சுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்


  • இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.
  • 1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.
  • சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.
  • ‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.
  • கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம்.
  • ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.
  • இளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா? அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…

    தேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.

    (ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)

    காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

    ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

    பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்?) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.

    பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).

    பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.

    ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).

    ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.

    ‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.

    வரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.

    அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.
    அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.
    அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
    அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
    (நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).


    மெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.


    படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)


    எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)


    எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினாள் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ்! காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).


    வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை? “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.


    கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.


    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.

    இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

    பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.

    தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)

    இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

    உண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.

    ‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்

    தொடர்புடைய சுட்டிகள்:
    ஆர்வி விமர்சனம்
    பொட்டு வைத்த முகமோ பாட்டு

    பற்றி RV
    Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

    35 Responses to சுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்

    1. பிங்குபாக்: Indli.com

    2. BaalHanuman says:

      பல படங்களில் பல பாடல்களைப் பாடியவர் பாலு. ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாலு பாடிய முதல் பாடல் எது தெரியுமா? ‘சுமதி என் சுந்தரி’ என்ற படத்தில் பாடிய ‘பொட்டு வைத்த முகமோ?’ என்ற பாடலே ஆகும். அந்தப் பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜிக்குப் பாடப்போகும் முதல்பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார். எஸ்.பி.பி. அவரிடம் தான் பெயரெடுக்கவேண்டும் என்று மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். பாலுவிற்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.

      ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

      பாலு ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடிய காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டி.எம்.எஸ். அவர்கள்தான். டி.எம்.எஸ். பாடல் பதிவுக்குக்கூட வராத நடிகர் திலகம், எஸ்.பி.பி. பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக்கூட வியப்பில் ஆழ்த்தியது.

      பாலுவும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி பாலுவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்.பி.பி.யும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

      நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.பி.பியிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் ‘பிரிவியூ’க்கு வழக்கம்போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர். சாதாரணமாக பாலு இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்தபோது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது” எனக்கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்.பி.பி.க்குக் கிட்டியது. நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

      “பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை. இங்கே சில பேர் உன்கிட்ட வேற ஒரு பாடகர் ஸ்டையிலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான், நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்தமாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்” என்பதுதான்.

      உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்.பி.பிக்கு தைரியத்தைக் கொடுத்தது. சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. இன்றளவும் எஸ்.பி.பி. வியக்கும் ஒரு விஷயம் இது.

      — பாடும் நிலா பாலு (ராது)

    3. Ganpat says:

      சிவாஜி ரசிகனான எனக்கே சாரதா ஜி கொடுத்திருக்கும் ஹைப் சற்று அதிகமாக படுகிறது.
      சிவாஜி ஒரு உணர்வை வெளிப்படுத்த முடியாமல் போனார் என்றால் அது காதல் ஒன்றுதான்.அவர் வெளிப்பாட்டில் காதலை விட காமமே விஞ்சி இருக்கும்.அதுவும் வாணிஸ்ரீ,காஞ்சனா,உஷானந்தினி அவரிடம் பட்டபாடு அப்பப்பா!
      எங்கள் இளமை முழுக்க இந்த மெகா தொப்பை 50+ இளைஞர்கள் தங்கள் பேத்தி வயதான ஹீரோயின்களைப்பார்த்து காமப்பார்வை பார்த்து மற்றும் காம சைகை புரியும் கண்கொள்ளாக்காட்சியை சகித்துக்கொள்ளும் அவல நிலையில் வீணானது.
      இதில் MGR க்கு காதல் காமம் இரண்டும் வராமல் ஒரு காமெடி ஆக செய்வார்.
      சிவகுமார் காதல் பார்வை பார்த்தால் ஒரு பாலுக்கு ஏங்கும் சவலைக்குழந்தை தன தாயை பார்ப்பது போல இருக்கும்.
      ஜெமினி ஒருவர்தான் உண்மையில் காதலை அழகாக வெளிப்படுத்தியவர்.
      ம்ம்ம் இந்த கால ஹீரோக்கள் அனைவரும் ரத்தினங்கள்.காமம் என்பது ஒரு மருந்துக்கு கூட தெரியாமல் காதல் பார்வை பார்ப்பதில் மன்னர்கள்

    4. சாரதா says:

      கன்பத்,

      முதலில் உங்கள் மறுமொழிக்கு நன்றி. மனித வாழ்வில் கிடைத்தற்கரியது இளமை. அப்படியிருக்க, உங்கள் இளமைக்காலத்தை நடிகர்திலகம் சிவாஜி வீணடித்துவிட்டமைக்காக வருந்துகிறேன். அவரது ரசிகை என்ற வகையில் அதற்காக மன்னிப்பும் கோருகிறேன். உங்கள் இளமைக்காலத்தில் ஆண்டுக்கு சுமார் 40 முதல் 50 வரை படங்கள் வெளியாகிருக்கலாம். அவற்றில் மிஞ்சி மிஞ்சி போனால் சிவாஜி ஒரு 7 அல்லது 8 படத்தில் நடித்திருக்கலாம். அவற்றை மட்டும் புறக்கணித்துவிட்டு மற்றவைகளை மட்டும் பார்த்திருந்தால் உங்கள் இளமை வீணாகியிருக்காது. அவரது படம் இப்படித்தான் என்று எப்போ ஒன்றிரண்டு படங்களில் தெரிந்து விட்டதோ, அப்பவே அவரை ஏறக்கட்டுவதுதானே புத்திசாலித்தனம்?. அந்த ஆண்டுகளில் காதல் மன்னரின் படங்களும் நிறைய வெளிவந்தன. அவற்றின் இயற்கையான காதல் காட்சிகளை பலமுறை பார்ப்பதன் மூலம் உங்கள் இளமையின் பயனை மெமேலும் மெருகேற்றியிருக்கலாம். (‘என் படத்தை பார்க்கிறாயா இல்லையா?’ என்று கையில் துப்பாக்கியுடன் சிவாஜி மிரட்டியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்). அப்புறம் ஏன் இந்த ‘வேஸ்ட் ஆஃப் இளமை’?.

      தவிர சிவாஜி காதல் நடிப்பில் கைதேர்ந்தவர் என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் படங்களில் காஞ்சனா ‘சிவந்த மண்’ என்ற ஒரே படத்தில் மட்டுமே ஜோடியாக நடித்தார். உஷாநந்தினி கௌரவத்தில் சும்மா பேருக்கு வந்து போனார். திரை முழுக்க நின்றவர்கள் இரண்டு சிவாஜி மட்டுமே. ரா.ரங்கதுரையில் ‘மதன மாளிகை’ என்ற ஒரே பாடல், அதில் காமம் இருந்ததா?. கேட்கவே ஆச்சரியம். என்னைப்போல் ஒருவனில் இருவருக்கும் டூயட்டே கிடையாது. வாணியுடன் நடித்த ‘மயக்கமென்ன’ பாடல் கௌரவமான காதல் பாடல்களில் ஒன்று.

      எம்.ஜி.ஆரின் பாடல்களில் காமம் கிடையாது காமெடிதான் என்று சொல்லியிருப்பதும் அதிசயமாக உள்ளது. இதயக்கனியில் ‘இதழே இதழே தேன்வேண்டும்’ பார்த்ததுண்டா?. ராதாசலூஜாவின் ஜாக்கெட்டை கிழிப்பது காமம் இல்லை. காமெடியே(!!!), ‘பஞ்சனை வேண்டுமோ நெஞ்சனை போதுமே’ வரிகளில் அவர் கைகள் மேய்வதும் காமெடியே. கண்ணன் என் காதலனில் ‘கண்கள் இரண்டும் விடிவிளக்காக’ பாடலில் வாணியுடன்……. ஸாரி, நிறைய இருக்கிறது. பெண்ணாகிய என்னால் ஒரு லிமிட்டுக்கு மேல் சொல்ல முடியாது.

      தவிர, ‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய எனது விமர்சனம் வரிக்கு வரி உண்மையானது. எந்த இடத்திலும் மிகைப்படுத்தல் இல்லை. நான் முன் சொன்னது போல எந்த இடத்திலும் அவரது காதல் நடிப்பை மட்டும் தூக்கிவைத்து பேசவில்லை. இன்றைக்கும் மக்களால் இப்படமும் இதன் பாடல்களும் விரும்பி வரவேற்கப்படுகின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

      போனது போகட்டும், இனிமேலாவது மிச்சமிருக்கும் இள்மையை வீணாக்காமல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்ட ‘வச்சுக்கவா உன்னை மட்டும்’ போன்ற, காமம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இலக்கிய தரம் வாய்ந்த (????????????) பாடல்களைப் பார்த்து பலனடையுங்கள்.

      நன்றியுடன்…. சாரூ….

    5. Ganpat says:

      சாரதாஜி,

      வச்சு விளாசியதற்கு நன்றி.

      1 என் கடிதத்தின் முதல வரியை படித்திருந்தால் இவ்வளவு adrenalin சுரந்திருக்காது.நானும் சிவாஜி ரசிகன்தான் ஆனால் வெறியன்(ள்) அல்ல.

      2.சிவாஜியின் potential மலையளவு .அதில் நம் திரையுலகம் பயன்படுத்திக்கொண்டது கடுகளவு.
      உலகின் தலைசிறந்த பலமொழி படங்கள் பலவற்றை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.
      உலகின் தலைசிறந்த நடிகர்களில் அவர் தலையானவர்.ஆனால் அதற்காக அவர் நடித்த 300
      படங்களில் அவர் தேவைப்படுவது

      ஆலயமணி
      அந்தநாள்
      கப்பலோட்டிய தமிழன்
      கௌரவம்
      முதல் மரியாதை
      பார் மகளே பார்
      பராசக்தி
      புதியபறவை
      தங்கப்பதக்கம்
      திருவிளையாடல்
      தேவர்மகன்
      தில்லான மோகனம்பாள்
      உத்தம புத்திரன்
      உயர்ந்தமனிதன்
      வீரபாண்டியகட்டபொம்மன்
      வியட்நாம்வீடு

      ஆகியவற்றிக்கு மட்டுமே

      அவர் நடிக்காமல் (நாம்) இழந்த ஒரே பாத்திரம்
      “நாயகன்”

      3.என் இளமை வீணானது என்று சொன்னது காதலிலாலோ,காமத்திலாலோ அல்ல
      70 களில் வந்த பல்வேறு அசட்டுப்படங்களால்.அதில் நம்(!) தலைவர் படங்களும் அடக்கம்!

      4 ஹையோ ஹையோ..MGR படத்தில் காமமா?
      அதுவும் இதயக்கனியில்?
      ராதா சலூஜா கட்டிலில் படுத்திருக்க ஒரு 4 அடி தூரத்திலிருந்து வாத்தியார் அவள் மேல் வந்து குதிக்கும் காட்சியா?
      அப்போ தியேட்டரில் எங்கள் நண்பர் குழ முழுக்க சிரித்துக்கொண்டிருந்தோம்!
      மீண்டும் சொல்கிறேன் காமத்திற்கு bench mark உயர்ந்தமனிதன் ..சிவாஜி-வாணிஸ்ரீ பாடல் (வெள்ளிக்கிண்ணம்தான்)
      ஸாரி, நிறைய இருக்கிறது. ஆணாகிய என்னால் ஒரு லிமிட்டுக்கு மேல் சொல்ல முடியாது.(அதுவும் ஒரு பெண்ணிடம்)

      5.Yes M’am! I am also a fan of Gemini Ganesh.
      அவரின் “கல்யாணப்பரிசு” தான் காதலுக்கு ஒரு மைல்கல்
      நான் அவனில்லை தமிழில் வந்த மிக சிறந்த படைப்புகளில் ஒன்று.
      அவர் செய்த காவியத்தலைவி,இருகோடுகள் ரோலை நம் தலைவர் கூட செஞ்சிருக்க முடியாது
      (முருகனையே நடுங்கவைத்த வீரபாகுவையும்,சிவாஜியாக நடித்த ராஜ ராஜ சோழனையும் மறந்திருக்கமாட்டீர்கள்
      என நம்புகிறேன்)

      6.ஆமாம் இவ்வளவு நல்ல விவாதம் செய்துவிட்டு கடைசியில் திருஷ்டிபரிகாரம் போல் அந்த கடைசி para எதற்கு?
      துளிகூட லாஜிக் இல்லாமல்?

      மிக முக்கியமான ஒன்று.உங்கள் கட்டுரைகள் பலவற்றை (TFM) நான் படித்து ரசித்துள்ளேன்.
      என்ன செய்வது! A.P.நாகராஜனாக இருக்கிறேனே!!

      சிவாஜியைப்பற்றி நிறைய எழுதுங்கள் அம்மணி!

      வணக்கத்துடன்..
      கண்பா

    6. சாரதா says:

      கன்பத், பதிலுரைக்கு நன்றி. (அவற்றில் நியாயமில்லாதிருப்பினும் கூட).

      இப்போது இணையத்தில் புதிய ட்ரெண்ட் பரவியுள்ளது. அதைத்தான் நீங்களும் கைக்கொண்டுள்ளீர்கள். அதாவது சிவாஜியை சகட்டுமேனிக்கு குறை (இருப்பது கொஞ்சம், இல்லாதது நிறைய) சொல்லிவிட்டு, கூடவே ‘நானும் சிவாஜி ரசிகன்தான்’ என்ற வரியைப் போட்டுக்கொள்வது. அதாவது ஒரு போலி முகமூடியை மாட்டிக்கொள்வது. இப்படி ஒரு போர்வைக்குள் நுழைந்து கொண்டு (இல்லாத) குறைகளைச் சொன்னால், ‘ஒரு சிவாஜி ரசிகரே குறை சொல்கிறாரே. அப்போ சரியாத்தான் இருக்கும்’ என்று பொதுவான மக்கள் ஏற்றுக்கொள்வார்களாம். இதெல்லாம் யாரை ஏமாற்றும் நாடகம்?.

      ஆனால் நான், மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரையோ அல்லது மற்றவர்களையோ குறை சொல்ல நேர்ந்தால், ‘நானும் எம்.ஜி.ஆரின் ரசிகைதான்… ஆனாலும்’ என்பன போன்ற போலி முகத்திரைகள் எனக்கு அவசியமில்லை. ‘சிவாஜி ரசிகை’ என்ற பேனரைப்பிடித்துக்கொண்டே மற்றவர்களை குறை சொல்வேன். அந்த தைரியம் எனக்குண்டு

      ‘சரி இவரைப்பற்றியே குறை சொல்கிறீர்களே, இவருக்குப்போட்டியாளராக விளங்கிய அவர் நிலை என்ன?’ என்று கேட்டால், அதற்கும் கூட ஸேஃபாக ஒரு பதில் வைத்திருக்கிறீர்கள். ‘அவரை நாங்கள் ஒரு திறமையாளராக நினைப்பதேயில்லை. அதனால் அவரை விட்டுவிடுங்கள்’ என்று. (அதாவது காய்க்கின்ற மரத்தை கல்லால் அடிப்போம். மலட்டு மரத்தை விட்டுவிடுவோம் என்ற நியதிப்படியா?)

      சிவாஜி நடித்த 300 படங்களில், உங்களுக்குப்பிடித்த, அல்லது அவர் ஓரளவு நடித்ததாக நீங்கள் நினைக்கும் சில படங்களை பட்டியலிட்டுள்ளீர்கள். மற்றவையெல்லாம் வேஸ்ட் என்பது அதில் தொக்கியுள்ளது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். நடிப்பு என்பதை அவர் வெறும் கலைக்காக செய்யவில்லை. அது அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் சோறு போடும் தொழிலும்கூட. படத்தில் நடித்து சம்பாதிக்கத்தான் வந்தார். (அவர் மட்டுமல்ல, எல்லோருமே). அப்படியிருக்க, ‘நாங்கள் விரும்புகின்ற படங்களில் மட்டுமே நடி, மற்றவைகளை புறக்கணித்து வீட்டில் உட்கார்’ என்று சொல்ல நாம் யார்?. நமக்குப்ப்பிடித்தவற்றை மட்டும் (அப்படி எதுவும் இருந்தால்) பார்த்துவிட்டு மற்றவைகளை புறந்தள்ளுவதுதான் நமது வேலை.

      ஒரு மளிகைக்கடைக்காரரிடம், ‘ஏன் இவ்வளவு வகையான பொருட்களை விற்கிறீர்கள்?. எனக்குத்தேவை உங்கள் கடையிலுள்ள இருபது பொருட்கள் மட்டும்தானே. மற்றவைகளை கடையில் விற்காதீர்கள்’ என்று சொல்ல முடியுமா. நமக்குத்தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு போவதுதானே நாம் செய்ய முடியும்?. அல்லது சிவாஜி கடையில் பொருட்கள் சரியில்லை. ஜெமினி கடைக்குப்போவோம் என்று முடிவு செய்யும் உரிமை உங்களுடையது.

      சிவாஜி நடித்தவற்றுள் உங்களுக்குப்பிடித்தவை, அல்லது சிவாஜி ஓரளவுக்காவது நடித்தவை என்று நீங்கள் போடும் பட்டியல் வேறு சிலருக்குப்பிடிக்காமல் போகலாம். உங்களுக்குப்பிடிக்காத சில அவர்களுக்குப்பிடிக்கலாம். அப்படி ஆளாளுக்குப் பட்டியலிட்டால் 200 படங்களுக்கு மேல் கவராகி விடுமே. உதாரணமாக, யதார்த்தம் என்று நீங்கள் உள்பட பலர் கொண்டாடும் ‘முதல் மரியாதை’ எனக்குப்பிடிக்காது, அதே சமயம், படங்களில் ஜனரஞ்சகத்தை விரும்பும் எனக்கு ‘ராஜா’ படம் பிடிக்கும். உங்கள் பார்வையில் அது ஒண்ணுமில்லாத படம். ரசனைகள் வேறுபடுவது மனித யதார்த்தம்.

      நீங்கள் உங்களை ஏ.பி.நாகராஜன் என்று வர்ணித்துக்கொண்டீர்கள். ஆனால் ‘நெற்றிக்கண் திறப்பினும்’ என்று வாதிட்ட ஏ.பி.என். அந்த வாதத்தில் நிலைத்து நின்றாரா?. சிவாஜியின் சக்தியைத் தாங்க முடியாமல், ‘மன்னா பொற்கிழியை தருமிக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று பல்டியடிக்கவில்லையா?.

      நீங்கள் ஏ.பி.என். ஆக இருக்கலாம், ஆனால் நான் சங்ககாலத்து ஒரிஜினல் நக்கீரனின் கொள்ளுப்பேத்தி.

    7. சாரதா says:

      கன்பத்,
      நீங்கள் உட்பட, பலருக்குப் பிடிக்காத ‘இமயம்’ படத்திற்கான எனது ஆய்வுக்கட்டுரையில் இடம் பெற்ற கீழ்க்கண்ட பகுதி மட்டும் உங்கள் (மற்றும் இதைப் படிப்பவர்கள்) பார்வைக்கு. (‘காமப்பார்வை சிவாஜி’யின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு).

      ஜெய்கணேஷ் – மீரா ஜோடிக்கான டூயட் பாடல்…
      ‘இமயம் கண்டேன்….
      பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
      பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன்… சுகங்கள்’
      இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனிபோர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.

      தான் உச்சநடிகராக இருந்த காலத்திலேயே இதுபோல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்..!!.

      இன்பம் பொங்கும் வெண்ணிலா – கட்டபொம்மன்
      காற்று வெளியிடை கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்
      காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு
      யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
      அன்று ஊமைப்பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
      இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம்
      பண்ணோடு பிறந்தது ராகம் – விடிவெள்ளி
      வாராதிருப்பானோ – பச்சை விளக்கு
      கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா – பச்சை விளக்கு
      வட்ட வட்ட பாறையிலே – பழனி
      உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது – பழனி
      கண்ணிரண்டும் மின்ன மின்ன – ஆண்டவன் கட்டளை
      இரவு முடிந்துவிடும் – அன்புக்கரங்கள்
      காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரம்பிள்ளை
      செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
      மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் – பார் மகளே பார்
      ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் – ஊட்டி வரை உறவு
      என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்
      எங்க வீட்டு தங்க தேரில் – அருணோதயம்
      சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் – குலமா குணமா
      முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்
      என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு
      யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ – வாணி ராணி
      முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே – வாணி ராணி
      பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
      அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
      அழகி ஒருத்தி இளநி விக்கிறா – பைலட் பிரேம்நாத்
      செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
      தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்

      அவசரத்தில் நினைவுக்கு வந்தவை இவை. இன்னும் இருக்கிறது. இதைக் குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த “மற்ற சில” நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை. (இதைச்சொல்லக் காரணம், பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக்காலத்தில் ஒரு உண்மையைப்போட்டு உடைத்து விட்டுப்போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரைவண்டிக்காரர் பற்றிய வண்ணப்படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். ‘விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது’ என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).

    8. சாரதா says:

      தன் திறமையை மட்டுமே நம்பிய நடிகர்திலகத்தின் அசாத்திய துணிச்சல்…..

      எண்பதுகளுக்குப்பிறகு இவர் ஏற்று நடித்த வயதான வேடங்களை விட்டுவிடுவோம். ஆனால் இவர் மிகவும் மும்முரமான கதாநாயனாக நடித்த 1952 முதல் 1975 வரையிலான கால கட்டத்தை எடுத்துக்கொள்வோம். அன்றைய கால கட்டம், கதாநாயகன் என்றால் ஜோடியாக ஒரு கதாநாயகி வேண்டும். அவருடன் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட்டுகள் பாட வேண்டும் என்று தமிழ்த்திரையின் முன்னணி கதாநாயகர்கள் இருந்த நிலையில், இவர் ஜோடியில்லாமல் நடித்த படங்கள் எத்தனை……

      இவற்றை பல வகைகளாக பிரிக்கலாம்…. அறவே கதாநாயகி (இவரது ஜோடியாக) இல்லாத படங்கள். சும்மா ஒரு பாடலுக்கு மட்டுமே ஜோடியாக வந்துவிட்டுப்போகும் படங்கள். படத்தின் முற்பாதியில் மட்டும் கொஞ்ச நேரமே ஜோடி இருக்க, பின்னர் படம் முழுதும் இவர் தனியாகவே நடித்த படங்கள் இப்படி பல.

      அற்வே ஜோடியில்லாத படங்கள்…

      லட்சுமி கல்யாணம்
      பழனி
      காவல் தெய்வம்
      மூன்று தெய்வங்கள்
      ராமன் எத்தனை ராமனடி (கதாநாயகி உண்டு, ஆனல் இவருக்கு ஜோடி அல்ல)
      சரஸ்வதி சபதம் (இதில் வரும் ஒரே ஜோடி நாகேஷ் மனோரமா மட்டுமே, சிவாஜி, ஜெமினி, கே.ஆர்.விஜயா யாருக்கும் ஜோடியே கிடையாது)

      ஒரே ஒரு பாடலுக்கு, அல்லது சிறிது நேரத்துக்கு மட்டுமே ஜோடி, பின்னர் தனி ஆவர்த்தனம்…

      நெஞ்சிருக்கும் வரை
      பாபு
      ஞான ஒளி
      தீபம்

      படத்தின் முற்பகுதியில் சிறிது நேரம் மட்டுமே ஜோடியைகொண்ட படங்கள்…

      அவன்தான் மனிதன்
      பைலட் பிரேம்நாத்

      ஜோடி இருந்தும் டூயட் பாடல்கள் இல்லாத படங்கள்….

      பாச மலர்
      படித்தால் மட்டும் போதுமா
      மோட்டார் சுந்தரம் பிள்ளை (even he comes as young in flash-back)
      கைகொடுத்த தெய்வம்
      தில்லானா மோகனாம்பாள்
      நீதி
      தவப்புதல்வன்

      அந்நேரத்தில் ஒரு படத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட் பாடல்கள் கண்டிப்பாக தேவையென்றிருந்த நிலையில், இவர் மட்டும் எப்படி……!!!!.

    9. Ganpat says:

      Dr.சாரதாஜி,

      Taking one for a ride என்ற சொலவடை கேள்விப்பட்டிருக்கிறேன்
      நீங்களோ taking one for a picnic!

      சும்மா உங்க இஷ்டத்திற்கு assume செய்து விவாதத்தை வளைத்துள்ளீர்கள்.

      அங்கங்கே முகமூடி போன்ற திகில் வார்த்தைகள் வேறு! :))

      ஒவ்வொன்றாக பார்ப்போமா?

      1.நான் சிவாஜி ரசிகன் என்பது என் தனிப்பட்ட விஷயம்.இதற்கு சிவாஜியின் அங்கீகாரமே தேவையில்லை
      உங்கள் விதிப்படி சிவாஜி ரசிகன் என்பவன் “லாரி டிரைவர் ராஜ்கண்ணு” வைக்கூட குறைசொல்லக்கூடாது
      நானோ “உயர்ந்த மனிதனில்” குறை இருந்தால் கூட சொல்பவன்.

      2 நான் சொன்னது :
      அவர் நடித்த 300 படங்களில் அவர் தேவைப்படுவது 16 படங்களுக்கே!

      நீங்கள் புரிந்துகொண்டது:
      அவர் மற்ற 284 படங்களில் நடித்திருக்க கூடாது.

      ஒரு ரசிகையாக அவர் படங்களின் எண்ணிக்கையைப்பார்த்து நீங்கள் ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள்

      ஒரு ரசிகனாக அந்த படங்கள் பலவற்றில் அவர் நடிக்க வேண்டியிருந்த கட்டாயத்தை எண்ணி நான் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்
      அம்மி கொத்த கணபதி ஸ்தபதி எதற்கு?

      3 “அந்த நாளு”க்கே ஒரு கோடி பெற்றிருக்க வேண்டிய ஒரு மாபெரும் கலைஞன் 50 ஆண்டுகள் காத்திருந்து அதை “படையப்பா”விற்கு பெற்றது
      நமது துரதிருஷ்டம்

      4 இத்தனையும் மீறி உங்கள் அடுத்த இரண்டு பதிவில் தெரியும் ஒரு அகழ்வாராய்ச்சியைக்கண்டு பிரமிக்கிறேன்.
      மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

      முடிவாக,

      நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
      அவை எல்லாம் கலக்கும் இடம் கடலாகும்

      what you have drawn is the elevation and what I have drawn is the plan.
      But our object has been the same
      The “TAJMAHAL”

      நன்றியுடன்,

      பி.கு: நாமென்ன Wimbledon Singles ஆ ஆடுகிறோம்?
      மற்றவர்களும் கலந்துகொள்ளலாமே?

      • RV says:

        கண்பத், // நாமென்ன Wimbledon Singles ஆ ஆடுகிறோம்? // அது வேறு ஒன்றுமில்லை, இரண்டு பேரும் நன்றாக ஆடுகிறீர்கள், அதுதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்…

    10. சாரதா says:

      கன்பத்…., உங்கள் மறுமொழிக்கு சில விளக்கங்கள்…

      // 1. உங்கள் விதிப்படி சிவாஜி ரசிகன் என்பவன் ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’வைக்கூட குறை சொல்லக்கூடாது. நானோ ‘உயர்ந்த மனிதனில்’ குறை இருந்தால் கூட குறை சொல்பவன்//.

      என்னை சொல்லிவிட்டு நீங்களும் தவறாகவே வாதம் புரிகிறீர்கள். நான் எதிர்ப்பது, சிவாஜியை குறை சொல்பவர்களை அல்ல. “மற்றவர்களை” பாதுகாப்பாக ஒதுக்கி வைத்துவிட்டு, சிவாஜியை “””மட்டும்””” குறை சொல்பவர்களை. அப்படி ஒரு நிலை வரும்போது, ஏன் அவர் செய்யவில்லையா?, இவர் செய்யவில்லையா?, அதெல்லாம் உங்கள் கண்களில் படவில்லையா? என்று கேட்கத்தான் செய்வேன்.

      //2. நான் சொன்னது , அவர் தேவைப்படுவது 16 படங்களுக்கே, நீங்கள் புரிந்துகொண்டது மீதி 234 படங்களில் அவர் நடித்திருக்கக்கூடாது//

      இதுவும் உங்களது தவறான புரிந்துகொள்ளலே. உங்களது கண்ணுக்கு 16 போதும். அடுத்தவர் கண்ணுக்கு அவரது 50 பிடிக்கும், இன்னும் சிலருக்கு 85 பிடிக்கலாம். அப்படியிருக்க, அவர் நடித்த மற்றதெல்லாம் வேஸ்ட் என்று சொல்ல நாம் யார்?. இவ்வளவு ஏன்?. திரைப்படம் என்பது இயக்குனர் மற்றும் நடிகரின் அறிவு ஜீவித்தனத்தைப் பறைசாற்ற அல்ல, சிறிது நேரம் பொழுதுபோக்கவே என்று நினைக்கும் கிராமத்து டூரிங் டாக்கீஸ் மக்களுக்கு (உங்களைப்போன்ற பலரால் குப்பை என்று ஒதுக்கித்தள்ளப்படும்) ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ கூட பிடித்த படமாக இருக்கலாம். அவர்கள் ரசனையை தீர்மானிக்க அல்லது குறை சொல்ல நமக்கு என்ன உரிமை?.

      // அம்மி கொத்த ஸ்தபதி எதற்கு//.

      ‘வருடத்து ஒரு சிலை மட்டுமே வடிப்பேன், மற்ற நாட்களின் சிலை செய்யும் வாய்ப்பை எண்ணி ஏங்கியிருப்பேன்’ என்று உட்கார்ந்திருந்தால், ஸ்தபதி வீட்டில் அடுப்பு எரிவது எப்படி?. சிவாஜி உட்பட எல்லோரும் சினிமாவில் சம்பாதிக்க வந்தவர்களே. வடித்தவற்றுள் சிலைகளை மட்டும் ஏற்றுக்கொள்வது நமது வேலை. அம்மியை ரசிப்போரும் உண்டு. அது அவர்களுக்காக.

      //’அந்த நாளுக்கே’ ஒரு கோடி பெற்றிருக்கவேண்டிய கலைஞனை, 50 வருடம் காத்திருந்து, ‘படையப்பா’விற்குப்பெற்றது நம் துரதிஷ்டம்//.

      ‘அந்தநாள்’ பட பூஜைக்கு தேங்காய் வாங்கியதிலிருந்து, ரெடியான படப்பிரதிகளை தியேட்டர் வாசலில் கொண்டு இறக்கிய டாக்ஸி வாடகை வரை, அந்தப்படத்துக்கு மொத்த தயாரிப்பு செலவே பத்து லட்சத்துக்குள்தான் ஆகியிருக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல.

      “இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக 24 லட்சம் ரூபாய் செலவில் உருவான படம்” என்று ‘சந்திரலேகா’ படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டதாம். ஆனால் படையப்பா பட ஷூட்டிங்கில் டீ, காஃபி வாங்கிய செலவே 30 லட்சம் ரூபாய் ஆகியிருக்கும் என்பதும் நீங்கள் அறியாததல்ல. (1961-ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை 100 ரூபாயாம்).

      மக்கள்திலகம் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் தனது திரை வாழ்க்கையிலேயே அதிகபடசம் பெற்ற் சம்பளம் ‘மீனவ நண்ப’னுக்காக ரூ. 22 லட்சம் (ஆதாரம்: srimgr.com). ஆனால் இன்றைக்கு திரிஷாவின் சம்பளம் படத்துக்கு 4 கோடி. அப்போ எம்.ஜி.ஆரை விட திரிஷா செல்வாக்கில் உய்ர்ந்தவர் என்று நான் சொன்னால் மக்கள் என்ன செய்வார்கள்?. ‘சாரதாவை அனுப்ப வேண்டிய இடம் கீழ்ப்பாக்கமா? ஏர்வாடியா?’… என்று திரு. சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்த மாட்டார்களா?.

      // இத்தனையையு மீறி உங்கள் அடுத்த இரண்டு பதிவில் தெரியும் அகழ்வாராய்ச்சியைக்கண்டு பிரமிக்கிறேன். மிகவும் பிரயத்தனப் பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//

      மிக்க நன்றி…..
      (கப்பலோட்டிய தமிழனில் ஒரு காட்சி. பாரதியிடம் வெள்ளைக்கார நீதிபதி: “சிதம்பரத்தின் (வ.உ.சி) போராட்ட செய்திகளை உமது ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிடுவதுண்டா?”
      பாரதியின் பதில்: “அதைவிட எனக்கு வேறென்ன வேலை?”)
      பாரதியின் பதில்தான் என் பதிலும்.

      நன்றியுடன்… சாரூ…

    11. Ganpat says:

      சாரதாஜி,

      A) முதலில் உங்களை 10ஆம் வகுப்பு ஆசிரியையாக கற்பனை செய்துகொள்ள வேண்டுகிறேன்
      உங்கள் வகுப்பில் சிவாஜி,MGR,SSR,முத்துராமன் என்று பல மாணவர்கள்.
      ஒரே ஒரு சண்டைக்கார (ஆனால் புத்திசாலியான,நேர்மையான) மாணவி…
      பெயர் சாரு.
      சிவாஜி என்ற மாணவன் நன்கு படிப்பவன்.வகுப்பில் முதல்.எனவே சாருவிற்கு அவன் மேல் மரியாதை கலந்த ஒரு பக்தி.மற்ற மாணவர்கள் இவனைப்பற்றி எதுவும் தவறாக பேசாமல் பார்த்துக்கொள்வாள்
      அப்படி மீறி யாரேனும் பேசினால் அவர்களைப் பார்த்துக்கொல்வாள்.
      ஒரு பரிட்சையில் சிவாஜி மிக குறைந்த மதிப்பெண் வாங்கி விட்டான்.கவலை அடைந்த நீங்கள் (அதாவது வகுப்பு ஆசிரியை)
      அவனை என்ன ஆயிற்று என விசாரிக்க ஆரம்பிக்கிறீர்கள்.விடுவாளா சாரு.”இதைவிட குறைவாக MGR,அசோகன்,ரவிச்சந்திரன் மதிப்பெண் எடுத்தபோது
      நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே மேடம்! இப்போ இவனை ஏன் இப்படி திட்டுகிறீர்கள்” என வாதம் செய்கிறாள்.
      அதற்கு நீங்கள் “எனக்கு அவன் நலனில் அதிக அக்கறை சாரு” என விடையளிக்க அவளோ,
      “நான் எதிர்ப்பது,சிவாஜியை குறை சொல்பவர்களை அல்ல. “மற்றவர்களை” பாதுகாப்பாக ஒதுக்கி வைத்துவிட்டு, சிவாஜியை “””மட்டும்””” குறை சொல்பவர்களை. அப்படி ஒரு நிலை வரும்போது, ஏன் அவன் குறைந்த மதிப்பெண் எடுக்கவில்லையா?, இவன் குறைந்த மதிப்பெண் எடுக்கவில்லையா?, அதெல்லாம் உங்கள் கண்களில் படவில்லையா? என்று கேட்கத்தான் செய்வேன்.” என்கிறாள்.நீங்கள் என்ன செய்வீர்கள்?

      B)quote அவர் நடித்த மற்றதெல்லாம் வேஸ்ட் என்று சொல்ல நாம் யார்?. unquote

      இப்போ நான் ரகுவரன்..

      “மற்றதெல்லாம் வேஸ்ட் ன்னு நான் சொல்லலே மற்றதிற்கு அவர் தேவையில்லை என்றுதான் சொன்னேன்”

      “வேஸ்ட் ன்னு நான் சொல்லலே ;அவர் தேவையில்லை என்றுதான் சொன்னேன்”

      “வேஸ்ட் ன்னு சொல்லலே;தேவையில்லை தான் சொன்னேன்”

      “வே ஸ் ட் ன் னு சொ ல்லலேலேலேலேலேலே தேவையில்லைன்னு தான் சொன்னேனேனேனேனேனேனே ன்”

      c)quoteசிறிது நேரம் பொழுதுபோக்கவே என்று நினைக்கும் கிராமத்து டூரிங் டாக்கீஸ் மக்களுக்கு (உங்களைப்போன்ற பலரால் குப்பை என்று ஒதுக்கித்தள்ளப்படும்) ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ கூட பிடித்த படமாக இருக்கலாம். அவர்கள் ரசனையை தீர்மானிக்க அல்லது குறை சொல்ல நமக்கு என்ன உரிமை?.unquote

      So சிக்கில் சண்முகத்திற்கு பாரத் கொடுக்காமல் ரிக்ஷாக்காரனுக்கு கொடுத்தது மிகவும் சரி என்கிறீர்கள்!

      D)quoteசிவாஜி உட்பட எல்லோரும் சினிமாவில் சம்பாதிக்க வந்தவர்களே.//unquote

      Yes ஆனால் முக்கிய வித்தியாசம்: மற்றவர்கள் தங்கள் தகுதிக்கு பலமடங்கு அதிகமாக சம்பாதித்தவர்கள் .சிவாஜி தன தகுதிக்கு பலமடங்கு குறைவாக சம்பாதித்தார்
      300 படங்களில் அவர் ஒரு ஐந்து கோடி ரூபா சம்பாதிருத்திருக்கக்கூடும்.கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் சம்பளம் சுமார் 9 கோடி ரூபா .தகுதி அடிப்படையில் சிவாஜி மன்னராக நடித்தால் எலிசபத் டெய்லர் சாமரம் வீசுபவராகத்தான் வரவேண்டும்

      E) இவ்வளவு தமிழ் புலவராக உள்ள தாங்கள் உயர்வு நவிற்சி அணி இல் வீக்காக இருக்கிறீர்களே!
      கோடி கோடியாய் பணம் வரப்போகுது பாட்டை நீங்கள் எழுதியிருந்தால் 12500,12500 ஆய் பணம் வரப்போகுது என எழுதியிருப்பீர்!(துபாயில் ஆரம்ப சம்பளம் அவ்வளவுதான்)

      முடிவாக
      நாயகன் படத்தில் ஒரு காட்சி …வேலு நாயக்கரிடம் அவர் பெண்..

      “அப்பா போதும்பா எல்லாத்தையும் நிறுத்திடுங்கப்பா!”

      வேலுவின் பதில்:”முதலே அவங்கள நிறுத்தச்சொல்லு!நானும் நிறுத்தறேன்!”

      வேலுவின் பதில்தான் என் பதிலும்!

      நன்றி..
      கண்பா

      நாளைக்கு(1/10) எப்படி celebration? பால் பாயசமா?பாதாம் ஹல்வா வா?

    12. சாரதா says:

      இன்று அண்ணனின் அவதார தினம் (அக்டோபர் 1)
      எங்கள் ஆருயிர் அண்ணனே…..

      நீ பிறந்தாய்… பெருமையுற்றது தமிழகம்
      நீ நடந்தாய்…. பேறு பெற்றது ராஜ நடை
      நீ மேடையேறினாய்… செழித்தது நாடகம்
      நீ பேசினாய்…. தலை நிமிர்ந்தாள் தமிழன்னை
      நீ நடித்தாய்… புதிய முகவரியைக் கண்டது நடிப்பு
      நீ முழங்கினாய்… அடங்கிப்போனது கோடையிடி
      நீ கர்ஜித்தாய்… ஓடிப்போனது சிங்கம்
      நீ சிரித்தாய்… உன்னைச் சுற்றிலும் பூ பூத்தது
      நீ அரவணைத்தாய்… பாசத்தில் சிக்கினர் ரசிகப்’பிள்ளை’கள்
      ஏன் மறைந்தாய்… நான் புலம்புவதற்கா..??.

      • Ganpat says:

        நீங்கள் சிம்மாசனம் ஏற 25 ஆண்டுகள் ஆனது
        உங்கள் ஆட்சி 40ஆண்டுகள் நீடித்தது
        தமிழர்கள் மனமெனும் சிம்மாசனத்திலோ உங்களுக்கு நிரந்தர இடம்.

        குணசேகரன் எழுந்துகொள்ளும் போதுதான் திரையுலகமே எழுந்துகொண்டது.

        நீங்கள் நடிக்கவேயில்லை பலபிறவிகள் எடுத்தீர்கள்
        கட்டபொம்மனாக,வ.உ.சி யாக,பரமசிவனாக,மன்னனாக,
        செல்வந்தனாக ஏழையாக…

        இப்பொழுதும் வாழ்கிறீர்கள்
        நடிப்பிற்கே ஒரு அளவுக்குறியீடாக!

        நீங்கள் திலகமாக நெற்றியில் வீற்றிருந்தீர்
        இப்போழ்துதான் ஒருவர் கழுத்துக்கே வந்துள்ளார்.

        என் வம்சாவளியில் ஒருவன் பெருமை பேசுவான்
        என் பாட்டனின், பாட்டனின்……… பாட்டன்
        இவரை நேரில் சந்தித்திருக்கிறார் என்று!

        வாழ்க நீவிர் புகழ்!

    13. BaalHanuman says:

      ‘நாட்டியப் பேரொளி பத்மினியுடன் ஒரு சந்திப்பு’ என்று எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். அப்போது பத்மினிக்கு வயது 70. இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி எழுத்தாளார் அ.முத்துலிங்கம் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. அந்த நாட்களில் நடந்த நிகழ்வின் நினைவினை தன்னுடைய சுவாரஸ்யமான நடையில் பகிர்ந்திருப்பார்.

      பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பத்மினியை சந்திக்க வந்த ஒரு பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’ பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்டிருக்கிறார்கள்.

      இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? என அ.முத்துலிங்கம் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர்போல இருந்திருக்கிறார்.

      இப்படியாகத் தொடர்ந்த கட்டுரையின் கடைசிப் பகுதியில் ஒரு கேள்வி.

      சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் ?

      அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

      சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழேயே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர்; என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கெளதாரி, கோழி, ஆடு, மீன், றால் என்று எனக்கு பிடித்தமான அத்தனை கறி வகைகளும் சமைத்திருந்தார்கள்.

      அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ‘சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு ‘ என்றார். முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரரைப்பற்றி ஒரு காலத்தில் பாடல் இருந்தது. ‘வண்ணத்துப் பூச்சிபோல மிதப்பார்; குளவி போல குத்துவார்.’ அவருடைய கால்கள் தரையில் பாவாமல் துரிதமாக இயங்குமாம். இன்று அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு நிமிடம் எடுக்கிறார். அதுபோல ஒரு கொடுமைதான் இதுவும். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்கு பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.

      அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

      சாதிவெறி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் ‘பஞ்சமர்’ நாவலில் தொடங்கி, மாதவய்யாவின் ‘கண்ணன் பெரும் தூது’ சிறுகதையில் இருந்து, சமீபத்தில் ஜெயமோகனின் ‘கடைசிவரை’ சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.

      மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து காலுக்கு மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருதுவதில்லை. ஒரு கிளாஸில் பழ ரசம் மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டு தொட்டு செல்கிறது. திடீரென்று சொன்னார். ‘நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா?’

      நான் திடுக்கிட்டு விட்டேன். கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக்கொடுத்தன. இப்படி அ. முத்துலிங்கம் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடித்திருப்பார்.

    14. sundar says:

      [quote]கூடவே ‘நானும் சிவாஜி ரசிகன்தான்’ என்ற வரியைப் போட்டுக்கொள்வது.[/quote]
      I generally don’t write comments. But that’s a terrible generalization. It is just that people like you do not want hear even a slight criticism on your idol. Fact adhaan.

      Yaaravadhu thuli sivajiya edhavadhu sonnalum ungalala thanga mudiyila enna neenga avara andha alavukku idolize panringa.(Nothing wrong in it.) Ungaloda karutha solra madhiri avanga avanga avangaloda karutha solranga avalavu dhaan adukkuga avangala pidichu kizhi kizhinu kizhikanumnu avasiyam illa.

      You should realize that they may genuinely like Sivaji. But they are just unbiased.

      [quote]சிவாஜியை “””மட்டும்””” குறை சொல்பவர்களை. அப்படி ஒரு நிலை வரும்போது, ஏன் அவர் செய்யவில்லையா?, இவர் செய்யவில்லையா?, அதெல்லாம் உங்கள் கண்களில் படவில்லையா? என்று கேட்கத்தான் செய்வேன்.[/quote]
      Sivaji pathi pesum podhu sivaji pathi mattum dhaan pesuvanga. Mathavangala edhukku idhula izhukanum. Avangala pathi la thitlangardhu naala avanga pannathu mattum right nu aagadhu. Mathavangalyum sethu thitina sivaji thitradha pathi ungalukkulam oru aatcheyabanayum illaya? Honestly, endha arguement kettu kettu pulichu pochu.

      Sivaji mattum illa N.T.Rama Rao, Nageswara Rao kuda dhaan sridevi kuda 60 vayasuku mela duet aadinaanga. Adhu nichyama pakka kandraviya dhaan irundhudhu. MGR pathi sollave venaam. Avarukku ethana vayasanalum heroine mattum 20 vayasu thaanda kudaadhu. (Naan solradhu after late 60s) Naanga solradhu sivaji idhula endha vidhathlayum exception illa. Avar pannadhum asingam dhaan.

      So avanga kuda dhaan pannanga nu avangala ezhuthu so sivaji panna enna thappunu sivajiya neenga defend panradhu lame!!

    15. சாரதா says:

      அன்புள்ள சுந்தர்,
      பதிவு முழுவதையும் படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அதற்கே ஒரு பெரிய நன்றியை சமர்ப்பிக்க வேண்டும்.

      நல்ல கருத்துக்கள். தீரக்கமான சிந்தனை, தெளிவான கண்ணோட்டம். ஒப்புக்கொள்ளக்கூடிய வாதம். மிகவும் சந்தோஷம். எனக்கும் மல்லுக்கு நின்று, நின்று அலுத்துவிட்டது. சண்டை போட்டு, சண்டை போட்டு என்னத்தை கண்டோம். உங்களைப்பார்த்தால் நிறைய விஷயம் உள்ள ஆளாகத்தெரிகிறது. வாருங்கள் பேசிக்கொண்டே நடப்போம். அதோ தொலைவில் என் கணவர் பிரகாஷ் உட்கார்ந்து கடலை கொறித்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

    16. gandhi says:

      i am also fan of Nadigar Thilagam,
      I enjoyed every line .
      Good work .
      I thank everyone .

    17. sivaram says:

      விடாப்பிடியாக சி ஐ டி சகுந்தலாதான் வேணென்னு அடம் புடிச்சி பல படங்களில் அவரோடு சைடு கிக்கு போட்ட திலகம் ..அதுவும் ஒரு திரைப்படத்தில் சிவன் போல ஐயா வேஷம் போட அம்மணி பரத நாட்டியம் வேற ஆடும்..அதுல கண்ணடி வேறே..யாஹூ குரூப்பில்கூட‌ சொல்லிச் சிரித்தா‌ர்க‌ள்
      ஏதோ ஒரு படத்துல மாப்பிளைய பாதுக்கடி மைனா குட்டின்னு
      யானைகள் ஜமாய்த்த காலம் மாறிப்போச்சு

      இப்போ இருக்கற சின்னச் சின்ன பசங்க ஈஸியா ஊதித் தள்றாங்க யாரும் அலட்டிக் கொள்வதில்லை
      நிச்சயமாக சிவாஜி கணேசனை விட யதார்த்தமாக பாத்திரங்களை கையாளுகிறார்கள்
      நடிகர் திலக‌முன்னு அவருக்கு கொடுத்த பட்டதிற்கு ஏற்ப எத்தனை படங்களில் அருமையாக நடிச்சிருக்காரு
      நடிக்கிறதா சொல்லி கெடுத்திருக்காரு ?
      அவருக்கு நடிகர் திலகம் பட்டம் கொடுத்தா இவர்களுக்கு என்ன பட்டம் கொடுப்பது ?
      சும்மா தமிழ் சினிமா நாயகர்களின் நடிப்புத் திறனை குறைத்துக் காட்டும் அரைத்த மாவுகளையே திரும்பத் திரும்ப முன்னுதாரணமாய் காட்டி காட்டியே
      இதெல்லாம் ஒரு நடிப்புன்னு இதெல்லாம் ஒரு ரசனை ந்னு சலிச்சுக்காமே என்ன பண்ணுவது
      நேத்து யூடிப்ல இருவர் உள்ளம் சில காட்சிகள் பார்த்தேன்
      மனுஷன் நல்லா தான் சாதரணமா பேசிக்கிட்டு இருந்தான் திருஷ்டி பரிகாரமோ தெரியல வசனம்பேச ஆரம்பிச்சு
      அந்த சீனே கெட்டுப் போச்சு..
      சாதரணமாக செய்து விட்டுப் போக வேண்டிய காதல்காட்சி அதைக்கூட ரொம்ப ஓவராக் கெடுக்கணுமா
      இதான் நடிப்பா ?
      பின்னாட்களில் பண்ண படங்களில் ஒடம்பு சைஸ் மட்டுமே கண்ணில் உறுத்தியது
      பண்ண ரோலுக்கும் லுக்குக்கும் ஒத்து வர வேணாம் ? இதுல காட்டுக் கத்தல் வேறே
      ஸ்ரீதேவியோட ஜோடி போட்டு பாவம் இது பார்த்த அசட்டு சிரிப்புல பயந்து போயீ தெனறி நிக்கும்

      • RV says:

        சிவராம், அட என்னங்க, இன்னும் சிவாஜியை குறை சொல்லிக்கிட்டு? விட்டா பாகவதர் படத்தில் ஒரே பாட்டாக இருக்குன்னு குறைப்படுவீங்க!

    18. gandhi says:

      Sivajai was born artist .His coperation with fellow artist were too good. His action was fantatisc .He introduced many style to tamils .

    19. sivaram says:

      அதுவும் சரிதான் RV !

      பாகவதர் படத்தை பார்க்க போயிட்டு வெரும் பாட்டுன்னு கொறை சொன்னா எப்டி ?
      அது மாதிரிதான் இதுவும் இப்டிதான்னு தெரிஞ்சுதானே பார்த்துட்டு கொறை வேறே சொல்லிட்டேனா ?
      தப்புதான்
      ஆனாலும் பாகவதரை பற்றி யாருமே
      புழுகித் புழுகித் தள்ளி
      அவர் புகழை நிலைநாட்ட அரும்பாடு படுவதில்லையே
      பொய் புரூடா புழுகுகளை கட்டு கட்டாக
      பக்கம் பக்கமாக சொல்லியும் வர்ணித்தும்
      வெம்பி வெம்பி ம‌ற்ற கலைஞக‌களைத் தூற்றித் தூற்றி
      தகவல்களைத் திரித்து திரித்து சொல்லி
      ‘புகழை நிலைநாட்ட பாடும்படும்’ தொண்டர்கள் அவருக்கில்லை
      அதற்கு அவ‌சிய‌ம் வைக்காத‌ எத்த‌னையோ க‌லைஞ‌ர்க‌ளில் அவ‌ரும் ஒருவ‌ர்

    20. subbu says:

      சிவாஜி கணேசன் உயரம் ரொம்ப கம்மி
      இருந்தும் கூட அவரை உயரமாக திரையில் காட்டிய காமேரா தொழில்நுட்ப வல்லுநல்லர்களை
      எவ்வளவு பாராட்டினாலும் தகும் !
      துணிந்து கதாநாயகனாக வாய்ப்பளித்த திரையுலகத்தின‌ரையும்
      தொடர்ந்து அவரை பாராட்டும் ரசிகர்களையும் கூட மெச்சத்தான் வேண்டும்
      சிவாஜிக்கு ஜோடி சேர்ந்த அத்தனை நாயகிகளும் அவரைவிட உயரமாக இருந்தவர்கள்
      அவரோடு அதிகமாக ஜோடி சேர்ந்த பத்மினி உட்பட…நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது
      அனேகமாக அந்தமாதிரி குள்ளமாகவும் குண்டாகவும் இருப்பவர்களுக்கு அன்று காமெடி வேடம் தான் கொடுத்தார்கள் சிவாஜி கணேசன் ரொம்பவே லக்கி‌

    21. santhiya says:

      சுமதி என் சுந்தரி நானும் பார்த்தேன்
      இனிமையான அழகான ஆர்ப்பாட்டமில்லாத ஒரு சித்திரம்
      பண‌த்தை வாரி இறைத்து வெளிநாட்டில் பண்ணவில்லை
      உள்நாட்டிலே வண்ண வண்ண செட் போட்டு விதம் விதமான ஜொலிக்கும் ஆடைகள்
      ஆபரணங்கள் எதுவுமில்லை
      சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா !
      ஒரு மென்மையான கதை
      அதைப் பாழாக்காமல் ‘ஜில்லுன்னு பண்ணிவிட்டு போயிருக்கிறார்கள்
      ஒட்டு மொத்தமாக எல்லாமே
      நடிப்பு வசனம் லொகேஷன் இசை.. பாட்டு
      இன்னும் என்னென்ன சொன்னாலும் அருமை
      படத்தை எத்தனைக் கோணத்தில் பார்த்தாலும் புதுமை !

    22. Raji says:

      Great arguments on both sides. Sivaji acted as was the trend then – it was the influence/effect of stage acting. But there is no doubt that he was a tremendously good actor who could express himself with just the slant of an eyebrow. But the influence of the stage then led to the writing of long dialogues which he could mouth with consummate ease. As for acting with younger heroines, it is our own fault for tolerating it. The disease still continues on screen – 60 year old Rajni and almost 60 Kamal acting with heroines younger than their daughters.

      One remark I agree with is that Gemini Ganesan was the actor who did best in romantic scenes. In fact he was a very good actor generally without resorting to overacting, but playing it naturally.

    23. m says:

      தமிழ் படிக்க இன்றும் கற்றுக்கொண்டிருக்கிறேன். “ஒத்திகை” என்ற வார்த்தை எனக்கு தெரியவில்லை. அகிராதியில் பார்த்தால் “To amuse by amorous sports” என்று எழுதியிருந்தது. அய்யோ! என் தமிழ் வாத்தியார் இந்த மாதிரி வார்த்தைகள் எல்லம் கற்றுகொடுக்கவில்லை!

    சாரதா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி