எம்.எஸ். விஸ்வநாதன்–25


விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

 1. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
 2. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.
 3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.
 4. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்’, `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.
 5. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி. கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை !.
 6. மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை ! (வருவான் வடிவேலன் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை தமிழக அரசிடம் பெற்றார் என்று சாரதா சொல்கிறார்.)
 7. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றினார் !
 8. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !
 9. மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !
 10. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்ச ஸ்தாயியில் பாடின பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !
 11. எம்.எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !
 12. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !
 13. இளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !
 14. `புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக் கோர்ப்பு செய்தார் !
 15. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு இறக்கும் வரை, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !
 16. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு !
 17. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !
 18. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார் !
 19. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
 20. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !
 21. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார் !
 22. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !
 23. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !
 24. வி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்எஸ்வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !
 25. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

இங்கே சொல்லப்பட்ட பாட்டுகளில் சிலவற்றின் வீடியோக்கள்:

பட்டத்து ராணி

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

பன்சாயி காதல் பறவைகள்

யார் அந்த நிலவு

கண் போன போக்கிலே கால் போகலாமா

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து – எம்எஸ்வி இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518. இவற்றுள் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் 88, இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை 4 , தனித்து இசையமைத்த படங்கள் 426.

சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.

வருவான் வடிவேலன் படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (தெரியாத்தனமாக) 1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது. (அதாவது தகவல் # 6 தவறு என்று சாரதா சொல்கிறார்.) ஆனால் அடுத்த ஆண்டே (1979) சுதாரித்துக்கொண்டு, எல்லோரும் எதிர்பார்த்த நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பதிலாக நிறம் மாறாத பூக்களூக்காக இளையராஜாவுக்கு விருதைக் கொடுத்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

21 Responses to எம்.எஸ். விஸ்வநாதன்–25

 1. சாரதா says:

  ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518.

  இவற்றுள்
  ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் – 88
  இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை – 4
  மட்டும் தனித்து இசையமைத்த படங்கள் – 426

  சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.

  ‘வருவான் வடிவேலன்’ படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (தெரியாத்தனமாக) 1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது. ஆனால் அடுத்த ஆண்டே (1979) சுதாரித்துக்கொண்டு, எல்லோரும் எதிர்பார்த்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு பதிலாக ‘நிறம் மாறாத பூக்களூ’க்காக இளையராஜாவுக்கு விருதைக் கொடுத்தது.

  • Ganpat says:

   சாரதாஜி

   MSV யின் TOP TEN என நான் கருதுவது

   அன்புள்ள மான்விழியே
   காதல் சிறகை
   யார் அந்த நிலவு
   உலகம் பிறந்தது எனக்காக
   சிட்டுகுருவி முத்தம் கொடுத்து
   சொன்னது நீதானா
   கண்கள் எங்கே
   வான் நிலா நிலா அல்ல
   பார்த்த ஞாபகம் இல்லையோ
   கல்யாண வளையோசை

   தங்கள் தேர்வு என்னவோ?

   நன்றி

  • RV says:

   சாரதா, எம் எஸ்வி பற்றிய விவரங்களை பதிவில் சேர்த்துவிட்டேன்.

 2. Ganpat says:

  1970 இல MSV யுடன் ஏற்பட்ட ஊடலால் உ.சு.வா விற்கு MGR, குன்னக்குடியாரை ஒப்பந்தம் செய்தார்.பிறகு யாருடைய நல்ல காலமோ ஒரு பாடலை கேட்டுவிட்டு,கூப்பிடு விசுவை என்று சரணடைந்துவிட்டார்.இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?.T.K.ஷண்முகசுந்தரத்தை வைத்து
  தில்லானா மோகனாம்பாள் எடுத்தால் போல! :))

  • RV says:

   கண்பத், நல்ல பாடல் செலக்ஷன்!
   யாருங்க அது T.K. சண்முகசுந்தரம்?

   • Ganpat says:

    RV,
    என்ன, உண்மையிலேயே உங்களுக்குக்கு T.K. சண்முகசுந்தரம் யார்ன்னு தெரியாதா?
    “நெஞ்ச தொட்டு” சொல்லுங்க,பார்ப்போம்!
    ;))

   • RV says:

    // உண்மையிலேயே உங்களுக்குக்கு T.K. சண்முகசுந்தரம் யார்ன்னு தெரியாதா? // தெரியலியே!

   • Ganpat says:

    குஷ்புவின் தந்தை(கிழக்கு வாசல்)
    கனகாவின் தந்தை(கரகாட்டக்காரன்)
    சந்திரகாந்தாவின் சகோதரர்(நிஜ வாழ்க்கையில்)

    உங்கள் அடுத்த கேள்விக்கு பதில்:
    சந்திரகாந்தா கலைக்கோவில்,இதுசத்தியம் படங்களின் கதாநாயகி

    பி.கு:உங்கள் வலைதளத்தில் navigate செய்ய படாத பாடு படவேண்டியுள்ளது.சற்று கவனிக்கவும்

   • RV says:

    // உங்கள் வலைதளத்தில் navigate செய்ய படாத பாடு படவேண்டியுள்ளது.சற்று கவனிக்கவும் // என்ன பிரச்சினை என்று கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்…

    ஷன்முகசுந்தரத்துக்கு இனிஷியல் எல்லாம் பார்த்து கொஞ்சம் குழம்பிவிட்டேன். அவர் சகோதரியும் நடிகை என்பது தெரியாத விஷயம்.

   • சாரதா says:

    ‘அவ்வை’ டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி சகோதரர்கள் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கியவர்கள். 50 மற்றும் 60-களில் திரைப்படங்களிலும் புகழ்பெற்று விளங்கினர். (கப்ப்லோட்டிய தமிழனின் டி.கே.ஷண்முகம்தான் ‘சுப்பிரமணிய சிவா’).

    ஆர்.சண்முகசுந்தரம் என்ற நாடக நடிகர், இரத்தத்திலகம் படத்தில் அறிமுகமானார். கர்ணன் (தேரோட்டி சல்லியன்), இதயக்கனி (பணக்கார மைனர்), கரகாட்டக்காரன் (கனகாவின் அப்பா), கிழக்குவாசல் (வள்ளியூரான்) உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். ராதிகாவின் ‘அண்ணாமலை’ டி.வி. மெகா தொடரில் அவரது அப்பாவாக நடித்தார். இவரது உடன்பிறந்த தங்கை சந்திரகாந்தா இது சத்தியம், கார்த்திகை தீபம், முரடன் முத்து (சிவாஜியின் தங்கை) உள்பட பல படங்களில் கதாநாயகி, மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்தவர். சுத்தமாக தமிழ் பேசத்தெரிந்தவர். சந்திரகாந்தா என்று சொன்னாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ‘சரவண பொய்கையில் நீராடி’ என்ற சுசீலாவின் இனிமையான பாடல்.

    (T.K.ஷண்முகத்தையும், R.சண்முகசுந்தரத்தையும் இங்கு ஒரு மிக்ஸியில் கொட்டி கடையவிட்டது போல தெரிகிறது).

   • RV says:

    சண்முகசுந்தரம் குழப்பத்தை தீர்த்ததற்கு நன்றி சாரதா!

   • Ganpat says:

    அது ஆர் சண்முகசுந்தரம் என்று சொல்பவர்கள்,அது யார் சண்முகசுந்தரம் என்று கேட்கிறார்கள் என நினைத்துவிட்டேன்.மிக்ஸியில் போட்டிருந்தால் K.T சுந்தரஷண்முகம் என்றல்லவா
    வந்திருக்கவேண்டும்!
    தவறை திருத்தி அருள்பாலித்த
    சாரதாம்பிகைக்கு நன்றிகள்

    பி.கு:tT.K.சண்முகத்தை வைத்து தில்லானா மோகனாம்பாள் எடுத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.ஆனால் அது 1940 களில் வந்திருக்கவேண்டும்.

 3. virutcham says:

  //தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு ….. அவர் இறந்த பிறகு அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !// ????

  அவர் இறக்கும் வரையா ? அல்லது அவரது குடும்பத்தில் யாரையாவதா ?

  மற்றத் தகவல்கள் அருமை

  • RV says:

   விருட்சம், நானும் எம் எஸ்வி சுப்பையா நாயுடுவை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

   • Ganpat says:

    RV ஜி,

    எனக்கு நீங்கள் எழுதிய பதிவில் ‘பதில்’ link காணோம் அதனால் இங்கு பதிவிடுகிறேன்.
    1உங்கள் வலைத்தளத்தில் காணப்படும் “அண்மைய மறுமொழிகள்” ஒரு சிலவற்றேயே காண்பிக்கின்றன.மீதியை பார்க்கும் வழி தெரிவதில்லை
    2குறிசொற்கள் என்று ஒவ்வொரு கட்டுரைக்கும் பலசொற்கள் போடுவத்தின் பயன் தெரியவில்லை
    3search link எங்குள்ளது?

    இப்போதைக்கு அம்புட்டுதான்

   • RV says:

    கண்பத், இது என்னங்க குழப்பம், நீங்கள் எந்த பிரவுசர் பயன்படுத்துகிறீர்கள்?

   • virutcham says:

    நான் சொல்ல வந்தது, ‘இறந்த பிறகு’ கவனித்தார் என்று இருப்பதை. கடைசிக் காலத்தில் வீட்டில் வைத்து பரமாரிப்பது நல்ல விஷயம் தானே. இறந்த பிறகு எப்படி? typo error இருக்கு கவனியுங்க

   • RV says:

    விருட்சம், குட் கேட்ச்! திருத்திவிட்டேன்.

 4. சாரதா says:

  கன்பத்,
  எப்படி ‘எடிட்’ பண்ணினாலும், பிடித்த பாடல்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் வருகிறது. எனவே இங்கே பட்டியலிடுவது இயலாத காரியம்.

  உங்கள் பட்டியல் கண்டேன். ஆச்சரியம் அடைந்தேன்.. எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த ஆல்பங்கள் என்று போற்றப்படும் ‘காதலிக்க நேரமில்லை, அன்பே வா,, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ், ஊட்டிவரை உறவு, குடியிருந்த கோயில், உத்தரவின்றி உள்ளே வா, சிவந்த மண், எங்க மாமா, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும்’…. போன்ற படங்களில் இருந்து ஒரு பாடலைக்கூட உங்கள் பட்டியலில் காணோமே.

  • Ganpat says:

   1500 ஆ !!!
   அடேங்கப்பா
   சாரதாஜி,you rock!
   என்னுடைய பட்டியல் பற்றிய விளக்கம்:
   இடம்: ஒரு 7 star hotel.இல்
   Buffet Dinner..
   சுமார் 70 வகையான பதார்த்தங்கள்.
   அனைத்தும் உங்களுக்கு பிடித்தது
   கையிலிருப்பதோ 12 அங்குல விட்டமுள்ள ஒரு தட்டு.
   எப்படி ஆரம்பிப்பீர்கள்?
   நான் தேங்காய் சாதம்,மெது வடை பக்கமே போக மாட்டேன்.
   என் Mrs அதில் Master
   இதற்கு மேல் விளக்கம் உங்களுக்கு தேவையில்லை.
   நீங்கள் கோடு போட்டால் ரோடு போடும்
   திறன் உள்ளவர்.
   வணக்கம்,
   பி.கு: கவிதை அண்ணனுக்கு மட்டும்தானா?தாத்தாவிற்கு கிடையாதா?

 5. raju says:

  உண்மைதான் சாரதாஜி
  “கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது…” என்பது போல் MSv பாடல்கள் பட்டியல் போட்டால் அது போயிண்டே இருக்கு. என்னிடம் MSV -TKR யின் நல்ல collection இருக்கு.
  ராஜு-துபாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: