விடுதலை


ராண்டார்கை இந்த படம் பற்றி எழுதிய குறிப்புகளை ஹிந்துவில் பார்த்தேன். பார்க்க வேண்டிய படம் என்று தோன்றுகிறது. யாராவது பார்த்திருக்கிறீர்களா? நெட்டில் எங்கேயாவது கிடைக்குமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ராண்டார்கை குறிப்புகள்

நா. பார்த்தசாரதியின் “சமுதாய வீதி”


இது ஒரு cross-reference பதிவு.

நா.பா.வின் சமுதாய வீதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். இந்த கதையின் “வில்லன்” கோபால் பிரபல சினிமா ஹீரோ. போலித்தனமும் சின்னத்தனமும் நிறைந்தவன். தன நாடகத்தில் நடிக்கும் பெண்களை பெரிய மனிதர்களுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்படி வற்புறுத்துபவன். போக் ரோட்டில் வசிப்பவன். நாடக மன்றம் வைத்து நடத்துபவன். நடிகர் திலகம் என்ற பட்டப் பெயர் உள்ளவன்!

கதையின் ஹீரோ முத்துக்குமரன் நா.பா.வேதான் என்பதும் தெளிவு. நீண்ட பாகவதர் ஸ்டைல் முடி, எழுத்தாளன். நாடகம், பாட்டு எழுதுவதில் திறமை வாயந்தவன்.

காங்கிரசில் சிவாஜியுடன் ஒன்றாக முழங்கிய நா.பா. இப்படி எழுதி இருப்பது வியப்பு! ஏதோ சிவாஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இதை எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 1968-இல் புத்தகம் வந்திருக்கிறது. அப்போதே என்ன தகராறோ? ஒரு வேளை சிவாஜி நா.பா.வை தனக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்லி அதில் இரண்டு பேருக்கும் ஏதாவது உரசலா யாருக்காவது தெரியுமா? சாரதா?

நாவலைப் பற்றி மேலும் படிக்க இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

தொடர்புடைய சுட்டி: சிலிகான் ஷெல்ஃப் பதிவு