இரண்டாவது கிறுக்கன்


நான் மட்டும்தான் கிறுக்கன் என்று இல்லை. நான் ஊருக்கு போயிருந்த சமயம் எனக்கு பதிலாக இரண்டு போஸ்ட்கள் கிறுக்கிய பக்ஸுக்கு நன்றி!

பக்ஸ் எழுதியவை:

இந்த வாரம்
பாக்தாத் திருடன்

பக்சின் கிறுக்கல்கள் தொடரட்டும்….

பாக்தாத் திருடன்


இன்று என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்ஸ் இந்த படத்தை பார்க்கவும் பார்த்து இதை பற்றி எழுதவும் செய்வதாக சொல்லி இருக்கிறான். நாம் எழுதுவதை படிக்கவும் படித்து மறு மொழியும் எழுத வெட்டிப் பய புள்ள மாதிரி ஆட்களும் இருக்கிறார்கள். சக்கைப் போடு போடு ராஜா!

Bags –
(என் கொடூரமான எழுத்துக்குப் பொறுப்பு நான் மட்டுமே அல்ல். RVயும் தான். அவன் தான் permission கொடுத்தது. நான் எழுதுவதைத் தாங்க முடியாதவர்கள் தற்காலிகமாக இங்கே வராமல் தப்பித்தாலும் ம்றக்காமல் திஙகள்கிழமை மீண்டும் த்வறாமல் வந்து மாட்டிக்கொள்ளுஙகள். RV காப்பாற்றுவான். சுபம்.

விஷயத்துக்கு வருவோம்.

எனக்குத் நேற்றுத் தலைவலி – அதனால் முதல் 15-30 நிமிஷம் மட்டுமே பார்த்தேன். மேலும் எந்த் இடத்தில் மெய் எழுத்து”ப்” போடவேண்டும் என்ற அடிபடையை பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் போது நிச்சயம் நான் MGR சினிமா பார்த்துகொண்டிருந்திருப்பேன். இன்னும் தெரியவில்லை. இதையெல்லாம் தாண்டி பிட் அடித்து எழுதுகிறேன்.)

1960ல் வந்த படம். சதர்ன் மூவிஸ், (insignia issue கொஞம் இருந்திருக்கும் போல். ஜெமினி ஃபில்ம்ஸ் மாதிரி யோசித்து இவர்களும் “பப்பர பப்பர பம்பம்பம்” இசைக்கும் பொம்மைக்குப் பதில் நிஜமான ஒரு பெண்ணை வைத்துவிட்டர்கள்) தயாரிப்பு.

புரட்சித்தலைவர் MGR, ஆடல் அழகி வைஜயந்திமாலா, M.N. நம்பியார், T.S. பாலையா, T.R.R. ராமச்சந்திரன், M.N. ராஜம், ச்ந்தியா (புரட்சிதலைவியின் அம்மா), M.S.S. பாக்கியம், S.N. லக்‌ஷ்மி, K.S.அஙகமுத்து, S.A. அசோகன், S.V. சஹஸ்ரநாமம், K. கண்ணன் – எனக்கு தெரிந்த முகஙகள். ம்ற்றும் எனக்கு தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் ந்டித்துள்ளார்கள். (டைடிலில் முதலில் நடிகைகள், பின்னர் தான் நடிகர்கள் – feministகள் சந்தோஷப் பட்டுக்கொள்ளலாம்)

கதை, உரையாடல் – A.S. முத்து.
பாடல்கள் – மருதகாசி;
இசை-G. கோவிந்தராஜுலு நாயுடு P.S.திவாகர் உதவியுடன்.
பின்னணி பாடியவர்கள் – T.M.S. செளந்தர்ராஜன், P.சுசீலா, ஜிக்கி, நாகேஷ்வர்ராவ், ஜமுனாராணி; ஒளிப்பதிவு – M. கிருஷ்ணசாமி;
தயாரிப்பு – T.P.சுந்தரம் ம்ற்றும் ஹரிலால்பட்டேவியா.
டைரக்‌ஷன் – T.P.சுந்தரம்.

“சொக்குதே மனம்” பாடல் இனிமையக இருக்கிறது. ”சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு” ம்ற்றும் ”கண்ணீர்ன் வெள்ள்ம் இங்கே ஓடுதையா” பரவாயில்லை.

கதை நாடோடி மன்னன் பாணியில் இருக்கிறது. மீண்டும் மீண்டும் மக்களாட்ச்சி. இதில் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று வேண்டாத சபதம் வேறு. கதை ஓட்டத்தில் பின்னர் உறுதியாக இதனால் ஒரு சிக்கல் உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. நான் பார்க்கவில்லை. திருமணம் செய்யாமல் ஓட்டுவது மனித வாழ்க்கையில் சாத்தியம், ஆனால் கஷ்டமான ஒன்று

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. பிரபாகரன் இதே மாதிரி விடுதலை புலிகளுக்கு ஒரு கொள்கை வைத்திருந்தார். விதியை மீறுபவர்கள் கடினமாக தண்டிக்கப்பட்டர்கள். புலிகளுக்கெல்லாம் ஒரே குழப்பம். கஷ்டமும் கூட. போதாக்குறைக்கு பெண்புலிகள் வேறு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். திருட்டுதனமாக உறவுகள். (இந்த themeஐ வைத்துதான் “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைபப்டம் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்) ஏன் பிரபகரனே குழம்பினார். அவருடைய மனைவி (திருச்சியில் என நினைக்கிறேன்) அறிமுகமானதிலிருந்து இயக்கத்தில் focus குறைந்து அவதிப்பட்டார். ஆன்டன் பாலசிஙகம் பேசி கொள்கையை காம்ப்ரமைஸ் செய்ய வைத்தார். சட்டம் தள்ர்த்தப்பட்டது. எல்லோருக்கும் நிம்மதி. முத்லில் பிரபாகரனுக்கு. ஆண் புலிகள் ஆவேசமாக பெண் புலிகளை தேடினார்கள். பலருடைய வாழ்க்கையில் ஒளி பிறந்தது.

வைஜ்யந்திமாலா அடிமை. அவளுடைய ஒனர் அவரை கொடுமைப்படுத்துகிறான். MGRக்கு (அபு என்ற திருடன்) ந்ம்பியார் என்றால் ஒரு தனி கோபம் தான். ந்ம்பியார் வைஜயந்திமாலாவிடம் வம்பு செய்யும் பொழுது கொதித்து எழும் MGR, வை.மாலாவின் ஓனரை ஒன்றுமே செய்யாமல் போகிறார். கடைசியில் ”இருபதினாயிரத்து ஒன்னு” தினார் கொடுத்து MGR வை.மாலாவை வாங்கி விட சுபம்…ஓ..sorry… அதற்கு மேல் பார்க்கவில்லை.. feel free to fill in 🙂

இந்த வாரம் (Week of Sep 15)


முன் ஒரு போஸ்டில் சொன்ன மாதிரி இரண்டு மூன்று நாட்களாக படங்களை பார்க்கமுடியவில்லை. மீண்டும் இன்று துவக்கலாம் என்றிருக்கிறேன், டச்வுட்.

மிஸ் செய்த படங்கள் கீழ்வானம் சிவக்கும், புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். இந்த சன் டிவி படங்களை உலகத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பத்து பேராவது இந்த ப்ளாகை படிக்கமாட்டீர்களா? அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா? (சமீபத்தில் சுஜாதாவின் கணேஷ்(வசந்த்) கதை ஒன்றை – ஒரு விபத்தின் அனாடமி – படித்த பாதிப்பால் இப்படி ஸ்டாடிஸ்டிக்ஸாய் பொழிகிறது)

இந்த வாரப் படங்கள்:

திங்கள்: புனர்ஜன்மம். நான் சின்ன வயதில் பார்த்திருக்கலாம். ஒன்றும் நினைவில்லை. ஹிந்தியில் திலிப் குமார் நடித்த டாக் என்ற படத்தின் மறுபதிப்பு என்று நினைக்கிறேன். டாக் என்றால் கறை என்று அர்த்தம். சிவாஜி, பத்மினி நடித்தது. ஸ்ரீதர் இயக்கியதா? இசை அமைப்பாளர் யார்? ஹிந்தியில் “ஏ மேரே தில் கஹி அவுர் சல்” என்ற அருமையான பாட்டு ஒன்று உண்டு. தமிழில் இந்த பாட்டும் மறு பதிவு செய்யப்பட்டதா என்று பார்த்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு ட்ரெய்லர் பார்த்து நினைவு வந்த பாட்டு “உள்ளங்கள் ஒன்றாகி“.

செவ்வாய்: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். மணாளனே மங்கையின் பாக்யம் என்ற படத்தை பார்க்க நேர்ந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம். பெயரை வைத்தும், சிடி கவரை வைத்தும் அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்து நாஸ்டால்ஜியாவில் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை எடுத்துப் பார்த்தேன். எனக்கு வீட்டில் அடி விழாதது ஒன்றுதான் குறை. படம் பயங்கர போர். ஒரு பாட்டு கூட நினைவில் வைத்துக்கொள்ளும்படி இல்லை. இசை ஆதி நாராயண ராவாகத்தான் இருக்க வேண்டும். அஞ்சலி தேவி, ஜெமினி, எம்.ஆர். ராதா, ஜெயந்தி, நாகையா, மற்றும் பலர் நடித்தது.

புதன்: நவக்ரகம். பாலச்சந்தரின் அவ்வளவாக வெற்றி அடையாத படங்களின் ஒன்று. எதிர் நீச்சல் பாணியில் பெரிய கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு தெரிந்த பாட்டு “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது” என்பதுதான். அருமையான பாட்டு. சில சமயம் சன் டிவியில் இரவுகளில் போடுவார்கள், போட்டால் ராத்திரி 2 மணியானாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.

வியாழன்: மறக்க முடியுமா புகழ் பெற்ற “காகித ஓடம் கடலலை மீது” பாட்டு இதில்தான். எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்தது. கலைஞரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்

பாக்தாத் திருடன்: எம்ஜிஆர் வைஜயந்திமாலாவுடன் நடித்த ஒரே படம். நான் என் வாழ்க்கையில் பார்த்த மூன்றாவது படம். (முதல் படம் தங்க சுரங்கம், இரண்டாவது நாங்கள் இருந்த எண்டத்தூரில் டென்ட் கொட்டாய் திறந்து முதல் முதலாக போட்ட திருவருட்செல்வர்). வீட்டில் சண்டை போட்டு எட்டு வயதில் தனியாக பார்த்த முதல் படம். அப்போதெல்லாம் எனக்கு சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள் கண்டால் ஒரே பயம். சேருக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அதுவும் சண்டை என்றால் யாராவது என்னை அடித்துவிடுவார்களோ என்று பயம். இந்த பயம் என் அப்பாவின் நண்பர்கள் நிறைய பேருக்கு தெரியும். டென்ட் கோட்டையில் வழக்கம் போல பெஞ்ச்சுக்கு அடியில் நான் ஒளியும்போது வேறு எங்கிருந்தோ பார்த்த கிட்டு மாமா இந்த மாதிரி ஒளிவது உலகத்தில் இவன்தானே என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எனக்கு தைரியம் கொடுத்தார். அதிலிருந்துதான் நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனேன். நாஸ்டால்ஜியாவுக்காக இந்த படம் பார்க்கவேண்டும், ஆனால் அன்று இரவு வெளியூருக்கு புறப்படுகிறோம், பார்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது!