முதலாம் ஆண்டு நிறைந்தது – இரண்டாம் ஆண்டு உதயமாகிறது


நேற்று எங்கள் ”அவார்டாகொடுக்கிறாங்க?” பிளாக்கின் முதல் ஆண்டு நிறைந்தது. எங்கள் ப்ளாக்கின் முதல் போஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் நாள் 2008ல் வெளிவந்தது. இந்த ப்ளாக்கிற்கு முதல் பதில் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் ”வாழ்த்துக்கள்”. நேற்று முதலாம் ஆண்டு நிறைவுபெற்ற பொழுது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த ஓர் ஆண்டில் தான் எத்தனை புதிய அனுபவங்கள்! எத்தனை புதிய நண்பர்கள்!
எத்தனை புதிய நல்ல வாசக நண்பர்கள்! சாரதா, டோண்டு, சூர்யா, சுபாஷ், சேதுராமன்,அரைடிக்கட், ராஜநாயகம், பாலாஜி, உள்ளதைச்சொல்வேன், ரிங்ஸ்ட்டர், ப்ளம், நடிகர்திலகம், நல்லதந்தி, இன்னும் எத்தனை எத்தனையோ…

(இந்த லிஸ்ட் முழுமையானதல்ல – அவருடைய பெயரை முதலில் சேர்க்காததற்கு நல்லதந்தி செல்லமாக கோவித்துக்கொண்டார்.  பெயர்கள் விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும் 🙂 )

எத்தனை குறைவான கெட்ட “வாசக நண்பர்கள்”! (ஒன்று அல்லது இரண்டே)

உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.

இந்த ஒரு வருடத்தின் புள்ளி விவரங்கள்

இதுவரையில் 49,661 பார்த்துள்ளார்கள்

சுறுசுறுப்பான நாள்: — Tuesday, October 14, 2008 (இன்று மட்டும் 461 பார்வையாளர்கள் )

இந்த நாளில் இட்ட இடுகைகளின் சுட்டி கீழே:

சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்

( Click here for the whole page)

எம்ஜிஆர் லிஸ்ட்

சிவாஜி லிஸ்ட்

(Click here for the whole page)

இதுவரையில்: 311 இடுகைகள் (கிட்டத்தட்ட தினம் ஒன்று)

Comments: 1,263 (இதில் எங்களுடைய மறுமொழிகளும் அடங்கும்)

RV மொத்தம் 276

Bags மொத்தம் 36

(என்னுடைய பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவாக இருந்த்தாலும்  ஒரு பக்கவாத்தியமாக இருப்பதால் RVக்கு எழுதுவதில் சுமை குறைந்த ஒரு ஃபீலிங் இருக்கும் என நினைக்கிறேன்)

எங்களுக்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று நம்பும்

RV and Bags