மூச்சு வாங்குகிற நேரம்


ஓடி கொண்டேயிருக்கிறோம். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது (அதென்ன மேல்-கீழ் மூச்சு என்று கேட்காதீர்கள்) கொஞ்சம் நிற்பதில்லையா? அது போல் தான் தவிர, நாங்கள் சோர்ந்துவிடவில்லை, தளர்ந்து விடவில்லை. குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்கு கோச்சாக இருப்பது எல்லாம் எங்கள் தலையில் வந்து விழுகிறது.  ஸ்கூல், காலேஜ் காலங்களில் எல்லாம் படிக்காமல் ஓப்பி அடித்தாகிவிட்டது. இப்பொழுது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டுமானால் நாமும் கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கிறது. (படிக்காமல் விடமாட்டர்கள் போலிருக்கிறது.)

இந்த மாதிரி கால கட்டங்களில் சாரதா, ஈஷ்வர் கோபால் போன்றோர்கள் கைகொடுத்தார்கள். சாரதா எங்கே போய்விட்டீர்கள்? சமீபத்தில் கொடிமலர் என்று முத்துராமன், ஏ.வி.எம் ராஜன், விஜயகுமாரி, காஞ்சனா நடித்த திரைப்படம் ஒன்று பார்த்தேன். நல்ல குடுமபப் படம். எழுதுவதற்கு நேரமில்லை. சாரதா, கோபால் உங்கள் ரிவ்யூ இருக்கிறதா?

 

Advertisements

பற்றி Bags
Trying out

16 Responses to மூச்சு வாங்குகிற நேரம்

 1. Raji சொல்லுகின்றார்:

  Semmaip padam.

 2. Ganpat சொல்லுகின்றார்:

  பொதுவாக தமிழ் வலைதளங்களில் நட்புணர்வு குறைந்தும் “தான்” என்ற மனப்பாங்கு மேலாகவும் காணப்படுகிறது.பதிவர்கள் தாங்கள் என்னமோ Newyork Times or Washington Post இல் எழுதுவதை போல அலட்டிக்கொள்கிறார்கள்.இவர்களால் ஆரோக்கியமான விவாதங்களை எதிர்கொள்ள முடிவதில்லை.பின்னூட்டம் இடுபவர்கள் இதை விட மோசம்.ஒன்று நன்றாக இருந்தால் அதை லட்சியம் செய்யாமல் குறைகளை மிகைப்படுத்தி
  நீட்டி முழங்கி குற்றம் சொல்கிறார்கள்
  தமிழ் வலைத்தளம் still in the infant stage only A long way to go.

 3. Bags சொல்லுகின்றார்:

  Raji நன்றி.

  Ganpat, I agree. ஆனால் இந்த பின்னூட்டத்தின் ரெலவன்ஸ் என்னவென்று புரியவில்லை. ஒரு வேளை எங்களைத்தான் கூறுகிறீர்களா? 🙂

 4. Ganpat சொல்லுகின்றார்:

  Bags,
  //ஆனால் இந்த பின்னூட்டத்தின் ரெலவன்ஸ் என்னவென்று புரியவில்லை.//

  பின்னூட்டங்கள் ஏதேனும் ஒரு பதிவின் தொடர்ச்சியாகத்தான் போட இயலும்.அந்த காரணத்திற்காக தான் இந்த பின்னூட்டம் இங்கு போடப்பட்டது.என்னத்த கன்னையா பாணியில் சொன்னால் “பொதுவா சொன்னேன்!”

  // ஒரு வேளை எங்களைத்தான் கூறுகிறீர்களா? //

  உங்களை”யும்” சேர்த்துதான் சொன்னேன்.
  கடுகு,உண்மைத்தமிழன் போன்றவை சில exceptions.உங்களுடைய தளத்தை எடுத்துக்கொண்டால் உங்கள் trafficகிற்க்கு வாசகர்களுடன் உங்கள் interaction மிக குறைவு.

  உண்மையில் சொல்லப்போனால் பல வலைத்தளங்கள் பர்சனல் டயரி போல எழுதப்படுகின்றன

  • Bags சொல்லுகின்றார்:

   முதலில் உங்களுடைய feedbackகிற்கு நன்றி. இது மிகவும் முக்கியாமான ஒரு ஃபீட்பேக். எஜுக்கேஷனல்.
   எங்களையும் சேர்த்துதான் என்று உங்கள் கருத்தை கூறியிருக்கிறீர்கள். அதை மதிக்கிறோம். நான் வாசகர்களுடன் சிறிது (அல்லது மிக) குறைவாக interact செய்தாலும் சக பதிவர் ஆர்வி தவறாமல் நன்றி தெரிவித்துப் பின்னூட்டம் செய்துவிடுவார். நானும் அந்தக் குறையை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன்.

   • Ganpat சொல்லுகின்றார்:

    Okay Boss..oopps Bags..Thanks and Best of Luck!
    நான்கு

    நான்கு”ந”(நட்பு,நகைச்சுவையுணர்வு,
    நேர்மை,நல்ல விஷயங்கள்)
    இருந்தால் போதுமே blog இல் தூள் கிளப்பலாமே!

    “மூச்சு வாங்குகிற நேர”த்திற்கு மூச்சு விடாமல் ஆறு பின்னூட்டம் போட்டுவிட்டீங்க போலிருக்கு” ன்னு ஒருத்தர் பின்னூட்டம் இட்டால் அவர் நட்பு கரம் நீட்டுகிறார் என்று அர்த்தம்.இதற்கு “தேங்க்ஸ் Ganpat”
    என்று ஏப்ரல் மாதம் பதில் போடக்கூடாது!

    நட்பும் நகைச்சுவை உணர்வும் இல்லாதவர்கள் டயரி எழுதுவதோடு நிறுத்திகொள்வது நலம்.

 5. BaalHanuman சொல்லுகின்றார்:

  Ganpat,

  மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  On a related note,
  “Avoid blogs, they are endless ego trips.” – இந்தியன் எக்ஸ்பிரஸில் சுஜாதா

  இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.

  • Bags சொல்லுகின்றார்:

   சுஜாதாவின் நெகட்டிவ் அப்ரோச்சை விலக்கி தாமஸ் ஃபிரீட்மேனின் பாஸிட்டிவ் அப்ரோச்சை தழுபவர்கள் இதை “இண்டிவிஜுவல் எம்பவர்மெண்ட்” என்று கூறுவார்கள்.

 6. Nakeeran சொல்லுகின்றார்:

  கொடிமலர் பற்றி :: நானும் ஒருசில காட்சிகள் பார்த்தேன். நாகேஷ் நகைச்சுவையில் பின்னுகிறார். ”மெளனமே பார்வையால்” என்ற பாட்டு இந்த படத்தில் தானே?? சாரதாவின் விரிவான அலசலுக்காக காத்திருக்கிறேன். – நக்கீரன். (அந்தகாலத்தில் புல்லட் 4500 தானாமே?? இப்போது லட்சத்தை தாண்டிவிட்டது.)

  • Bags சொல்லுகின்றார்:

   நக்கீரன்,

   ஆம், அருமையான் பாட்டு. சாரதாவை கேட்டுப் பார்க்கிறேன் எழுதுவாரா என்று.

   நன்றி

 7. BaalHanuman சொல்லுகின்றார்:

  கொடிமலர் திரைப்படப் பாடல்கள்
  ——————————-
  http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000540&lang=ta

 8. சாரதா சொல்லுகின்றார்:

  சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் ஒப்புக்கொள்ள வேண்டிய அருமையான கருத்துக்கள் மற்றும் யோசனைகள். இன்னும் சற்று விரிவாக விளக்கியிருக்கலாமோ என்று நினைக்க வைக்கின்ற அருமையான எண்ண ஓட்டங்கள்.

  இந்தப்பிரபஞ்ச உயிர்ப்பின் சுவாசப்பைகள், கருத்து பறிமாற்றங்கள் மட்டும்தானோ என்று எண்ணத்தக்க அளவில் நடைமுறை நிகழ்வுகள் இருந்தபோதிலும், அதில் எழுதுவோரின் மேதாவித்தனம் வெளிப்படுவதை சற்று குறைக்க முயலலாமோ என்று ஒரு சின்ன குறைப்படுதல் இருப்பது இயற்கையின் பாற்பட்டதே. இத்தகைய நினைவூட்டல்கள் அல்லது எச்சரிக்கை சுட்டல்கள், மற்றவர்களின் புறக்கணிப்பிலிருந்து அவர்களை விலக வைத்து, கருத்தோட்டத்தின் மீது நிலைப்பாடு கொள்ளவைக்கவே என்பதைப் புரிந்து, சுதாரித்துக்கொள்ளல் நன்மையின்பால் செலுத்தும். இதனை மனமாச்சரியங்கள் இன்றி உணர்ந்துகொள்ளல் சிலாக்கியமானது என்பதை விட சாலச்சிறந்தது என்ற சொற்றொடர் இந்த இடத்தில் மிகவும் பொருந்தி வரக்கூடியது.

  அமைக்கப்பட்ட பாதையின்மீதுதான் சென்றாக வேண்டுமென்ற தொடர்வண்டிப்பயணம் அல்ல வலைப்பூக்கள். மாறாக நினைத்த மாத்திரத்தில் வயற்காட்டுக்குள் கூட திருப்பிக்கொள்ளக் கூடிய ஈருருளை மிதிவண்டிதான் என்பது உண்மையேயாயினும், இடம், பொருள் ஏவல் கருதி மட்டுமே ‘காட்டம்’ எனும் வல்லாயுதம் பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலைப்பூ ஆசிரியப்பெருமக்கள் உணர்ந்துவிடின், பெருமளவு எழுத்து வன்முறை தவிர்க்கப்படும். அதற்காக எப்போதும் சவசவா என்று முருங்கைக்கீரைச்சாறு குடிக்கச்சொல்லவில்லை. அளவுமிகாமல் ஏற்றெழுத்துக்கள், சீற்றெழுத்துக்களாக மாறுவது அவசியத்தின்பாற்பட்டதே என்பதை மட்டும் தெளிந்தால் போதும். இரத்தம் வடிவது சற்றுக்குறையும்.

  • Ganpat சொல்லுகின்றார்:

   *****
   (5 stars)
   நன்றி புலவர் முனைவர் சாரதா அம்மையார் அவர்களே!
   அன்புடன்,
   Ganpat
   பி.கு:
   படித்தால் உண்மையாகவே மூச்சு வாங்குது!

 9. Raji சொல்லுகின்றார்:

  Forgive me for writing in English. In support of blogs as a vehicle for one’ own writings – not everyone gets published. Even if they are as Sujatha says ‘endless ego trips’ , they are harmless and an outlet for unknown and unrecognised writers. Not every blog has to deal with serious problems, they can just be personal!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: