பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்


    பத்மவிபூஷன் விருதுகள்:

இப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்!

ஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்!

    பத்மபூஷன் விருதுகள்:

இளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே.

மல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், துரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.

ஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.

பத்மஸ்ரீ விருதுகள்:
ரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார்? ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்!

அருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.

கே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.

ரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.

செய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார்? தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.

நெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
இப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்
ஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு

மல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு

ரேகா பற்றிய விக்கி குறிப்பு
அருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு
கே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டுரை
ரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு
செய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு

ராஜா, ரஹ்மானுக்கு பத்மபூஷன்
பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்
இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ
2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்
2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?
2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்

கமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்


ஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி!

சைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.

ஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.

எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.

லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

பீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.

ட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

பர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

சிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.

க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.

ஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.

மாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

மாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

டிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.

காட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.

கமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே!

கமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய பதிவுகள்
கமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்

ஸ்லம்டாக் மில்லியனர் – ஸ்ரேயாவின் விமர்சனம்


நேற்று தயங்கி தயங்கி ஹேமா என் பத்து வயது பெண் ஸ்ரேயாவை ஸ்லம்டாக் மில்லியனர் பார்க்க அழைத்து சென்றாள். அவளுக்கு peer pressure – அவள் சக மாணவிகள் எல்லாம் பார்த்துவிட்டார்களாம்.

ஸ்ரேயாவின் ஒரு வரி விமர்சனம்:

For this long a movie, there should be more than two songs!

I don’t understand how the kids talk in Hindi before they fall of the train and in English after the fall from the train!

ஸ்லம்டாக் மில்லியனேர் – ஆஸ்கார் விருதுகள்


ஒன்பது போட்டிகளில் இருந்த ஸ்லம்டாக் எட்டில் வெற்றி பெற்றது. தோற்ற ஒரே பிரிவு சவுண்ட் எடிட்டிங் மட்டுமே. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த மூலக் கதையிலிருந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாட்டு, சிறந்த ஓளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்சிங். தோற்ற இன்னொரு பிரிவு சிறந்த பாட்டுக்காக – ஓ சாயா பாட்டு அதே படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாட்டிடம் தோற்றது.

வெற்றி:
சிறந்த படம் (போட்டி – Curious Case of Benjamin Button, Frost/Nixon, Milk, Reader)
இயக்குனர் டான்னி பாயில் (போட்டி – Curious Case of Benjamin Button, Frost/Nixon, Milk, Reader)
திரைக்கதை (மூலக் கதையிலிருந்து உருவாகியது) – (போட்டி – Curious Case of Benjamin Button, Doubt, Frost/Nixon, Reader)
இசை ஏ. ஆர். ரஹ்மான் (போட்டி – Curious Case of Benjamin Button, Defiance, Milk, Wall-E)
பாட்டு ஏ. ஆர். ரஹ்மான், குல்சார் – ஜெய் ஹோ. ஓ சாயா பாட்டும் போட்டியில் இருந்தது. போட்டியில் உள்ள இன்னும் ஒரு பாட்டு Wall-E படத்தில் வரும் “Down to Earth)
ஒளிப்பதிவு (போட்டி – Changeling, Curious Case of Benjamin Button, Dark Knight, Reader)
எடிட்டிங் (போட்டி – Curious Case of Benjamin Button, Dark Knight, Frost/Nixon, Milk)
சவுண்ட் மிக்சிங் (போட்டி- Curious Case of Benjamin Button, Dark Knight, Wall-E, Wanted)

தோல்வி:
சவுண்ட் எடிட்டிங் – Dark Knight வெற்றி. (இதர போட்டியாளர்கள் – Iron Man, Wall-E, Wanted)

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் வென்றார்


INDIA
மிக சந்தோஷமான விஷயம். ஒரு இந்தியன், தமிழன் உலகத்தால் recognize செய்யப்பட்டிருக்கிறார். வாழ்த்துகள்!

இதை போஸ்ட் செய்தவுடன் ஜெய் ஹோ பாட்டுக்காகவும் ஒரு ஆஸ்கார் கிடைத்து விட்டது. அதுவும் ஹிந்தியில் அரைகுறையாக ஹிந்தி தெரிந்த நானே ரசிக்கும் படி பாட்டு எழுதும் குல்சாருக்கும் கிடைத்தது மிக சந்தோசம்!
gulzar

ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire)


யூனியன் சிட்டி செஞ்சுரி தியேட்டரில் பத்து டாலர் கொடுத்து பார்த்த படம். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று எல்லாரையும் அழைக்கிறேன்.

நேற்று டிவியில் ஒன்றும் இல்லாமல் கோல்டன் க்ளோப் விருதுகளை பார்த்தோம். திடீரென்று ரஹ்மானுக்கு விருது. ஷா ருக் கான் ஒரு நிமிஷம் வந்து பேசினார். அனில் கபூர் பின்னால் தெரிகிறார். சிறந்த படம், இயக்குனர், திரைக்கதை, இசை விருதுகளை தட்டி சென்றது. (தெரியாதவர்களுக்காக: அமேரிக்காவில் கோல்டன் க்ளோப் ஆஸ்காருக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. இங்கு விருது பெறும் படங்கள் பலவும் ஆஸ்காரையும் தட்டி செல்லவது வழக்கம்). நம்மூர்க்காராருக்கு விருது கிடைக்கிறதே என்று ஒரு குஷி. வியாபார ரீதியான வெற்றி ஆஸ்காரில் உதவும், அதனால் எல்லாரும் பாருங்கள்!

2008இல், டான்னி பாயில் இயக்கி, தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான், பல தெரியாத முகங்கள் நடித்து, ரஹ்மான் இசையில் வந்த படம். டான்னி பாயில் இயக்கிய பிற படங்கள் என்ன என்று தேட வேண்டும்.

கொஞ்சம் நம்ப முடியாத கதைதான். ஹூ வாண்ட்ஸ் டு பீ எ மில்லியனர் மாதிரி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒரு இளைஞனுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிகிறது – எப்படி தெரிகிறது என்பதுதான் கதை. இதற்கு மேல் கதையை விளக்கினால் சுவாரசியம் போய்விடும்.

திரைக்கதை அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக அந்த சிறுவர்கள், அனில் கபூர். ரஹ்மானின் இசை எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை – தமிழில் பாட்டு கேட்டு கேட்டு பழகி விட்டேன், பின்னணி இசை எல்லாம் எனக்கு கேட்பதே இல்லை.

சில காட்சிகள் பிரமாதம். திடீரென்று நீல வண்ண ராமனாக ஒரு சிறுவன் தோன்றுவது; ஜாக் ஹாப்ஸ் என்ற விடையை தேவ் படேல் தேர்ந்தெடுப்பது; சத்ய மேவ ஜெயதே கேள்விக்கு தேவ் பார்ப்பவர்களின் உதவியை நாடுவது; கால் சென்டரில் ஸ்காட்லாந்து பற்றி உளறுவது, இவை எல்லாமே அருமை.

அநாதை விடுதி நடத்துபவராக வருபவர் உண்மையிலேயே வயிற்றில் புளியை கரைக்கிறார்.

இது ஹிந்தியில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சேரி சிறுவர்கள் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அமேரிக்காவில் ஓட்ட முடியாதுதான், ஆனால் எனக்கு அது கொஞ்சம் நிரடியது.

நல்ல படம், 10க்கு 7.5 மார்க், B grade.