பராசக்தி பற்றி அசோகமித்ரன்


ஜீனியஸ் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்கிறார்:

51-52களில் தமிழ் சினிமா, சினிமாவை விட்டு விலகி, நாடகப் பண்புகளிலேயே மலினமானவற்றைக் கைக்கொள்ள ஆரம்பித்தது. பராசக்தி தமிழ்த் திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே சினிமாவிற்குரிய சிந்தனைப் போக்கை தமிழ் சினிமா உலகில் வெகு தூரம் பின் தள்ளிவிட்டது. புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு முட்டையிடலுக்கு பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல ‘பராசக்தி’ சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிர் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

அசோகமித்திரன் சொல்வதில் உண்மை இருக்கிறது. பராசக்திக்குப் பிறகு தமிழ் சினிமா சினிமாவின் சாத்தியக் கூறுகளை மறந்துவிட்டு மெலோட்ராமா கதைகள், மிகை நடிப்பு, அடுக்கு மொழி அலங்கார வசனங்கள் என்று திசை திரும்பிவிட்டது. ஆனால் பராசக்தி அன்றைய சினிமாவை ஒரு படி மேலேதான் கொண்டு போனது. அப்படிப்பட்ட முன்னேற்றம் எப்படி தமிழ் சினிமாவை பின்னே கொண்டு போக முடியும் என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. பராசக்தியின் வெற்றி அதே பாணி படங்கள் நிறைய வர காரணமாக அமையவில்லை. குறைந்த பட்சம் அதே பாணியில் பராசக்தியின் impact-இல் பாதியாவது உள்ள படங்கள் கூட அப்புறம் வரவில்லை. அதற்கும் பராசக்தியை காரணமாக சொல்ல முடியுமா?

பராசக்தி திராவிட இயக்க சார்பு உள்ள படங்களின் உச்சம். வேலைக்காரி, ஓரிரவு படங்களோடு ஆரம்பித்த ஒரு டிரென்ட் இந்த படத்துக்குப் பிறகு விழுந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திரும்பிப் பார், ரங்கோன் ராதா, கூண்டுக் கிளி, ரத்தக் கண்ணீர் மாதிரி அங்கொன்றும் இங்கொன்றும் சில படங்கள் வந்தாலும் பராசக்தியின் impact-இல் பாதி கூட ஏற்படுத்தவில்லை. அடுத்த நாலைந்து வருஷத்தில் எனக்குத் தெரிந்து அந்த நாள் மட்டுமே சினிமாவில் என்னவெல்லாம் சாத்தியம் என்று நமக்கு காட்டியது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்:
படங்களின் பட்டியல்
கூட்டாஞ்சோறு->ஆளுமைகள்
கூட்டாஞ்சோறு->படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
அசோகமித்ரனின் தமிழ் சினிமா பற்றிய நச் கமென்ட்
பராசக்தி விமர்சனம், பராசக்தி – நீதிமன்ற வசனம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

16 Responses to பராசக்தி பற்றி அசோகமித்ரன்

 1. சாரதா says:

  டியர் ஆர்.வி.
  நீங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானதே. பராசக்தி படம், படைப்பாளிகள் மத்தியில் அப்படி ஒன்றும் தாக்கத்தை எற்படுத்தி, ஒட்டுமொத்த படைப்பாளிகளையும் அந்தப்பக்கம் திருப்பிவிடவில்லை. தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களால் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வகைப்படங்கள் தலைகாட்டின. (மக்கள் ரசனையில் பராசக்தி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மை).

  அதற்கு முன் இருந்த எந்த சினிமாவை ‘பராசக்தி’யின் வரவு பாழ்படுத்தியதாக அசோகமித்திரன் சொல்கிறார்..?.

  அதற்கு முன் காலத்துக்கு ஒவ்வாதமுறையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ராஜாராணி படங்களையா? (அல்லது)

  படத்துக்கு குறைந்தது நாற்பது பாடல்கள் வைத்து, வந்தால் பாட்டு, போனால் பாட்டு, உட்கார்ந்தால் பாட்டு, எழுந்தால் பாட்டு என்றிருந்த சினிமாப்படங்களையா? (அல்லது)

  மூடநம்பிக்கைகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் சாடுவதை விடுத்து, அவ்ற்றுக்கு வக்காலத்து வாங்கிய படங்களையா?.

  காலமாற்றத்தில் பரிணாம வளர்ச்சிகளும் மாற்றங்களும் தடுக்க முடியாதவை. அசோகமித்திரன் சிறந்த சிந்தனையாளர்தான். சந்தேகமில்லை. அதற்காக அவர் சொல்லும் எல்லாமே கருத்துக்கருவூலங்கள் அல்ல.

 2. Ganpat says:

  I agree with Sarada in toto.
  பராசக்திக்கு முன் வந்த படங்களில் பெரும்பாலானவை(90%) mediocre
  But Parasakthi was a trend setter..
  In my opinion “தியாகபூமி” and “சந்திரலேகா ” were the only movies before that which set a trend for Tamil movies.

 3. RV says:

  சாரதா/கண்பத், அசோகமித்ரனின் கருத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லைதான். அவர் பராசக்திக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்ற உண்மையை பராசக்தியால் தேக்கம் ஏற்பட்டது என்று மாற்றுகிறார். ஆனால் நீங்கள் இருவரும் அவர் முன்னால் நல்ல படங்கள் வந்தது என்று சொல்கிறார் என்று நினைக்கிரார்போல இருக்கிறது. அவர் அப்படி சொல்லவில்லை.

 4. ஒரு வேளை இப்படி இருக்கலாமோ: நாடகத்தினின்றும் ஒரு படி மேலே போய் சினிமாவின் சாத்தியக்கூறுகளைக் கொண்டு அடுத்தகட்டத்துக்கான முயற்சிகளை நோக்கிய சிந்தனைகளைவிட, நாடகத்தின் செல்லுலாய்ட் பிரதியாக சினிமா பற்றிய சிந்தனை மக்களாலோ தயாரிப்பாளர்களாலோ முடங்கிவிட்டது.

  எக்ஸ்பரிமெண்டேஷன் என்ற அளவில் (பேசும்படம், பொம்மை, etc.) அல்லாமல், கதாப்பாத்திரம், கதை அல்லது கலைநுணுக்கம் போன்ற கோணங்களில் மட்டும் தமிழ்சினிமா விரிந்துகொண்டு அல்லது வெற்றிபெற்றுக்கொண்டு போனது உண்மைதானே?

 5. RV says:

  கிருபாசங்கர், என் கண்ணில் ஐம்பதுகளிலிருந்து ஒரு தேக்க நிலைதான், கதையில் எல்லாம் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

 6. ஞாநி says:

  அசோகமித்திரன் கருத்து ரத்னச் சுருக்கமாக இருப்பதால் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர் சொல்லியதை நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

  என் கருத்தில் சினிமாவை விஷுவல் மீடியமாகப் பார்க்காமல் அன்றைய நாடக மேடை போல வசனம் சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் போக்கிற்கு பராசக்தி ஒரு முக்கிய உந்துதல். பராசக்திக்கு முன்னால் தமிழிலும் ஹிந்தியிலும் பாட்டு,நடனம்,முதலியவை ஆக்ரமித்திருந்தாலும், காட்சிப்படுத்தலில் விஷுவல் சென்ஸ் கூடுதலாக இருந்தது. வசனம் சார்ந்த இளங்கோவன், அண்ணா, கலைஞர் படங்கள்தான் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பாலச்சந்தர் பாணிக்கு வழி வகுத்தன. அந்த காலகட்டத்தில் இதில் தப்பித்தவர் ஸ்ரீதர் மட்டும்தான். அவர்தான் வசனம் சார்ந்த பட பாணியில் வெற்றி பெற்றுவிட்டு, விஷுவல் சென்ஸ் உள்ள படங்களுக்கான டிரெண்ட் செட்டராக அமைந்தார். பராசக்தி சமூகத்தில் 1949ல் உருவாகிவிட்ட தி.மு.கவின் வளர்ச்சியில் பயனடைந்த ஒரு படம். வளர்ச்சிக்கு உதவிய படம் அல்ல. வளர்ச்சிக்கு உதவியவை கல்ட் ஒர்ஷிப் சார்ந்த எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் போன்ற படங்கள்தான்.

  • சாரதா says:

   ஞானி சார்,

   பராசக்தியில் குறிப்பாக கிளைமாக்ஸ் கோர்ட் சீன் போன்ற சில இடங்களில் மட்டுமே வசனம் நிறைந்து ஒரு நாடகபாணியைத் தோற்றுவித்ததே தவிர, படம் முழுவதும் என்பதை ஒப்ப மனம் வரவில்லை. அப்படத்திலும் சிறந்த பல பாடல்கள் இருந்தன. (‘புது பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘ஓ ரசிக்கும் சீமானே’ போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் ஈர்த்துள்ளன).

   விஷுவலுக்கும் பஞ்சமில்லை. இரண்டாம் உலகப்போரின்போது ரங்கூனில் இருந்து மக்கள் கால்நடையாகவே கல்கத்தாவுக்கு நடந்து வருவதை தெளிவாகக் காண்பித்திருந்தனர். அன்றைய ஆள் அரவமற்ற அமைதியான சென்னையை இப்படத்தில் பார்க்கும்போது நமக்கு ஏக்கமாக இருக்கிறது.

   பிற்காலத்தில் கே.எஸ்.ஜி. மட்டுமே பக்கம் பக்கமாக (அதுவும் குடும்பக்கதைகளுக்கு) வசனம் எழுதும் பாணியைக் கைக்கொண்டார். மற்றபடி பீம்சிங் படங்களில் எல்லாம் குறைந்த அளவு வசனங்களே.

   கே.பாலச்சந்தரைப்பொறுத்தவரை, அவர் அறிமுகமான முதல் பத்து படங்கள் அவர் ஏற்கெனவே நடத்திய மேடை நாடகங்களையே படமாக எடுத்தார். (சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர்நீச்சல் இப்படி). எனவே அவற்றில் நாடக வாசனை இருப்பது தவிர்க்க முடியாதது. அதற்கு பராசக்தி பொறுப்பல்ல. பராசக்தியின் தாக்கம் மனோகராவோடு முடிந்து விட்டது என்றே எண்ணுகிறேன்.

 7. knvijayan says:

  தமிழ் சினிமாவிற்கு சிவாஜி கணேசன் என்ற திறமையான நடிகனை அறிமுகபடுத்திய படம் என்பதை தவிர வேறு எந்த பெருமையும் பராசக்தி படத்திற்கு கிடையாது.அந்த படத்தை தடை செய்ததின் மூலம் அதற்க்கு இல்லாத பெருமையெல்லாம் ஏற்றி விட்டது ராஜாஜி சர்கார்.”அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவுகெட்ட பூசாரி,மதராசில் மாடு செய்த புண்ணியம் கூட மனுஷன் செய்யவில்லை என்ற அர்த்தமில்லாத வசனங்களை சைகிள் கடைகளிலும்,பார்பர் ஷாப்புகளிலும் பேசி வெட்டியாக பொழுதை கழித்தது ஒரு கூட்டம்.

  • சாரதா says:

   //தமிழ் சினிமாவிற்கு சிவாஜி கணேசன் என்ற திறமையான நடிகனை அறிமுகபடுத்திய படம் என்பதை தவிர வேறு எந்த பெருமையும் பராசக்தி படத்திற்கு//

   என்ன விஜயன் சார்,
   நீங்க இப்படி சொல்றீங்க. ஆனால் இன்னொரு இடத்தில் வெங்கட் சாமிநாதன் என்பவர், ‘சிவாஜி ஒரு நடிகரே இல்லை’யென்று சொல்கிறார். என்ன செய்யப்போறீங்க?. அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு ‘புத்திசாலி’ பட்டம் வாங்கப்போகிறீர்களா?. அல்லது எங்களோடு சேர்ந்து இப்படி பேசி ‘ரசனையில்லாதவர்கள்’ என்ற வசவு வாங்கப்போகிறீர்களா?.

 8. RV says:

  ஞானி சார், நீங்கள் சொல்வது சரியே. ஆனால் பராசக்தியில் அனல் பறக்கும் வசனங்கள் மட்டும் இல்லை, ஓரளவு சமூகப் பிரக்ஞை இருந்தது. மகாதேவி, குறவஞ்சி மாதிரி படங்களில் வசனம் மட்டுமே நின்றது. அதற்கு பராசக்தியை அசோகமித்திரன் ஏன் பொறுப்பாக்குகிறார் என்று தெரியவில்லை.
  பராசக்திக்கு முன் வந்த படங்களில் விஷுவல் சென்ஸ் ஓரளவு இருந்தது என்று எழுதி இருந்தீர்கள். சந்திரலேகா ஒரு படம்தான் நினைவு வருகிறது. ஆனால் நான் பார்த்த பராசக்திக்கு முந்தைய படங்கள் அபூர்வமே, நீங்கள் சொன்னால் ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.

 9. karthik says:

  பல்லை நறந‌றவென்று கடித்துக் கொண்டே கத்துவது
  எப்போதும் கண்ணை அகல விரித்தபடியே அநாவசியமாக எல்லா சந்தர்ப்பங்களிலுமே முழிமுழிக்கும் முகபாவம்
  ‘திரைப்படத்தில் லயித்து ரசிக்காதீர்கள்
  இது சினிமா இதிலே நாம்
  திடுப் திடுப்பென்று வசனமழை பொழிவோம் போன்ற‌ விடயங்களை
  அறிமுகபடுத்திய படமும் கூட‌

 10. karthik says:

  தூங்கிக்கிட்டு இருகிறவனெ எழுப்பினா முழிக்காம வேற என்ன செய்வான் ?
  அதுக்காக இப்படித்தான் பேயறைஞ்ச மாதிரி முழிக்கனுமா
  அடப் பாவமே ..முழிப்பதில் கூட ஓவர் ஆக்டிங் இருப்பதாக காட்டிய முதல் தமிழ்ப்படம்

  • சாரதா says:

   ‘இப்படியெல்லாம் எவ்வளவோ பிரயத்தனப்பட்டு, என்னென்னமோ எடுத்துச்சொல்லியும் அவரது அபார வளர்ச்சியைத்தடுக்க முடியாமல் போய்விட்டதே’ என்ற ஆதங்கம் உங்கள் பதிவில் தெரிகிறது. அவர் தமிழ்த்திரையில் ஒரு சகாப்தமாய் கோலோச்சிவிட்டுப் போய்விட்டார். இனிமேல் புலம்பிப்பயனில்லை.

   • virutcham says:

    முகத்திலும் பிற உடல் அசைவுகளிலும், குரலிலும் பல வித பாவங்களை காட்ட முடியும் என்று கற்றுக் கொடுத்தவர் சிவாஜி. அவரை குருவாக ஏற்று அவரது நடிப்பில் ஆங்காங்கே தெரியும் மிகையை விமர்சிக்காமல் அதை தன அளவான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி அந்த கிரெடிட் டை சிவாஜிக்கே கொடுக்கும் கமல். இதில் சிவாஜியையும் கமலையும் கூட நடிக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லுவோர் உண்டு. ரசனை மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரே விதமான ரசனை தான் இருக்க வேண்டும் என்றால் சிவாஜியின் காலத்தில் சிவாஜியின் படங்களைத் தவிர வேறு படங்கள் வந்திருக்காது. அவருக்கு பின் சினிமா இழுத்து மூடப் பட்டு இருக்கும்.

  • Ganpat says:

   என் நண்பனுக்கு..என்னுடைய 17/10/2002
   தேதியிட்ட email..
   (அவனும் ஒரு சிவாஜி ரசிகன்)

   இந்த நன்னாளில் என் வாழ்த்துக்கள்..

   இன்று சரியாக 50 ஆண்டுகள் முன்னர் ஒரு புதுமுக நடிகர் தான் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதைப்போல முதல காட்சியில் நடித்த படம் வெளியான நாள்.அன்றுதான் தமிழ் திரையுலகமே தன தூக்கத்தில் இருந்தும் விழித்தது!
   ========================================
   தேங்க்ஸ் for reminding Karthik..

 11. RV says:

  கார்த்திக், தமிழ் தெரிந்த ஒருவருக்கு சிவாஜி மேல் இவ்வளவு கோபமா? ஆச்சரியம்தான்! உங்களுக்கு என்ன வயது இருக்கும்? இது இன்றைய ஜெனரேஷனில் சாதாரண விஷயமோ என்று தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: