சாரதாவின் தளம்


தோழி சாரதா தனியாக ஒரு ப்ளாக் தொடங்கி இருக்கிறார். (அதை அவர் ஒரு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தார், மறுமொழியைக் கூட நான் சரியாக படிக்கவில்லை.) சாரதாவுக்கு காம்ப்ளிமென்ட் என்றால் இப்படி சொல்லலாம் – ஆர்வியை விடவும் பெரிய பழைய சினிமா பைத்தியம். 🙂

இங்கே வரும் பலரும் பழைய சினிமா விசிறிகள், சாரதாவின் தளத்தை தவறவிடாதீர்கள்!

லீவ்


போஸ்ட் எழுதி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னொரு வாரமாவது ஆகும், சில பல சொந்த வேலைகள். பக்ஸ் எழுதினால் உண்டு.

எங்களைப் பற்றி லக்கிலுக், புதிய தலைமுறை இதழ்


பிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.

ஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க?’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அவருக்கு நன்றி! விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

சிறை+அனுராதா ரமணன்


சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் அனுராதா ரமணன் பற்றி ஒரு பதிவு எழுதினேன். அதன் தொடர்ச்சியாக அங்கேயே விகடனில் வந்த சிறை திரைப்படத்தின் விமர்சனத்தைப் பதித்திருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் ஒரே ப்ளாகாக இருந்தால் சவுகரியமாக இருக்குமே, இந்த மாதிரி cross-reference எல்லாம் கொடுக்க வேண்டாமே என்று தோன்றுகிறது. 🙂

ஒரு விசித்திரப் பிரச்சினை


என்னால் இப்போது படங்களை வர்ட்பிரஸ்ஸில் அப்லோட் செய்யமுடியவில்லை. பதிவோடு ஒன்றிரண்டு படங்களை போடுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும். அதுவும் அன்றும் இன்றும் சீரிஸில் படம் இல்லாமல் எப்படி? பிரச்சினை தீரும் வரை ததிங்கினத்தோம்தான்…

சாரதா பக்கம்


சாரதா எனக்கு அறிமுகம் ஆனது தீவிர சிவாஜி ரசிகராக. நாங்கள் எம்ஜிஆர்-சிவாஜி சண்டை எல்லாம் கூட போட்டிருக்கிறோம். 🙂 அவர் மறுமொழி எழுதினால்தான் எனக்கு ஒரு பதிவு கொஞ்சமாவது சுமாராக வந்திருக்கிறது என்று தோன்றும். 🙂 அவர் இங்கே எழுதுவது இந்த தளத்துக்கே கவுரவம் தருகிறது. சாரதாவின் பதிவுகளை சாரதா பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். முகப்பிலேயே தெரியும். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.

சுவாரசியமான பல பதிவுகளை எழுதி இருக்கும் சாரதாவுக்கு நான் நன்றி எல்லாம் சொல்லப்போவதில்லை. அந்த நிலையைத் தாண்டிவிட்டோம் என்று நினைக்கிறேன். 🙂

கோபால், ராஜன் ஆகியோரின் பதிவுகளும் கூட்டாஞ்சோறை தாய்ப்பதிவாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ராஜா இறந்துவிட்டார் (குறைந்த பட்சம் உறங்குகிறார்), ராஜாவுக்கு ஜே!


தலைப்பு “The King is Dead (At Least Sleeping), Long Live the King!” என்பதற்கு என் மொழிபெயர்ப்பு. 😉

சில பல சொந்த பிரச்சினைகளால் எழுத ஆர்வம் குறைந்த நிலை. நண்பர் சாரதா ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார். அவரை வைத்தே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன். 🙂 இதே போல கோபாலை வைத்து கூட்டாஞ்சோறு தளத்தை ஓட்டலாம் என்று இருக்கிறேன்.

சாரதாவின் பதிவுகள் “சாரதா பக்கங்கள்” என்ற பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன. கோபால் பதிவுகளும் தனியாக தொகுக்கப்படுகின்றன.

வேறு யாரும் எழுத முன் வந்தாலும் சொல்லுங்கள்; என் ஈமெயில் rv.subbu அட் ஜீமெயில் டாட் காம். அதற்கு அனுப்பலாம். பக்சின் ஈமெயிலை தர விரும்புகிறானா தெரியவில்லை.

ஒரு லட்சம் ஹிட்கள்


அப்படி இப்படி இங்கேயும் ஒரு லட்சம் ஹிட்கள் வாங்கிவிட்டோம். படிக்கும் எல்லோருக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்:
முதலாம் ஆண்டு நிறைந்தது
ஆயிரம் மறுமொழிகள்!

கண் போன போக்கிலே கை போகலாமா தொடர்ச்சி


சாரதா, கோகுல் இருவருக்கும் நன்றி!

சரி சொல்லிவிட்டீர்கள். 1960-இல் வந்த படங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். வாரம் ஒன்றிரண்டு படத்தைப் பற்றியாவது எழுத முயற்சிக்கிறேன். அதுவும் சாரதாவும் சேர்ந்துகொண்டால் பஹூ குஷி பஹூ குஷி! (தூக்குத்தூக்கி பாலையா மாதிரி படித்துக் கொள்ளவும்)

கோகுல், மதிப்பீடுகளும் எழுத முயற்சிக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

கண் போன போக்கிலே கை போகலாமா பகுதி 1

கண் போன போக்கிலே கை போகலாமா?


2008-இல் சன் டிவியில் வார நாட்களில் பழைய தமிழ் படமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பழைய படம் – திராபையாக இருந்தாலும் – பார்க்க பிடிக்கும். சும்மா விளையாட்டாக பார்த்த படத்துக்கு எல்லாம் விமரிசனம் எழுத ஆரம்பித்தேன். அதையும் படிக்க ஒரு பத்து பேர் வந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது.

சன் டிவி படம் போடுவதை நிறுத்தியதும் இந்த ப்ளாக்கின் input stream வற்றிவிட்டது. அப்புறம் எங்கேயாவது (விகடன் பொக்கிஷத்தில் வரும் விமர்சனம், ராண்டார்கை ஹிந்துவில் எழுதும் பத்திகள், யாராவது எனக்கு பிடித்த படம் என்று போடும் லிஸ்ட்) ஏதாவது கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது ரெகுலராக எழுத முடிவதில்லை. கண்ணில் பட்டால்தானே எழுதத் தோன்றுகிறது? கர்நாடகாவில் வெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும், அந்த மாதிரிதான் யாராவது ஏதாவது எழுதினால் நானும் அதை வைத்து மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நடுவில் கம்ப்யூட்டர் தகராறு வேறு, மாதக் கணக்கில் எழுத முடியவில்லை.

என் கனவுலகத்தில் பழைய சினிமா என்று இந்த ப்ளாகுக்கு வந்து நீங்கள் தேடினால் – “சபாபதி” என்று வைத்துக் கொள்வோமே? – என் விமர்சனம், எனக்கு பிடித்த சில பதிவர்கள் – சூர்யா மாதிரி – ஏதாவது எழுதி இருந்தால் அந்த பத்தி, பழைய பத்திரிகை விமர்சனம் (விகடன், குமுதம், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிகைகள்), பாட்டு, வீடியோ லிங்க் எல்லாம் கிடைக்க வேண்டும். இது கஷ்டம்தான். இப்போது இருக்கும் பத்திகளையே navigate செய்வது நச்சுப் பிடித்த வேலை. கனவுலகம் வெகு தூரத்தில் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம், டே என்னை ஏய்க்காதே! ஹ! ஹ! ஹஹ்ஹஹா! என்று என் மனசாட்சியும் சிவாஜி மாதிரி சிரிக்கிறது.

இந்த வருஷம் ரெகுலராக எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரத்துக்கு ஒரு பத்தி என்றாலும் சரி, நாளைக்கு பத்து பத்தி என்றாலும் சரி, என்ன வரப் போகிறது, எப்போது வரப் போகிறது என்று தெளிவாக சொல்லி விட விரும்புகிறேன். முதலில் என்ன எழுத வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

இதை படிக்கும் 42 பேருக்கு ஒரு கேள்வி. என்ன மாதிரி பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது? நீங்கள் இது வரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்றிரண்டு பத்திகள் என்ன என்று சொல்லுங்கள். அது ஓரளவு உதவியாக இருக்கும். உங்கள் பதில் நிச்சயமாகத் தேவை. இல்லை என்றால் மீண்டும் கண் போன போக்கிலே கை போக வேண்டியதுதான்!