யுனெஸ்கோ லிஸ்ட்
செப்ரெம்பர் 7, 2008 11 பின்னூட்டங்கள்
யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.
இந்திய லிஸ்ட்.
- 1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
- 1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
- 1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
- 1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
- 1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
- 1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
- 1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
- 1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
- 1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.
- 1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.
- பதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.
- ப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.
- மதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.
- மொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.
- சுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.
யுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.
நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?
எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:
சிறந்த 5 படங்கள்:
- கப்பலோட்டிய தமிழன்
- தண்ணீர் தண்ணீர்
- நாயகன்
- தளபதி
- தேவர் மகன்
6 மைல் கல்கள்:
- சந்திரலேகா
- நாடோடி மன்னன்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- பதினாறு வயதினிலே
- நாயகன்
- ஜென்டில்மன்
5 பொழுதுபோக்கு படங்கள்:
- சந்திரலேகா
- ஆயிரத்தில் ஒருவன்
- தில்லுமுல்லு
- மைக்கேல் மதன காம ராஜன்
- பஞ்ச தந்திரம்
நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.
அண்மைய பின்னூட்டங்கள்