கன்னட படம் – இயக்குனர் தெரியவில்லை. தப்பலியு நீனடே மகனே (எஸ்.எல். பைரப்பாவின் நாவல்)
சத்யஜித் ரேயின் அபூர் சன்சார்
ஷோலே
சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
தீவார்
மாயா பஜார் (தெலுங்கு)
குல்சாரின் நம்கீன்
குல்சாரின் அங்கூர்
இதை தவிர honorable mention என்று பல இருக்கின்றன. ஞாபகம் வருபவை.
மெஹ்பூபின் மதர் இந்தியா
குல்சாரின் மௌசம், கிதாப், மாச்சிஸ்
மகேஷ் பட்டின் அர்த்
கோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா, துரோக கால் (தமிழில் குருதிப் புனல்)
விஷால் பரத்வாஜின் மக்பூல், ஓம்காரா
ஷ்யாம் பெனகலின் மந்தன், அங்கூர், நிஷாந்த், ஜுனூன்
ராஜ் கபூரின் ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420
பாசு பட்டாச்சார்யாவின் தீஸ்ரி கசம்
சத்யஜித் ரேயின் மகாநகர்
விஜயா ஸ்டுடியோஸின் மிஸ்ஸம்மா, குண்டம்மா கதா
ராம் கோபால் வர்மாவின் கம்பெனி
கிரிஷ் கார்னாடின் வம்ச விருக்ஷா, உத்சவ்
அபர்ணா சென்னின் பரோமா
மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் (யார் இயக்கியது?)
திலீப் குமாரின் கங்கா ஜம்னா
நரம் கரம் (யார் இயக்கியது?)
சில தன்னிலை விளக்கங்கள். நான் மலையாளப் படங்களை அதிகமாக பார்த்ததில்லை. வீடியோ பார்க்கும் காலத்தில் நல்ல மலையாளி நண்பர்கள் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கும் அதிகமாக தெரியாது. தப்பலியு நீனடே மகனே தற்செயலாக பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தது. விஜயா ஸ்டுடியோஸ் படங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது தேடித் போய் பார்த்தவை.
பொதுவாக இன்றைய ஹிந்திப் படங்களில் வருஷத்துக்கு நாலைந்து நல்ல படம் வருகின்றன. ஆரோக்யமான விஷயம்.
தெலுங்கு மிஸ்ஸம்மாவில் ஜமுனா, என்.டி.ஆர்., சாவித்ரி
மிஸ் மேரியில் மீனாகுமாரி
இயக்குனர் எல்.வி. பிரசாத்
விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.
தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.
மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.
அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!
பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!
பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.
ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!
தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)
மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.
1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.
அண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.
எம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.
நாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.
எம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்!
என்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.
மலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.
நான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.
யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.
இந்திய லிஸ்ட்.
1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?
எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:
நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.
அண்மைய பின்னூட்டங்கள்