நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்


இரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பாடும்போதே சுகமாக இருக்கிறது!

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம்? ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது!

காட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்!

திரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார்? இசை வேதாவா? 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்!

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

5 Responses to நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்

 1. Ashok says:

  பாடல் : கண்ணதாசன்
  இசை : வேதா

 2. Nakeeran@yahoo.com says:

  ஆர்வி,

  இதே ட்யூனில் ரேடியோவில் இந்தி பாடல் ஒன்று கேட்டேன். ஓரிஜினல் இந்தியா, தமிழா ??

  நக்கீரன்.

 3. eshwargopal says:

  கவிஞரின் ஆழம் இப்பாடலில் தெரிகிறது. அவரின் கவித்துவத்தில் தவறு இல்லை. பொன்வண்டு மலரென்று முகத்தை தாக்கியதால், அதை வளைகொண்ட கையால் மூட, அந்த சலசலப்பில் கருங்கூந்தல் கலைந்து மேகங்களாக ஆகி, இடையில் இந்தக்குழப்பத்தில் பெண்ணிற்கே உரிய பயம் கவ்விக்கொள்ள, நாயகன் காத்திருப்பானே என்ற பயன் வேறு சேர்ந்துகொள்ள ஓடி வந்து அவனிடம் படப்டப்புடன் கூறுகிறார். முதலில் நாயகியை சந்தேகத்தோடு பார்க்கும் நாயகிக்கு, நாயகி தரும் சாட்டையடியாக கவிஞர் வடிவமைத்துள்ளார். சூழலையும், இடம் பெறும் தன்மையும், புனையப்பட்ட கற்பனையையும் சேர்த்து போட்டுப்பாருங்கள் – குறை தெரியாது.

 4. rajagopalan says:

  Orignal song”tuje Pyaar karthe hain karthe rahenge….

  film: april fool-year 1964
  sung by : Rafi and suman kalyanpur

  Actors; Saira banu and Biswajit.

  Tamil version is from hindi film

  raju-dubai

 5. யாரோ says:

  இந்த பாடலின் மெட்டின் அடிப்படையில் அமைந்தது தான், கங்கைஅமரனின் ‘மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே…’ என்ற பாடல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: