சிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்


சாரதாவின் ஒரு மறுமொழியிலிருந்து –

பலருக்குப் பிடிக்காத இமயம் படத்திற்கான எனது ஆய்வுக்கட்டுரையில் இடம் பெற்ற கீழ்க்கண்ட பகுதி மட்டும் உங்கள் (மற்றும் இதைப் படிப்பவர்கள்) பார்வைக்கு. (காமப் பார்வை சிவாஜியின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு).

ஜெய்கணேஷ்–மீரா ஜோடிக்கான டூயட் பாடல்:

இமயம் கண்டேன்….
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்… சுகங்கள்

இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனி போர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.

தான் உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே இது போல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்!

 1. இன்பம் பொங்கும் வெண்ணிலா – கட்டபொம்மன்
 2. காற்று வெளியிடை கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்
 3. காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு
 4. யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
 5. அன்று ஊமைப் பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
 6. இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம்
 7. பண்ணோடு பிறந்தது ராகம் – விடிவெள்ளி
 8. வாராதிருப்பானோ – பச்சை விளக்கு
 9. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா – பச்சை விளக்கு
 10. வட்ட வட்ட பாறையிலே – பழனி
 11. உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது – பழனி
 12. கண்ணிரண்டும் மின்ன மின்ன – ஆண்டவன் கட்டளை
 13. இரவு முடிந்துவிடும் – அன்புக்கரங்கள்
 14. காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரம் பிள்ளை
 15. செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
 16. மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் – பார் மகளே பார்
 17. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் – ஊட்டி வரை உறவு
 18. என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்
 19. எங்க வீட்டு தங்க தேரில் – அருணோதயம்
 20. சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் – குலமா குணமா
 21. முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்
 22. என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு
 23. யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ – வாணி ராணி
 24. முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே – வாணி ராணி
 25. பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
 26. அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
 27. அழகி ஒருத்தி இளநி விக்கிறா – பைலட் பிரேம்நாத்
 28. செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
 29. தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்
 30. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா – மக்களை பெற்ற மகராசி
 31. குழலும் யாழும் உன்னிசைதானோ – கோடிஸ்வரன்
 32. ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் – பலே பாண்டியா
 33. கண்ணான கண்ணனுக்கு அவசரமா – ஆலய மணி

அவசரத்தில் நினைவுக்கு வந்தவை இவை. இன்னும் இருக்கிறது. இதைக் குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த “மற்ற சில” நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை. (இதைச் சொல்லக் காரணம், பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக் காலத்தில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டுப் போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய வண்ணப் படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். ‘விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது’ என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).
ஆர்வி: இயக்குனர் ப. நீலகண்டன், திரைப்படம் என் தங்கை, இரண்டாம் கதாநாயகன் முத்துராமன், முத்துராமனின் ஜோடி விஜயநிர்மலா, பெரிய நடிகர் எம்ஜிஆர், பாட்டுதான் தெரியவில்லை

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இரு முறையா
என்னைக் கேட்கச் சொல்லும்

மேலும் பாடல்களை நினைவுபடுத்திய விஜயனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், சாரதா பதிவுகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

32 Responses to சிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்

 1. Pingback: Tweets that mention சிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள் « அவார்டா கொடுக்கறாங்க? -- Topsy.com

 2. அறிந்திராத செய்தி.

  நன்றி@

 3. சாரதா says:

  டியர் ஆர்.வி..

  மறைமுகமாகச்சொன்னால் புரிந்துகொள்வீர்கள் என்றுதான், பாடலின் ஒரு வார்த்தை மட்டும் சொன்னேன். இப்போது விளக்கமாக…

  படம் : என் அண்ணன் (வண்ணப்படம்)
  ஜோடி: முத்துராமன் & விஜயநிர்மலா
  பாடல் :
  ‘கண்ணுக்குத்தெரியாத அந்த சுகம்
  நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்
  ஒருமுறையா இருமுறையா
  என்னைக் கேட்கச்சொல்லும்’

 4. எம். ஜி. ஆரின் கேவலமான,சின்னத்தனமான நடவடிக்கைகள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி யாரும் வாய் திறப்பதே இல்லை.நிஜ வாழ்விலும் நடித்த ஒரு நடிகன் .தன்னை மீறி எதுவும் இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர். போலிகளுக்கே இங்கே மாலை மரியாதை.

  • RV says:

   ஜெகதீஸ்வரன், காந்தி, மறுமொழிக்கு நன்றி!
   காக்கு மாணிக்கம், எம்ஜிஆர் ஒரு மனிதர். எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போல அவருக்கும் பலவீனங்கள் உண்டு, அவரும் தவறுகள் செய்திருக்கிறார். அவ்வளவுதான்.

 5. Ganpat says:

  quote
  (‘காமப் பார்வை சிவாஜி’யின் ….)
  unquote
  காமப் பார்வை சிவாஜி!!!!!!!!!!!
  ?????????????????
  இது என்ன புதுக்கதை???

  • சாரதா says:

   கன்பத்,

   இது ‘சுமதி என் சுந்தரி’ பட விமர்சனத்தின்போது, உங்கள் பதிவுக்கு பதிலாக எழுதியது. அதில் நீங்கள் ‘சிவாஜி காதல் பார்வையைவிட காமப்பார்வையே பார்ப்பார்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு, குத்தலாக நான் எழுதியது அது.

   என் அன்புச்சகோதரர் ஆர்.வி. அவர்கள் அதைத் தனிப்பதிவாகப்போடுவார் என்பது தெரியாது. தெரிந்திருந்தால் அந்த வார்த்தையை எடிட் செய்யச்சொல்லியிருக்கலாம்.

 6. knvijayan says:

  1 .ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா (மக்களை பெற்ற மகராசி)2 .குழலும் யாழும் உன்னிசை தானோ (கோடிஸ்வரன்)3 .ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் (பலே பாண்டியா ) 4 .கண்ணான கண்ணனுக்கு அவசரமா (ஆலய மணி)

 7. saraN says:

  சிவாஜி படபிடிப்பிற்கு நேரத்திற்கு வந்து எழுதிக் கொடுத்ததை நடித்து கத்தி வசனம் பேசிவிட்டு சென்றவர்
  சரி கூட நடித்தவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தாராம் ஓகே
  பாடலை எவன் எழுதினாலென்ன யாரு டியூன் போட்டாலென்ன எவன் பாடினாலென்ன
  அதிலே அவருடைய தாக்கம் எதுவுமில்லை அது போன்ற இதர விஷயங்களில் திறனுமில்லை
  இது நன்றாக தெரிந்த விடயம் ஆனால் சிவாஜி ரசிகர்கள் புளுகிவிட்டு ஒத்துக் கொள்ள மறுப்பார்கள்
  இப்படியிருக்க அவர் யார் பாட்டை விட்டுக் கொடுக்க ?
  கதைக்கு ஏற்றபடி யாருக்கு பாட்டு போகுமே அங்கேயே போனது
  இதிலே இவர் விட்டுக் கொடுத்தாதாக புதிதாக கதை அளந்து புகழ் பரப்பும் புது சூட்சுமம்

  மற்றைய திறமைகள் ஒருபுறமிருக்க பாடகர்கள் தெரிவு வரிகள் இசையமைப்பு அத்தனையிலும் காட்டும் ஈடுபாட்டுக்காகவும் பேர் போன எம் ஜி ஆர் கே வி எம்மோடு சேர்ந்து தெரிவு செய்த பாடல்கள் என் அண்ணனிலும் அதிலே
  எம் ஜி ஆருக்காக TMS குரல் பி சுஷீலாவோடும் எஸ் ஜானகியோடும் டூயட்டுகள் அமைந்தன‌‌
  இதிலே கண்ணுக்குத்தெரியாத அந்த சுகம் முத்துராமனுக்காகவே உருவாக்கப்பட்டு
  எல் ஆர் ஈஸ்வரி பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் வந்தது
  இது தனக்கில்லையே என்று எம் ஜி ஆர் ஆதங்கப்பட்டதாக சொல்லுவது பெரும் அபத்தம்
  சும்மா மட்டம் தட்டுவதையே இலக்காகக் கொண்டவர்களுக்கு அதுவும் பொறாமைத் தீயில் வெந்து வாடும் சிவாஜி ரசிகப்பேர்வழிகளுக்கு சிவாஜி புகழை நிலைநாட்ட படாத பாடுபடும் புளுகர்களுக்கு இது போன்ற ஐடியாக்களும்
  புரூடாக்களும் வருவது சகஜமப்பா
  திரித்து திரித்து எழுதியே காலம் தள்ளுங்கள்
  உங்க‌ளைச் சொல்லிக் குற்ற்மில்லை
  இது தோல்வியின் இலக்கணத்திற்கு ரசிகர்களான பாவம்

 8. saraN says:

  சிவாஜி கலைஞர்களை கூர்ந்து கவனித்து அவர்களைப் போலவே ஜமாய்த்து விடுவாராம்
  தில்லானா மோகனாம்பாள் பற்றி பேசும்போது இது போன்ற விஷயங்களை அள்ளி வீசுவார்கள்
  என்னமோ அவர் மட்டுமே அந்தப்படத்தில் இருந்தது போல‌
  ப‌ட்டாக்க‌த்தி பைர‌வ‌ன் என்று கூட‌ ஒன்று வ‌ந்த‌து ந‌ல்ல‌ குண்டு பைர‌வ‌ன் அது யாராக‌ இருந்திருக்கும்
  மிருதங்க சக்கவர்த்தியில் யாரைப் பார்த்து விட்டு செய்தாராம் ?
  இவ்வ‌ளவு மோச‌மாக‌ இருக்கிற‌து

  இதுவே பாலைய்யாவாக இருந்தால் எவ்வளவு நன்றாக செய்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது

 9. saraN says:

  சிவாஜியின் திரைப்படங்களில் மற்றொரு ஜோடிக்கோ நடிகருக்கோ
  முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது
  அந்த ஜோடிக்கோ நடிகருக்கோ பாடல் தேவைப்பட்டு இருக்கிறது
  கொடுத்திருக்கிறார்கள்
  சாதாரணமாகவே கிரகித்துக் கொள்ளலாம் அது படம் எடுத்தவர்களின் கட்டுப்பாட்டில் அமைந்ததென்று
  இதிலே பட்டியல் போட்டு காட்டும் அளவுக்கு சிவாஜிக்கு என்ன உரிமை இருந்தது ?
  ஏன் சிவாஜியும் ஜெமினியும் நடித்தால் காதல் மன்னனுக்கு பாட்டு தரக் கூடாதா ?
  இல்லை ஜேம்ஸ் பாண்டுக்குத்தான் பாடலுக்கான தகுதி இல்லையா?
  சரி ஜெய்சங்கரை முத்துராமனை ஜெய்கணேசை விட்டு விடுவோம்
  ஜெமினி கணேசனுக்கு டூயட் விட்டுக் கொடுக்க இவரு யாரு
  ஏன் கட்டபொம்மன் டூயட் பாடவில்லையே என்று ஆதங்கமா ?

  மாலையுபம் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிடும் ..அதுவும் பாசம் எம் ஜி ஆர் படத்தில்
  பிரமாதமான டூயட்
  கல்யாணகுமாருக்கு வந்தது
  ஏன் அதை விட்டு வைக்க வேண்டும்
  அதையும் தனக்கு தரவில்லையே என்று எம் ஜி ஆர் ஆதங்கப்பட்டாரென்று திரித்து சொல்லலாம்

 10. சாரதா says:

  ‘என் அண்ணன்’ படத்தில் முத்துராமனுக்கு டூயட் பாடல் கொடுத்ததற்காக எம்.ஜி.ஆர். கோபப்பட்ட விஷயம் ஏதோ திரித்து சொல்லப்பட்டதல்ல. எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான படங்களை இயக்கி, ‘எம்ஜியார் இயக்குனர்’ என்று அழைக்கப்பட்ட திரு ப. நீலகண்டன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயம்.

  சிவாஜி ரசிகர்கள் பட்டியலை எதிர்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம், இல்லையில்லை வயிற்றெரிச்சல் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. வயிற்றெரிச்சல் பட முடிந்ததே தவிர, நான் சொன்னவை உண்மையில்லை என்று சொல்ல முடியவில்லை. ‘அவருக்கு பாடல் இல்லையென்று சொல்ல சிவாஜிக்கு என்ன உரிமை?’ என்பது அவர்களது இன்னொரு கேள்வி. ஏன், அந்த நேரத்தில் அவருக்குக்கொடுக்காதே என்று சிவாஜி நினைத்திருந்தால், சொல்லியிருந்தால் தடுத்திருக்க முடியும் (பல படங்களில் எம்ஜியார் செய்ததைப்போல).

  மள மளவென்று பட்டியல் போட முடியவில்லை, தேடிப்பிடித்து பாசம் ஒரு படத்தில் ஒரு பாடலைக்கொண்டு வந்து விட்டனர். எம்ஜியாரும் ஜெமினியும் சேர்ந்து நடித்த ஒரே படமான ‘முகராசி’யில் ஏன் ஜெமினிக்கு ஒரு பாட்டு கொடுத்திருக்கக் கூடாது?. அதற்கு அவருக்கு தகுதியில்லையா?.

  தீபம் படத்தில் ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது?’ என்ற அருமையான பாடலை விஜயகுமாருக்குக் கொடுத்ததைப்போல, முள்ளும் மலரும் படத்தில் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற அருமையான பாடலை சரத்பாபுவுக்கு ரஜினிகாந்த் விட்டுத்தத்தந்ததைப்போன்ற பெருந்தன்மையெல்லாம் எம்.ஜி.ஆருக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

  ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்வார் மலைப்பகுதி சண்டைக்காட்சியில், சில சீன்களில் தன்னைவிட நம்பியார் நன்றாக வாள் வீசியிருப்பதை ரஷ் போட்டுப்பார்த்து விட்டு, படத்தில் அந்தக்காட்சிகளை வெட்டினால்தான் மேற்கொண்டு கால்ஷீட் தருவேன் என்று அடம் பிடித்த எம்.ஜி.ஆரின் சிறுமைத்தனம் எங்கே….

  ‘திருவிளையாடல்’ படத்தில் தருமி நாகேஷின் நகைச்சுவைக் காட்சியைப்பார்த்து விட்டு, ஏ.பி.என்.ன்னை அழைத்து, இவனோட காட்சியில் எதையும் வெட்டாமல் அப்படியே வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிவாஜியின் பெருந்தன்மை எங்கே….

  ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடிக்கத்துவங்கி, கடைசிப்படம் வரையில் ஒரு படத்தில் கூட ஜோடியில்லாமல் நடிக்க தைரியமில்லாமல், துப்பில்லாமல், திராணியில்லாமல் கதாநாயகியின் கவர்ச்சியை நம்பி இருந்தவரின் ரசிகர்ளுக்கு இவ்வளவு வாய்நீளம் கூடாது.

  ஒரு படத்தில்கூட வயதான வேடத்தில் நடிக்க தைரியமில்லாத (படத்தில் வரும் மாறு வேடமல்ல, க்தையோடு சேர்ந்த வயதான வேடம்) ஒருநடிகர், தான் நடித்த கடைசிப்படத்தில் கூட எழுபது வயதில் கழுத்தில் தொங்கும் சதையுடன் ‘தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்’ என்று டூயட் பாடி, படத்தை படுதோல்வியாக்கிய நடிகரின் ரசிகர்கள் இவ்வளவு துள்ளக்கூடாது.

  • Ganpat says:

   டியர் ஸாரூ,

   “இதுதாண்டா விளாசல்”
   நீங்க வலைதளத்தின் சச்சின் தான் சந்தேகமேயில்லை
   சிவாஜி சரியில்லை ன்னு யாரவது பந்து வீசினாலும் அதை சிக்சருக்கு அடிச்சுடறீங்க
   சிவாஜி சரி ன்னு நான் பந்து வீசினாலும் அதை பௌண்ட்ரிக்கு அடிச்சுடறீங்க

   ஒங்கள எப்படித்தான் அவுட் ஆகிறது??

   சரி விஷயத்திற்கு வருவோம் !

   எதுக்கு வீண் சண்டை !!

   இரண்டு பேருமே மற்றவரை போல நடித்தவர்கள்; தத்தம் நிஜ வாழ்க்கையில்.

   Okay?

 11. subbu says:

  பாவம் இந்த தொப்பைத் திலக ரசிகர்கள்
  இவர்க‌ளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வாடிக்கயாகி விட்டதுபோல் தெரிகிறது

  • சாரதா says:

   ஆக, இப்படி சால்ஜாப்பு வார்த்தைகளால்தான் பதில் சொல்ல முடியுமே தவிர, நான் கேட்ட எந்த கேள்விக்கும் ‘கட் அண்ட் ரைட்டாக’ பதில் சொல்ல முடியவில்லை அல்லவா?. (இருந்தால் அல்லவா சொல்வதற்கு?).

   எங்களை உசுப்பி விடுவது நல்லதற்குத்தான். ‘மனிதப்புனிதர்’ என்று வானளாவ தூக்கிக்காட்டப்படுபவரின் முகத்திரைகளைக் கிழிக்க, அதை மற்றவர்கள் பார்த்து உண்மையறிய எங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம்.

   ஸோ, அடிக்கடி உசுப்பி விடுங்கள்.

 12. Needu says:

  சிவாஜி குடும்பத்துக்கே கைகொடுத்த தெய்வம் மறுவாழ்வு தந்த சூப்பர் திலகமாச்சே நம்ம ர‌ஜினி
  அந்த பெருந்தன்மைக்கு முன்னாலே நீங்கள் சொல்வதெல்லாம் ஜுஜுபீ

 13. subbu says:

  நல்ல வேளை மேலே குறிப்பிட்ட பாடல்களை களையான கலைஞ‌ர்களுக்கு கொடுத்தார்கள்
  அநியாயமாக இந்த குண்டு சிவாஜிக்கு கொடுத்துக் கெடுக்கவில்லை
  வீணாகப் போயிருக்கும் அதுவும் அவரது போலி முகபாவனை அதுவும் குளோசப்பில் காட்டினால் அஷ்ட கோணம் அதை பார்க்கும் துர்பாக்கியம் தவிர்த்த இயக்குநர்களுக்கு நடித்த நடிகர்களுக்கு கோடி புண்ணியம்
  என்ன சொல்ல என்ன சொல்ல இளம் சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் பார்த்த ஞாபகம்
  அடக்கடவுளே அது சிவாஜிக்கு போயிருந்தால் ! நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது
  கழுத்திலே டயரையும் வயிற்றிலே அலிபாபா 40 திருடர்களில் பானுமதி உதைத்து தள்ளிய பீப்பாயையும் சுமந்து கொண்டு இது அசட்டு சிரிப்போடு கண்ணை உருட்டி உருட்டியே ஒரு வழி பண்ணியிருக்கும்
  ..என்ன சொல்ல என்ன சொல்ல
  சரவணன் கொடுமையிலும் கொடுமை

 14. ganesh says:

  MGR வாழும் பொழுது கூட தூற்றினார்கள் இல்லையா
  பின்னர் தூற்றியவர்கள் கூட போற்றியது அதிகம்
  சிவாஜி க‌ணேச‌ன் கூட MGRஆரை மிஞ்சி யாருமில்லை என்று
  பாராட்டி பேசும் யூடியூப் பார்த்த‌துண்டு
  இப்போது இருக்கிறதா காணவில்லை

 15. subbu says:

  மனிதப் புனிதரோ எதுவோ அப்படியோ ஆகட்டும்
  நாகேஷோ நம்பியாரோ இல்லை ராதாவின் பிள்ளைகளோ
  குறிப்பாக எம் எஸ் வியோ யாரைக் கேட்டாலும் வானளாவப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்
  சிவாஜியின் பிரவுவே நான் அப்பா படத்தைவிட பெரியப்பா படம்தான் விரும்பிப் பார்ப்பேன் என்று
  கள்ளமில்லாமல் சொல்லும் பாங்கு
  பாராட்டுதல்களை கேட்கும் போது பார்க்கும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது

 16. Silambu says:

  மானம் மருவாதி நடுத்தெருவுக்கு வந்த போது ஒர் பயலும் கண்டுகல‌
  ஒரு ரஜினி இல்லாதிருந்தால் சாந்தி தியேட்டர் அன்னை இல்லம் எல்லாம் வெரும் ஹிஸ்டரி’ தான்
  மனுஷ்ன் வாழும் வரைக்கும் கை நீட்டவில்லை
  ஷூட்டிங்க் நடந்தா எல்லாருக்குமே சாப்பாடு கூட சிவாஜி கணேசன் இல்லத்திலிருந்துதான் வருமாம்
  வாழ்ந்து கெட்ட நடிகர்கள பலரைக் கண்ட திரையுலகம்
  வாழும்வரை பெருமையோடு இருந்துவிட்டு
  மாண்ட பிறகு வந்த மானக்கேடு காலத்தின் கோலமா இல்லை அவர் பிள்ளைகளின் அலட்சியக்கேடோ

  • சாரதா says:

   இதே எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் ரஜினியை வைத்து படம் எடுத்திருந்தால் இப்படிச்சொல்லியிருப்பீர்கள். “பாபா படம் தோல்வியடைந்தபிறகு ரஜினியை வைத்து படம் பண்ண ஆள் இல்லாதபோது, அவருக்கு திரும்ப மார்க்கெட் வந்ததே எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் எடுத்த சந்திரமுகி படம் மூலம்தான்” என்று சொல்லியிருப்பீர்கள். நரம்பில்லாத நாக்குதானே, எப்படியும் புரளும்.

   அப்புறம் என்னவோ சரித்திரம் என்றீர்கள்….

   அன்னை இல்லம் இன்றைக்கும் செழிப்பாக இருக்கிறது. ராமாவரம் தோட்டம் பாழடைந்து கிடக்கிறது. இது இப்போ, நம் கண்முன்னேயே பார்த்துக்கொண்டிருக்கும் சரித்திரம்.

 17. சாரதா says:

  திருப்பித்திருப்பி தொந்தி, தொப்பை, வயிறு, பீப்பாய், டயர் என்று அவருடைய உருவத்தைக்கேலி செய்துதான் ரிப்ளை எழுத முடிகிறதே தவிர, இந்த போஸ்ட்டின் சாராம்சத்தை அது தொடவேயில்லை.

  1952 முதல் 60 வரையிலும், பின்னர் 1966 முதல் 77 வரையிலும் சிவாஜி ஒல்லியான உடல்வாகுடன்தான் இருந்தார். 66 முதல் 77 வரையிலான காலத்தில் வந்தவைதான் ஊட்டிவரை உறவு, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், தெய்வமகன், எங்கமாமா, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சுமதி என் சுந்தரி, ராஜா, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை, கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் உட்பட ஏராளமான படங்கள். இந்தப்படங்களிலெல்லாம் அவர் தொந்தியும் தொப்பையுமாக இருந்தார் என்று யாராவது சொன்னால் அவர்களின் பார்வைக்கோளாறை சரி செய்யும் கண்ணாடி உலகத்திலேயே கிடையாது. ஆனால் இந்தக்குறிப்பிட்ட கால கட்டத்திலும் கூட அவர் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கும் பாடல் கிடைக்கச்செய்தார் என்பதும், சிலரைப்போல குறுக்கே விழுந்து தடுக்கவில்லை என்பதும்தான் விசேஷம்.

  அதாவது ‘ஊட்டிவரை உறவு’ துவங்கி ‘அண்ணன் ஒரு கோயில்’ வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக ‘பீம்பாய்’ படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட ‘திரிசூலம்’ போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.

  நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. . அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.

  சமீபத்தில் ஆய்வு செய்த ‘திருடன்’ படமும் அவற்றில் ஒன்று. ‘தங்கச்சுரங்கம்’ சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். ‘எங்கமாமா’வின் “சொர்க்கம் பக்கத்தில்” பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் ‘காதல் மலர்க்கூட்டம் ஒன்று’ பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் ‘பாரத்’துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா ‘பொன்மகள் வந்தாள்’ பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் ‘ராஜா’.

  ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி ‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே’ பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

  ‘திருமால் பெருமை’ திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். அனைத்துக்கும் மேலாக ‘ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்’ அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு ‘ரிவிட்’ அடிக்கப்பட்டிருந்ததும் அந்த ‘பிளாட்டினம் பீரியடில்’தான்.

  மற்றபடி எம்.ஜி.ஆரை அவர் பாராட்டினார், இவர் பாராட்டினார் என்பதெல்லாம் இந்த தலைப்புக்கு சம்மந்தமில்லாதது. சிவாஜியும் பிரபுவும் பாராட்டினார்கள் என்றால் அது சிவாஜி குடும்பத்தின் பெருந்தன்மை. எம்.ஜி.ஆர்.கூடத்தான் சிவாஜியை பலமுறை சிவாஜியைப்பாராட்டியிருக்கிறார். அது எம்ஜியாரின் பெருந்தன்மை.

  சரி, இப்போது போஸ்ட்டின் தலைப்புக்கு வருவோம். சிவாஜி படங்களில் மற்ற நடிகர்களுக்கு கிடைத்த பாடல் வாய்ப்புக்கள் குறித்து நீண்ட பட்டியலிட்டோம். எம்.ஜி.ஆர்.படங்களில் 1962-ல் பாசம் படத்தில் கல்யாண குமாருக்கும், எட்டு ஆண்டுகள் கழித்து 1970-ல் என் அண்ணனில் முத்துராமனுக்கும் மட்டுமே (மொத்தம் இரண்டு) பாட்டுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன என்று ஒப்புக்கொண்டீர்கள்.

  இல்லையில்லை சிவாஜி படத்தை விட அதிகமாக, அல்லது சரிசமமாக, அல்லது அட்லீஸ்ட் பாதியாவது மற்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது என்று விவாதிக்க முடிந்தால் பட்டியலோடு வாருங்கள் (பட்டியலிட முடியாது என்பது தெரிந்ததே).

  இனி எம்ஜியாரின் எந்தெந்த படங்களில் மற்றவர்களுக்கு பாடல் கொடுத்திருக்க வாய்ப்புகள் அமைந்தும் கொடுக்கப்படவில்லை என்பதை அடுத்து பார்ப்போம்.

 18. சாரதா says:

  ‘இவள் என்ன எழுதினாலும் ஒப்புக்கொள்ளவா போகிறோம், எதற்கு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறாள்?’ என்று ‘சிலர்’ நினைக்கலாம். ஆனால் இந்த இணையதளத்தை நாம் நாலைந்துபேர் மட்டும் படிக்கவில்லை. ஆயிரக்கணக்கானோர் படிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியட்டுமே. ‘அட ஆமாம், இவள் சொல்வதிலும் நியாயமும் உண்மையும் இருக்கத்தானே செய்கிறது’ என்பதை உணரட்டுமே. என் அபிமான கலைஞனுக்கு நான் இதையாவது செய்கிறேனே.

 19. சாரதா says:

  மேலே பதில் எழுதிய சரண் என்பவர், ‘என் அண்ணன் படத்தில் ‘கண்ணுக்கு தெரியாத’ பாடல் பி.பி.எஸ், ஈஸ்வரி பாடியிருக்க அதை எனக்கு தரவேண்டுமென்று எம்.ஜி.ஆர். கேட்டார் என்று சொல்வது அபத்தம்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் ப.நீலகண்டன் சொல்லியிருந்தது அந்தப்பாட்டை எம்ஜியார் தனக்குக்கேட்டார் என்று அல்ல. ‘முத்துராமனுக்கு எதுக்கு டூயட்டெல்லாம் கொடுக்கிறீங்க?’ என்று சண்டை போட்டார் என்றுதான் சொல்லியிருந்தார். அதாவது அந்தப்பாடல் படத்தில் இடம்பெற வேண்டாம் என்று சொன்னதாகவும் அதை ப.நீ.சமாதானம் செய்ததாகவும்தான். அப்படித்தான் நானும் எழுதியிருக்கிறேன். (வாத்தியாரோடு முத்துராமன் நடித்த கண்ணன் என் காதலன், ஒருதாய் மக்கள் படங்களில் முத்துராமனுக்கு டூயட் பாடலோ தனிப்பாடலோ கிடையாது.

  இனி மேற்கொண்டு விவரங்கள்………..

  மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் நடித்த எந்தெந்தப்படங்களில், மற்றவர்களுக்கு டூயட் பாடல் (அல்லது தனிப்பாடல்) கொடுத்திருக்க வாய்ப்பிருந்தது என்று யோசித்துப் பார்த்தோமானால் பல படங்கள் வருகின்றன…..

  1) அந்தக்காலத்தில் மூவேந்த்ர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட காதல் மன்னன் ஜெமினிக்கு சிவாஜியோடு நடித்த படங்களில் (ஒரு சில தவிர) எல்லாப்படங்களிலும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எம்.ஜி.ஆரோடு நடித்த ஒரே படமான ‘முகராசி’யில் (1966) அவருக்குப்பாடலே இல்லை. (இத்தனைக்கும் அவர் அதற்க்குப்பிறகு 1975 வரையில் சக்கரம், சங்கமம், அவளுக்கென்று ஓர் மனம், சாந்தி நிலையம், அன்னை வேளாங்கண்ணி உள்பட ஏராளமான படங்களில் டூயட் பாடத்தான் செய்தார்).

  2) இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மூவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர். பல படங்களில் கதாநாயகன். ரங்கோன் ராதா துவங்கி ஆலயமணி, சாந்தி, பழனி உள்பட பெரும்பாலான சிவாஜி படங்களில் இவருக்குப்பாட்டு உண்டு. ஆனால் காஞ்சித்தலைவனில் பாடல்கள் புரட்சித்தலைவருக்கு மட்டுமே.

  3) நடிகர் பாலாஜிக்கு சிவாஜி படங்களில் விடிவெள்ளி, பலே பாண்டியா, அன்புக்கரங்கள் உட்பட பல படங்களில் டூயட் பாடல் அமைந்தது (தவிர அவர் நடித்த போலீஸ்காரன் மகள் போன்ற படங்களில் டூயட் பாடத்தான் செய்தார்). ஆனால் எம்.ஜி.ஆரோடு நடித்த ஒரே படமான ‘என் கடமை’ படத்தில் பாலாஜிக்கு பாடல் தரப்படவில்லை.

  4) நடிகர் ஆனந்தன் ‘விஜயபுரி வீரன்’, ‘வீரத்திருமகன்’ போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அவர் நடித்த ‘ரோஜாமலரே ராஜகுமாரி’, ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்கரிக்கின்றன. அவர் சிவாஜியோடு எந்தப்படத்திலும் நடித்ததில்லை. ஆனால் எம்.ஜி.ஆரோடு ‘தனிப்பிறவி’ படத்தில் நடித்தார், அதில் அவருக்கு ஜோடியும் இருந்தது. பாவம், பாடல்தான் தரப்படவில்லை. எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வைத்ததுதானே சட்டம்?. அவர் சொன்னால் தேவர் மறுத்திருப்பாரா?. ஆனால் ‘நேரம் நல்ல நேரம், ஒரே முறைதான், கன்னத்தில் என்னடி காயம்’ என்று எல்லா டூயட்டுகளையும் தானே பாடித்தீர்த்தார் பெருந்தன்மைப் பெட்டகம்.

  5) அருமையான நடிகர் ஏ.வி.எம்.ராஜன். சிவாஜியோடு இவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘பச்சை விளக்கு’, ‘கலாட்டா கல்யாணம்’ படங்களில் அவருக்கு டூயட் பாடல் உண்டு. (தில்லானாவில் சிவாஜி உள்பட யாருக்குமே டூயட் கிடையாது). ஆனால் எம்.ஜி.ஆரோடு நடித்த ‘எங்கள் தங்கம்’, ‘நவரத்தினம்’ படங்களில்…? மூச், பேசக்கூடாது.

  6) அமைதியின் இருப்பிடம் சிவகுமார். இவர் சிவாஜியோடு நடித்த படங்களில் (சிலவற்றைத்தவிர) டூயட் பாடல்கள் உண்டு. உயர்ந்த மனிதன், பாபு, மூன்று தெய்வங்கள் என்று பட்டியல் நீளும். ஆனால் எம்.ஜி.ஆரோடு நடித்த காவல்காரனிலும் பாட்டு கிடையாது. (அப்போது சின்னப்பையன் என்கிறீர்களா? சரி), பின்னர் கதாநாயகனாக பரிணமித்த காலத்தில் நடித்த ‘இதய வீணை’யிலும் பாட்டு இல்லை. இத்தனைக்கும் இதயவீணையில் லட்சுமிக்கு ஜோடி. ‘பொன் அந்தி மாலைப்பொழுது’, ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’ எல்லாமே வாத்தியாருக்குத்தான்.

  7) எல்லாப்படங்களிலும் வில்லனாக நடித்த நம்பியார், நல்லவனாக நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் அவருக்கும் சாரதாவுக்கும் ஒரு பாட்டு தந்திருக்க முடியும். (சிவாஜியோடு நம்பியார் நடித்த படங்களில் மக்களைபெற்ற மகராசி, மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் நம்பியாருக்கு பாட்டு உண்டு).

  8) நடிகர் சந்திரமோகன்: இவர் சிவாஜியோடு நடித்த ‘அந்தமான் காதலி’ படத்தில் டூயட் பாடல் உண்டு (அதுவும் டி.எம்.எஸ்.குரலில்). ஆனால் எம்.ஜி.ஆரோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்த ‘நாளை நமதே’ படத்தில் தனிப்பாடலோ டூயட்டோ இல்லை. கதைக்குத் தேவையானதால் வேறு வழியில்லாமல் ‘நாளை நமதே’ பாடலில் பங்குபெற அனுமதிக்கப்பட்டார். மற்றபடி ‘என்னை விட்டால் யாருமில்லை’, ‘காதல் என்பது காவியமானால்’, ‘நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு’ எல்லாமே தலைவருக்கு மட்டுமே.

 20. Ganpat says:

  1960களில் மிகவும் தீவிரமாக போடப்பபட்ட MGRஆ சிவாஜியா என்ற குழந்தைத்தனமான சண்டை கால போக்கில் நீர்த்து வழக்கொழிந்து விட்டது என்று நிம்மதியடையும் போது மீண்டும் இங்கு காணப்படுகிறது.

  MGR சிவாஜி எனும் இரண்டு கலைஞர்களை சம கால நடிகர்கள் எனும் genre இல் ஒப்பிடலாமே தவிர அவர்கள் தனிப்பட்ட ஆளுமை ,குணாதிசயங்கள் என்று ஒப்பிடுவது அர்த்தமற்றது.இது மைசூர் என்ற பொது வார்த்தைக்காக, மைசூர் மகாராஜாவையும் மைசூர் போண்டாவையும் ஒப்பிடுவது போன்றது .
  மகாராஜா ராஜபரம்பரை ,சிறந்த கல்வியாளர், பாடல் எழுதும் அளவிற்கு மொழிப் புலமை வாய்ந்தவர் என்று ஒரு சாரார் சொன்னால் அதை எதிர்த்து, மைசூர் மகாராஜாவை விட மைசூர் போண்டாவை அறிந்தவர் மிக அதிகம் ,மகாராஜா ஏதாவது ஒன்றை சாப்பிட கொடுத்து தான் மற்றவர் பசி ஆற்றுவார்; ஆனால் போண்டாவோ தன்னையே கொடுத்து மற்றவர் பசி ஆற்றும் என்றெல்லாம் வாதம் செய்வது போன்றது.

  மீண்டும் சொல்கிறேன் நடிப்பு என்றால் சிவாஜி light years ahead of MGR. ஆனால் யார் சினிமாவை நன்கு பயன்படுத்திகொண்டார் என்றால் position அப்படியே reverse ஆகி விடும் மற்றபடி இந்த வாக்குவாதத்தில் தங்கள் நேரத்தை செலவழிப்பவர்கள்,தங்களிடம் export செய்யக்கூடிய அளவிற்கு surplus time உள்ளது என்பதை தவிர மற்ற எதையும் நிரூபிக்கமுடியாது.

 21. BaalHanuman says:

  Dear Ganpat,

  மைசூர் மகாராஜா – மைசூர் போண்டா ஒப்பீடு அசத்தல்.

  >>நடிப்பு என்றால் சிவாஜி light years ahead of MGR. ஆனால் யார் சினிமாவை நன்கு பயன்படுத்திகொண்டார் என்றால் position அப்படியே reverse ஆகி விடும்.

  I totally agree with you.

 22. Ganpat says:

  மிக நன்றி,BaalHanuman ji !

  தான் நடிப்பை தவிர எதிலும் நோக்கின்றி,
  தமிழ் திரையுலகையே நம்பி,
  கடுமையாக உழைத்த
  ஒரு உன்னத,
  உலக தரம் வாய்ந்த
  நடிகனை,
  ‘லாரி டிரைவர் ராஜ்கண்ணு’ ஆக்கி
  “அழகு காட்டிய” தமிழ் திரையுலகம்,
  அதை நன்கு புரிந்துகொண்டு,
  திட்டமிட்டு,
  கடுமையாக உழைத்து,
  சரியாக பயன்படுத்திக்கொண்ட,
  ஒரு சாதாரண நடிகனை
  மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கி
  “அழகு பார்த்தது”

  மூளை இதயத்தை விட திறமை வாய்ந்தது!
  ஆனால் இதயமோ மூளையை விட சக்தி வாய்ந்தது!!

 23. Selvan says:

  மக்கள் திலகம் என்பதற்கு ஒப்பாக எம் ஜி ஆரிடம் ஜனவஷ்யம் இருந்தது
  அதுபோல் வெற்றியும் இருந்தது
  பயன்படுத்திக் கொண்டார் பயனுள்ளதாக்கிக் கொண்டார்
  எங்கிருந்து வந்ததோ அது அங்கேயே போய் சேர்ந்தது
  தனக்கு தனக்கென்று பதுக்கி வைக்கவில்லை
  பட்டாக்கத்தி பைரவன் படமாகட்டும் எமனுக்கு எமனாகட்டும்
  மாடி வீட்டு ஏழையாகட்டும் நீங்கள் குறிப்பிடும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவாகட்டும்
  சிவாஜி கணேசன் அது போன்ற படங்களை தவிர்த்து இருக்கலாம்
  ( உடனே தன்னலமில்லாமல் காசு வாங்காமல் நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்தார் என்று ரீல் வரும்)
  போகட்டும்
  நடிகர் திலகம் என்ற பட்டத்திற்கு ஒப்பாக எல்லா படங்களும் நடிப்பில் சிறப்பாக இருந்ததா?
  நல்ல ஸ்கிரிப்ட் கிடைப்பது பெருங்கஷ்டம் இந்தக் காலத்தில்
  இருந்தும் இளைஞ்சர்கள் இந்தக் காலத்தில் ஏதோ கிறுக்கிக் கொடுத்த வசனங்களைக் கூட ஒப்பேற்றுகிறார்களா இல்லையா சொல்லுங்கள் ?
  நல்ல வசனகர்த்தா வழங்கிய கதை வசனங்களைக் கூட சிவாஜி கணேசன் சொதப்பி இருக்கிறார்
  அதுவும் அப்படி நடித்தார் !இப்படி நடித்தார் !இப்படி ஓடியது !என்று புழுகப்பட்டதை நம்பி
  படத்தை நாமும் பார்ப்போம் என்று தேடிப் பார்த்து ஏமாந்து போன சலிப்பு
  பலே பாண்டியா ரீமேக் (கிட்டத்தட்ட) வந்தது
  அதிலே வில்லனாக நடித்தவர் பெயர் ?கூடத் தெரியவில்லை
  கன்ணு ஒருமாதிரியாக இருக்கும்
  அசத்ததி இருந்தார் அலட்டிக் கொள்ளாமல் ஹாஸ்யமாகவும் இருந்தது
  அதன் பிறகு பழைய பலே பாண்டியா பார்த்தேன் ரவுடியாக வரும் சிவாஜி லுன்கியைத் தூக்கிக் கொண்டு முகத்தில் ‘ பாவம் ‘காட்டுகிறார்
  என்ன சொல்லி விட்டேன் ஏன் மயங்கிகிறாய் பாட்டுக்கு ‘அபிநயம்’ வேரு என்னவோ
  நடிப்பிற்கும் பட்டத்திற்கும் ஏழாம் பொருத்தம் , போங்கப்பா !
  யாருமே அவரை வற்புறுத்தி இப்படியெல்லாம் நடிக்கச் சொல்லவில்லை
  தன் நடிப்பு சோபிக்கிறது போல் தேர்ந்து பண்ணியிருக்கலாம்
  அந்த வல்லமை இருந்திருக்கிறது
  அதை பொருட்படுத்தாமல் போனது வீண்
  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் …
  மைசூர் மகராஜா மைசூர் போண்டா ! ஒப்பீடு A1 ganpat

 24. சாரதா says:

  என்னுடைய தாய்ப்பதிவில் என்ன கேட்டிருந்தேன்?. நடிகர்திலகம் சிவாஜி நடித்த படங்களில், அவருக்கு மட்டுமல்லாது உடன் நடித்த துணைக் கதாநாயகர்களுக்கும் டூயட் பாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அப்படிக்கொடுக்கப்பட்டதை அவர் தடுத்ததில்லை.

  அதே சமயம் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். நடித்த படங்களில், உடன் நடித்த இரண்டாம் நாயகர்களூக்கு எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. அதையும் கூட ‘ஏன் கொடுக்க வேண்டும்?’ என்று இயக்குனர்களிடம் கோபித்தார் என்பதை, எம்.ஜி.ஆர். ஆதரவு இயக்குனரின் வாக்குமூலம் வழியாகவே சொல்லியிருந்தேன்.

  அவ்வளவுதானே?. அதற்கு பதில் எப்படியிருந்திருக்க வேண்டும்?. ‘சாரதா அப்படியா சொன்னாள்? இதோ எம்ஜியார் படங்களில் மற்றவர்களுக்குக் கிடைத்த பாடல்கள் பட்டியல்’ என்று ஒரு நீண்ட பட்டியலிட்டிருந்தால், அதுதான் சரியான பதிலாக இருந்திருக்குமே தவிர,

  சிவாஜி எந்தெந்தப்படங்களில் எப்படியெல்லாம் கெடுத்து வைத்தார் என்பது அல்ல பதில்.. (அப்படி கெடுக்கப்பட்டும் அவை மக்களால் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்)….

  சிவாஜி, தன் உடம்பை கண்ட்ரோல் ஆக வைக்காமல் தொந்தியும் தொப்பையுமாக அலைந்தார் என்பது அல்ல பதில் (அப்படி தொப்பை நடிகர் நின்ற இடத்தில் வசனம் பேசியதை… ஸாரி, கத்தியதை சமாளிக்க சிலர் நம்பியாரோடும், கே.கண்ணனனோடும், ஜஸ்டினோடும் கட்டிப்புரள வேண்டியிருந்தது என்பது வேறு விஷயம்)

  ரஜினி மட்டும் இல்லையென்றால், சிவாஜி குடும்பம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் என்பது அல்ல பதில்.. (ஒரு பதிவில், ‘சம்பாதித்ததையெல்லாம் தனக்கென்று பதுக்கினார்’, இன்னொன்றில் ‘சிவாஜி குடும்பம் பிச்சையெடுக்கும் லெவலுக்கு வந்தது’… இதில் எது உண்மை?)

  ‘சிவாஜி படங்களில் மற்ற நடிகர்களுக்கு பாடல் வாய்ப்புக்கிடைத்ததில் கால்வாசியாவது எம்ஜியார் படங்களில் கொடுக்கப்பட்டன’ என்று பட்டியல் நீட்டப்படாத வரை, என் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லையென்பதுதான் உண்மை.

  அதை விடுத்து வேறு எந்த திசைதிருப்பும் வாதமும், விஷயத்தை மூடி மறைக்க முடியாது. அப்படீன்னா, ப.நீலகண்டன் சொன்னது முற்றிலும் உண்மையென்பது தெளிவு.

  (இந்த வலைத்தளத்தைப்படிக்கும் என் தோழிகள் சிலர் ‘ஏண்டி சாரூ.. இங்கே உனக்கு பதில் சொல்பவர்களின் பெயர்கள் மட்டும் மாறி மாறி வருகிறதே தவிர, பதில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றனவே. அப்படீன்னா, உன் பதிவுகளை பலபேர் மறுக்கிறார்கள் என்று நிரூபிக்கும் முயற்சியா?’ என்று கேட்கின்றனர். என் பதில் ‘தெரியவில்லை’ என்பதுதான்).

 25. Ram says:

  Sabash saradha. Beautiful narration about one and only Nadigar Thilagam. Neengal engirunthalam vaazhga.

 26. Ganpat says:

  My dear RV,Balhanuman,Sarada,selvan and other friends,

  WISHING YOU AND FAMILY A HAPPY AND PROSPEROUS NEW YEAR

  Best Regards,
  Ganpat

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: