About


எனது அறிமுகம்:

நான் யார்? இந்த கேள்விக்கு பதில் தத்துவ முறையில் மட்டும் அல்ல ப்ளாக் முறையிலும் கடினமாகவே இருக்கிறது. 43 வயது அரைக் கிழவன். எனது வாழ்க்கையின் பெரும் சாதனை எனது இரண்டு பெண்கள்தான். பெயர் ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமண்யன். ஆர்வி என்று கூப்பிடுவார்கள். வாழ்வது நூவர்க், சிலிகான் வாலியில். ஏழு வயதில் முதன் முதலில் என் அம்மா என்னை நாங்கள் வாழ்ந்த கிராமத்தின் (லாடாகரணை எண்டத்தூர்) நூலகத்தில் சேர்த்து விட்டார். அதிலிருந்து படிப்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது. எதையாவது படிக்கவில்லை என்றால் பித்துப் பிடித்தது போல் ஆகி விடுகிறது. தமிழில் இன்று ஜெயமோகன், அன்று புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, இந்திய அளவில் ப்ரேம்சந்த், எஸ்.எல். பைரப்பா, உலக அளவில் எய்ன் ராண்ட் போன்றவர்கள் தலை சிறந்த எழுத்தாளர்கள் என்பது என் கருத்து. எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

சினிமாக்கள் எனது இன்னொரு பெரிய ஆர்வம். இந்த ப்ளாக்-இல் சன் டிவியின் 75 ஆண்டு கொண்டாட்டம் ஆக திரையிடப்படும் படங்களுக்கு விமர்சனம் எழுத உத்தேசித்திருக்கிறேன். பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஜோடிதான். இளையராஜா, ஜி. ராமநாதன், எஸ்.டி. பர்மன், பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, எஸ்.பி.பி. ஜிக்கி, எஸ். ஜானகி, ஏ.ஆர். ரகுமான், மதன் மோகன், சி. ராமச்சந்திரா, சீர்காழி, திருச்சி லோகனாதன், எழுபதுகளுக்கு முந்திய ஆர்.டி. பர்மன், ஓ.பி. நய்யார், கீதா தத், முகேஷ், கிஷோர், ஷம்ஷத் பேகம் போன்றவர்கள் மீது ஒரு விசேஷ ஈர்ப்பு உண்டு. எம்.ஆர். ராதா, அசோகன்(நான் அவரது மிகை நடிப்புக்கு விழுந்து விழுந்து சிரிப்பவன்), எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, டி.எஸ்.பாலையா, பால்ராஜ் சானி, தேவ் ஆனந்த், மோடிலால் போன்ற நடிக நடிகையர்களையும் பிடிக்கும்.

பக்சின் அறிமுகம்:

பக்ஸ் என் கல்லூரி கால நண்பன். அவன் இப்போது கோடாக்கின் ஃபோட்டோ காலரியில் வேலை செய்கிறான். பக்கத்து தெருவில் வசிக்கிறான். இந்த ப்ளாக்குக்கு தான் ஒரு guest author என்று அவன் நினைக்கிறான், co-author என்று நான் நினைக்கிறேன்!

————————————————————————————————–
Bags:
RVயும் நானும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். அந்த நீண்ட கால நட்பின் வினைதான் இதிலே நானும் என் கிறுக்கல்களை பொறித்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நூவார்க் நகரில் இருக்கிறோம். ஒரு மனைவி, ஒரு பெண் என்று என் குடும்பம். கோடாக் நிறுவனத்தில் பணி.எனது கல்வி, சென்னையில் முதல் நான்கு வருடமும்(கின்டர் கார்ட்டன் உட்பட), பெரும்பாலான் பள்ளி படிப்பு நாகர்கோவிலிலும், கடைசி நான்கு வருடங்கள் இராஜபாளையத்திலும் கழிந்தது. பின்னர் 4 வருடம் சேலம். விட்டேனா பார் என் இங்கும் பணிபுரிந்துக்கொண்டே சில வருடங்கள்.

நான் கற்றது விரல் நுனியளவு. பல புத்தகங்களை படிக்கவேண்டும் என்று நினைப்பதுடன் சரி. படிப்பதற்க்கு நேரம் இல்லாததால் (நல்ல எக்ஸ்க்யூஸ்) நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன். சஷி தரூர் 365 புத்தகங்கள் 365 நாட்களகளில் படித்தாராம். நான் மாதம் இரு புத்தகம் படித்தால் பெரிய சாதனையாக கருதுகிறேன். எழுதுவது புதிய அனுபவம். ஒரு பெரிய எழுத்தாளர் (V.S. Naipaul என நினைக்கிறேன்) நூறு பக்கம் படித்தால் ஒரு பக்கம் எழுதுவதாக ஒரு நேர்காணலில் சொன்னார். நான் எழுதுவது 3 மணி நேர சினிமா பார்த்து. பல்லை கடித்துக் கொண்டு பொறுத்து கொள்ளவும்.

என் புத்தக வாசிப்பின் பரிணாம பாதை இதுவே: பாலர் வயதில் முத்து, பொன்னி, வாசன் என்ற காமிக்ஸ் வரிசைகள். பின்னர் ரத்னபாலா, கோகுலம், அம்புலிமாமா. பின்னர் வாரப் பத்திரிக்கைகள். குமுத்ம், ஆனந்த விகடன் அப்புசாமி, சீதாப்பாட்டிக்காக படிக்க ஆரம்பித்தேன். மிக எளிதாக influence ஆகிவிடுவேன். சீதாப்பாட்டி Reader’s Digest படிப்பதானால் நானும் அப்பாவிடம் மன்றாடி சில காலத்திற்க்கு Reader’s Digest சந்தாதாரர் ஆனேன். பின்னர் சுஜாதா கதைகள் நண்பர்களிடம் ஒரு symbol of intellect ஆகிவிட நானும் நாவல்கள் படிக்கத்தொடங்கினேன். பெரிதாக படிக்க முடியவில்லை. படித்ததை நிச்சயம் enjoy பண்ணினேன். ”இன்னொரு செருப்பு எங்கே” போன்ற தமிழ்வானன் கதைகளை படித்துவிட்டு நண்பர்களுடன் விவாதித்தது மிகவும் வேடிக்கை. தமிழ்வானன் துப்பறிவது நன்றாக உள்ளதா, சங்கர்லால் தேனீர் குடித்து ஸ்டைலாக துப்பறிவது நன்றாக உள்ளதா என்று வேலை அற்றுப்போய் விவாதிப்போம். இதெல்லாம் ஒரு மகிழ்ச்சியான் அனுபவம்.

அதன் பின்னர் (அதாவது கல்லூரி காலத்திலிருந்து) எதனாலோ தெரியவில்லை குறைந்தது ஒரு பத்துவருடத்திற்க்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்க்கு ஒரு கால் புள்ளி அல்லது அறைப் புள்ளி. இப்பொழுது பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள். RV மற்றும் ப்ளாக்குகள் மூலமாக மறுபடியும் எனது தமிழ் ஆவல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன் பற்றி RV அடிக்கடி என்னிடம் கூறுவது உண்டு. இரண்டுமாதமாகத் தான் அவருடைய எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். ஆனால் உடனே ஒரு நெருக்கத்தை உணருகிறேன். குமரி மாவட்டம் என்பதாலோ என்னவோ.

சினிமா பார்க்கும் பழக்கம் சிறுவயது முத்ல் உண்டு. எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம் ”திருமலை தென்குமரி”. ஒரு காலத்தில் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன். புத்தகங்கள் போல்வே, சினிமா பார்ப்பதிலிருந்தும் ஒரு பத்து வருடம் சபாடிக்கல் எடுத்துவிட்டேன். பாடல்கள் விரும்பிக் கேட்பேன். இலங்கை வானொலி மூலம் டேப், CD player இல்லாத அக்காலத்தில் அனைத்துப் பாடல்களும் கேட்ப்பேன்.
RV எழுதாமல் என்னை விடப்போவதில்லை. நானும் எழுத அழைக்கவில்லை என்றால் அவனை விடப்போவதில்லை. மொத்தத்தில் நாங்கள் இருவரும் உங்களை விடப்போவதில்லை.

Blog அறிமுகம்

படங்களின் பட்டியல் 

36 Responses to About

 1. Pingback: “அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு! « …மற்றுமொரு துளையுள்ள பானை!

 2. வணக்கம்,

  தங்கள் அன்புக்குரிய கருத்துரைகளைக் கண்டேன், மகிழ்வு, உங்கள் உரைகளின் சாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

  மீண்டும் ஒருமுறை உங்கள் அன்புக்கு நன்றி, அடுத்த பின்னூட்டத்தில் சந்திக்கறேன்.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்
  பெங்களுர் – 2

 3. RV says:

  அறிவழகன்,

  நன்றி!

  உங்களது பல கருத்துக்களோடு நான் வேறுபடுகிறேன். ஆனால் அந்த கருத்துக்களுக்கு பின்னால் இருக்கும் தார்மீக கோபத்தை மிகவும் மதிக்கிறேன். அதனால் உங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – அது அம்பி என்று ஆரம்பித்து திட்டுவதாக இருந்தாலும் சரி. :-))

 4. Manivannan says:

  எனது நண்பர் லக்கியின் பிளாக்குகள் படிப்பதுண்டா?
  http://www.luckylookonline.com/

 5. RV says:

  மணிவண்ணன்,

  புதிய ப்ளாகரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  நான் தமிழ் ப்ளாக் உலகுக்கு புதியவன். இரண்டு மூன்று மாதமாகத்தான் தமிழ் ப்ளாக்களை படிக்கிறேன். லக்கிலுக் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. வோர்ட்ப்ரெஸ் பயன்படுத்துவதால் சில வோர்ட்ப்ரெஸ் பளாக்கள் தெரியும், அவ்வளவுதான். அதை தவிர தெரிந்ததெல்லாம், யாராவது சொல்லித்தான். ஜெயமோகன், ராஜநாயகம், இட்லிவடை, பா. ராகவன், நந்தா, இப்படி சில பேரை தெரியும், இர்ரெகுலராக படிப்பேன்.

 6. Manivannan says:

  பா.ராகவன் ப்ளாக் வைத்திருக்கிறாரா? நான் அவரது எழுத்துக்களில் ரசிகன்.
  அவரது வலைப்பூ முகவரி தரமுடியுமா?

 7. Surya says:

  வணக்கம்

  தங்களை வலை மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

  வாழ்த்துக்கள்
  சூர்யா
  சென்னை

  http://butterflysurya.blogspot.com/

 8. arun says:

  ungal blog arumai… thodarga.. thamilil kurumbadangal, ilakkiyam, varalaary, vellithirai cinemakkalukkaaga nadatthappadum inayathalam: http://www.thamizhstudio.com

  inayathalatthai paarthuvittu ungal karutthugal matrum aalosanaigalai engaludan pagirndhu kollavum. neengal thamil naattil irundhal ungal tholaipesin yen tharavum. ungal padaippugalum engalukku thevai..

  please send your mobile no to: thamizhstudio@gmail.com

 9. RV says:

  Arun,

  Congratulations on an admirable attempt at thamizh studio!

 10. arun says:

  naan ungal tholaipesi yen kettirundhe? thara iyalaadha?

  thanks,
  thamizhstudio.com

 11. Viththakan says:

  ஆர்.வி! வினவு தளத்திலிருந்து உங்களைத் தொடர்ந்து வந்து விட்டேன். மிகவும் சுவாரசியமான வலைப்பக்கம். குறிப்பாக பழைய திரைப்படங்களைப் பற்றிய அலசல் சிறப்பாக உள்ளது. உங்களது ஜாலியான பக்கமும் சீரியசான பக்கமும் சரிவரப் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

  • RV says:

   வித்தகன்,

   உங்களுக்கும் நாங்கள் சினிமா பற்றி எழுதுவது பிடித்திருப்பது மகிழ்ச்சி. நீங்கள் எழுதுவதை விடாமல் படித்து வருகிறேன். Keep it up!

 12. Rajagopalan says:

  Dear Sri RV

  I enjoy visiting your Blog as I am an old tamil movies buff. I am 52 years old Chartered Accountant from thanjavur presently in dubai for the past 5 years.As for the tamil films, i am in a “time-wrap’, still lingering in 60s and 70s films and songs of Kannadasan,Viswanathan Ramamurthy, KV mahadevan maama, etc.

  I enjoy your publishing reviews of old films from days goneby.It takes me down the memory lane.(when you hit 50 you tend to go down the memory lane often!)

  My brother in law Pramod(who has been in Boston for many years now) also studied from Salem Engg college during your studying days there. Do you know him by any chance?

  Keep writing.

  anbudan.

  raajoo

 13. RV says:

  Dear Shri Rajoo,

  Thanks for your kind words!

  I know one Pramod from Salem Engg. college – he graduated in 84 or 85 from the EEE dept, he was my senior. We weren’t very close friends, though we knew each other. I am not sure he would remember me. He may remember a Vasu from my set. Do let me know his email address!

  • Rajagopalan says:

   Dear RV

   I am delighted to hear from you.

   Yes, Pramod graduated in 84 or 85. I married his sister prasanna in 85 and I remember this guy pramod was just about “out” of college.

   In fact I wrote to him about your blog(there are quite a handful guys reading your blog in UAE area) and wondered whether he knew you.He is yet to respond.

   His mail address is”pramodk@ieee.org”.

   As for me, I am basically from tanjore,grew up in uncle’s house(cousins are in sacramanto,san fracisco respectively)till 8th standard, went on to complete school and college from poona, came down to chennai to do CA,ACS,AICWA.Completed CA.wife prasanna is an engineer from guindy college,son nikhil has just completed B.Tech in biotechnology from vellore institute of technology and is proceeding to Leed Univ in UK to do his masters in Immunology.Do bless him!

   As I said,keep writing.

   Anbudan.

   raajoo

   • RV says:

    அன்புள்ள ராஜு,

    உங்கள் குடும்ப விவரங்கள் கேட்டு மகிழ்ச்சி. உங்கள் மகன் நிகிலுக்கு என் வாழ்த்துகள்.

    அமெரிக்காவில் இத்தனை பேர் இருக்கும்போது இங்கே வர வேண்டாமா?

    இருவரும் ஒரே பிரமோதை பற்றித்தான் பேசுகிறோம் என்று நினைக்கிறேன். நானும் பிரமோதுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன்.

 14. jeeveeji says:

  ஆர்வத்துடன் படித்தேன். சேலம் அரசு கல்லூரி பற்றிச் சொல்லும் பொழுது, மனசு பழைய நினைவுகளில் சிக்கியது. நானும் சேலத்தில் படித்ததாலோ என்னவோ.
  சேலம் மரவனேரி பாரதி வித்தியாலயா ஸ்டூடண்ட் நான். என்னுடைய பதிவுகளில் நிறைய அங்கங்கே சேலம் தட்டுப்படும்.
  என்னுடைய ‘எழுத்தாளர்கள்’ பற்றிய பகுதியைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளவைகளுக்கு நன்றி.
  இந்த தலைமுறைக்கு அந்தத் தலைமுறை பற்றி சொல்ல வேண்டும் என்கிற ஒரே ஆவல் தான்.
  இந்தப் பகுதியில் எழுத, ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறேன்.
  இப்போதைக்கு இது போதும்.
  பிறகு வருகிறேன். தாங்களும் அடிக்கடி வாருங்கள்.
  மீண்டும் நன்றி.
  மிக்க அன்புடன்,
  ஜீவி.

 15. knvijayan says:

  நானும் சேலம் தான்.தற்போது பெங்களூர் வாசம்.

  • RV says:

   விஜயன், இன்னொரு சேலத்துக்காறரை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி. நீங்கள் சேலத்தில் எங்கே?

   • knvijayan says:

    நான் சேலம் காந்தி ரோடு ,சேலத்தின் மயிலாப்பூர்,நிறைய பிராமண வக்கீல்கள் வாழ்ந்த இடம்.படிப்பு,லிட்டில் பிளவர் ஹை ஸ்கூல்,அரிசிபாளையம்.

   • RV says:

    விஜயன், சேலம் பக்கம் போய் பல வருஷம் ஆகிவிட்டது. ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்…

 16. அன்பு நண்பர்கள் இருவருக்கும் என் வணக்கங்கள். உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களில் குமரி மாவட்ட நண்பரைப் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தால் மிக்க மகிழ்வேன்… எங்கு படித்தீர்கள்…பள்ளி…கல்லூரி குறித்த தகவல்களுடன்….

 17. Raji says:

  So happy to have come across this blog. Thamizh films of the last century and their music are my pet interests. Like you, Viswanathan Ramamurthy are my favourites. To read about all this gives me great pleasure.

 18. Bags says:

  Thanks Raji. We try our best. You are welcome to contribute.

 19. Raji Muthukrishnan says:

  Thamizh avvalavu nalla varathey – growing up in Delhi, I studied in a school which did not have Thamizh as a subject – is it ok to contribute in English?

 20. Bags says:

  Sure. You can write good Hindi movie reviews too.

 21. devimagan says:

  வணக்கம்,
  பிப்ரவரி மாதம் முதல் http://www.pesumpadam.net இணைய இதழ் தொடங்கப்பட்டிருகிறது.

  தமிழில் மாற்று சினிமாவிற்கான களம் அமைக்கும் முயற்சியின் விளைவே பேசும்படம்.நெட் பேசும்படம் இணைய இதழ் மாற்று சினிமாவிற்கு முதன்மையான இடமளிக்கும்.மாற்றம் கருதி தயாரிக்கப்படும் படங்களுக்கும் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கும் பேசும் படம் கூடுதலாக அக்கறை செலுத்தும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கலைக்கு மரியாதை கொடுக்கும் இந்த ஒரு முயற்சிக்கும் பேசும்படம் முக்கியத்துவம் கொடுக்கும்

 22. Mohan Raman says:

  I truly enjoyed your Reviews on Kalaikovil , Kappalottiya Thamizhan and a few more. Will surely mark your blog as one that needs to be re visited. I share your love for old Tamil Films and came across this through an Image search for S.V.Subbiah as Bharathiyar. As was said of Abu Ben Adam – May your Tribe increase…….

 23. karuppan says:

  My suggestion is to avoid reading Jeymohan books for peace-of mind.
  He is a copy-cat and confused man.

 24. Dear Sir

  Sarada Madam was writing in this blog and other blogs on tamil movies, mainly on Sivaji Ganesan movies. For the last three years, I have NOT seen any writings from Sarada Madam.

  Hope she is fine with her family. Pl let me know the current status of Sarada Madam.

 25. sundararajan says:

  அன்புள்ள ஆர் வி , தங்கள் வலைப்பூக்களைப் படித்து மகிழும் வாசகர்களின் நானும் ஒருவன். நண்பர் கிருபாநந்தன், (சென்னை) தங்களைப் பற்றி சொல்லியியிருக்கிறார். நாங்கள் குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பைக் கொண்டு மாதந்தோறும் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். குவிகம் என்ற மாதப்பத்திரிகையை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன் , ( kuvikam.com)

 26. RV says:

  அன்புள்ள சுந்தரராஜன், கிருபானந்தன் சாரும் கௌரி மேடமும் உங்களைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்கள். குவிகம் பற்றி மின்னஞ்சல்களைப் பெறுபவர்களில் நானும் ஒருவன், அதனால் தவற விடுவதே இல்லை. 🙂 இப்போதுதான் உங்கள் அமைப்பைப் பற்றியும் எழுதி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: