ஆப்ஜெக்ட்டுக்கு ஆட்ரிப்யூட் அழகு


முதல் முறை இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாட்டு கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. வான மகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள் என்ற வரிகளை நண்பர் கூட்டத்தில் சிலாகித்துக் கொண்டே இருந்தோம். யார் இந்த வைரமுத்து என்று பேசிக் கொள்வோம். அப்புறம் நிறைய பாட்டுகள் – என் இனிய பொன் நிலாவே, வானெங்கும் தங்க விண்மீன்கள், அந்திமழை பொழிகிறது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இது வைரமுத்து எழுதியது என்று ஒரு பாட்டைக் கேட்டால் அனேகமாக யூகிக்க முடிந்தது. பரவாயில்லை கண்ணதாசனுக்கு பிறகு ஒரு நல்ல கவிஞர் என்று நினைத்தோம்.

அப்புறம், அதுவும் குறிப்பாக கண்ணதாசன் மறைவுக்குப் பின், வைரமுத்துவிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. சில ஃபார்முலா வார்த்தைகள் – ராஜ வேர்வை மாதிரி – pretentious வரிகள், என்று போக ஆரம்பித்தார். “தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடி வா சிந்து” என்றெல்லாம் எழுதினார். காலேஜ் சமயத்தில் வைரமுத்து ஃபிசிக்ஸ்ல பி.ஹெச்டி போல இருக்குடா, இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்காரே என்று கிண்டல் செய்வோம். மிகவும் கடுப்பானது கண்ணுக்கு மை அழகு பாட்டு கேட்ட போதுதான். (கண்ணதாசனும் இந்த மாதிரி எந்த ஊர் என்றவளே என்று ஒரு ஃபார்முலா பாட்டு எழுதி இருக்கிறார்)

அந்த கால கட்டத்தில் மகாதேவன் ரமேஷ் எழுதிய இந்த அருமையான நகைச்சுவைக் கட்டுரை ஈமெயில் மூலம் பலரையும் அடைந்தது. இப்போது இன்டர்நெட்டிலும் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to ஆப்ஜெக்ட்டுக்கு ஆட்ரிப்யூட் அழகு

  1. Ganpat says:

    நடிகர்களை “முடித்து”விட்டு இப்போ கவிஞர்கள் பக்கம் திரும்பிருக்கா போல இருக்கு!
    😉

    RV,

    எந்த ஊர் பாட்டு ஒரு legend சுவாமி!

    கீழூரில் வாழ்வதற்கும்
    கிளிமொழியாள் இல்லையடா!
    மேலூர் போவதற்கும்
    வேளை வரவில்லையடா !!

    என்ற வரிகள் காவியம் அல்லவா!

    அப்புறம் வைரமுத்து!!

    My God!!

    பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
    வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
    துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
    குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!

    ஆஹா ஒரு 2G ஸ்பெக்ட்ரத்தையே பரிசாக கொடுக்கலாமே!

    இவருக்கும் எழுத தெரியாது!

    கடவுளே கடவுளே!

    • RV says:

      கண்பத், பல வருஷம் முன்னால் எந்த ஊர் பாட்டைப் பற்றி ஃ போரம்ஹப்பில் சண்டை போட்டிருக்கிறேன். அந்தத் திரி கிடைத்தால் மேலும் எழுதுகிறேன்.
      சாரதா, வாலி நிறைய காம்ப்ரமைஸ் பண்ணிக் கொண்டார் என்பது என் கருத்து.
      மறுமொழிக்கு நன்றி, விருட்சம்!

  2. சாரதா says:

    கவியரசர் கண்ணதாசன் காலத்திலேயே ஒரு அற்புதமான மாற்றுக்கவிஞர் உருவாகி விட்டார். அவர்தான் ‘காவியக்கவிஞர் வாலி’. சமீபத்தில் அவர் விருது பெற்றபோது அவருக்கு நான் எழுதியனுப்பிய வாழ்த்துக்கவிதை…….

    கவிஞர் வாலியே
    கவிதைகளை அள்ளி அள்ளித்தரும்
    கவியுலக வள்ளலே

    நீ வென்று விட்டாயாம் – சொல்கிறார்கள்
    நீ என்றைக்குத்தோற்றாய்
    இன்றைக்கு வெல்வதற்கு?
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    நின்று கொண்டேயிருக்கிறாய்
    வென்று கொண்டேயிருக்கிறாய்.

    அன்று கண்ணதாசனோடும் போட்டிக்களத்தில் நின்றாய்
    இன்றும் நிற்கின்றாய் – சும்மா நிற்கவில்லை
    வென்றுகொண்டே நிற்கின்றாய்
    இன்றைய இளம் கவிஞர்களின் பேரன்களோடு
    நாளைய களத்திலும் நிற்பாய் –
    அப்போதும் நீயே வெல்வாய் – காரணம், வெல்லப்பிறந்தவன் நீ,நல்ல தமிழை எமக்கு சொல்லப்பிறந்தவன் நீ.

    ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்று எழுத
    தரை நோக்கி குனிந்த உன் பேனா, இன்னும்
    தலை நிமிரவில்லை. அன்று நிமிர்ந்த உன் தலை
    இன்னும் குனியவில்லை, என்றும் குனியாது.

    எவரெஸ்ட்டின் உச்சியில் நின்றுகொண்டு, அதைவிட
    உயரம் எங்கே என்று தேடும் அண்ணனே
    உன் புகழின் உச்சியை அண்ணாந்து பார்க்கிறேன்
    உன் தங்கை என் கழுத்துக்கு வலியெடுக்கிறது.

    காவியக் கவிஞர் வாலி….
    கவிதைகளை அள்ளித் தரும் வாளி….
    நீவிர் பல்லாண்டு வாழி….

  3. virutcham says:

    நகைச்சுவைக் கட்டுரை – wow! great. வைரமுத்துவின் பெரும்பான்மைப் பாடல்களின் வெற்றிக்கு பாட்டின் மெட்டு முக்கிய காரணம். இங்கே விமர்சிக்கப் பட்ட அனைத்துப் பாட்டும் அதன் மெட்டுக்காககவும் வெற்றி பெற்றவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: