”தியேட்டர்” – திரையுலக வரலாறு 4


ஊமைப் பட காலத்தில் தியேட்டர்கள் பலவிதத்தில் இருந்தது. சானம் பிடிக்கும் கருவி இருக்கும் முக்காலி போல் இருக்கும் ஒரு இயந்திரம் “கரையெல்லாம் செண்பகப்பூ” என்று திரைப்படத்தைப் பார்த்து பயாஸ்கோப் என தெரிந்து கொண்டேன். ஓரு வேளை அது தான் அன்றைய நடமாடும் தியேட்டராக இருந்திருக்குமோ? சாமிகண்ணு வின்செண்ட் என்பவர் 1905ல் எடிசன் சினிமட்டோகிராபி என பெயர் கொண்ட டூரிங் தியேட்டரை  உருவாக்கினார். அவர் பல இடங்களுக்குச் சென்று ”Life of Jesus Christ” என்ற படத்தை திரையிட்டார். மலபாரை சேர்ந்த ஜாஸ் பயாஸ்கோப் கம்பெனி அன்றைய சென்னையில் திரைப்படங்கள் திரையிட்டார்.

பொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்ப்டங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். இப்படி பட்ட தியேட்டர்கள் வெகுவிரைவில் சிலருக்கு நிரந்தர தியேட்டர்கள் நிறுவுவதற்க்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.

அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் ரகுபதி வெங்கையா. பெட்டி கடை வைத்து, பின்னர் மளிகை கடையாக்கி, அதன் பின்னர் பெரிய ஹோல் சேல் கடையாக்கி, பின்னர் கம்பெனி ஆரம்பிப்பது போல் ஒரு போட்டோகிராஃபராக இருந்த ஆர். வெங்கையா டூரிங் தியேட்டர் நடத்தி, பின்னர் நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி……..மனிதர் பல தியேட்டர்களுக்கு அதிபதி ஆகிவிட்டார். முதலில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் பல சின்ன சின்ன ரீல்களை திரையிட்டுக்கொண்டிருந்தார். அதை பார்ப்பதற்க்கும் ஒரு கணிசமான கூட்டம் இருந்ததாகத் தெரிகிறது. அதில் வசூலைப் பார்த்த வெங்கையா ஒரு டூரிங் தியேட்டரை சென்னை உயர் நீதி மன்றம் முன்பு அமைத்தார். இலங்கை மற்றும் அன்றைய சென்னை சமஸ்தானம் முழுவதும் அவருக்கு வசூல் வேட்டைதான். விடுவாரா? அடுத்த கட்டமாக நிரந்தர தியேட்டர் கட்ட முடிவெடுத்துவிட்டார். 1913ல் “கெய்ட்டி” தியேட்டரை நிறுவினார்.

2003062500120301

இன்றும் இது இருக்கிறது. பின்னர் க்ளோப் தியேட்டர் என்று ஒரு நிரந்தர தியேட்டரை புரசைவாக்கத்தில் நிறுவினார். அது தான் பின்னர் ”ராக்ஸி” தியேட்டராகியது. பின்னர் 1918ல் ”கிரௌன் டாக்கீஸ்” என்ற தியெட்டரை மிண்ட்டில் நிறுவினார். அதன் பின்னர் மதுரைக்கு படையெடுத்தார். அங்கே “இம்பீரியல்” தியெட்டரை நிறுவினார்.

இதற்கெல்லாம் முன்னரே மிண்ட்டில் “ஒற்றைவடை” தியேட்டர் 1872ல் உருவானது.

Saradhaa says:

(முக்காலி போன்ற அமைப்புள்ள) பயாஸ்கோப்புகள், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்துக்கு முன்னரே பலபடங்களில் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில, 1961-ல் ‘திலகம்’ படத்தில் (பயாஸ்கோப்பு பாத்தியா), 1969-ல் ‘குருதட்சணை’ படத்தில் தங்கவேலு (பாரு பாரு நல்லாபாரு), 1972-ல் ‘நீதி’ படத்தில் ஜெயலலிதா (ஓடுது பார் நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்பொண்ணு), இன்னும் பல இருக்கலாம். சட்டென நினைவில் வந்தவை இவை.

திரு வெங்கையா நிறுவியவற்றுள் சென்னையில் தற்போது ‘கெயிட்டி’ மட்டுமே உள்ளது. கிரௌன், ராக்ஸி தியேட்டர்கள் இடிக்கப்ப்ட்டுவிட்டன. மதுரை இம்பீரியல் பற்றி தெரியவில்லை.

முன்பு ‘THE MADRAS THEATRES’ என்ற நூலில், வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த ஒற்றைவாடை கொட்டகைக்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் ‘பிரைட்டன் டாக்கீஸ்’ என்ற அரங்கம் நிறுவப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. அது சரியான தகவலா என்று தெரியவில்லை. (பிரைட்டன் இப்போது உள்ளதா என்பதும் தெரியவில்லை. 1980-களில் அதில் படம் ஓடியது).