சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை


தமிழ் ஸ்டூடியோவின் வேண்டுகோள்:

(முன்குறிப்பு: முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்து கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 95787-80400)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டையும், வெவ்வேறு பருவத்தினருக்கான திரைப்பட ரசனை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. அதன் படி இந்த ஆண்டு (2014) சிறுவர்களுக்கான திரைப்பட ரசனையை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. பத்து வயது முதல், பதினேழு வரையிலான சிறுவர்களுக்கு திரைப்படம் சார்ந்து ரசனை வளர்க்க இந்த ஆண்டு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாலு மகேந்திராவின் ஆசைப்படி, திரைப்பட ரசனையை பள்ளிகளில் பாடமாக வைப்பதில் இருக்கும் பிரச்சனை, அதிலும் தேர்வு வைப்பார்கள், தேர்ச்சி வேண்டும் என்பார்கள். சிறுவர்கள் இப்படியான படங்களை பார்த்து, அதை தேர்வு எழுத வேண்டும் என்கிற விதிமுறைக்குள் நுழையும்போது, அனிச்சையாகவே திரைப்பட ரசனை மீதும் ஒருவித வெறுப்பு ஏற்படும். மாறாக, திரைப்பட ரசனை என்பது, சிறுவர்களுக்குள் இயல்பாக துளிர்விட வேண்டும், விளையாட்டின் மீது தன்னியல்பாக ஏற்படும் ஆர்வத்தை போல, நல்ல திரைப்படங்கள் மீதும் தன்னியல்பாக ஆர்வம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் திரைப்பட ரசனையை வளர்ப்பதும், காட்சி பிம்பங்களின் தாக்கத்தை பற்றி அவர்களை அறிய செய்வதும் சுலபமான ஒன்றாக இருக்க முடியும்.

மேலும், தமிழ் திரைப்படங்களை மட்டுமே பார்த்து இருபது-இருபத்தியைந்து வயது வரை வளர்ந்துவிட்ட பிறகு, அவர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்ப்பது அத்தனை எளிதல்ல, அதற்குள் அவர்கள் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வெகுஜன ரசனைக்குள் தங்களை இரண்டறக் கலக்க செய்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு வயதுக் குழந்தை கூட திரைப்படங்களையோ, திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சியையோ பார்க்காமல் வளர்வதற்கான எந்த சூழலும் இல்லை, இந்நிலையில் இருபது ஆண்டுகள் இப்படியான மோசமான படங்களை பார்த்து, அதனூடாகவே தன்னை கட்டமைத்துக் கொள்ளும் இளைய தலைமுறை, பல்வேறு விதங்களில் இந்த மோசமான சினிமாவின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகிறார்கள். இவர்களை இருபத்தியைந்து வயதிற்கு மேல் நல்லத் திரைப்படங்களை நோக்கி திருப்புவது என்பது அத்தனை எளிதானது அல்ல, எனவே பத்து வயதில் இருந்தே சிறுவர்களுக்கு நல்ல திரைப்படம் என்றால் என்ன? திரைப்படங்களை எப்படி பார்க்க வேண்டும்? திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? காட்சி பிம்பங்களின் வழியே ஒரு கதையை சொல்வது எப்படி? ஒரு அனுபவத்தை கொடுப்பது எப்படி? சமூகத்தை சீரமைக்க/சீரழிக்க சினிமா எப்படி ஒரு காரணியாக செயபடுகிறது என்பதுப் போன்ற பல்வேறு விசயங்களை எளிதாக கற்றுக்கொடுப்பதன் வாயிலாக அவர்களை இளம்பருவத்திலேயே நல்ல திரைப்பட ரசனை நோக்கி, திருப்பிவிட முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

இதற்காக தமிழ் ஸ்டுடியோ இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை, கருத்துப் பட்டறைகளை, திரைப்பட உருவாக்க முறைகளை சிறுவர்களுக்காக நடத்தவிருக்கிறது. இதன் முக்கியமான ஒரு பகுதி, மே மாதம் தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கும் சிறுவர்களுக்கான திரைப்பட விழா. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியான சிறந்த திரைப்படங்களை, தமிழ் சப்-டைட்டில் உடன் இந்த திரைப்பட விழாவில் திரையிடவிருக்கிறோம். தவிர, சிறுவர்களுக்கு திரைப்பட ரசனைப் பற்றிய வகுப்பு, அவர்களுக்கு இயல்பாகவே நல்ல திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட சில திரைப்பட விளையாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் இந்த திரைப்பட விழாவின் வாயிலாக நடக்கவிருக்கிறது.

முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 9578780400

மாற்றத்தை நோக்கி நகர விரும்பும் அத்தனை நண்பர்களும், இந்த சிறுவர் திரை ஆண்டை தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து கொண்டாட தயாராக இருங்கள். குறைந்தபட்சம், உங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்காவது நல்ல திரைப்பட ரசனை உருவாக வழிகாட்டியாக இருங்கள். சினிமா சமூகத்தை சீரழிக்கிறது, சினிமா ஒரு மோசமான ஊடகம், சினிமாவால் எவ்வித பயனும் இல்லை, சினிமா பார்த்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள், என்று சினிமாவை அறவே ஒதுக்காமல், அப்படியான மோசமான பொதுப்புத்தியை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல சினிமா பற்றி புரிந்துக் கொண்டு, அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை, நல்ல சினிமா ரசனை நோக்கி திருப்ப முயலுங்கள். தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து இந்த சிறுவர் திரை-ஆண்டை கொண்டாடுங்கள்.

(பின்குறிப்பு: தங்களால் இயலாது என்றாலும், நண்பர்கள் இந்த அறிவிப்பை தங்கள் நண்பர்களுக்கு மத்தியில் எடுத்து சொல்லி, அவர்களை உதவ செய்யலாம். அல்லது இதை எல்லோர் மத்தியிலும் எடுத்து செல்ல ஒரு ஊடகக் கருவியாக செயல்படலாம். இந்த திரைப்பட விழாவில், சிறுவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னார்வலராகவும் செயல்படலாம். தொடர்புக்கு 95787-80400)

எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!


‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறுகிறார்…..

எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்.ஜி.ஆரைத் தத்தெடுத்து வளர்த்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.  அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.
https://i1.wp.com/www.mgrhome.org/Pictures/image005.gif
பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான  விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை  அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.  அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது!


ஆசிரியர்: ஜெயராமன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சமையல்
ISBN எண்: 978-81-8476-103-0
விலை:  ரூ. 45விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!
தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!
தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.
வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு–>படிப்பு

2010 ஆஸ்கார் முடிவுகள்


ஆஸ்கார் பரிசுகளின் முடிவுகள் உங்களுக்கு இதற்க்குள் தெரியாமலா இருக்கும்? இருந்தாலும் எங்கள் கணக்கிற்கு நாங்களும் பதிவு செய்து விடுகிறோம்.

சாண்ட்ரா புல்ல்க், அவாடார் – அவார்ட் கிடைக்கும் என்று எதிர் பார்த்ததே.
ஹர்ட் லாக்கர் – எதிர் பார்க்கவில்லை

”அவதார்”க்கு பெஸ்ட் சினிமாட்டோகிராபி அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது – சினிமாட்டோகிராபிக்கும் இதற்க்கும் சம்ப்ந்தம் இல்லை. இதன் சிறப்பு  கம்ப்யூட்டர்ல் செய்த  அனிமேஷன் வேலைகள் என்று ஒரு அதிருப்தி. அது சரி – சினிமாட்டோகிராபி என்றால் அப்படி என்னதான் செய்கிறார்கள்?

பரிசு விவரங்கள்

Performance by an actor in a leading role: Jeff Bridges in Crazy Heart

Performance by an actor in a supporting role: Christoph Waltz in Inglourious Basterds

Performance by an actress in a leading role: Sandra Bullock in The Blind Side

Performance by an actress in a supporting role: Mo’Nique in Precious

Best animated feature film of the year: Disney / Pixar’s UP

Achievement in art direction: Avatar

Achievement in cinematography: Avatar

Achievement in costume design: The Young Victoria

Achievement in directing: The Hurt Locker Kathryn Bigelow

Best documentary feature: The Cove

Best documentary short subject: Music by Prudence

Achievement in film editing: The Hurt Locker

Best foreign language film of the year: The Secret in Their Eyes (El

Secreto de Sus Ojos)

Achievement in makeup: Star Trek

Achievement in music written for motion pictures (Original score): Up

Achievement in music written for motion pictures (Original song): “The Weary Kind (Theme from Crazy Heart)”

Best motion picture of the year: The Hurt Locker

Best animated short film: Logorama

Best live action short film: The New Tenants

Achievement in sound editing: The Hurt Locker

Achievement in sound mixing: The Hurt Locker

Achievement in visual effects: Avatar

Adapted screenplay: Precious

Original screenplay: The Hurt Locker


டி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது


டி.கே. பட்டம்மாள்

டி.கே. பட்டம்மாள்

ஏப்ரல் 1, 1936-இல் டி.கே.பட்டம்மாளை பற்றி கல்கி எழுதி இருப்பது. கல்கி கர்நாடகம் என்ற புனைபெயரில் கச்சேரிகளை பற்றி எழுதிய விமர்சனங்கள் அந்த காலத்தில் மிக பிரபலம். அப்படி எழுதப்பட்ட ஒரு விமர்சனம் இது. விகடனுக்கு நன்றி!

சங்கீத வானில் ஒரு புது நட்சத்திரம்!

இந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ்வருஷம் அடிக்கடி ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்சேரிகள், இவ்வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட நம்பிக்கையை மெய்ப்படுத்தின.

உயர்தர சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.

சாரீரம்:- இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம். ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.

அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது. கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில் பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய் அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும் பொருந்தியது.

வித்தை:- சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும் இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப்பாடுகளைக் காண்கிறோம்.

நாலு களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலி ருந்து சதுச்ர நடைக்கும் மாறு கிறார். இது மிகவும் அபூர்வமான திறமை!

ஸ்ரீமதி பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது. ஸ்ரீமான்கள் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம் ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ பிடித்தது போல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் ‘இமிடேஷன்’ செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன் பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன.

ஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில் கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங்காலத்தில் இவருடைய பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.

இளம் வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக் கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல் அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார்கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில் அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். ‘முன்னு ராவணா’, ‘சிவே பாஹிமாம்’, ‘மானஸ குரு குஹ’, ‘அக்ஷயலிங்க விபோ’ முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன. கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. புதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.

– கர்நாடகம்

தொடர்புடைய பதிவுகள்
டி.கே. பட்டம்மாள்
பட்டம்மாள் பற்றி ஜடாயு

அவர்கள் (Avargal)


avargal

1977ல் வந்தது.

அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.

வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.

பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.

ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.

அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.

ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்)  குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.

கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.

”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது.  அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள்.  M.S. விஸ்வனாதன் இசை.

பாலச்சந்தர் கிளாசிக்.

10க்கு 6.

இதோ வருகிறேன் – பி.ஆர்.பி (BRB)


இப்ப நீ எழுதலைன்னு யாரும் அழவில்லை, என்பவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி: நான் கடந்த இரண்டு வாரமாக வேலையில் மிகவும் திக்கு முக்காடி போய்விட்டேன்.

கார்ப்பரேட் எக்ஸிகுயூட்டீவ்கள் கம்பெனியையும், பங்குதாரர்களையும், பல குடும்பங்களையும் அழித்ததில்லாமல், சம்பந்தமேயில்லாத நம்மையும் அல்லவா இம்சித்துவிட்டார்கள். சர்பேன் ஆக்ஸ்லி (SOX) மசோதவை பற்றி தான் சொல்கிறேன். செத்தும் கெடுத்தான் சீதகாதி வள்ளல்என்று கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கதையாக அல்லவா ஆகிவிட்டது! (இதை பிரசுரித்த பிறகு – இந்த பழமொழி ”செத்தும் கொடுத்தான் சீதகாதி வள்ளல்” என்று சாரதா எனனை திருத்தினார். விவரங்கள் கிழே மற்றும் பின்னூட்டத்தில் – நன்றி சாரதா) இவர்கள் போய் விட்டார்கள். அவஸ்தை நமக்கு. இதில் SOX போதாதென்று PCI, IC, TCS போன்ற மற்ற கம்ப்லையன்ஸ் வேறு. இருக்கிற வேலை போதாது என்று இதற்கு எவிடன்ஸ், அதற்கு எவிடென்ஸ் என்று ஆடிட்டர்கள் போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடமையைத் தான் செய்கிறார்கள். ஆனால் ”சத்யம்” என்ற முழுபூசனிக்காய்  சோற்றில் மறைத்த பிரைஸ் வாட்டர்ஹவ்ஸ் போன்ற ஆடிட் அலுவலை பார்க்கும் பொழுது இதெல்லாம் என்ன பயன் எனத் தோன்றுகிறது. “யாரைத்தான் நம்புவதோ பூமியிலே!” (”யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்” இது வெங்கட்ராமன் திருத்தியது – நன்றி வெங்கட்ராமன்) என்றும் பாடத் தோன்றுகிறது. ஆமாம், இந்த பாட்டு எந்த திரைப்படத்தில்?

“நீ ஏன் எழுதவில்லை?என்று உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு: (உலகத்தில் உணவு பற்றாகுறை கடந்த இரண்டு வாரம் மிக அதிகம் என்று கேள்வி படுகிறேன்) அலைகள் இன்னும் இரண்டு வாரம் இருக்கலாம். ஆனாலும் எழுத முயல்வேன்.

சாரதா கூறுகிறார்:

வள்ளல் சீதக்காதி இறந்து விட்டார் என்பதையறிந்த புலவர் வெளியூரில் இருந்து, வள்ளல் வீட்டுக்கு சில தினங்கள் கழித்து வந்துள்ளார். வள்ளல் இறப்பதற்கு முன் தன் குடும்பத்தாரிடம் ஒரு தங்க மோதிரத்தைக்கொடுத்து, புலவர் வந்தால் அவரிடம் கொடுக்கும்படி சொல்லி, இறந்துவிட்டார்.

துக்கம் விசாரிக்க வந்த புலவரிடத்தில் குடும்பத்தார் அந்த மோதிரத்தைக் கொடுத்து விவரம் சொல்ல, புலவர் அதிர்ந்து போய், (இறந்து விட்டார் என்றறிந்து விசாரிக்க வந்த இடத்திலும்) தனக்கென ஒரு பரிசினை விட்டுச்சென்ற வள்ளலை நினைத்து “செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலே” என்று பாடினாராம்.

வெங்கையாவா வேங்கையாவா! – திரையுலக வரலாறு 5


அந்த காலத்து திரைப்படம் என்றால் அந்த காலத்து விஜய் அல்லது அந்த காலத்து சூர்யா வந்து உலகமே எதிர்க்கும் காதலர்களை, தன் வாதத் திறமையால் அந்த உலகம் ஸ்த்ம்பிக்கும்  ”லா பாயிண்டுகள” எடுத்து விட்டு  ஒரு வழியாக கத்திகளும், ரிவால்வர்களும் சோகமாகிப்போய் வன்முறை அப்பாக்கள் கையிலிருந்த நழுவ, சேர்த்து வைத்து,  காதலர்களை ரயிலில் ஏற்றி விட்டு, தன் காதல் மட்டும் சக்ஸஸ் ஆகாமல் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளுடன் சோகமாக ரயிலை பார்த்து ஆரம்பித்த டாட்டா சினிமா பார்க்க வந்த ரசிகர்களில் வந்து முடியும் டைரக்டோரியல் டச்சுடன் “இவரது காதல் அர்ப்பணம் தொடரும்” என்று திரையின் ஒரு பாதியை ஆக்ரமிக்கும் வாசகங்களுடன் வீட்டிற்க்கு போய் சேரும் வரை விக்கி விக்கி அழுவதற்க்கு கணிசமாக சோகத்தை பேக் செய்து கொடுக்கும் ஒரு ஃபுல் சர்வீஸ் “எண்டர்டெயின்மெண்ட்” பேக்கேஜ் இல்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவர் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கதை கத்தரிக்காய் ஒன்றும் இல்லாத ”ஓடும் குதிரைகள்” அல்லது “தவழும் பாப்பாக்கள்” அல்லது காமிராவை ஆஃப் செய்ய மறந்த பொழுது அனாவசியத்துக்கு வந்து விழுந்த மண் தரைகள், கால்கள போன்ற காட்சிகள் தான் அன்றைய தமிழ் ரசிகர்களை வசீகரித்தவைகள். இந்தப் பேரானந்தக் கொடுமையைப் பார்க்க தமிழர்கள் கலங்காமல் காசை அள்ளிக் கொடுத்தார்கள். ஐரோப்பியர் கலங்காமல் காசை அள்ளினார். இன்று ஹாண்டிகாமில் ”நல்லா விழவில்லை, அழித்துவிடுங்கள்” என்று கோபமாக மணைவி கட்டளையிடும் காட்சிகளின் தரத்தை சேர்ந்தவையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.

சாமிகண்ணு வின்செண்டும் மக்களை எண்டர்டெய்ன் பண்ணியவர்களில் ஒருவர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இப்படி ஒன்றும் இல்லாததெற்கெல்லாம் பரவசப்பட்டு  சினிமா பார்த்து வந்த் நிலமையில் இருந்த ரசிகர்களுக்கு முன்னேற்றமாக கதையுடன் கூடிய பரவசங்களை கொடுத்தவர்கள் தான் நடராஜ முதலியார், ஆர். வெஙகையா, ஆர். பிரகாஷ், மற்றும் பலர். இரண்டாவது பத்தாண்டில் தான் ஓரளவு சினிமா டேக் ஆஃப் பண்ணியது எனலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் முப்பதுகளில் தான் சினிமா டாப் கியாருக்கு மாறியது.  நாம் முன்னரே நடராஜ முதலியார் பற்றி மாவு அறைத்து விட்டோம்.

R. Vengaiah

R. Vengaiah

ரகுபதி வெங்கையாவும், ரகுபதி பிரகாஷ்ஷும் சக்கை போடு போட்ட தந்தையும் மகனும். 1914ல் கெய்ட்டி தியேட்டரை தொடங்கிய வெங்கையா மகனுடன் சேர்ந்து  “கிழக்கின் நட்சத்திரம்” (Star of the East) என ஒரு ஸ்டுடியோவை நிறுவினார்.  வெங்கையா இந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களை வெளியிட்டார். நடராஜ முதலியாருக்கு கீச்சகவதம் என்றால் வெங்கையாவுக்கு பீஷ்மவதம். இதோ பட்டியல்:

பீஷ்மவதம் (1922)

நந்தனார் (1924)

சமுத்ர மதனம் (1923)

கஜேந்தர மோக்‌ஷம் (1924)

உஷா ஸ்வப்னா (1924)

திரௌபதி பாக்யா (1924)

மஹாத்மா கபீர்தாஸ்(1925)

R. Prakash

R. Prakash

லைலா என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தார் பிரகாஷ். எக்கச்சக்க காசுகள் ரசிகர்கள் பைகளிலிருந்து இந்த தந்தை-மகனின் பைகளுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தது. அண்டை நாடுகளுக்கும் இவர்கள் புகழ் கப்பலேரி போயிற்று. பணமாக உறுமாறி திரும்பி வந்தது.

பிரகாஷும் கப்பலேறினார். ஏற்கனவே காமிராமேன் ஆன பிரகாஷ் தன் திறமையை சத்தாக்க இங்கிலாந்து சென்றார். திரைப்படத் தயாரிப்பை முறையாக லண்டனில் “பேக்கர்ஸ் மோஷன் பிக்ஸ்ர்” ஸ்டுடியோவில் கற்றார். ஹாலிவுட் போனார். டி.ட்பிள்யூ. கிரிஃப்ஃபித் மற்றும் சிசில் பி டிமெல்லுடன் பணி புரிந்தார். வென்றார். வந்தார். மேலும் படங்கள் தந்தார்.

கூட்டாஞ்சோறு சாப்பிட போய்விட்டேன்


உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. இன்று இங்கே நான் பதியவில்லை 🙂  ஆனாலும் உங்களை விட்டுவைக்கக்கூடாது என்பதற்க்காக கூட்டாஞ்சோற்றில் ஒரு பதிவை இட்டிருக்கிறேன்: No Need to boo; we need to vote

சினிமா சினிமா பதிவு


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில் என்று நினைவு இல்லை. பெருக்கி வகுத்துப் பார்த்தால், ஒரு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம். நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா “திருமலை தென்குமரி”. (இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள் – ஒரு பேருந்தில் பயணிகள் ஏறும் காட்சி, ”திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று ஒருவர் பாடும் காட்சி. (சீர்காழி கோவிந்தராஜனா? – இந்த இரண்டு காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இல்லை என்றால் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் இந்த திரைபடம் இல்லை எனத் தெரிகிறது. நல்லா மாட்டிக்கொண்டேன்!)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி, த பாஸ். (நண்பர் RVயுடன், மற்றும் மனைவியுடன்). நல்ல காமடி. (என் மனைவி இந்த படத்தில் லாஜிக் தேடியதை சொல்கிறேன்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இக்காலத்தில் இதற்கு நூற்றுக்கு தொன்னூறு பேர் சொல்லும் அதே பதில் தான். ”டி.வி.யில் தான்”.

அன்னையும் பிதாவும்

”பெரிசா ரீல் விட்டால் எந்தப்படமும் பெட்டிக்குள் ரீலாகவே இருக்கும்” என்று நினைத்தேன். குடும்பம் என்ற சமுதாய ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் எத்தனை விதமாக கதை மற்றும் பணம் பண்ணியிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ஒடஓட தாக்கிய திரைபடங்கள் எத்தனை எத்தனையோ!

என் உடல் வீங்கும் அளவிற்கு தாக்கிய சினிமாக்கள் Dr. சிவா, தீ, நெருப்பு,  போன்ற எண்பதுகளில் வந்த சிவாஜி, சிவாஜி ராவ் சினிமாக்கள். கமலும் விட்டுவைக்கவில்லை. அவரும் சில படங்கள் மூலம் கும்மாங் குத்து குத்தினார்.

ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியது பத்தில் ஐந்து தமிழ் சினிமாக்கள்.

இப்படி தாக்கப்பட்டு குற்றுயிராக எழுந்து நின்றால் அவ்வப்பொழுது சில சினிமாக்கள் லேசாக மனதை தாக்கியது. (நீங்கள் குறிப்பிடும் தாக்குதல் இது). வெவேறு காலகட்டங்களில் வெவ்வேறு சினிமாக்கள் வெவ்வேறு விதமாக தாக்கியதுண்டு. இதை எப்படி பட்டியல் போட?  அட, பட்டியல் கூட என்னை தாக்கியதுண்டு.

விவரமாக எந்த வகையில் தாக்கியது என்று சொல்லாவிட்டாலும், சிலவற்றை பட்டியலிடுகிறேன்:

அன்பே சிவம்

யாருக்காக அழுதான் – (பாதிக்கு மேல் புரியவில்லை – அது நல்ல சினிமா தானே 🙂 )

உன்னால் முடியும் தம்பி

அந்த நாள்

வீடு

உச்சக் கட்டம்

இன்னும் எத்தனை எத்தனையோ! ஆனால் என் வாழ்க்கையையோ, சிந்தனையையோ மாற்றும் அளவிற்க்கு தாக்கிய படம் நான் எடுத்தால் தான் உண்டு (போட்ட பணமெல்லாம் காணாமல் திவாலானால் வாழ்க்கையும் மாறும், சிந்தனையும் மாறும்)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றுமிலலை. ஒன்று இருந்தால் அது “குப்பி”

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பம் காலம் சம்பந்தப்பட்டது. காப்பி அடித்தாலும் அது வேகமாக காப்பி அடிக்கப்பட்டால் ஒரளவு தாக்கம் இருக்கும். ஆனால் காலம் கடந்து தரப்பட்டால் அதுவே கடுப்பாகி போகும்.

உதாரணங்கள்:

வேகமாக காப்பி அடிக்கப்பட்டு தாக்கியது: சமீபத்தில் பார்த்த அந்த நாள் – படம் எடுக்கப்பட்ட காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் இது ஒரு ஹை-டெக் படம்.

மெதுவாக காப்பியடிககப்பட்டு கடுப்படித்தது –  சிவாஜி, த பாஸ்(2007). “மாட்ரிக்ஸ்”(1999) டெக்னிக் பழைய கஞ்சி. அதுவும் க்ளைமாக்ஸில் போய சோகப்படுத்தியது.

”பாய்ஸ்” (2003) படத்தில்  “மாட்ரிக்ஸ்” யுத்திகளை அப்படியே காப்பி அடிக்காமல் பாடல்களுக்கு டிரான்ஸிஷன் செய்தது நன்றாக இருந்தது. சண்டை காட்சிகளை விட பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது போன்று எனக்குத் தோண்றியது.

எனக்கு யாரேனும் வாய்ப்பு கொடுத்தால் (அதாவது பணம் கொடுத்தால்) “சந்திரேயன்” என்ற ஹை-டெக் படம் எடுப்பேன். (நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஒருவர் கூட கொடுக்கமாட்டார்கள் என்று. அப்படி ஒருவர் நிதானம் தவறிவிட்டால் 4 ஆம் வினாவின் பதிலில் கடைசி வாக்கியத்தை படிக்கவும்; பின்னர் கொடுப்பதை பற்றி மறுபரிசீலனை செய்யவும்)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

”பேசும் படம்” என்று ஒரு பத்திரிக்கை வந்தது. அப்பொழுது வாசித்தது. இப்பொழுது இணைய தளம் மற்றும் ப்ளாக் முலம். இப்பொழுது ஆர்வம் அதிகம் இருப்பதால் புத்தகங்கள் கிடைத்தால் படிப்பேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?

விரும்பிக் கேட்பதுண்டு. அதற்க்காக “ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே, நான் புடிச்ச சிண்டு தானே” போன்ற பாடல்களையெல்லாம் சகிக்க முடியாது. பழைய SPB பாடல்கள் மிகவும் பிடித்தாமானது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி சினிமாக்கள் பார்ப்பதுண்டு. (புரிந்தால் தானே தாக்கம் இருக்கும்) இப்பொழுதெல்லாம் ஆங்கில சப்-டைட்டில் வருவதால் பிரச்சனை குறைந்து விட்டது. ”சக் தே இந்தியா” (Longest Yard என்ற ஹாலிவுட் படத்தின் வேரியன்ட் இது), ”கோஷ்லா கா கோஸ்லா” (தமிழில் இப்பொழுது ”பொய் சொல்லப் போறோம்”) போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்தவை. பழைய படங்கள் பார்ப்பதுண்டு. சப்-டைடில் இருந்தால் இன்னும் உற்சாகமாக பார்ப்பேன்.

ஆங்கில மொழி படங்கள் பார்ப்பதுண்டு. ஓட, ஓட, உடம்பு வீங்க, ரத்தம் வர தாக்கிய படங்கள், மனதை தாக்கிய படஙகள் இங்கேயும் உண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.  எதாவது செய்யவேண்டும் என் நினக்கிறேன். இப்பொழுது முடிந்தது திரைப்படம் பற்றிய ப்ளாக் எழுதுவதுதான்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விஜிலாண்டிஸ்ம், சண்டை மற்றும் பாட்டு இவை இல்லாமல் சினிமா இல்லை என்ற காலகட்டத்தில் பவணி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம். இந்த ஃபேஸ் (phase) முடிந்து (கொஞ்சம் நீநீநீநீநீநீநீளமான ஃபேஸ – அநியாயத்துக்கு தமிழ் மக்கள் ஆக்‌ஷன் மூவீஸ் என்ற அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்கள்) அடுத்த ஃபேஸ் (யதார்த்தம் dominate செய்யும் ஃபேஸ்) வரும் பொழுது தரமான படங்கள் வரவாய்ப்பு இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படம் பார்ப்பது அதிகமாகும்.

தமிழர்கள் பல விதமாக வகைப்படுத்தலாம். குழந்தைகள், இளைய தலைமுறை, மாணவ சமுதாயம், வேலைக்குப் போவோர், வேலையற்றவர்கள், வேலை தேடுவோர், பெண்கள், குடும்பத்தலைவிகள், குடும்பத்தலைவர்கள், குடும்பத்தலைவலிகள்…இப்படி எத்தனையோ வகைகள்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஆகலாம். அனைத்தையும் இங்கே அலச முடியாது. ஆனாலும் சில…

1. மாணவத் தமிழர்கள் தங்கள் பொன்னான நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த செலவழிக்கலாம். அதனால் சராசரி மாணவ அறிவு பெருகும்.

2. வேலையற்ற சோம்பேறித் தமிழர்கள் வேறு வழியின்றி வேலை தேடச் சென்றாலும் செல்லலாம். அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் கண்ணில் படலாம்.

3. பொழுது போகாத குடும்பத் தலைவி தமிழர்கள் பக்கத்து வீட்டில் அரட்டை அடிப்பது அதிகப்படலாம். அதனால் சண்டை சச்சரவு அதிகப்படலாம். அல்லது ஒரு வீட்டில் வாழும் மக்களுக்கு எதிர், பக்கத்து வீட்டில் வாழ்பவர்கள் யாரென்றாவது தெரியவரும் ஒரு நல்ல பயன் கிடைக்கலாம். அழுது வடியும் டி.வி. மெகா சீரியல்கள் டிராமாகவாக வரலாம். அதைப் பார்த்து இவர்கள் மேலும் அழலாம்.

4. திரைப்படத் தொழிலில் உள்ள தமிழர்கள் வேலை இல்லாமல் கையை பிசைந்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு தொழிலுக்குத் தாவலாம். (இது தியேட்டரில் டிக்கட் கிழித்து கொடுப்பவரையும், முறுக்கு விற்ப்பவரையும் பாதிக்கலாம்; எடிட்டிங், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், டைரக்டர்கள், நடிகர்கள் போன்ற தமிழர்களையும் பாதிக்கலாம்). மொத்தம் ஒரு பத்து லட்சம் இருக்க மாட்டார்களா?

5. அரசாங்கம் நடத்தும் தமிழர்கள் பத்து லட்சம் தமிழர்கள் உண்டாக்கும் தலைவலியால் அவதி படலாம்

6. ஜண்டு பாம் மற்றும் அனாசின் விற்கும் தமிழர்கள் விற்பனை பெருகி இந்த பத்து லட்சத்தில் ஒரு பத்தாயிரம் பேரை வேலைக்கு சேர்த்துகொள்ளலாம். ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.

வேண்டுமா இந்த விபரீதக் கற்பணை?

(சின்னத்தம்பி திரைப்படம் வெளி வந்த போது ஒரு மூன்று மாதத்திற்க்கு இந்த பிரச்சனை சிறிய அளவில் வந்ததாக ஒரு ஞாபகம். அதாவது தமிழ் திரையுலகம் மட்டும் பாதிக்கப்பட்டது. ஒன்றும் குடி மூழ்கி விடாது. நாம் உயிரோடு தான் இருக்கிறோம். மனிதர்கள் அட்ஜஸ்ட் செய்யத்தெரிந்தவர்களே. மனிதர்களின் DNA, Survival of the fittest என்ற சித்தாந்தத்தினால் ப்ரோக்ரம் செய்யப்பட்டுள்ளது.)

பக்ஸ் என்ற பகவதி பெருமாள்


என்னுடைய நச்சரிப்பு தாங்காமல் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் அவார்டா கொடுக்கறாங்க, கூட்டாஞ்சோறு இரண்டு ப்ளாக்களிலும் இன்னொரு எழுதுபவராக சேர்ந்து விட்டான். (இத்தனை வருஷத்துக்கு பின்னால் சேர்ந்து விட்டார் என்றெல்லாம் எழுத முடியாது). நானும் பக்சும் ஒன்றாக காலேஜில் படித்தவர்கள். (எங்களுடைய ப்ரொஃபசர்கள் நாங்கள் படித்தோம் என்றால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள், உயர்வு நவிர்ச்சி அணி என்று வைத்துக்கொள்வோமே). இப்போது அடுத்தடுத்த தெருக்களில் வசிக்கிறோம். நடந்து போகும் தூரம்தான், தொந்தி கரைந்துவிடுமே என்று நான் நடப்பதில்லை.

நான் எழுதுவதை படிக்கும் வெகு சிலரில் பக்சும் ஒருவன். இதனால் இந்த ப்ளாக்களின் ஹிட்கள் குறைந்துவிடும் என்று நினைக்கிறேன். :-))

பக்ஸுக்கு நல்வரவு!

பக்ஸ் இது வரை எழுதியவை:

இந்த வாரம்
பாக்தாத் திருடன்