எம்.எஸ். விஸ்வநாதன் – அன்றும் இன்றும்


அன்றும் இன்றும் சீரிஸில் ஒரு பதிவு போட்டு நாளாயிற்று. இன்றைக்கு எம்எஸ்வி. அவரது இளமைக்கால ஃபோட்டோ நன்றாக இருக்கிறது. விமலுக்கு வழக்கம் போல நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
கார்த்திக் – அன்றும் இன்றும்
கே.ஆர். விஜயா – அன்றும் இன்றும்
மாதவன் – அன்றும் இன்றும்
காந்திமதி – அன்றும் இன்றும்
அஞ்சலி தேவி – அன்றும் இன்றும்

பயணங்கள் முடிவதில்லை – விகடன் விமர்சனம்


இதுவும் விமல் அனுப்பியதுதான், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண்டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம்- இது கதாநாயகன் ரவி (மோகன்). ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவனைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்). இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.

முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ‘ பாடலும், டி.விக்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள்!)

தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறிமுகமாறது – பின் பகுதி விவகாரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!

படத்துலே என்னதான் குறை?

ஹீரோவோட பிளட் கான்சர், வாழ்வே மாயத்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் அந்த 7 நாட்கள் பாதிப்பு!

இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்