கார்த்திக் – அன்றும் இன்றும்


இந்த முறை கார்த்திக். அன்றும் இன்றும் சீரிஸில் நிறைய வந்தாயிற்று. இன்னும் அதை ஒரு துணைப்பக்கமாக வைத்திருக்காமல் தாய்ப்பக்கமாக ப்ரமோட் செய்துவிட்டேன். இப்போது முகப்பிலேயே அன்றும் இன்றும் பக்கத்துக்கு ஒரு லிங்க் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
கே.ஆர். விஜயா – அன்றும் இன்றும்
மாதவன் – அன்றும் இன்றும்
காந்திமதி – அன்றும் இன்றும்
அஞ்சலி தேவி – அன்றும் இன்றும்
ஸ்னேஹா – அன்றும் இன்றும்
நிழல்கள் ரவி – அன்றும் இன்றும்

வரதப்பா, வரதப்பா, பஞ்சம் வரதப்பா


தலைப்பை இன்னும் கொஞம் மற்றி எழுதினால் சரியாக இருக்கும்.

”வந்ததப்பா, வந்ததப்பா, பஞ்சம் வந்ததப்பா”

தமிழ் திரையுலகம் பஞ்சத்தில் அடிபடுகிறது. அட, அசின் ஒரு சினிமாவுக்கு ரூபாய் 55 லட்சமும், கமல் ரஜனி ரூபாய் 10 கோடி, 20 கோடி வாங்கும் போது எங்கிருந்து பஞ்சம் வந்ததது என் நீஙகள் நினைக்கலாம். இவர்கள் ஒரு புறம் இப்படி வாங்கினாலும் தமிழ் திரையுலகத்தில் பணி புரியும் எத்தனையோ பேர்கள் ”கையில காசு, வாயில தோசை” ரேஞ்சில் தான் இன்னும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்த எக்கனாமிக்ஸில் நுழையப் போவதில்லை இங்கே.

இங்கே டிஸ்கஸ் செய்யப் போவது இசை பஞ்சம்,  கதை பஞ்சம். இது பரவாயில்லை. பெயருக்குமா பஞ்சம்? (ஆனாலும் இவையெல்லாம் உண்மையான் பஞ்சமா? அல்லது சோம்பேறி தனத்தாலும் ”ஈஸி வே”யில் பணம் பண்ணும் முயற்ச்சியா என்பது என் சிற்றறிவிற்க்கு சரியாகப் புலப்படவில்லை.

இசைக்கு எப்போதும் பஞசம் இருப்பது போல் தெரிகிறது. ஹிந்தியை தமிழில் இறக்குமதி செய்வதும், தமிழ் திரை இசையை வட இந்தியாவிற்க்கு ஏற்றுமதி செய்வதும் சர்வ சாதாரணம். எத்தனையோ உதாரணங்கள் கூறலாம்.  ஒன்று இங்கே: ”ஆராதனா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் “குங்கு நாரே ஹி ஹெய்ன்” என்ற பாட்டு தமிழில் இறக்குமதி செய்யப்பட்டது.

(Quiz கேள்வி1: அந்தப் பாடல் எது?)

இது மாதிரியான இசை வர்த்தகம் ஒரளவு அந்த காலத்தில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளபபட்டது. எஞ்ஜாய் பண்ணப்பட்டது. இப்பொழுது தமிழிலேயே பழைய தமிழ் பாடல்களையே ஓரளவு rap மியூசிக்கை மிக்ஸ் செய்து ரீமிக்ஸாக கொடுக்கிறார்கள். (எனக்கு இது என்னவோ ஒரு சாஃப்ட்வேரை ஸ்க்ராட்ச்சிலிருந்து எழுதாமல் க்ளோன் செய்து சிறிது டீ-பக் மற்றும் ஒன்றிரண்டு புதிய ஃபீச்சர்ஸ் சகிதமாக உருமாற்றி கொடுப்பது போலிருக்கிறது – அது நிச்சயம் சோம்பேறி தனத்தின் கண்டு பிடிப்பே.)  இது ஸ்வரப் பஞ்சம் தானா? ”பொன் மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்”, “என்னம்மா கண்ணு சவ்க்கியமா”, என பல உதாரணங்கள். அண்மையில் தமிழ் பாடலிகள் உடனுக்குடன் ரீமிக்ஸ் செய்யப்படுவது போல் தோன்றுகிறது. திரையில் கார்த்திக் பாடும் “ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா” அதற்க்குள் ரீமிக்ஸ் ஆகி அர்ஜுன் பாடுகிறார்.

(Quiz கேள்வி2: இந்த ரீமிக்ஸ் ஒரு ட்ரெண்ட் ஆவதற்க்கு முன்னரே (pre-remix eraவில்), ”பொன் மகள் வந்தாள்” ) நைசாக, சத்தமில்லாமல் ஒரு திரைபடத்தில் சொருகப்பட்டது. அந்தப் படம் என்ன? Hint – ”பா”வில் ஆரம்பிக்கும் ஒரு டைரக்டர் வெளியிட்டப்படம்.

மற்றுமொரு டெக்னிக் பல திரைபடங்களில் வந்த பாடல்களை கலந்து (முதல் நான்கைந்து வரிகளை வைத்து)  ஒரு பாடல் சீனை ஓட்டுவது. இது போன்ற பாடல் கட்சிகளை 60, 70களில் வந்த திரைபடங்களில் அதிகம் பார்க்கலாம். அது பஞ்சத்தினாலா இல்லை மக்களுக்கு ஒரு நாவல்டி கொடுப்பதற்க்கா என்று தெரியவில்லை. இன்னும் இப்படி பல யுக்திகள் திரையுலகத்தில்  கடை பிடிக்கப்பட்டுள்ளது. எல்லாம் நேரப் பஞ்சம், நாவல்டி என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. கொஞ்சம் சோம்பலாகவும் இருந்திருக்கலாம்.

Quiz கேள்வி 3: திரையில் விசு பாடும் ரீமிக்ஸ் பாடல் எது?

ரீமிக்ஸ் இசையை ஒரளவு ஏற்றுக் கொள்ளமுடிகிறது. அது அதன் இனிமையைப் பொருத்தது. கதையும் இப்படி ரசிகர்களால் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏன்? கதையாசிரியர் பஞ்சத்தினாலா? ஹாலிவுட்டில் நல்ல திரைப்படங்கள் வந்தால் அதை தமிழில் எடுப்பது ஒரு வித சேவை (பாஸிட்டீவாக பார்த்தால்); “காப்பி” (நெகட்டீவாகப் பார்த்தால்); நஷ்ட ஈடு (கோர்ட்டில் பார்த்தால்); எப்படிப் பார்த்தாலும் நேற்று வந்த தமிழ் படங்களையும் இன்று வெர்சன் 2 ஆக வெளியிடுவது மிகவும் கடுப்படிக்கிறது.

Quiz கேள்வி 4: அந்நியன் கதையை சங்கர் எந்த ஹாலிவுட் திரை படத்திலிருந்து “இறக்குமதி” பண்ணினார்?

(உப கேள்வி – இதை எப்படி பார்க்கவேண்டும்? பாஸிட்டிவாகவா, நெகட்டீவ்வாகவா அல்லது கோர்ட்டிலா? 🙂 )

இப்பொழுதெல்லாம் பெயருக்கும் பஞ்சம் வந்து விட்டது. ”பொல்லாதவன்”, “பில்லா” என்று எத்தனையோ. இது ஒரு பெரும் குழப்பத்தில் முடியக்கூடும் என்று ஆராய்ச்சியாளர் தியோடர் பாஸ்கரன் கருதுகிறார். 100 வருடத்திற்க்கு பின்னர் வரும் ஆராய்ச்சியாளர்களை ”ஒரு சம்பாஷ்னையிலோ அல்லது ஒரு ஏட்டிலோ எந்தப் ”பொல்லாதவன்” பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?” என்று முடியை பிய்க்க வைக்கல்லாம்; இதனால் அவர்களை பொல்லாதவர்களாகவும் ஆக்கலாம்; ஆனால் இது இன்றய ட்ரெண்டாக இருந்தாலும் இது அவ்வப்பொழுது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Alexandar Dumasஇன் ”The corsican Brothers” தமிழில் 1949ல் அபூர்வ சகோதரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

Quiz கேள்வி 5 இந்த அபூர்வ சகோதரர்கள் திரைபடத்தில் நடித்த ஹீரோவின் பெயர் என்ன?

40 வருடங்கள்க்கு பின்னர் 1989ல் ”அபூர்வ சகோதரர்கள்” என்று கமல் திரைப்படம் ஒன்று வந்தது நினைவு இருக்கலாம். இதற்கு முந்தைய கால்கட்டத்திலும் இந்தப் பெயர் பஞசம் நடந்திருக்கிறது. 1934ல் கே. சுப்ரமனியம் இயக்கத்தில் தியாகராஜ பாகவதர், சுப்புலக்‌ஷ்மி  நடித்து வெளிவந்த “பவளக்கொடி” என்ற திரைப்படம் அதே பெயரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1949ல் கோவையை சேர்ந்த பக்‌ஷிராஜா ஃபில்ம்ஸ் தயாரிப்பில் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ட் செய்ய டி. ஆர். மஹாலிஙகம், டி.ஆர். ராஜகுமாரி, மற்றும்  டி.இ. வரதன் நடித்து பவளக்கொடி வெளி வந்தது. இப்பொழுது நான் பவளக்கொடி பற்றி பேசினால், நீங்கள் “எந்த பவளக்கொடி?” என்று கேட்பீர்கள்.

இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்தால் பரவயில்லை. ஆனால் இன்றைய trend தியோடர் பாஸ்கர் போன்ற எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலே! இதற்கு விடை திரைபடத்தின் பெயருக்கு பின்னால் வருடத்தை அடைப்புக் குறியில் அடைப்பதே!

(Quiz கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் award என்ற கடவுச்சொல்லை (Password) இங்கே இடவும்)

நினைவெல்லாம் நித்யா நினைவுகள்


நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வ் ரேடியோ இருந்தது. நான், என் தங்கைகள், அம்மா எல்லாருக்கும் சினிமா பாட்டில் ஆர்வமும் இருந்தது. ஆனால் வீட்டில் அப்பாவும் இருந்தார்.

எப்போதாவது செய்திகள், கர்நாடக இசை கச்சேரிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரங்கள், சிறுவர் சோலை என்று ஒரு ப்ரோக்ராம், நாடகங்கள், அவ்வளவுதான். சென்னை-1 கேட்கலாம். விவித்பாரதி எல்லாம் தீண்டத் தகாத ஸ்டேஷன்கள்.

என் அப்பா நடுவில் ஒரு வருஷம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்தார். வீட்டில் அம்மா, நான், என் இரண்டு தங்கைகள் அவ்வளவுதான். எங்களுக்கு குளிர் விட்டுப் போயிற்று. வீட்டில் எப்போதும் சினிமா பாட்டுதான். ஒன்றும் இல்லாவிட்டால் விவித்பாரதியில் விளம்பரங்கள் கேட்போம். 🙂 அப்பா திரும்பி வந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

நினைவெல்லாம் நித்யா வந்த போதுதான் எனக்கு பழைய பாட்டு பைத்தியம். வீட்டில் டேப் எல்லாம் கிடையாது, அதனால் அப்போதெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு சென்னை-1இல் போடும் பழைய பாட்டுகளை கேட்டுக்கொண்டு மொட்டை மாடியில் ஒரு நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் எதையாவது படித்துக்கொண்டும், நட்சத்திரங்கள் உதிப்பதையும் மறைவதையும் பார்த்துக்கொண்டும் பொழுதை ஓட்டுவேன். இசையில் நாம் புதிதாக ஒன்றை கேட்டு “அட” என்று வியந்துவிட்டால் – அதுவும் இளமைப் பருவத்தில் வியந்துவிட்டால் – அது நம்முடன் எல்லா காலமும் இருக்கும். நாம் கண்டுபிடித்த இசை அல்லவா அது? எனக்கு அப்போது அதில் ஒரு பெருமை, கர்வம், அடுத்தவர்களின் ரசனையை மட்டம் தட்டி என் ரசனைதான் சிறந்தது என்று சொல்ல விரும்பும் வேகம் எல்லாம் இருந்தது. அதுவும் எப்போது விவித்பாரதி அலறும் வீட்டில் புது பாட்டு கேட்டுக்கொண்டே அவற்றை ரசிப்பவர்களை மனதில் ஒரு அலட்சியத்தோடு பார்ப்பேன். இளைய ராஜா எல்லாரையும் மயக்கினாலும், ஜி. ராமநாதன் மாதிரி வருமா, விஸ்வநாதன் ராமமூர்த்தி மாதிரி வருமா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு என் ரசனை யாருக்கு வரும் என்ற கர்வத்தோடு அலைவேன்.

அந்த நேரத்திலும் சில புதிய பாட்டுகள் முதல் முறை கேட்ட போதே அசத்தின. என்னால் கூட புது பாட்டுகள் அந்த காலத்து பாட்டுகள் போல வராது என்று சொல்ல முடியவில்லை. “இது ஒரு பொன் மாலை பொழுது”, “என் இனிய பொன் நிலாவே”, “பனி விழும் மலர் வனம்” இந்த மூன்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.

ஞாபகத்திலிருந்து:

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
ஹே ஹே இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் – உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

வைரமுத்து இதற்கு முன் நல்ல பாட்டுகள் எழுதி இருந்தாலும் இதற்கு பின்தான் அவரது பாட்டுகளை கவனிக்க ஆரம்பித்தேன். I thought he was pretentious, but was capable of turning in a good lyric. Still think the same.

படம் வந்த போது பாட்டு மட்டும் கேட்டால் போதும் என்ற நினைப்பில் பார்க்கவில்லை. சில சமயம் டிவியில் இந்த பாட்டுகளை பார்க்கும்போது குறிப்பாக கார்த்திக் ஜிஜி டான்ஸை பார்க்கும்போது நான் அந்த வயதில் புத்திசாலிதான் என்று தோன்றுகிறது. இப்போது முரளி எழுதிய போஸ்டை படித்த பிறகுதான் படத்தை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாருக்கும் வயது ஆக ஆக புத்திசாலித்தனம் அதிகரிக்கும். எனக்கு ரிவர்ஸில் போகிறதே…