எந்திரன் ரஜினியை வாங்கு வாங்கென்று வாங்கும் வெங்கட் சாமிநாதன்


வெங்கட் சாமிநாதன் சொல்வதில் எனக்கு ஏறக்குறைய முழு இசைவு. எனக்கு எந்திரன் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், என் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று தோன்றுகிறது. (இருவரும் சிவாஜி படத்தை ரசித்தார்கள்). ஆனால் இந்த ஹைப் கடுப்படிக்கிறது. டூ மச் சேஸ்தாரண்டி!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

28 Responses to எந்திரன் ரஜினியை வாங்கு வாங்கென்று வாங்கும் வெங்கட் சாமிநாதன்

 1. விடுங்க சார். குழந்தைகளைக் கூட்டிக்கிட்டுப் போய் படம் பாருங்க,.. நமது எண்ணங்களை எதற்கு அவர்களிடம் தினித்துக்கொண்டு.

 2. prasath says:

  நல்லவேளை நான் எந்திரன் பார்க்கவில்லை. எப்படியும் ஏதாவது “விடுமுறை” தினத்தை முன்னிட்டு சன் டிவியிலோ கலைஞர் டிவியிலோ போடுவார்கள் அப்பொது பார்த்துகொள்ளலாம்

 3. Ganpat says:

  உழைப்பையும்(ஷங்கர்),அதிர்ஷ்டத்தையும்(ரஜினி) சரியான விகிதத்தில் கலந்து,ஒரு பண்டம் செய்து அதை விளம்பரம் எனும் ஆடம்பரமான பெட்டியில் வைத்து,அப்பாவி மக்களுக்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார் ஒரு சாதுர்யமான வியாபாரி (கலாநிதி).இதில் யாரும் ஏமாறவில்லை!
  எனவே விமரிசனம்,எழுதியோ,படித்தோ,யாரும் நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமே இல்லை.

  படத்தில் என்ன இருக்கும் என்று நன்கு அறிந்த 80 சதவிகிதத்தினர் படம் பார்த்துவிட்டு அதை மறந்தும் விட்டார்கள்

  படத்தில் என்ன இருக்கும் என்று நன்கு அறிந்த 19 சதவிகிதத்தினர் இப்படத்தைப்பற்றி நினைக்கக் கூட இல்லை

  மீதி 1 சதவிகிதத்தினர் பார்த்துவிட்டோ (அ) பார்க்காமலோ விமரிசித்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • BaalHanuman says:

   Ganpat,

   மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்…..

  • சாரதா says:

   கன்பத்,

   நீங்கள் சொலவ்து மிகவும் சரி.

   ரஜினியும் ஷங்கரும் கடைவிரித்திருக்கிறார்கள். பிடித்தவர்கள் வாங்கட்டும். பிடிக்காதோர் விலகட்டும். மற்றபடி குறை சொல்லி நீட்டி முழக்க இவர்களுக்கு என்ன உரிமை?.

   • Ganpat says:

    மிகவும் நன்றி நண்பரே!
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    ஏதோ விமரிசனம் வேண்டாம் என்று சொன்னேனே தவிர உங்கள் “விளாசலை”க்காண ஆவலுடன் உள்ளேன்!

   • சாரதா says:

    சீனிவாஸும் ‘நண்பரே’, நானும் ‘நண்பரே’வா?.
    ‘நண்பியே’ன்னு சொல்ல முடியாது சரி. ‘தோழியே’ன்னு சொல்லலாமே.

    போகட்டும்,… அது என்ன ‘விளாசல்’..?

   • Ganpat says:

    அம்மணி,(!)

    பொதுவாக “அர்” விகுதி மரியாதையை குறிக்கும்.இதில் பால் வேற்றுமை வராது!

    (உ-ம்)
    உன் மகள் எங்கே போயிருக்கிறாள்?
    உன் அம்மா நலமாக இருக்கிறாரா?

    எனவே நண்பர் என்பது ஆண்,பெண் இருபாலாருக்கும் பொது.
    ஆனால் புழக்கத்தில் இது friend என்ற வார்த்தையை குறிக்கிறது.
    ஆனாலும் படர்க்கை நிலையில் ஆண் நண்பர்,பெண் நண்பர் என்றே குறிப்பது வழக்கம்.
    தோழி??? சற்று அரசகுடும்ப பாணியில் இல்லை??
    நண்பி??? கொச்சை!

    விளாசல்=Smash/Blast
    (உ-ம்) சுமதி என் சுந்தரி படத்திற்கு நான் எழுதிய பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதிய பதில்!

    அம்மணி= கி.பி.1990 வரை “மேடம்”
    அதன் பிறகு “மேம்”
    நன்றி
    நல்லிரவு!

 4. RV says:

  மறுமொழிக்கு நன்றி, பிரசாத்!

  சாரதா/கண்பத்/ஸ்ரீனிவாஸ், // ரஜினியும் ஷங்கரும் கடைவிரித்திருக்கிறார்கள். பிடித்தவர்கள் வாங்கட்டும். பிடிக்காதோர் விலகட்டும். // இது பிடித்தது, பிடிக்கவில்லை என்ற விஷயம் இல்லை. ஒரு சினிமாவுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்; ஊடக பலம், பண பலம் abuse செய்யப்படுவது; ரசிகர்களின் கண்மூடித்தனமான “பக்தி” – இவை யாவும் நாட்டுக்கு நல்லதில்லை என்ற கவலை.

  அப்புறம் பிடித்தவர் பிடிக்கட்டும், பிடிகாதோர் விலகட்டும், குறை சொல்ல நீங்கள் யார் என்றால் நானும் கடையை மூட வேண்டியதுதான். 🙂 வெ.சா.வும் அதே கமெண்டை உங்களைப் பார்த்து சொல்லலாமே!

  • Ganpat says:

   நன்றி R.V.

   எந்திரன் படத்தைப்பொருத்தவரை பல கோணங்கள் உள்ளன

   1.எந்திரன் திரைக்கதை

   2.எந்திரன் தொழில் நுட்பம்

   3.எந்திரன் உருவாக்கியோரின் உழைப்பு

   4.எந்திரன் கதாநாயகர் மேல் அவர் ரசிகர்கள் வைத்திருக்கும் உணர்வு பூர்வமான பிணைப்பு

   5.எந்திரன் தயாரிப்பாளர்களின் நேர்மை,தொழில் தர்மம்

   6.எந்திரன் தயாரிப்பாளர்களுக்கும்,தமிழக
   ஆட்சியாளர்களுக்கும் உள்ள நெருக்கம்.

   7.தமிழக ஆட்சியாளர்களின் நேர்மை,ஆட்சி
   முறை

   மேற்கண்ட அனைத்தையும் ஒரு அவியலாக்கி 5,6,7 மேலுள்ள அதிருப்தியை 1,2,3,4கின்மேல் காண்பிக்கவேண்டாம் என்றுதான்
   நான் மற்றும் என் நண்பர்கள் (!) சொல்கின்றோம்

   ஷங்கர் செய்த ஒரு தவறு,இந்த கதையின் காலகட்டத்தை குறிப்பிடமறந்தது.படத்தின் ஆரம்பத்திலேயே இது 2060௦ ஆம் வருடம் என்று போட்டிருந்தால் பலர் வாயை அடைத்திருக்கலாம்.(நாம் 3010ஆம் வருடம் சந்திரனில் குடியேறினால் கூட அங்கும் அம்மன்கோயில் கட்டி கூழ் ஊத்திக்கொண்டு தான்இருப்போம்)

   2,3 இன் சிறப்பை யாரும் மறுக்க முடியாது

   4 ஐ ப்பற்றி மக்களுக்கு போதிக்க முயற்சிக்கலாம் ஆனால் திட்ட முடியாது.குறிப்பாக கடவுளாக கருதப்படும் அந்த Hero அதை சிறிதும் misuse செய்யாதபோது !

   எஞ்சியுள்ளது 5,6,7 தான் !!

   நம் நாட்டில் நடந்துவரும் மற்ற ஊழல்களோடு ஒப்பிடுகையில் எந்திரன் முறைகேடு ஒரு ஜூஜூபி!

   பெரிய விருந்து ஒன்றில்,ஒரு பக்கம் சாம்பார் அண்டாவில் பெருச்சாளி மிதந்துகொடிருக்கிறது.ஆனால் நாம்
   மோர்அண்டாவில் மிதக்கும் பாச்சையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

   (திடீரென்று,தன் வீட்டில் நுழையும் கணவன்,மனைவி ஒரு அன்னியனுடன் படுக்கையில் புரண்டுகொண்டிருப்பதைப்பார்த்து,
   “உனக்கு எத்தனை தடவைதான் சொல்வது,வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் படுத்துக்காதேன்னு?” என்று சத்தம் போடுவதைப்போல்)

   அப்போ 5,6,7 க்குத் தீர்வு?

   வேறு என்ன; ஓட்டுதான் !!

   அப்போ எல்லாம் மாறி விடுமா?

   நிச்சயமா இல்லை!

   ஏனென்றால்

   மக்கள் அனுமதியில்லாமல் ஆட்சியாளர்கள் குற்றம் புரிவது சர்வாதிகாரம்!

   மக்கள் அனுமதிபெற்று ஆட்சியாளர்கள் குற்றம் புரிவது ஜனநாயகம்!!

   அப்போ என்னதான் நிரந்தர தீர்வு?

   Woody Allen செய்த (கீழ்கண்ட)பிரார்த்தனையை நாமும் செய்வதுதான்!

   “கடவுளே! இந்த நாட்டில் இருந்து ஊழலை அறவே நீக்கு!அது இயலாதெனில்,அதில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பினையாவது எனக்குக் கொடு!”

   • RV says:

    // 5,6,7 மேலுள்ள அதிருப்தியை 1,2,3,4கின்மேல் காண்பிக்கவேண்டாம் என்றுதான்
    நான் மற்றும் என் நண்பர்கள் (!) சொல்கின்றோம் //

    நான் பார்க்கவில்லை, அதனால் நிச்சயமாக சொல்லமுடியாது. ஷங்கரின் படங்கள் பார்க்கக் கூடியவைதான், ஆனால் பிரமாதமான திரைக்கதை உள்ள படம் எதுவும் (என் கண்ணில்) இது வரை வரவில்லை. தொழில் நுட்பம் டெர்மிநேடர் அளவுக்கு மேல் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. படம் பார்த்துவிட்டு மறந்துவிடக் கூடிய தரத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லா படத்திலும்தான் உழைக்கிறார்கள். உழைப்பை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் எந்த படத்தைப் பற்றியும் ஒரு நெகடிவ் கமென்ட் சொல்வதற்கில்லை. ரஜினி மேல் உணர்வுபூர்வமான பிணைப்பு என்கிறீர்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இதைக் கேட்டு சந்தோஷப்படவா முடியும்?

    அப்புறம் கண்பத், நீங்கள் உண்மையில் வெ.சா.வின் கட்டுரையை படித்தீர்களா, இல்லை படிக்காமல் எழுதுகிறீர்களா?

    வெ.சா. திரைக்கதையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள். // விட்டலாசசாரியாவின் படைப்பு, அம்புலி மாமா கதையின் இத்தலைமுறை பதிப்பு. சூப்பர்மேன், டெர்மினேட்டர், பாட்மேன் வகையறாக்கள் பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கும் சமாச்சாரங்களே தவிர சினிமா என்னும் கலை சம்பந்தப்பட்டதல்ல. // என்று அவர் வைக்கும் விமர்சனத்தை நீங்கள் ஏற்கலாம் இல்லை மறுக்கலாம். ஆனால் அப்படி ஒருவருக்கு தோன்ற சாத்தியக்கூறே இல்லையா?

    அவர் தொழில் நுட்பத்தைப் பற்றி, ஷங்கரின் உழைப்பைப் பற்றி என்ன குறை சொல்கிறார்? நீங்கள் வைக்கும் 4,5,6,7 பாயின்ட்களையே அவர் கடுமையான மொழியில் சாடுகிறார். அவர் எழுதி இருப்பது திரைப்பட விமர்சனம் இல்லை, ரஜினி வழிபாடு, அதை தன ஊடக, பண பலத்தை வைத்து பெரிதாக ஊதி பணம் சம்பாதிக்கும் abuse of பவர் ஆகிய சமூக நிகழ்ச்சிகளை (சாரதா பாஷையில்) தாக்குவது. அதில் தவறென்ன கண்டுபிடிக்கிறீர்கள்?

    5,6,7 மேலுள்ள அதிருப்தியை எப்படி காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

   • Ganpat says:

    RV to cut a long story short….
    மனிதனின்
    நியாய தர்மங்கள்,ரசனை,நடை,உடை பாவனைகள் மிக வேகமாக மாறி வருகின்றன .வருத்தப்படுவதில் பயனில்லை.

    வெ.சாவின் கட்டுரையைப்படித்துவிட்டு தான் எழுதினேன்
    வெ,சா அளவி்ற்கதிகமாக ரஜினியை தாக்கியிருக்கிறார் (கோமாளி என்ற வார்த்தை கண்டிக்கத்தக்கது) அனாவசியமாக சிவாஜியையும் குறைகூறியுள்ளார்.
    என்ன செய்வது வந்து 80 ஆண்டுகள் ஆயினும் சினிமா நம் ஊரில் இன்னும் ஒரு வணிகமா கத்தான் இருக்கிறது.இல்லாவிட்டால் உலகத்தின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் ,வெ.சா.வாயிலெல்லாம் விழுந்து எழ வேண்டிய அவல நிலை வருமா?
    //5,6,7 மேலுள்ள அதிருப்தியை எப்படி காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?//
    முதலில் சன் குழுமத்தை குறை கூறட்டும்.தி.மு.க. அரசை குறை கூறட்டும் பிறகு எந்திரனுக்கு வரட்டும்

    நன்றி

  • சாரதா says:

   டியர் ஆர்.வி,

   தீபாவளி வாழ்த்துக்கள். (நேற்றே முடிந்து விட்டபோதிலும் அதனுடைய எபெக்ட் சில நாட்களுக்கு இருக்கும், குறிப்பாக கடன் வாங்கி கொண்டாடியவர்களுக்கு).

   வெங்கட் சாமிநாதன், என்னைப்பார்த்து அந்த வார்த்தை சொல்ல வாய்ப்பில்லை, காரணம் எனது அலசல்களில் நிறைகளே அதிகம் இருக்கும். குறைகள் குறைவாகவே இருக்கும், அவையும் பலமுறை யோசித்தபின்பே). ஆலிவுட் தரத்துக்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற ஷங்கரின் ஆசையிலோ, அதற்கு பொருளாதாரத்தில் தாராளமாக இருந்த கலாநிதி மாறனிடமோ எந்தக்குறையும் இல்லை. இதையே தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் பேசி, லண்டனில் வெளியிட்டிருந்தால் சாமிநாதன் பாராட்டியிருக்கக் கூடும். “இவையெல்லாம் சினிமா அல்ல, ‘உதிரிப்பூக்களில்’ கிராமத்து திண்ணையில் விஜயன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதுதான் உலகத்தரம் வாய்ந்த சினிமா” என்று சொல்லவும் சாமிநாதனுக்கு உரிமை உண்டு.

   அதே சமயம், பத்துநாட்களில் தாராளமாக டிக்கட் கிடைக்கக்கூடிய படத்துக்கு முதல்நாளே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் 2,000 ரூபாய்க்கு டிக்கட் வாங்குவதும், உயிரற்ற கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதும்தான் தங்கள் அபிமான நடிகருக்கு காட்டும் பக்தி என்பது சற்று கண்டிக்கத்தக்கதுதான். (நான் நடிகர்திலகத்தின் அதிதீவிர ரசிகையாக இருந்தபோதிலும், ஒருமுறைகூட அவர் படத்துக்கு ‘ப்ளாக்’கில் டிக்கட் வாங்கி படம் பார்த்ததில்லை).

   மற்றபடி, உங்களுடைய எழுத்தும், வெங்கட் சாமிநாதனின் எழுத்தும் ஒன்றல்ல. உங்களுடையது விமர்சனம். ஆனால் சாமிநாதனுடையது தாக்குதல்.

   • Ganpat says:

    நல்ல பதில்..நன்றி நண்பரே!

    சுருக்கமாக(!)மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதென்றால்…

    “Shankar won’t make Uthirippookal”
    அதாவது
    “ஷங்கர் உதிரிப்பூக்கள் எடுக்கமாட்டார்”
    ஆனால்
    “Mahendran can’t make Endhiran”
    அதாவது
    “மகேந்திரனால் எந்திரன் எடுக்க முடியாது”

 5. RV says:

  மன்னிக்கவும் கண்பத், நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஜினி செய்வது கோமாளித்தனம் என்று எழுதி இருக்கிறார்; ரஜினியைத் தாக்கவில்லை, ரசிகர்களைத்தான் தாக்கி இருக்கிறார்.

 6. Ganpat says:

  RV,
  ஓஹோ அப்படியா!
  ரஜினி செய்வது கோமாளித்தனம் எனில் ரஜினி கோமாளி என ஆகாதா?
  :-))

  எனக்கு டிசம்பர் பூ பிடிக்காது….இது ஒகே

  எனக்கு டிசம்பர் பூ பிடிக்கும்
  ஆனால்
  வெள்ளை டிசம்பர் பிடிக்காது….இது ஒகே

  எனக்கு டிசம்பர் பூ பிடிக்காது
  ஏனென்றால் அது மல்லிகைப்பூ
  போல இல்லை…..இது உளறல்

  இதுதான் எந்திரன் விமரிசனத்தில் இப்போ
  நடந்து கொண்டிருக்கிறது

  சாரு சவட்டி எடுக்கிறார்
  வெ.சா வெளுத்து வாங்கறார்
  கலாநிதியோ கல்லா கட்டுகிறார்

  • RV says:

   // ரஜினி செய்வது கோமாளித்தனம் எனில் ரஜினி கோமாளி என ஆகாதா? // என்னங்க கண்பத் படுத்தறீங்க? நீங்க முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்பதற்கும் நீங்கள் முட்டாள் என்பதற்கும் உங்களுக்கு நிஜமாகவே வித்தியாசம் தெரியாதா?

   • Ganpat says:

    Sorry RV, இப்போ நீங்கதான் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்…(அதாவது, நீங்க முட்டாள் என்று பொருள் கொள்ளற்க)
    //குறிப்பாக ஜப்பான் நாட்டில், அகிரா குரசவாவும், யோசிஜிரோ ஓஸூ போன்றவர்களைத் தந்த ஜப்பானிலா ரஜினிகாந்த் போன்றாரின் கோமாளிக்கூத்துக்களையும் சேஷ்டைகளையும் ரசிக்கிறார்கள்?//
    //சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால், கர்நாடகாவில், கேரளாவில் செல்லுபடியாகாத கூத்தாட்டங்களுக்கு “தமிழ் நாடு தான் உங்களுக்கு ஏற்ற மண் கொண்டது, ரசிகர் பட்டாளம் கொண்டது என்று எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் அனுப்பி விடுகிறார்கள்.//
    //நான் சொல்ல வந்தது எல்லா குப்பை கூளங்களுக்கும், கோமாளிகளுக்கும் விளை நிலமும் வளர்நிலமும் தமிழ் நாடாகத்தான் இருந்து வருகிறது.//
    //இப்போது நாம் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல வரவேற்றுக் கொண்டாடும் ரஜனி காந்தின் சினிமா சேஷ்டைகள் கோமாளித் தனமே தவிர அது நடிப்போ, அது சினிமாவோ இல்லையென்றால், ஜப்பானிலே அவருக்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள் என்று சொல்வார்கள். எனக்கும் இது ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்கிறது. இந்த கோமாளித் தனங்கள் எல்லாம் அங்கு எப்படி செல்லுபடியாகிறது என்று.ஹோகேனக்கல் சமாசாரமோ இல்லை காவேரி தண்ணீர் சமாசாரமோ, அல்லது இது போல ஏதோ ஒரு விஷயத்தில் இங்கு வீராவேச முழக்கம் செய்துவிட்டு அடுத்த நாள் கட்டாயம் சென்று அவர் அடிக்கடி போய் மன்னிப்புக் கோரும் சொந்த ஊராகிய கர்நாடகத்திலேயே கூட அவரை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை. தமிழ் நாட்டைத் தவிர அவரை நடிகராக ஏற்று படம் தயாரிக்க யாரும் தயாரில்லை. //
    //இவர்கள் ரஜினி ரசிகர்களா, இல்லை ரஜினியின் கோமாளிக் கூத்தாட்டத்தைக் கேலி செய்து மகிழ்கிறார்களா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். //
    இவ்வளவையும் படிச்சுட்டு வெ.சா ரஜினியை ஒன்னும் சொல்லலேன்னு நீங்க சொல்லறீங்க,என்னை அந்த கட்டுரைய படிக்கலேன்னு சொல்றீங்க! ம்ம்ம்ம் காலம் கலி காலம்டா சாமி!!: -(
    அப்புறம் ஜாக்கிரதை நண்பரே!
    ஒருவேளை சார்த்ரே,எட்வர்ட்,டி,போனோ போன்ற தர்க்கவாத மேதைகளிடம் பேசும்போது ஒங்க அப்பா பண்றது திருட்டுத்தனம்ன்னு பலதடவை சொல்லிட்டு பரிசுகூட வாங்கலாம் (ஏன்னா அவங்க அப்பாவை நீங்க திருடன் ன்னு சொல்லலைப் பாருங்க!)..இங்க அந்த விஷப்பரீட்சை வேண்டாம்
    (இதுவும் புரியலேன்னா அம்மாவைப்போட்டு இன்னொரு குணாதிசயத்தை try பண்ணுங்க! சும்மா நச்சுன்னு புரியும்!)
    🙂
    அப்புறம், வெ.சா எதாவது போட்டோ (வாவது) எடுத்திருந்தா அவைகள PICASA வில் upload செய்ய சொல்லுங்களேன்.பார்த்து ரசிக்கலாம் 😉

 7. சாரதா says:

  //சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால்,//

  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியை இழுத்துப்போட்டு தாக்குவது என்பதற்கு வெங்கட் சாமிநாதனும் விலக்கல்ல என்பதையே, எந்திரன் பற்றிய பதிவிலும் கூட அவரை இழுத்துச் சாடியிருப்பதில் தெரிகிறது.

  சிவாஜிக்கு மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது வழங்கியவர்கள் முட்டாள்கள்,

  அவரை அமெரிக்காவின் நயகரா நகரத்தின் தங்கச்சாவியைத்தந்து கௌரவ மேயராக்கி பெருமைப்படுத்திவர்கள் பைத்தியக்காரர்கள்,

  பிரான்ஸு நாட்டின் பெருமைக்குரிய செவாலியே விருதை அவருக்களித்து கௌரவப்படுத்திய பிரான்ஸ் நாட்டுக்காரன் கிறுக்கன்.

  ஆனால், இந்த வெங்கட் சாமிநாதன் ‘உலக மகா புத்திசாலி’. சரியா?.

  உலகத்தின் மறுகோடியிலிருப்பவனுக்கும் தெரிந்திருக்கும் சிவாஜியைப்பற்றி, தானிருக்கும் தெருக்கோடியில் இருப்பவனுக்குக்கூடத் தெரிந்திராத இந்த வெங்கட் சாமிநாதன் எல்லாம் பேசுவது விந்தையா?, வேடிக்கையா?, வேதனையா?.

 8. virutcham says:

  சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

  இந்தப் பக்திப் பரவசங்கள் கூட ஏற்படுத்தப்பட்ட வணிக உத்தியாகத் தான் தெரிகிறது
  ரஜினி படங்கள் காலத்தில் மடியும் தன்மை வாய்ந்தவை என்பது என் கருத்து. அதை பதிவு செய்து இருக்கிறேன்

  http://www.virutcham.com/2010/04/காலத்தில்-மடிந்த-ரஜினி-ப/

  • RV says:

   நீகள் சொல்வது போல ரஜினி தன் இமேஜை பயன்படுத்தும் வியாபாரி என்றே எனக்கும் தோன்றுகிறது. அவரிடம் நல்ல படத்தை எதிர்பார்ப்பதற்கில்லை.

 9. RV says:

  // //குறிப்பாக ஜப்பான் நாட்டில், அகிரா குரசவாவும், யோசிஜிரோ ஓஸூ போன்றவர்களைத் தந்த ஜப்பானிலா ரஜினிகாந்த் போன்றாரின் கோமாளிக்கூத்துக்களையும் சேஷ்டைகளையும் ரசிக்கிறார்கள்?//
  //சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால், கர்நாடகாவில், கேரளாவில் செல்லுபடியாகாத கூத்தாட்டங்களுக்கு “தமிழ் நாடு தான் உங்களுக்கு ஏற்ற மண் கொண்டது, ரசிகர் பட்டாளம் கொண்டது என்று எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் அனுப்பி விடுகிறார்கள்.//
  //நான் சொல்ல வந்தது எல்லா குப்பை கூளங்களுக்கும், கோமாளிகளுக்கும் விளை நிலமும் வளர்நிலமும் தமிழ் நாடாகத்தான் இருந்து வருகிறது.//
  //இப்போது நாம் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல வரவேற்றுக் கொண்டாடும் ரஜனி காந்தின் சினிமா சேஷ்டைகள் கோமாளித் தனமே தவிர அது நடிப்போ, அது சினிமாவோ இல்லையென்றால், ஜப்பானிலே அவருக்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள் என்று சொல்வார்கள். எனக்கும் இது ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்கிறது. இந்த கோமாளித் தனங்கள் எல்லாம் அங்கு எப்படி செல்லுபடியாகிறது என்று.ஹோகேனக்கல் சமாசாரமோ இல்லை காவேரி தண்ணீர் சமாசாரமோ, அல்லது இது போல ஏதோ ஒரு விஷயத்தில் இங்கு வீராவேச முழக்கம் செய்துவிட்டு அடுத்த நாள் கட்டாயம் சென்று அவர் அடிக்கடி போய் மன்னிப்புக் கோரும் சொந்த ஊராகிய கர்நாடகத்திலேயே கூட அவரை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை. தமிழ் நாட்டைத் தவிர அவரை நடிகராக ஏற்று படம் தயாரிக்க யாரும் தயாரில்லை. //
  //இவர்கள் ரஜினி ரசிகர்களா, இல்லை ரஜினியின் கோமாளிக் கூத்தாட்டத்தைக் கேலி செய்து மகிழ்கிறார்களா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். //
  இவ்வளவையும் படிச்சுட்டு வெ.சா ரஜினியை ஒன்னும் சொல்லலேன்னு நீங்க சொல்லறீங்க,என்னை அந்த கட்டுரைய படிக்கலேன்னு சொல்றீங்க! ம்ம்ம்ம் காலம் கலி காலம்டா சாமி!!: -( //
  கண்பத், ரொம்ப படுத்தறீங்க. வெ.சா. ரஜினியின் நடிப்பை தாக்கி எழுதலைன்னு நான் சொல்லலை. ரஜினி எப்போ நடிக்க வந்தாரா அப்போதிலிருந்து அவரது நடிப்பை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர் ரஜினியை தாக்கவில்லை. ரஜினியின் நடிப்பு கோமாளிக் கூத்து என்று சொல்வது அவர் உரிமை. ரஜினியின் நடிப்ப அனேகமாக அப்படித்தான். என்ன பாட்ஷாவிலும் சிவாஜியிலும் படையாப்பாவிலும் முத்துவிலும் அவர் நடிப்புக்கு இலக்கணமா வகுக்கிறார்? பாகவதர் படங்களை என் ஜெனரேஷன் ஆட்களே பார்ப்பதில்லை. எம்ஜிஆர் படங்களை இன்று பார்ப்பது குறைந்துகொண்டே போகிறது. ரஜினிக்கும் அதே கதிதான். வெ.சா. எழுத்து முட்டாள்தனம் என்று சொல்வது உங்கள் உரிமை. தாரளமாக சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு ரஜினி பற்றி அவர் சொல்வது சரியாகத்தான் படுகிறது. அது நடிப்பாகட்டும், அவர் மேல் ரசிகர்கள் காட்டும் பக்தியாகட்டும்.

  // அப்புறம், வெ.சா எதாவது போட்டோ (வாவது) எடுத்திருந்தா அவைகள PICASA வில் upload செய்ய சொல்லுங்களேன்.பார்த்து ரசிக்கலாம் //
  இது என்னங்க பேத்தல்? அப்புறம் நானும் இப்படி சொல்லலாமா? நீங்க வெ.சா. மாதிரி புத்தகம் எல்லாம் எழுதிட்டுத்தான் வெ.சா. பற்றி கமென்ட் அடிக்கணும்.

  சாரதா,
  நீங்க முரட்டு சிவாஜி பக்தை. உங்களுக்கு சிவாஜி மேல் இருக்கும் அன்பு உணர்வுபூர்வமானது. அவரைப் பற்றிய விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும் என் தரப்பை சொல்லிவிடுகிறேன்.

  // சிவாஜிக்கு மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது வழங்கியவர்கள் முட்டாள்கள் // இல்லை. பால்கே விருது சினிமா icon-களுக்கு வழங்கப்படுவது. நாளைக்கு ரஜினிக்கும் வழங்கலாம், தவறில்லை.

  // சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியை இழுத்துப்போட்டு தாக்குவது என்பதற்கு வெங்கட் சாமிநாதனும் விலக்கல்ல என்பதையே, எந்திரன் பற்றிய பதிவிலும் கூட அவரை இழுத்துச் சாடியிருப்பதில் தெரிகிறது. // அவர் எம்ஜிஆர் பற்றியும் கூடத்தான் சொல்லி இருக்கிறார். உங்களுக்கு சிவாஜி பற்றி சொல்வதுதான் தெரிகிறது. ரஜினிக்கு முந்தைய ஜெனரேஷன் ஸ்டார்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான்.

  // அவரை அமெரிக்காவின் நயகரா நகரத்தின் தங்கச்சாவியைத்தந்து கௌரவ மேயராக்கி பெருமைப்படுத்திவர்கள் பைத்தியக்காரர்கள், // நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பஃபலோ நகரத்தில் எல்லாரும் சிவாஜி படத்தை பார்த்து ரசித்தார்கள் என்றா? பாதி பேர் ரசித்திருப்பார்களா? 25, 10, 5, 1 சதவிகிதம் பேர்? இதெல்லாம் கவுரவம்தான், ஆனால் பெரிய கவுரவம் இல்லை.

  // பிரான்ஸு நாட்டின் பெருமைக்குரிய செவாலியே விருதை அவருக்களித்து கௌரவப்படுத்திய பிரான்ஸ் நாட்டுக்காரன் கிறுக்கன். // செவாலியே விருது பெற்ற அடுத்த இந்தியன் யார் என்று தெரியுமா? எனக்கும் நினைவில்லை, ஆனால் அவ்வளவு கீர்த்தி வாய்ந்தவர் இல்லை. நாளை அவரையும் சிவாஜியையும் சமம் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?

  // ஆனால், இந்த வெங்கட் சாமிநாதன் ‘உலக மகா புத்திசாலி’. சரியா? உலகத்தின் மறுகோடியிலிருப்பவனுக்கும் தெரிந்திருக்கும் சிவாஜியைப்பற்றி, தானிருக்கும் தெருக்கோடியில் இருப்பவனுக்குக்கூடத் தெரிந்திராத இந்த வெங்கட் சாமிநாதன் எல்லாம் பேசுவது விந்தையா?, வேடிக்கையா?, வேதனையா? // என் பாப்புலாரிடிதான் என் கருத்துகளின் தகுதியை தீர்மானிக்குமா?

 10. Ganpat says:

  Shall we start from பேத்தல் first?

  இப்போ நான் வெ.சா எழுத்தாளர் இல்ல ன்னு சொல்றேன்னு வைத்துக்கொள்வோம்.
  அப்போ நீங்க ஒரு கட்டுரையாவது எழுதியிருக்கீங்களான்னு யாராவது என்னைக் கேட்டா அது தப்பு!

  அதுவே நான்
  “கல்கி, தேவன் இவங்கெள்ளாம் ஒரு எழுத்தாளர்களா?
  ஜெயகாந்தனுக்கு சேரியைத்தவிர
  வேறு எதைப்பற்றி எழுத தெரியும்?
  சுஜாதா எழுத்துக்கள் ஒரு fake”
  என்றெல்லாம் முத்து உதிர்த்தால்
  “என்னய்யா Ganpat! நீ யாருக்காவது எழுதின கடிதம் ஒண்ணு ரெண்டு இருந்தா குடேன்! படிச்சு பார்க்கிறேன்”
  என்று சொல்வதில் oopps பேத்துவதில்
  என்ன தப்பு?

  RV, without wasting further time,வெ.சா வின் முத்துக்களை உங்கள் நண்பர்கள் சிலரிடம் காண்பித்து இது எந்திரன் பற்றிய நடுநிலையான விமரிசனமாக தெரிகிறதா அல்லது ரஜினி,சிவாஜி ,MGR மேலுள்ள துவேஷம் காழ்ப்புணர்ச்சியை கொட்ட எந்திரனை பயன்படுத்திக்கொண்டாற் போல தென்படுகிறதா கேட்டுப்பாருங்கள்! பிறகு பேசுவோம்.

  ம்ம்ம்…. என்ன செய்வது! சிவாஜி கணேசன் இங்கு பிறந்து, வாழ்ந்தது, Marlon Brando,மற்றும் 99.99% தமிழர்களின் அதிருஷ்டம்;ஆனால் அவரின் துரதிருஷ்டம் ! !

  • ஈஸ்வரன் says:

   RV

   நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சாரதா, கண்பத் போன்றோர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை மிகத்தெளிவாகவே உள்ளது. அவர் கூறவரும் மையக்கருத்து ஒருமுறை படித்தாலே தெளிவாக விளங்குகிறது. இருந்தும் புரியாததுபோல் பாவனை செய்யும் இவர்களுக்கு என்ன சொல்லியும் புரியவைக்க முடியாது.

 11. சாரதா says:

  வெங்கட் சாமிநாதனின் நோக்கம் புரியவில்லை. ஒரு ‘எந்திரன்’ படம் பற்றி எழுதுவதற்க்குக்கூட சிவாஜி, எம்.ஜி.ஆரையெல்லாம் இழுத்து, தமிழ் ரசிகனின் ரசனையை கேலி செய்துதான் எழுத வேண்டுமா?. தமிழ்நாட்டு ரசிகன் எதை ரசிக்க வேண்டும் என்பதை இவர்தான் தீர்மானிப்பாரா?. இவர் கூற்றிலிருந்து இவர் எப்படிப்பட்ட படங்களை நல்ல சினிமா என்று சொல்வார் என்பது ஓரளவு புரியவருகிறது. அந்த வகையில் இவர் பட்டியலிடும் படங்கள் எனக்கு/ நமக்கு/ தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையென்று சொன்னால் அதற்காக நான்/ நாம்/ தமிழக பெரும்பான்மை ரசிகர்கள் எல்லாம் ‘ரசனை கெட்டவர்கள்’ அல்லது ‘ரசிக்கத்தெரியாதவர்கள்’ என்ற அத்தாட்சிப்பத்திரம் வழங்குவாரா?. புரியவில்லை.

  ‘சரி, அவரது வலைப்பூவில் அவர் மனதில் பட்டதை எழுதுகிறார்’ என்கிறீர்களா?. அப்படீன்னா சரி, விட்டு விட்டு நாம் வேறு வேலைகளைப்பார்ப்போம்.

 12. RV says:

  கண்பத், // நீ யாருக்காவது எழுதின கடிதம் ஒண்ணு ரெண்டு இருந்தா குடேன்! படிச்சு பார்க்கிறேன் // இந்த கேள்வியோட சப்-டெக்ஸ்ட் இல்லைங்கறீங்களா? அவரை குறை சொல்ல உனக்கென்ன யோக்யதைன்னு கேப்பது புரியாதா? மன்னிக்கணும் கண்பத், எனக்கு கேள்விதான் முக்கியம், கேட்பவர் முக்கியமில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…

  சாரதா, // ஒரு ‘எந்திரன்’ படம் பற்றி எழுதுவதற்க்குக்கூட சிவாஜி, எம்.ஜி.ஆரையெல்லாம் இழுத்து, தமிழ் ரசிகனின் ரசனையை கேலி செய்துதான் எழுத வேண்டுமா? // அவர் எழுதுவது தமிழ் ரசிகனின் ரசனையைப் பற்றி – எந்திரனை உதாரணமாக முன் வைக்கிறார், அவ்வளவுதான்.

  ஈஸ்வரன், // நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சாரதா, கண்பத் போன்றோர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. // அவர்களுக்கு ஒரு கருத்து இருக்காதா? அதுவும் சாரதா முரட்டு சிவாஜி பக்தி. அதில் ஒன்றும் தவறில்லையே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: