சாரதாவின் தளம்


தோழி சாரதா தனியாக ஒரு ப்ளாக் தொடங்கி இருக்கிறார். (அதை அவர் ஒரு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தார், மறுமொழியைக் கூட நான் சரியாக படிக்கவில்லை.) சாரதாவுக்கு காம்ப்ளிமென்ட் என்றால் இப்படி சொல்லலாம் – ஆர்வியை விடவும் பெரிய பழைய சினிமா பைத்தியம். 🙂

இங்கே வரும் பலரும் பழைய சினிமா விசிறிகள், சாரதாவின் தளத்தை தவறவிடாதீர்கள்!

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to சாரதாவின் தளம்

 1. சாரதா says:

  டியர் RV,

  தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. ‘நீங்களும் ப்ளாக் உருவாக்கலாம், நிமிடங்களில்’ என்ற அறிவிப்பில் ஈர்க்கப்பட்டு சும்மா விளையாட்டாக உருவாக்கப்பட்ட தளம். உருவான பின் அதன் அமைப்பைப் பார்த்ததும், அடடே நல்லா இருக்கே, அப்படீன்னா கொஞ்சம் சீரியஸான விஷயங்களையும் எழுதுவோமே என்று, பழைய அரசியல் நடப்புகளை (குறிப்பாக தமிழக காங்கிரஸ்) பதியத் துவங்கினேன்.

  சுடச்சுட சாம்பார் இல்லாத நேரங்களில், பழைய ஊறுகாயைத் தொட்டுக்கொள்வதுபோல, புதிய விஷயங்கள் இல்லாத நேரத்தில், ஏற்கெனவே நான் (‘அவார்டா கொடுக்கிறாங்க’ தளம் உட்பட) வேறு தளங்களில் பதிந்தவற்றையும் பதிவிறக்கம் செய்திருக்கிறேன். அரைத்த மாவைக்குறைத்து, புதிய மாவை அதிகம் தர முயற்சிக்கிறேன். தங்கள் பொன்னான நேரத்தை பாழாக்க விரும்புபவர்கள் எட்டிப்பாருங்கள்.

  மற்றபடி, அது எனது தனிக்கட்சி அல்ல. பணக்காரர்கள் இளைப்பாற வைத்துக்கொள்ளும் பண்ணைவீடு போல, அவ்வளவுதான். நான் என்றைக்கும் ‘அவார்டா கொடுக்கிறாங்க’ மற்றும் ‘கூட்டாஞ்சோறு’ தளங்களின் நிரந்தர வாசகி.

  (எல்லோரும் என்னை ‘சகோதரி’ என்று வாஞ்சையுடன் அழைத்து உறவாக்கிக்கொள்ளுவதை விரும்பும் அதே நேரத்தில், நீங்கள் அபூர்வமாக ‘தோழி’ என்றழைத்து நட்புவட்டத்தில் சிறைவைத்திருப்பது ரொம்பவே பிடித்திருக்கிறது).

  • Ganpat says:

   வாழ்த்துக்கள் நண்பரே!
   மிகச் சிறந்த பிளாக்கர் ஆக வருவதற்கு தேவையான stuff மற்றும் கடின உழைப்பு உங்களிடத்தில் நிரம்ப உள்ளது.
   நிச்சயமாக வருவீர்கள்…
   PROVIDED…
   உங்கள் முசுட்டுத்தனத்தையும்,மாற்று கருத்து கொண்டவர்கள் எதிரிகள் என்ற மனப்போக்கினையும்,சற்றே குறைத்துக்கொண்டு,
   நகைச்சுவை உணர்வையும்,நட்புணர்வையும் சற்றே உயர்த்திக்கொண்டு செயல்பட்டால்….

   அது முடியாத பட்சத்தில்….,
   “ALSATIAN”ஒரு நவீன மென்பொருள் சந்தையில் கிடைக்கிறது.அதை நம் ப்ளாகில் பொருத்திவிட்டு,நாம் மிகவும் விரும்பும் வாசகர்கள் பெயர்களை அதில் பதித்துவிட்டால் அவர்களால் நம் ப்ளாக்னிளுள் நுழையவே முடியாது.

   நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!!

   நன்றி

   • சாரதா says:

    முதலில் வாழ்த்துக்களுக்கு நன்றி கன்பத்…

    அடுத்து சில விளக்கங்கள்:

    என் பதிவுகளை முழுமையாகப் படித்தீர்களானால், எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் என்பதும், நட்புணர்வு அதைவிட அதிகம் என்பதும் தெரியும். ஆனால் எடுத்துக்கொண்ட கருத்தை நிலைநாட்டும்போது, அல்லது மாற்றுக்கருத்துக்கு பதிலளிக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே காட்டம் காட்டுவேன். அதைவிட்டு வெளியே வந்த கணமே அதை மறந்துவிடுவேன். மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை எதிரியாக நான் என்றுமே நினைத்ததே கிடையாது. என் இனிய நண்பர் ஆர்.வி.யுடன் போடாத சண்டையா?. அல்லது உங்களுடன் செய்யாத வாதமா?. ‘சச்சின் டெண்டுல்கரும், ஷோயப் அக்தரும் பரம எதிரிகள், எங்கே கண்டாலும் அடித்துக்கொள்வாரகள்’ என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து.

    எல்லோரும் படிக்கத்தான் ‘ப்ளாக்’ எழுதுகிறோமே தவிர, பிடிக்காதவர்களை நுழையவிடாமல் செய்வ்தைவிட ‘ப்ளாக்’ எழுதாமலே இருக்கலாமே. இன்னும் தீர்க்கமாகச்சொன்னால், ஒத்த கருத்துடையவர்களைவிட மாற்றுக்கருத்துடையவர்கள் அதிகம் படிப்பதில்தான் நம் எண்ணமே நிறைவேறுகிறது. ஆகவே எந்த ஸ்பெஷல் ஸாப்ட்வேர்களும் அவசியமில்லை என்பது என் கருத்து.

    வீட்டில் வயதுக்கு வந்த அண்ணனும் தங்கையும் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் அந்த தங்கையின் கால் சுண்டுவிரலில் அடிபட்டு ஒருசொட்டு ரத்தம் வந்தால் முதலில் பதறித்துடிப்பது அந்த அண்ணன்தான் (vice versa) என்பது நாம் அறியாததா என்ன?.

    என்றென்றும் நட்புணர்வுடன்… உங்கள் சாரூ….

 2. Ganpat says:

  to quote our ஊழலரசர்…..
  கண்கள் பனித்தன!இதயம் இனித்தது

  to quote our நடிப்பரசர்….
  மஞ்சள் குங்குமத்தோட சீரும் சிறப்புமா நீ
  நீடூழி வாழணும் தாயே!

  வாழ்த்துக்கள்!

  WE ARE MORE OF WHAT OTHERS THINK WE ARE THAN WHAT WE THINK WE ARE!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: