ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்


இரண்டு பேருக்கும் எல்லா தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்!

ரஹ்மானுக்கு இருக்கும் அளவுக்கு புகழ் இளையராஜாவுக்கு இல்லைதான். ஆனால் ரஹ்மானுக்கு விருது கொடுக்கும்போது ராஜாவை மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.

எம்எஸ்வியை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ராஜாவுக்கு இருக்கும் புகழ் கூட அவருக்கு இல்லைதான். ஆனால் அவர் எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர் இல்லை. குறைந்த பட்சம் ஒரு பத்ம ஸ்ரீயாவது கொடுக்கக் கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.

அப்புறம் ஆமிர் கானுக்கு பத்ம பூஷன், செய்ஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.

விருது பெற்றவர்களின் முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயகாந்தனுக்கு பத்மஸ்ரீ
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்

விவேக்குக்கு பத்மஸ்ரீ


விருதுகள் சரியானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். அதை விட முக்கியமான விஷயம் தவறானவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது. சிவாஜி ஒரு முறை கூட சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பது மோசமான விஷயம். அதை விட மோசமான விஷயம் எம்ஜிஆருக்கு ரிக் ஷாக்காரனுக்காக கொடுக்கப்பட்டது.

விவேக்கை விட பல மடங்கு தகுதி வாய்ந்த நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்எஸ்வி, டிஎம்எஸ், பாலச்சந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா, எஸ்பிபி, பத்மினி, சுஹாசினி, எஸ். ஜானகி போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. சிவாஜியும் பத்மஸ்ரீ, கமலும் பத்மஸ்ரீ, விவேக்கும் பத்மஸ்ரீயா? என்னய்யா ஒரு விவஸ்தையே இல்லாமல் இருக்கிறதே? இனி மேல் கமல் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று போட்டுக்கொள்வதை நிறுத்திவிடலாம்.

இதற்காக நான் விவேக்கை குறை சொல்ல மாட்டேன். அவரை பரிந்துரைத்த கலைஞர் அரசைத்தான் குறை சொல்வேன். இந்த விருது இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? கருத்து கந்தசாமி பல படங்களில் நம்மை கருத்து சொல்லி கழுத்தை அறுத்ததற்காகவா? இல்லை இவரும் கலைஞருக்கு நன்றாக ஜால்ரா அடித்தாரா?

ஏற்கனவே கலைமாமணி விருது சந்தையில் கூறு கட்டி விற்பதைப் போல ஆகிவிட்டது. இந்த விருதுகளையும் அப்படி ஆக்கிவிடாதீர்கள்.