பார்த்திபன் கனவு


இது பழைய படம். ஸ்ரீகாந்த், ஸ்னேஹா நடித்தது இல்லை. ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, ராகினி, அசோகன், குமாரி கமலா, ஜாவர் சீதாராமன் என்று பலரும் நடித்தது. இசை வேதா. கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவலை படமாக்கி இருக்கிறார்கள். இயக்கம் யோகநாத். 1960-இல் படம் வெளிவந்திருக்கிறது.

நான் பார்த்தது விஜய் டிவியில். படத்தை கன்னாபின்னா என்று வெட்டிவிட்டார்கள். முன்னால் வர வேண்டிய சீன் பின்னால் வருகிறது, பின்னால் வர வேண்டிய சீன் முன்னால் வருகிறது. கிராம டெண்டு கொட்டாய்களில் அபூர்வமாக ஆபரேட்டர் தூங்கிவிடும்போது ரீல்கள் வரிசை மாறிவிடும். சின்னப் பசங்க நாங்க ஆய் ஊய் என்று ஜாலியாக சத்தம் போடுவோம். ஆபரேட்டர் எழுந்து மாற்றுவார். விஜய் டிவிகாரர்களை என்ன செய்வது?

சரோஜாதேவி மற்றும் பாலாஜியின் பெயர் டைட்டிலில் பார்த்தேன், ஆனால் படம் பூராவும் இவர்கள் வரவே இல்லை. வில்லன் யார் பி.எஸ். வீரப்பாவா? அடையாளம் காண முடியவில்லை, ஆனால் டைட்டிலில் வீரப்பா பேர் இல்லை. நாவலை சில நாட்கள் முன்னால்தான் படித்திருந்தேன், அதனால் சீன்கள் என்ன சீக்வென்சில் வரவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் இவ்வளவு கொடுமை பண்ணக் கூடாது சார்!

கதை தெரிந்திருக்கும். மாமல்லருக்கு (ரங்காராவ்) கப்பம் கட்ட மறுத்து பார்த்திப சோழன் (அசோகன்) போர் புரிந்து இறந்துபோகிறார். இறக்கும் தருவாயில் ஒரு சிவனடியார் பார்த்திபனைப் பார்த்து உன் மகனை வீரனாக வளர்ப்பேன் என்று வாக்குத் தருகிறார். மகன் விக்ரமன் (ஜெமினி) வளர்ந்து புரட்சி செய்து சிறைப்படுகிறான். மாமல்லர் விக்ரமனை நாடு கடத்துகிறார். அதற்குள் அண்ணலும் நோக்கினார், மாமல்லரின் மகள் குந்தவையும் நோக்குகிறாள். நோக்குவது மட்டும்தான், அதிலேயே இரண்டு பேருக்கும் காதல் வந்துவிடுகிறது. நாடு கடத்தப்பட்ட விக்ரமன் செண்பகத்தீவுக்கு அரசன் ஆகிறான். தன குல சொத்தான வாளை எடுத்துப் போக திரும்பி வருகிறான். அங்கே காபாலிகர் கூட்டம் அவனை தாக்குகிறது. பல்லவ ஒற்றர் தலைவன் அவனைக் காப்பாற்றுகிறான். பிறகு அவனுக்கு அடிபட அவன் குந்தவையால் காப்பாற்றப்படுகிறான். இந்த முறை காதலை இருவரும் சொல்லிவிடுகிறார்கள். பின்னே! விட்டுவிட்டால் இன்னும் மூன்று வருஷம் போய்விடுமே! காபாலிகர் கூட்டம் சிவனடியாரை பலி கொடுக்கும்போது எல்லாரும் சரியாக அங்கே போய் அவரைக் காப்பாற்றுகிறார்கள். யார் அந்த சிவனடியார் என்ற சின்னப் பிள்ளைகள் கூட யூகிக்கக் கூடிய பெரும் மர்மம் அவிழ்கிறது. பிறகு, கல்யாணம், சுபம்!

ரங்காராவ் சிறப்பாக நடித்திருந்தார். ஜெமினி, வைஜயந்திமாலா இருவரும் அழகாக இருந்த நாட்கள். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது.

வேதா கலக்கிவிட்டார். பின்னாளில் ஹிந்திப் பட மெட்டுகளை காப்பி அடித்தே காலத்தை ஓட்டியவர் இவர்தான் என்று நம்பவே முடியாது. கண்ணாலே நான் கண்ட கணமே, இதய வானில் உதய நிலவே, பழகும் தமிழே பார்த்திபன் மகனே என்ற அருமையான பாட்டுகள். ஏ.எம். ராஜா குரல் ஜெமினிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

பாட்டுகள், வீடியோக்கள் கிடைக்காதது துரதிருஷ்டம். ஸ்டில் கூட கிடைக்கவில்லை.

படம் ஒன்றும் பிரமாதமில்லை. (நாவலும் கூட பிரமாதமில்லை.) பழைய பாட்டு, பழைய படம் என்றால் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு மட்டும்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

5 Responses to பார்த்திபன் கனவு

  1. சாரதா சொல்லுகின்றார்:

    டியர் RV,

    நீங்கள் சொன்னதுபோல படம் பரவாயில்லை ரகம்தான். சிவனடியார் வேடத்தில் வருவது யார் என்ற சஸ்பென்ஸ் எல்லாம், படிக்கும் நாவலுக்கு சுவாரஸ்யமாக இருந்ததே தவிர, படத்தில் எடுபடவில்லை. காரணம், அது ரங்காராவ்தான் என்பதுதான் நம் கண்ணுக்கே தெரிகிறதே. அப்புறம் ஏது சஸ்பென்ஸ்?.

    மற்றபடி, ‘கண்ணாலே நான் கன்ட கணமே’ பாடலைப் பார்க்கும்/கேட்கும்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் என் நினைவுக்கு வருவது, இப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, சரியாக இந்தப்பாடல் காட்சியில், தியேட்டரின் ஒரு பகுதியில் தீ பிடித்ததும், எல்லோரும் பதறிப்போய் வெளியே ஓடியதும், தீ அணைக்கப்பட்டதும் தியேட்டர் நிர்வாகி வந்து, நாளை இதே டிக்கட்டைக்கொண்டு படத்தை மீண்டும் பார்க்கலாம் என்றும் சொன்னதும் நினைவுக்கு வரும். (மறுநாள் போகவில்லை. பின்னொருமுறை வீடியோ கேஸட்டில்தான் முழுப்படத்தையும் பார்த்தேன்).

  2. eshwargopal சொல்லுகின்றார்:

    அருமை ஆர்.வி, என் பழைய மொந்தை சேர்மானத்தில் இந்தப்படம் இல்லை. தெரியாமல் போய்விட்டது, குறித்து வைத்துள்ளேன் பார்க்கவேண்டும்.

  3. Ganpat சொல்லுகின்றார்:

    கி.பி 1998 ல் வெளிவந்த TITANIC அருமையான காட்சி.கப்பல் மூழ்கிகொண்டிருக்கும் பயணிகள் உயிரைக்காத்துக்கொள்ள அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் இருப்பார்.ஆனால் இதைப்பற்றி சிறிதும் கவனமின்றி ஒரு இசைக்குழு செவ்வனே வாசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கி.பி 2001 ல் அதே போல் THE PIANIST படத்தில் வார்சா நகரில் ஜெர்மனியர்கள் குண்டு வீசிக்கொண்டிருக்க கதாநாயகன் தான் மட்டும் அந்த ஊர் வானொலி நிலையத்தில் எதைப்பற்றியும் கவலை இன்றி பியானோ வாசித்துக்கொண்டிருப்பார்!

    RVசார் எனக்கு ஒரு சந்தேகம்..இது ப்ளாக் ஆ யாஹூ குழுவா?

    பகை மறந்து பதிலளிப்பீர் என நம்பும்,

    Ganpat

  4. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

  5. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: