வயலின் நாதத்துக்கு ஒரு வைத்யநாதன் (Kunnakkudi vaidyanathan)
செப்ரெம்பர் 10, 2008 10 பின்னூட்டங்கள்
குன்னக்குடி வைத்யநாதன் மறைந்துவிட்டார். சில purists அவர் gimmicks மூலம் வயலின் வாசிப்பை கொச்சைப்படுத்துகிறார் என்று சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் வயலினை என்னை மாதிரி கர்நாடக சங்கீதம் பற்றி தெரியாதவர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தார். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். tfmpage அஞ்சலி இங்கே. சுதாங்கன் என்பவரின் நல்ல போஸ்ட் இங்கே.
இந்த ப்ளாகில் அவரது சினிமா பங்களிப்பை பற்றி மட்டும்தான் எழுதலாம். அதுதான் பொருத்தம் என்பது மட்டும் அல்ல, எனக்கு அதுதான் தெரியும்.
ஏ.பி. நாகராஜனுடன் அவர் அமைத்த கூட்டணி அருமை. சில தேவர் முருகன் படங்களுக்கு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். சாமி பாட்டு போடுவதில் கே.வி. மகாதேவனுக்கு பிறகு அவர்தான். ஒன்றிரண்டு எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். முதலில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் குழுவிலே வயலின் வாசித்திருக்கிறார்.
சினிமா உலகில் அவரது பங்கு குறைவுதான். பத்து பனிரண்டு படங்களுக்கு இசை அமைத்திருந்தால் அதிகம். ஆனால் நல்ல இசை அமைப்பாளர். வயலினுக்கோ நாதர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஏதாவது ஒரு படத்தை போட்டால் நன்றாக இருக்கும்
இனி வருவது ஒரு listing exercise. இசை அமைத்த படங்கள், பாடல்களின் லிஸ்ட், அவ்வளவுதான். விவரங்கள் முழுமையாக இல்லை, நீங்கள் யாராவது சொன்னாலோ, இல்லை பின்னால் ஞாபகம் வந்தாலோ, நெட்டிலிருந்து பிட் அடிக்க முடிந்தாலோ முழுமைப் படுத்துகிறேன்.
அவர் இசை அமைத்த படங்கள்:
ஏ.பி. நாகராஜனுடன்:
வா ராஜா வா: இசை அமைத்த முதல் படம். 1968. மஹாபலிபுரத்தில் கைடாக இருக்கும் ஒரு சின்னப் பையன் சந்திக்கும் மனிதர்களை பற்றி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.
- கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
- இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்
- உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
- ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க
- சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா
அகத்தியர்: சீர்காழி அகத்தியராக நடித்தது.
- தலைவா தவப் புதல்வா
- நமச்சிவாய என சொல்வோமே
- இசையாய் தமிழாய் இருப்பவனே
- வென்றிடுவேன் எந்த நாட்டையும் ராகத்தால் வென்றிடுவேன்
- தாயிற் சிறந்த கோவிலுமில்லை
- நடந்தாய் வாழி காவேரி
- உலகம் சம நிலை பெற வேண்டும்
- ஆண்டவன் தரிசனமே
- மலை நின்ற திருக்குமரா
கண்காட்சி: சென்னையில் நடைபெறும் எக்சிபிஷனில் நடக்கும் கதை.
- அனங்கன் அங்கதன் என்றும்
- காடை பிடிப்போம் கௌதாரி பிடிப்போம்
ராஜ ராஜ சோழன்: இசை அமைத்த முதல் சிவாஜி படம்.
- தென்றலோடு உடன் பிறந்தாள்
- தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே
- நாதனை கண்டேனடி
- ஏடு தந்தானடி தில்லையிலே
மேல் நாட்டு மருமகள்: வெள்ளைக்கார மருமகள் பிழிந்தால் ஒரு லிட்டர் கிடைக்கும் அளவுக்கு தமிழ் பண்பாட்டில் ஊறிவிடுவாள்.
- முத்தமிழில் பாடி வந்தேன்
- Come along sing with me
நவரத்தினம்: இசை அமைத்த ஒரே எம்ஜிஆர் படம்
- குருவிக்கார மச்சானே
தேவருடன்:
தெய்வம்: பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த “மருத மலை மாமணியே” இந்த படத்தில் மதுரை சோமு பாடியதுதான்.
- மருத மலை மாமணியே
- குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
- வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
- திருச்செந்தூரில் போர் புரிந்து
- திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
- இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமிமலை (பித்துக்குளி முருகதாஸ்)
- கந்தன் காலடியை வணங்கினால்
- மருத மலைக்கு நீங்க வந்து பாருங்க
- கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
- மாலை… வண்ண மாலை, இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மற்றவை:
மனிதனும் தெய்வமாகலாம்: இசை அமைத்த இன்னொரு சிவாஜி படம்
- என்னடா தமிழ்க்குமரா..
- பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்.
திருமலை தென்குமரி: ஒரு road trip படம். திருப்பதி, குருவாயூர் மாதிரி இடங்களுக்கு பெரிய கும்பலாக பாட்டு பாடிக் கொண்டே டூர் போவார்கள்.
- பாடணுண்ணு மனசுக்குள்ளே ஆச நிறைய கீது
- குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
- அழகே தமிழே நீ வாழ்க
- திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
- மதுரை அரசாளும் மீனாட்சி
- நீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
- சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆட வைத்தேன்
காரைக்கால் அம்மையார்:
- தகதகதக தகதகவென ஆடவா
தோடி ராகம்: குடும்பப் படம். படத்தின் எல்லா பொறுப்புகளையும் குன்னக்குடியின் குடும்பத்தினரே ஏற்றனராம். பார்த்ததும் அந்த ஒரே குடும்பம்தான் என்று கேள்வி.
அண்மைய பின்னூட்டங்கள்