பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்


    பத்மவிபூஷன் விருதுகள்:

இப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்!

ஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்!

    பத்மபூஷன் விருதுகள்:

இளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே.

மல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், துரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.

ஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.

பத்மஸ்ரீ விருதுகள்:
ரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார்? ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்!

அருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.

கே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.

ரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.

செய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார்? தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.

நெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
இப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்
ஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு

மல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு

ரேகா பற்றிய விக்கி குறிப்பு
அருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு
கே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டுரை
ரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு
செய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு

ராஜா, ரஹ்மானுக்கு பத்மபூஷன்
பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்
இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ
2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்
2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?
2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக