவுக்குக் கூட வராத நடிகர் திலகம், எஸ்பிபி பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது.

எஸ்பிபியும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி எஸ்பிபியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்பிபியும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி, எஸ்பிபியிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்பிபியிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள். ஆனால் பாடலைக் கேட்ட போது, டிஎம்எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல் அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா என்று சிலர் சந்தேகப்படவும் செய்தனர். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் பிரிவியூக்கு வழக்கம் போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர். சாதாரணமாக எஸ்பிபி இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எஸ்பிபியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம். சந்தேகப்பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள். பிரமிப்பின் மறு பெயர்தானே நடிகர் திலகம்!

படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்தபோது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது” எனக் கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிட்டியது. நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

“பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை. இங்கே சில பேர் உன்கிட்ட வேற ஒரு பாடகர் ஸ்டைலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான், நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்” என்பதுதான்.

உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்பிபிக்கு தைரியத்தைக் கொடுத்தது. சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. சிவாஜி சொன்னபடி எஸ்பிபி தமக்கே இயல்பான நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார். அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்பிபி. இன்றளவும் எஸ்பிபி வியக்கும் ஒரு விஷயம் இது.

அந்தப் பாடல் சுமதி என் சுந்தரி படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த ’பொட்டு வைத்த முகமோ’.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும் பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

பிற்சேர்க்கை: சிமுலேஷன் இந்தப் பாட்டின் மெட்டு தங்கப் பதக்கம் படத்தில் இடம் பெற்ற “தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு” என்ற பாடலை நினைவுபடுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லையே!

சாரதா சொல்கிறார்:

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.

இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சுமதி என் சுந்தரி விமர்சனம்
யார் அந்த நிலவு? (சாந்தி)
நீயும் நானுமா? (கெளரவம்)

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)

 1. Simulation says:

  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது. “தங்கப் பதக்கம்” படத்தில் இடம் பெற்ற “தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு” என்ற பாடலும் இதே மெட்டில் அமைந்துள்ளது. இரண்டும் “வலஜி” ராகத்தில் அமைந்துள்ளன.

  – சிமுலேஷன்

 2. சாரதா says:

  ‘சுமதி என் சுந்தரி’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தில் ‘பொட்டுவைத்த முகமோ’ பாடல் பற்றிய போர்ஷன் மட்டும் இதோ:

  “எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி…. மொத்தத்தில் அழகு.

  இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது”.

  முழுப்படத்தின் விமர்சனம் இங்கே:
  http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743

 3. விமல் says:

  இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே
  இரவில் அகில இந்திய வானொலியில்
  சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம்.

  இது உண்மையா ?

  விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

 4. விமல் says:

  இன்னும் விரிவாக
  ——————————————-
  ‘பொட்டு வைத்த முகமோ?’ என்ற பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜிக்குப் பாடப்போகும் முதல்பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார். எஸ்.பி.பி. அவரிடம் தான் பெயரெடுக்கவேண்டும் என்று மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். எஸ்.பி.பி-விற்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.

  ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

  எஸ்.பி.பி ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடிய காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டி.எம்.எஸ். அவர்கள்தான். டி.எம்.எஸ். பாடல் பதிவுக்குக்கூட வராத நடிகர் திலகம், எஸ்.பி.பி. பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக்கூட வியப்பில் ஆழ்த்தியது.

  எஸ்.பி.பி.யும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி எஸ்.பி.பியுடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்.பி.பி.யும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

  நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.பி.பியிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் ‘பிரிவியூ’க்கு வழக்கம்போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர். சாதாரணமாக எஸ்.பி.பி. இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்தபோது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது” எனக்கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்.பி.பி.க்குக் கிட்டியது. நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

  “பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை. இங்கே சில பேர் உன்கிட்ட வேற ஒரு பாடகர் ஸ்டையிலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான், நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்தமாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்” என்பதுதான்.

  உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்.பி.பிக்கு தைரியத்தைக் கொடுத்தது. சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. இன்றளவும் எஸ்.பி.பி. வியக்கும் ஒரு விஷயம் இது.

 5. ராஜன் says:

  இதைப் போன்ற பெரிய கட்டம் போட்ட சட்டை என்னிடமும் ஒன்று இருந்தது 🙂 சிவாஜி ஜெயலலிதாவுடன் நடிப்பதற்காக பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் எஸ் பி பி யின் குரல் மூலமாக தன்னை மேலும் இளைஞனாகக் காட்டிக் கொள்ள முயன்றதும். ஜெ வுடன் நடித்த முதல் படத்தில் தான் அதே அளவு இளைஞனாக ஜோடிப் பொருத்தமாகத் தெரிவதற்காக நிறைய உடலுழைப்பு எல்லாம் செய்து உடல் எடையையும் குறைக்க முயன்றாராம். சின்ன டைட்டான அரைக்கை சட்டை எல்லாம் போட்டு எஸ் பி பி யை எல்லாம் பாட விட்டு அவரும் சின்னப் பையனானக காண்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறார் முடியாமல் போனதால் ஜெயலலிதா குண்டாகி காம்ப்பென்சேட் செய்து விட்டார் போலிருக்கிறது 🙂
  ராஜன்

  • சாரதா says:

   ராஜன்…

   நீங்கள் சொல்வது போல ‘சுமதி என் சுந்தரி’ படம் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த முதல் படம் அல்ல. ஏழாவது படம். இப்படத்துக்கு முன்பாகவே, ‘கலாட்டா கல்யாணம், எங்கஊர் ராஜா, தெய்வமகன், எங்க மாமா, பாதுகாப்பு, எங்கிருந்தோ வந்தாள்’ ஆகிய படங்களில் அவருடன் ஜோடியாக நடித்துவிட்டார். இப்படம் வெளியானபோதும் ‘சவாலே சமாளி’யில் நடித்துக்கொண்டிருந்தார். தன்னை ஒல்லியாக காண்பித்துக்கொள்ள மெனக்கெடவில்லை. (அதௌ அவருக்கு அவசியமும் இல்லை). அப்போது வந்த படங்களில் எல்லாம் நிஜமாகவே ஒல்லியாகத்தான் இருந்தார். தவிர, ஜெயலலிதாவுடன் நடிக்க மெனெக்கெட வேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஜெயலலிதா ஒன்றும் வானத்தில் இருந்து தொபுக்கடீர் என்று குதித்துவிட்ட தேவதையும் அல்ல. அவருடன் போட்டியாளர்களாக இருந்த “சிலர்” தனக்கு ஒரு படத்திலேனும் ஜோடியில்லாமல் நடிக்க தைரியமில்லாமல் துப்புக்கெட்டுப்போய் இருந்த அந்த நேரத்தில், பல படங்களில் தனக்கு ஜோடியே இல்லாமல் நடித்தவர் அவர். (சற்று காரமாகச்சொல்லக் காரணம், சிவாஜி என்றாலே சிலர் ஒரு மொடக்கு தண்ணீர் கூட சாப்பிடுவதுதான்). ஒரு படத்தில்கூட வயதான தோற்றம் காட்டாமல் கடைசி வரை, இளைஞனாகவே தன்னைக் காண்பிக்க “முயன்றது”… ஸாரி “மெனக்கெட்டது” யார் என்று தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தெரியும். அவர்களைப்பற்றி எழுத பலருக்கு தைரியம் கிடையாது என்பதும் தெரியும். சிவாஜிக்கு முன்பாகவே எஸ்.பி.பி.யை தனக்கு பாட வைத்து தன்னை இளைஞனாகக் காட்டிக்கொள்ள முயன்றது யார் என்பதும் தெரியும்.

   இப்படத்தில் இன்னொரு டூயட் பாடலான ‘ஒருதரம் ஒரே தரம்’ பாடலை டி.எம்.எஸ்.தான் பாடினார். அப்பாடலிலும் நடிகர்திலகம் இளைமையானவராத்தான் இருந்தார்.

  • RV says:

   ராஜன், சாரதா கிட்ட வச்சுக்காதீங்க! 🙂

 6. ashokha says:

  காலை எழுந்ததும் கணவனைக் கொன்று
  மாலை முழுவதும் மயங்கி விழுந்து……திருவள்ளுவர்.
  காணாமல் போன காதலைத் தேடி
  கழுதை போல கணவனைத் திட்டி……ஒளவையார்.

  சாரி….தலைமை ஆசிரியர் கொலை வழக்கு, ஆசிரியை சுமதி, ராஜன் என்று தேடினால் சம்பந்தமில்லாமல் இது வந்து என் திட்டை வாங்கிக் கொண்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: