உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I


கமலுக்கு பிடித்த உலகப் படங்கள் முதல் பகுதி கீழே. என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பேரை க்ளிக் செய்தால் IMDB குறிப்புக்கு போகலாம். முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

 1. Virgin Spring (Jungfrukällan), Ingmar Bergman – இங்கமார் பெர்க்மன் படம் எதுவும் இது வரை என்னால் பார்க்க முடிந்ததில்லை. அது என்னவோ ஒவ்வொரு முறை படம் கொண்டு வரும்போதும் ஏதாவது தடங்கல்.
 2. Wages of Fear (Le salaire de la peur), Henri-Georges Clouzot – மிக அருமையான படம். ஸ்லோவாக ஆரம்பிக்கும். முதல் பாதி வரை பில்டப்போ பில்டப். எங்கேயோ (தென் அமெரிக்கா?) ஒரு குக்கிராமம். அங்கே நாலு வெள்ளைக்காரர்கள். பணத்துக்கு ஏகத் தட்டுப்பாடு. ஒரு மல்டிநேஷனல் கம்பெனிக்கு வெடிமருந்து உள்ள இரண்டு லாரிகளை அபாயம் நிறைந்த ரூட் வழியாக கொண்டு போக வேண்டும். இரண்டாம் பாதி அப்படி கொண்டு போவது. அபாரமாக இருக்கும். இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கலக்கலாம்.
 3. Rashomon, Akira Kurosawa – ராஷோமானைப் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே. குரோசாவாவின் அற்புதமான படம். ஒரு இறப்பு, அதை நாலு பேர் நாலு விதமாக விவரிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் குரோசாவாவின் சாதனை என்பது அவர் இதை விட சிறந்த படங்களை – அதுவும் ஒன்றல்ல, இரண்டு எடுத்ததுதான். இகிரு மற்றும் ரான். இகிரு மாதிரி ஒரு படம் சிவாஜிக்கு கிடைத்து, அவரும் அடக்கி வாசித்து நடித்திருந்தால்! ரான் கிங் லியர் நாடகத்தின் ஜப்பானிய வடிவம்.
 4. The Cranes are Flying(Letyat Zhuravli), Mikhail Kalatozov – கேள்விப்பட்டதில்லை.
 5. Das Boot, Wolfgang Petersen – ஒரு நீர்மூழ்கிக் கப்பல், அதற்குள் நடக்கும் கதை. நல்ல ஆக்ஷன் படம்.
 6. Amadeus, Milos Forman – நல்ல படம். மொசார்ட்டின் வாழ்க்கை, அவரது எதிரியும் போட்டியாளருமான சாலியரியின் கண்களில்.
 7. Hair, Milos Forman – பார்த்ததில்லை.
 8. Duel, Steven Spielberg – என்ன ஒரு படம்! ஒரு கார், ஒரு பெரிய (கண்டெய்னர் லாரி மாதிரி) ட்ரக், ஒரு கார் டிரைவர் அவ்வளவுதான் படத்தில். ட்ரக் டிரைவருக்கு கார் டிரைவர் மேல் காண்டு. மலைப் பாதையில் காரை தள்ளி விடப் பார்க்கிறான்.
 9. The Tenant (Le locataire), Roman Polanski – கேள்விப்பட்டதில்லை.
 10. Chinatown, Roman Polanski – இது மிகவும் சிலாகிக்கப்படும் படம். நல்ல படம்தான், ஆனால் பில்டப் இருக்கும் அளவுக்கு பிரமாதம் இல்லை. ஜாக் நிக்கல்சன் ஒரு ரஃப் அண்ட் டஃப் டிடெக்டிவ். அவர் சின்ன ஒரு கேசை துப்புத் துலக்கப் போய் பெரிய ஊழல், குடும்பத்தின் தகாத உறவு ஆகியவற்றை கண்டுபிடிப்பார்.
 11. La Strada, Federico Fellini – பார்த்ததில்லை. 8 1/2 என்று ஒரு படம் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. அதிலிருந்து ஃபெல்லினி என்றால் கொஞ்சம் பயம்.
 12. Au Hasard Balthazar, Robert Bresson – கேள்விப்பட்டதில்லை.
 13. The Brutalisation of Franz Blum (Die Verrohung des Franz Blum), Reinhard Hauff – கேள்விப்பட்டதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கமல் சிபாரிசு செய்யும் உலகப் படங்கள் – முழு லிஸ்ட்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்

அஞ்சும் ராஜாபலி சிபாரிசு செய்யும் படங்கள்


பாஸ்டன் பாலாவுக்கு மீண்டும் நன்றி!

அஞ்சும் ராஜாபலியின் லிஸ்டும் என் குறிப்புகளும். அஞ்சும் ராஜாபலி யார்? யாருக்கு தெரியும்? பாஸ்டன் பாலா சொன்னால்தான் உண்டு. வர வர யார் லிஸ்ட் போட்டாலும் அதை பற்றி எழுதிவிடுகிறேன்!

அனேகமாக திரைக்கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அவரது எல்லா குறிப்புகளும் திரைக்கதையை பற்றி பேசுகின்றன.

1. சைனாடௌன் (Chinatown) – ஜாக் நிக்கல்சன் நடித்த புகழ் பெற்ற படம். எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை.

2. காசாப்ளாங்கா (Casablanca) – மிக அருமையான காதல் படங்களில் ஒன்று. பார்க்க வேண்டிய படம்.

3. 12 ஆங்ரி மென் (12 Angry Men) – நல்ல படம். ஹென்றி ஃபோண்டா அருமையாக நடித்திருப்பார்.

4. இட்’ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப் (It’s a Wonderful Life) – ஒவ்வொரு கிருஸ்துமஸ்போதும் அமெரிக்க டிவியில் போட்டுவிடுவார்கள். சுமாரான படம்தான். இது வரைக்கும் நான் அங்கும் இங்குமாகத்தான் பார்த்திருக்கிறேன், முழுதாக உட்கார்ந்து பார்க்கவில்லை.

5. ஃப்யுஜிடிவ் (Fugitive) – ஹாரிசன் ஃபோர்ட் நடித்த த்ரில்லர் படம். இதெல்லாம் பார்த்து மறந்துவிடும் படங்கள்தான்.

6. விட்னஸ் (Witness) – பார்த்ததில்லை.

7. ஜோடியாக் (Zodiac) – பார்த்ததில்லை.

8. அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) – பார்த்ததில்லை

9. சில்ரன் ஆஃப் ஹெவன் (Children of Heaven) – டிவிடி எடுத்து வைத்திருக்கிறேன், பார்க்க வேண்டும்.

10. எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட் (Eternal Sunshine of the Spotless Mind) – பார்த்ததில்லை.

11. பிக் ஃபிஷ் (Big Fish) – பார்த்ததில்லை

12. ஸ்வீட் சிக்ஸ்டீன் (Sweet Sixteen) – பார்த்ததில்லை

13. டெட் கல் (Dead Girl) – பார்த்ததில்லை

14. மெஷினிஸ்ட் (Machinist) – பார்த்ததில்லை

15. க்ரோநிகாஸ் (Cronicas) – பார்த்ததில்லை

16. நோ மேன்’ஸ் லாண்ட் (No Man’s Land) – பார்த்ததில்லை.

17. அமேடியஸ் (Amadeus) – நல்ல படம். இசை மேதை மொசார்ட்டை பற்றியது.

18. வெர்டிக்ட் (Verdict) – பார்த்ததில்லை

19. பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers) – பார்த்ததில்லை.

20. தீவார் – மிக நல்ல படம். அருமையான திரைக்கதை, நல்ல நடிப்பு. க்ளிஷேக்களை வைத்தே நல்ல படத்தை உருவாக முடியும், திரைக்கதைதான் தேவை என்பது இந்த படத்தை பார்த்தல் புரிந்து கொள்ளலாம்.

21. ஆக்ரோஷ் – பார்த்ததில்லை.

22. ஜோ ஜீதா வொஹி சிக்கந்தர் – நல்ல படம். பார்க்கலாம்.