தெய்வச்செயல்


எம்ஜிஆர் நடித்து தேவர் தயாரித்த நல்ல நேரம் பார்த்திருப்பீர்கள். நல்ல நேரம் ராஜேஷ் கன்னா நடித்து தேவர் தயாரித்த ஹாத்தி மேரா சாத்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஹாத்தி மேரா சாத்தியின் மூலம்? தெய்வச்செயல் என்ற இன்னொரு தேவர் படம்தான்!

இதில் ஹீரோ மேஜர் சுந்தரராஜன்தான். அவருக்கு வழக்கம் போல அப்பா வேஷம்தான். நல்ல நேரம் எம்ஜிஆர் மாதிரியே எப்போதும் டக்சீடோ இல்லாவிட்டால் ஃபுல் சூட்டில் இருக்கிறார். (படத்தில் போஸ்ட் மாஸ்டர் கூட ஃ புல் சூட்டில்தான் தபால் ஆஃபீசுக்கு வருகிறார்) அதே மாதிரி நாலு யானை வளர்க்கிறார். அவருக்கு ரொம்ப விருப்பமான யானை பேர் ராமு. அடுத்த யானையின் பேர் அதே மாதிரி சோமு. எம்ஜிஆர் மாதிரியே இவரும் நொடித்துப் போய் பிறகு யானையை வைத்து வித்தை காட்டி அந்தப் பணத்தில் ஒரு zoo வைத்து பணக்காரர் ஆகிறார். பையன் முத்துராமன் பாரதியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பாரதிக்கு யானையைப் பார்த்து பயந்துபோய் கருச்சிதைவு. அப்புறம் யானை இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, ராமு தன் உயிரை தியாகம் செய்ய, எல்லாரும் இணைந்து சுபம்!

கதை நடிகர்களையோ இசையையோ நம்பி எடுக்கப்படவில்லை. முற்றிலும் முற்றிலும் மிருகங்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. யானை அபிஷேகம் செய்கிறது, டாக்டரை கூட்டி வருகிறது (அதுவும் வாசலில் இருக்கும் போர்டைப் படித்து இது வக்கீல், இது ஆடிட்டர், இதுதான் டாக்டர் என்றெல்லாம் புரிந்துகொள்கிறது) பூ கொண்டுவந்து கொடுக்கிறது (நல்ல நேரத்தில் தலை கூட வாரிவிடும்). ஒரு நீர்யானைக்கும் பெரிய ரோல் உண்டு. அவ்வப்போது அது வாயை திறப்பதை க்ளோசப்பில் வேறு காட்டுகிறார்கள். தேவரின் கணிப்பு சரிதான், இந்த காட்சிகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்ய அந்தக் காலத்தில் வாய்ப்பு உண்டுதான். ஆனால் ஸ்டார் வால்யூ இல்லாததால் படம் தோற்றுப் போனது. கதையிலிருந்து மற்ற மிருகங்களை விளக்கினார், ஸ்டார்களை சேர்த்தார், படம் ஹிந்தியிலும் தமிழிலும் பிய்த்துக்கொண்டு ஓடியது.

67-இல் வந்த படம். மேஜர், முத்துராமன், பாரதி தவிர ஐ.எஸ்.ஆர்., சுந்தரிபாய், ராமதாஸ் நடித்திருக்கிறார்கள். தேவருக்கும் ஒரு சின்ன ரோல் உண்டு. யாரோ திவாகர் என்பவர் இசை அமைத்திருக்கிறார். கதை தேவருடையதுதானாம். இயக்கம் எம்.ஜி. பாலு.

பாட்டுகள் ஒன்றும் சுகப்படவில்லை. வீடியோ, ஆடியோ, ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை.

நல்ல நேரத்திலேயே யானையைத் தவிர வேறொன்றும் இல்லை. இதில் நீர்யானையைத் தவிர வேறொன்றும் இல்லை.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

3 Responses to தெய்வச்செயல்

  1. சாரதா சொல்லுகின்றார்:

    இப்படத்துக்கு இசையமைத்துள்ள பி.எஸ்.திவாகர், நடிகர் ரமேஷ்கண்ணாவின் மாமனார். (இதை ரமேஷ்கண்ணாவே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்). இப்படம் தவிர ஜெய்சங்கர் நடித்த தேவரின் ‘நேர்வழி’ படத்துக்கும் அவர்தான் இசை. சுமார் பத்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறாராம்.

  2. eshwargopal சொல்லுகின்றார்:

    ஆர்வி, உங்கள் விமர்சனத்தின் கடைசிவரியை ரசித்தேன். அக்காலக்கட்டத்தில் மிருகங்களை நம்பி பல படங்கள் வெற்றிபெற்று இருக்கிறது. உ.தா: ஹாத்திமேரா சாத்தி (ஹிந்தி), நல்ல நேரம், மா (ஹிந்தி), அன்னை ஓர் ஆலயம். இதில் சுவாரசீயமான ஒன்று நல்ல நேரம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, ஓரளவு வெற்றிப்படம், இதை மிக்ஸியில் அடித்து ‘மா’ என்று எடுத்து, பின் அதையே அன்னை ஓர் ஆலயமாக எடுத்து பம்பாய்க்கும் சென்னைக்கும் பறந்தார் தேவர். இக்காலகட்டத்தில் இதுபோல் படம் எடுபடாது என்று நினைக்கிறேன்.

  3. BaalHanuman சொல்லுகின்றார்:

    சின்னப்பா தேவர் தயாரித்து , எம்.ஜி. பாலு இயக்கத்தில் , முத்துராமன், பாரதி, சுந்தர்ராஜன் நடித்த இந்த படத்தின் இசை :திவாகர்.

    படம் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை ! காரணம் ” ஸ்டார் வால்யூ ” இல்லாததால் !

    தேவர் இந்திப் படம் எடுக்க விரும்பி அதற்கு ராஜேஷ் கன்னா, தனுஜா போன்ற பெரிய நடிகர்களைப் போட்டு படம் எடுக்க விரும்பினார் ! என்ன கதை எடுக்கலாம் ?

    தேவர் யோசித்தார் ! ராஜேஷ்கன்னாவை அழைத்தார் ! தன்னுடைய பழைய படங்களை அவருக்குப் போட்டுக் காண்பித்தார் !

    என்னென்ன படங்கள் ?
    ” காட்டு ராணி ”
    ” செங்கோட்டை சிங்கம் ”
    ” நீலமலைத் திருடன் ”
    ” தெய்வச் செயல் ”

    ராஜேஷ்கன்னா, ” தெய்வச் செயல் ” படத்திற்கு பச்சைக்கொடி காட்டினார் – ஒரு ” கன் டிஷன் ” உடன் ! என்ன “கன்டிஷன்”?
    ” மிருகங்களை விட தனக்கு படத்தில் முக்கியத்துவம் தரவேண்டுமாம் !

    தேவர் சிரித்துக்கொண்டார் ! சரி என்று ஒப்புக்கொண்டார் ! என்ன படம் ? “ஹாத்தி மேரா சாத்தி ”

    இந்த படம் எடுக்கும்போது தேவரை எத்தனைப் பேர் பயமுறுத்தினர் தெரியுமா ? ” டப்பா ஆன படத்தை பெரிய நடிகர்களைப் போட்டு , அதுவும் இந்தியில் எடுக்கிறீர்கள் ! இதனால் ” தேவையில்லாத மிகப் பெரிய ரிஸ்க்” எடுக்கிறீர்கள் ! ” என்றார்கள் !

    தேவரா கொக்கா ! அவர் ” சாண்டோ ” ஆச்சே ! அசரவில்லை ! இறுதியில் வென்றார்!

    அதே தேவர் ” ஹாத்தி மேரா சாத்தி ” படத்தை மறுபடியும் தமிழில் எடுக்க முயற்சி செய்தார் !
    அனைவரும் திடுக்கிட்டனர் ! ஆனால் தேவர் கொஞ்சம் கூட அசராமல் ஒரு வேலை செய்தார் ! எம்ஜிஆர் அவர்களைப் போட்டார் !

    படம் “சூப்பர் ஹிட்”

    அந்த படம் :” நல்ல நேரம் “

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: