தாதாசாஹேப் ஃபால்கே விருது


முக்கால்வாசி தமிழர்களுக்கு இப்படி ஒரு விருது இருப்பதே சிவாஜிக்கு இந்த விருது கொடுத்த பிறகுதான் தெரியும். இந்திய அரசு சினிமாத் துறையில் பெரும் சாதனையாளர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கிறது.

V.K. Murthy

2008-ஆம் வருஷத்துக்கு விருதை வென்றவர் வி.கே. மூர்த்தி. மூர்த்தி கன்னடிகர். ராஜ்குமாருக்கு அடுத்தபடி இந்த விருதை வென்ற கன்னடிகர் இவர்தான். காமெராமேன். எனக்கு காமெராவின் நுட்பம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. ஆனால் குரு தத்தின் முக்கால்வாசி படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர், குரு தத்தின் படங்கள் அனேகமாக கிளாசிக் ஒலிப்பதிவைக் கொண்டவை. கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் சில சமயம் ஒளிப்பதிவு அற்புதமாகத் தெரிவதுண்டு. மூர்த்தியின் கறுப்பு வெள்ளைப் படங்கள் அப்படித்தான். அந்த மாதிரி ஒளிப்பதிவு என்றால் எனக்கு தமிழ் படத்தில் நினைவு வருவது “அந்த நாள்” திரைப்படம்தான். காகஸ் கே ஃபூல், ப்யாசா, ஆர் பார், சாஹிப் பீபி அவுர் குலாம், Baazi (இதுதான் தங்கைக்காக என்று பிற்காலத்தில் சிவாஜி நடித்து வந்தது), சி.ஐ.டி. போன்ற படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்தவைதான்.Kagaz Ke Phool என் போன்ற பாமரனுக்கே அற்புதமான ஒளிப்பதிவு என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவுக்கு என்று ஒரு விருது கொடுத்திருப்பது, அதுவும் இவருக்கு கொடுத்திருப்பது பொருத்தமானதே.

தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்களின் லிஸ்டைப் பார்த்தால் வயிறு எரிகிறது. ஹிந்திப் படங்களுக்கு மட்டுமே recognition இருக்கிறது. தமிழுக்கு சிவாஜி மட்டுமே; கன்னடத்துக்கு ராஜ்குமார் மட்டுமே; கேரளாவுக்கு அடூர் கோபாலகிருஷ்ணன் மட்டுமே; தெலுங்குக்கு நாகேஸ்வர ராவ், எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, பி.என். ரெட்டி; பானுமதி, எம்ஜிஆர், ஸ்ரீதர், பாலச்சந்தர், ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, நாகேஷ், எம்எஸ்வி, இளையராஜா, டிஎம்எஸ், சுசீலா, எஸ்பிபி, எஸ். ஜானகி போன்றவர்கள் மன்னா டே, தபன் சின்ஹா, யஷ் சோப்ரா, பிரதீப், துர்கா கோட்டே போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. கே. சுப்பிரமணியம், ஏவிஎம் செட்டியார் போன்ற முன்னோடிக்காவது கொடுத்திருக்கலாம். சிவாஜிக்கே தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்னால் நாகேஸ்வர ராவுக்கும் ராஜ்குமாருக்கும் கொடுத்ததே தவறு!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

சுட்டிகள்:
தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்கள் லிஸ்ட்
வி.கே. மூர்த்தி பற்றிய விக்கிபீடியா குறிப்பு
நடிகர் மோகன்ராம் எழுதிய ஒரு குறிப்பு

லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால்


லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் ஹிந்தி சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள். ஏக துஜே கே லியே படத்துக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். தோஸ்தி, பாபி, அமர் அக்பர் அந்தோணி, Karz, Tezaab, கல்நாயக் படங்களுக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். பாபியின் ஹம் தும், கர்சின் ஓம் சாந்தி ஓம், ஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி, தேஜாபின் ஏக் தோ தீன், கல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை போன்ற பாட்டுகள் வருஷக்கணக்கில் டாப் ஹிட்டாக இருந்தன. என் கண்ணில் இவர்கள் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா, நௌஷத், ஓ.பி. நய்யார் போன்றவர்களை விட ஒரு மாற்று குறைவுதான். ஆனால் நல்ல இசையமைப்பாளர்கள். தமிழில் எனக்குத் தெரிந்து உயிரே உனக்காக படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்கள். அதில் “தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்” என்பது மிகச் சிறந்த பாட்டு. அவர்களைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை இங்கே பார்த்தேன். நீங்களும் படிக்க…

பாபியின் ஹம் தும்

ஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி

தேஜாபின் ஏக் தோ தீன்

கல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை

ஒரு லட்சம் ஹிட்கள்


அப்படி இப்படி இங்கேயும் ஒரு லட்சம் ஹிட்கள் வாங்கிவிட்டோம். படிக்கும் எல்லோருக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்:
முதலாம் ஆண்டு நிறைந்தது
ஆயிரம் மறுமொழிகள்!

வஞ்சிக் கோட்டை வாலிபன்


படம் வந்தபோது (மே 1958) விகடனில் வந்த விமர்சனம். கூடிய விரைவில் என் விமர்சனமும் வரும். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: என்ன தம்பி, ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கியே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே?

மாணிக்கம்: கோட்டை யைப் பிடிக்கத்தான் புறப்பட்டேன்; நீ குறுக்கே வந்துட்டே. வஞ்சிக்கோட்டை வாலிபனிலே இடம் பிடிக்கப் போறேன்.

முனு: அதென்ன இந்நேரம் பொறுத்து? இப்ப இன்டர்வெல் முடிஞ்சிருக்குமே!

மாணி: படத்தை நாலுவாட்டி பார்த்துட்டேன் அண்ணே! இன்டர்வெல்லுக்கப்புறம் ஒரு டான்ஸ் போட்டி வருது. அதைப் பார்க்கத்தான் தினம் போய்க்கிட்டு இருக்கேன்.

முனு: அதென்னப்பா அவ்வளவு ஒசத்தியான போட்டி?

மாணி: வைஜயந்திமாலாவும் பத்மினியும் டான்ஸிலே போட்டி போட்டுக்கிட்டு ஆடியிருக்காங்க!

முனு: சரி, போட்டியிலே யாரு ஜெயிக்கறாங்க?

மாணி: படம் பிடிச்சவங்கதான்! இது உண்மையிலே கலைப் போட்டி இல்லே, அண்ணே! காதல் போட்டி. கடைசியில் காதல்தான் ஜெயிக்குது. ஒருத்தி தன் உயிரைக் கொடுத்து காதலனைக் காப்பாத்தறா; யாருகிட்டே போட்டிக்குப் போனாளோ, அவ கையையே பிடிச்சுக் காதலனிடம் ஒப்படைக்கிறா.

முனு: என்ன தம்பி இது, அதுக்குள்ளே முடிவுக்குப் போயிட்டியே, ஆரம்பத்தைச் சொல்லு!

மாணி: அது ஒரு பெரிய புயல் அண்ணே..!

முனு: காதல் புயலா? பொறாமைப் புயலா?

மாணி: இரண்டும் இல்லே! ஒரு கப்பல் புயலிலே மாட்டிக்குது. ஒரு வாலிபன் துணிச்சலா கம்பத்திலே ஏறி பாய்மரத்தை வெட்டிக் கப்பலைக் காப்பாத்திடறான். அந்தக் காட்சியே ரொம்ப ஜோர் அண்ணே! சும்மா இங்கிலீஷ் படம் பார்க்கறாப்போல இருக்குது.

முனு: ஜெமினி கணேசன்தானே அந்த வாலிபன்! அவரு எப்படி?

மாணி: பிரமாதப்படுத்தியிருக்காரு. கப்பல் பாய்மரத்துலே ஏறி, பாயை வெட்டறாரு பாரு… அடேங்கப்பா படா திரில்லு! கடைசி சீன்லே கோட்டை உச்சியிலே வீரப்பாவோடு கோடாலிச் சண்டை போட்டுக் குப்புறத் தள்ளறாரு. ஸ்டன்ட் செய்யறபோது எம்.ஜி.ஆர் கணக்கா இருக்குது; உணர்ச்சியா நடிக்கிறபோது சிவாஜி மாதிரி தோணுது. ரத்ன வியாபாரியா வரபோது சக்கைப் போடு போடறாரு; அடிமையா வந்து வைஜயந்தி எதிரில் நின்னு டாண்டாண்ணு பதில் சொல்றபோது, ‘சபாஷ்… சபாஷ்’னு சொல்லத் தோணுது.

முனு: வைஜயந்தி என்னமா வருது?

மாணி: தளதளன்னு வருது; ஜிலுஜிலுன்னு பாடுது. இந்தப் படத்திலே அதைப் பார்க்கிறபோது, மங்கம்மா சபதத்திலே அவங்க அம்மா வசுந்தரா ஆடினதும் பாடினதும் ஞாபகம் வருது. ‘ராஜா மகள்… ரோஜா மலர்’னு ஒரு டான்ஸ் ஆடுது பாரு..!

முனு: அது நாட்டியம் ஆடறது ஒரு அதிசயமா தம்பி!

மாணி: இல்லேண்ணே, நடிப்பும் ரொம்ப அபாரம். துண்டு துண்டா ஒரு வார்த்தைதான் பேசுது. எத்தனை அர்த்தம்… எத்தனை பாவம்..! எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா? கண்ணைச் சிமிட்டினா ஒரு குறும்புத்தனம்; உதட்டைக் கடிச்சா ஒரு உணர்ச்சி; நடந்தா ஒரு அர்த்தம்; உட்கார்ந்தா ஒரு பாவம்; நின்னா ஓவியம்; திரும்பினால் காவியம்..!

முனு: போதும்டா தம்பி, பத்மினி எப்படி?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே? அதுக்குக் குடுத்திருக்கிற வேஷமே நெஞ்சை உருக்குது.

முனு: கதையைச் சொல்லேன், கேட்போம்.

மாணி: நாட்டுக்காக தந்தை தன் வீட்டையே தியாகம் செய்யறார். கடமைக்காக மகன் காதலையும் உதறித் தள்ளிட்டு, தன் தகப்பனுக்கும் தாய்க்கும் தங்கைக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தவனைப் பழி வாங்குகிறான். இதை வச்சுக்கிட்டு, கோட்டையும் கொத்தளமும் கப்பல் சண்டையும் பிரமாண்டமா எடுத்திருக்காங்க. படத்தைப் பார்த்தாலே பிரமிப்புத் தட்டுது! அழகு சொட்டுது!

இந்தப் படத்திலே இன்னொரு விசேஷம் அண்ணே! நம்ப வீரப்பா சிரிக்காமலே சிறப்பா நடிச்சிருக்காரு!

முனு: மொத்தத்திலே படம் எப்படி?

மாணி: நல்ல விறுவிறுப்பண்ணே! பார்க்கப் பார்க்கத் திகட்டல்லே! சந்திரலேகா மாதிரி ஜமாய்க்குது!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

25 Must See Bollywood Movies


இங்கே ஒரு ஸ்லைட்ஷோ பார்த்தேன். படங்களைப் பற்றிய என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

 1. ப்ளாக்: பார்க்கலாம், ஆனால் must-see என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
 2. லகான்: இரண்டாவது பகுதி என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கும். அந்த காப்டன் நல்ல ரோல். முதல் பகுதி வேஸ்ட்!
 3. சத்யா: மும்பையின் மாஃபியா உலகை நன்றாக காட்டி இருப்பார்கள். நல்ல படம்.
 4. தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே: டைம் பாஸ் மட்டுமே.
 5. கயாமத் சே கயாமத் தக்: ஓகே படம். அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.
 6. மிஸ்டர் இந்தியா: “பிரம்மச்சாரி” படத்தின் உல்டா. படத்தில் ஸ்ரீதேவி மழையில் நனைந்து கொண்டே பாடும் ஒரு பாட்டு பிரமாதம்!
 7. ஜானே பி தோ யாரோ: சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். கடைசி க்ளைமாக்ஸ் சீனில் உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.
 8. அர்த்: தமிழில் கூட “மறுபடியும்” என்று வந்தது. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டிலின் சிறந்த நடிப்புக்காகவே பார்க்கலாம்.
 9. தீவார்: ஒரு விதத்தில் இதை மதர் இந்தியாவின் உல்டா என்று சொல்லலாம். நல்ல படம்.
 10. ஷோலே: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
 11. பாபி: அம்மா நடிகைகள் கூட “அஞ்சரைக்குள்ள வண்டி” ரேஞ்சில் நன்றாக காட்டுவார்கள். டிம்பிள் கபாடியாவை பார்த்து ஜொள்ளு விடலாம்!
 12. கரம் ஹவா: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
 13. பகீசா: பாட்டு மட்டும் கேளுங்கள், படம் தண்டம்.
 14. ஆனந்த்: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
 15. பதோசன்: மெஹ்மூத் சதுர நார் என்று பாடும் ஒரு காட்சியே போதும், பைசா வசூல்! நல்ல பாட்டுகள், மெஹமூதின் மாஸ்டர்பீஸ்!
 16. தீஸ்ரி மன்சில்: ஷம்மி கபூர் என் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்து கிடித்து எல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். ஆர்.டி. பர்மனின் இசை கலக்கல்!
 17. கைட்: ஆர்.கே. நாராயணின் கதையை கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அற்புதமான பாட்டுகள்.
 18. சாஹிப் பீபி அவுர் குலாம்: பிரமாதமான படம். மீனா குமாரியின் மாஸ்டர்பீஸ்.
 19. மொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.
 20. ப்யாசா: சிறந்த படம். குரு தத்தின் மாஸ்டர்பீஸ்?
 21. மதர் இந்தியா: இந்த படத்தின் பாத்திரங்கள் – நல்ல அண்ணன், கோபக்கார தம்பி, தவறு செய்யும் மகனை சுடும் அம்மா – எல்லாம் ஸ்டீரியோடைப்களாக மாறிவிட்டன. ஆனாலும் இந்தப் படம் இன்னும் நன்றாக இருக்கிறது. இதுதான் இந்தக் கதையின், படத்தில் வெற்றி.
 22. தோ ஆங்கேன் பாரா ஹாத்: சாந்தாராம் நடித்து இயக்கிய படம். தமிழில் “பல்லாண்டு வாழ்க” என்று வந்தது. சமீபத்தில் பார்த்தேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம். இல்லை என்றால் நம்ப முடியாத கதை என்று சொல்லி இருப்பேன். 🙂 சிம்பிளான கதையை எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.
 23. தேவதாஸ்: எனக்கு எந்த தேவதாஸ் படமும் பிடித்ததில்லை. திலீப் குமார் நடித்த இந்த ஹிந்தி படம் எனக்கு சரியாக நினைவுமில்லை.
 24. தோ பிகா ஜமீன்: பால்ராஜ் சாஹ்னி மிக அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படம் இப்போது ஒரு cliche ஆகிவிட்டது.
 25. ஆவாரா: சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். அருமையான பாட்டுகள். பாட்டுகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கூட நம்பகத் தன்மை இல்லாத கதை. ஆனால் நர்கிஸ் sizzles!

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I, பகுதி II
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
இந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

தங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்


Thangap Pathakkamதங்கப் பதக்கம் ஒரு quintessential சிவாஜி படம். சிவாஜி படங்களின் எல்லா பலங்களும் பலவீனங்களும் நிறைந்த படம்.

சிவாஜி படங்களில், குறிப்பாக 1965-80 காலப் படங்களில் சிவாஜி மட்டும்தான் இருப்பார். படம் பூராவும் வியாபித்திருப்பார். படத்தின் காட்சிகள் எல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமையை காட்டவே அமைக்கப்பட்டிருக்கும். சிவாஜி உணர்ச்சி பொங்க நடிப்பதற்கு வசதியாக கதை மிகைப்படுத்தப்படும். இப்படி மிகைப்படுத்தப்ப்படும்போது கதையில் ஓட்டைகள் விழும், காட்சிகள் coherent ஆக இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாரும் சிவாஜியையே பார்த்துக் கொண்டிருப்பார்கள், கதையின் பலவீனங்கள் தெரியாது.

தங்கப் பதக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல். சிவாஜியையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொன்ன அந்த கால இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். கே.ஆர். விஜயாவுக்கு ஓரளவு ஸ்கோப் உள்ள ரோல். கதையின் ஓட்டைகளை ஸ்ரீகாந்த், சிவாஜியின் நடிப்பு இன்றும் ஓரளவு மறக்கடிக்கிறது.

தெரிந்த கதைதான். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தன் அயோக்கியனான மகனை எதிர்கொள்கிறார்.

நினைவு வரும் ஓட்டைகள்:

 • தமிழ் நாட்டில் யார் சௌத்ரி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள்? தமிழ் நாட்டில் வாழும் வடநாட்டு குடும்பம் என்று வைத்துக் கொண்டாலும் பையனுக்கும் சௌத்ரி என்றுதான் பேர் வரும். என்னவோ அப்படி பேர் வைத்தால் புதுமையாக இருக்கும், லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள்.
 • பையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் கண்டிப்பான அப்பா. சரி. அவனை ஒரு தரம் கூட போய் பார்க்காதது ஏன்? ஏதாவது வேண்டுதலா? மனைவியிடம் பொய் எதற்கு? ஒரே காரணம்தான். பொய் சொல்லி மாட்டிக் கொள்வது போல ஒரு சீன் வைத்து அதில் சிவாஜி “நடிக்க வேண்டுமே!”
 • திரும்பி வரும் பையன் தவறான வழியில் போவது அப்பாவுக்கு தெரிகிறது. என்ன ஒரு வார்த்தை கூட இப்படி செய்யாதே, இது தொடர்ந்தால் நானே அரெஸ்ட் செய்ய வேண்டி வரும் என்று சொல்லமாட்டாரா? சிவாஜி அப்பாவாக இருந்தால் சொல்லமாட்டார். சொல்லி, ஸ்ரீகாந்த் திருந்திவிட்டால் அரெஸ்ட் செய்யும் சீன் எப்படி வைப்பது, படம் பார்ப்பவர்களை எப்படி “அதிர்ச்சி” அடையச் செய்வது, சிவாஜி எப்படி முகத்தை முறுக்கிக் கொண்டு நடிப்பது?
 • சிவாஜி பிரமாதமாகத்தான் நடித்திருக்கிறார். அவரிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும்.

  கே.ஆர். விஜயா வழக்கம் போலத்தான். ஆனால் அவருக்கு இந்த படத்தில் கிடைத்த ரோல் கொஞ்சம் வலுவானது. கணவனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரோல். சொதப்பாமல் செய்திருக்கிறார்.

  இந்தப் படத்தில்தான் சோ அப்பாயிசம் என்று எம்ஜிஆரின் அண்ணாயிசத்தை கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன்.

  சோதனை மேல் சோதனை பாட்டு மிகவும் பிரபலமானது. சிவாஜியை கிண்டல் செய்யவும் பயன்பட்டது. அதுவும் அதில் பிரமீளா “மாமா… அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?” என்று உருகுவது நான் சிவாஜி பக்தனாக இருந்த காலத்திலேயே மிகவும் கிண்டல் செய்யப்பட ஒன்று. இதைத் தவிர தத்தி தத்தி பிள்ளை, சுமைதாங்கி சாய்ந்தால் ஆகிய பாட்டுகளும் நினைவு வருகின்றன.

  1974-இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த், பிரமீளா, வி.கே. ராமசாமி, சோ ராமசாமி, ஆர்.எஸ். மனோகர், மேஜர் சுந்தரராஜன், மனோரமா நடித்திருக்கிறார்கள். இசை எம்எஸ்வி. பிற்காலத்தில் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் மாதிரி படங்களை இயக்கிய மகேந்திரன் கதை வசனம். மகேந்திரனுக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம். இயக்கம் பி. மாதவன். பெரிய வெற்றிப் படம். சிவாஜியின் படங்களின் இன்றும் பேசப்படுவது.

  மகேந்திரன் இந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான் பேசினாரா என்று தெரியாது. ஆனால் அவர் எங்கோ தான் கல்லூரி காலத்தில் எம்ஜிஆர் முன்னிலையில் தமிழ் சினிமா எப்படி யதார்த்தமற்ற வாழக்கையை மட்டுமே காட்டுகிறது என்று ஆவேசமாக பேசியதாகவும், பிற்காலத்தில் தான் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றபோது அப்படிப்பட்ட யதார்த்தமற்ற கதைகளையே உருவாக்கியதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

  இன்று கொஞ்சம் மெலோடிராமடிக் ஆகத் தெரிந்தாலும், சிவாஜியின் சிறந்த படங்களில் ஒன்று. ஸ்ரீகாந்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பத்துக்கு ஏழு மார்க். B- grade.

  தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்: தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்

  சாரதா, ஃபோரம்ஹப்பில் உங்கள் விமர்சனம் ஏதாவது இருக்கிறதா?

  பாலு மகேந்திரா பற்றி சுஜாதா


  பாலு மகேந்திரா பற்றி  சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)

  See full size image

  தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில்  ‘பரிசு’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார்.  அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார்.  பேட்டி என்பதைவிட,  இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து,  ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு,  காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார்.  பல விஷயங்கள் பற்றிப் பேசினோம்.  பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது,  ‘அட…. இது நானா….?’   என்று ஆச்சரியமாக இருந்தது.  எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான்.  தெர்மோகோல்  ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது.   இருந்தும்,  எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான் இருக்கிறார்.

  https://i0.wp.com/www.thehindu.com/fline/fl2213/images/20050701003911106.jpg

  பாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது.

  https://i0.wp.com/4.bp.blogspot.com/_wZojNfQxBRg/S6kKPgBesFI/AAAAAAAAAAs/I9pd8K-fW80/s320/Sankarabharanam.jpg
  விசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு,   அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.
  https://i2.wp.com/www.salilda.com/images/kokila.jpg
  பெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது,  கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.   மூவரும் நிறையப் பேசினோம்.
  Balu%20Mahendra
  பின்னர்,  ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை   பாலு மகேந்திரா எடுப்பதாக,   நடராஜன் (பிற்பாடு பிரமிட்)   தயாரிப்பதாக,  காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது.   திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார்.   ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
  https://i1.wp.com/4.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S7IU043UgKI/AAAAAAAAAqc/T0UFoIv6ZHc/s1600/shoba-prada.jpg
  பாலு அதற்குப் பதில் ‘மூடுபனி‘   எடுத்தார்.    பின்னர்,  பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத,  அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம்.   அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும்  என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது.   ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும்,   ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார்.   சற்றே சமாதானமானோம்.

  See full size image
  அந்தச் சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது.  சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’  என்று கட்டிக்கொண்டார்.  என்னுடன் வந்திருந்த என் மனைவி வீட்டுக்கு வந்ததும்,  ‘இது அங்கிள் உறவு இல்லை’  என்றாள்.  சில தினங்கள் கழித்து குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன்  வந்திருந்தது.   அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி.
  https://i0.wp.com/www.southdreamz.com/wp-content/uploads/2008/06/shobha_nationalaward.jpg
  அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன்.   அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை.  அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை.

  சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்கப்படும்போது  அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார்.   அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம்.   ஆயினும் அவரே  ‘தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

  See full size image

  அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே  பாலு மகேந்திரா பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

  ”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.   தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

  சுஜாதாவின் ‘நிலம்’

  ‘நிலம்’ கதையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.   அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார்.   நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.

  கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘திருடா திருடா’  திருடா திருடா திரைப்படம் (1993) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  சுஜாதா கூறுகிறார்……
  மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார்.  தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார்.  இந்த ஐடியா பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.

  “கிராமத்தில் இரண்டு திருடர்கள்…..  ஒரு முடிவில்லாத சேஸ்.  இது பிடித்திருக்கிறதா ?”  என்றார்.
  “பிடித்திருக்கிறது.  எழுதலாம்”  என்றேன்.

  File:Album thirudathiruda cover.jpg
  திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பிரசாந்த்) இணைபிரியாத நண்பர்கள்   மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள்.  காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர்.  மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர்.  இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர்.  இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான்.  பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும்.

  https://i0.wp.com/i33.tinypic.com/2rw0xmu.gif

  • இத்திரைப்படமே இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.
  • ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சோர் சோர் என வெளியிடப்பட்டது
  • திருடா திருடா படத்தின் திரைக்கதை ராம்கோபால் வர்மா.

  லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கூறுகிறார்……

  Ram Ramachandran
  மணி ரத்தினத்தின் ‘திருடா திருடா‘ (1993) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.
  பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம்.
  பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும். காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

  கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். ‘சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?’ என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.
  அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.
  வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

  நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், “அடிங்கடா, உதைங்கடா” ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.  நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப்பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

  கொஞ்சம் நிலவு…..

  வீரபாண்டிக் கோட்டையிலே…..

  தீ  தீ  தித்திக்கும் தீ…..

  ராசாத்தி என் உசிரு என்னுதில்ல…..

  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்……

  [sujatha.jpg]

  (கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

  தொடர்புடைய பதிவுகள்:

  சுட்ட பழம்


  எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று இதோ ஒரு பட்டியல்:

  வெற்றி விழா – Bourne Identity

  மை டியர் மார்த்தாண்டன் – Coming to America

  மகாநதி ஜெயில் காட்சிகள் – If tomorrow comes
  (இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

  12B – Sliding doors

  ஜேஜே – Serendipity

  நியூ – Big

  பாட்ஷா – இந்தி ‘Hum’ (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

  சரோஜா – ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night)

  நாயகன் – God Father

  நாயகன் – ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள்.
  பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும். தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான். ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள்.   தமிழிலும் அதே.

  அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட்டது தான்.

  திருடா திருடா – Cliff Hanger

  ரோஜா – சத்யவான் சாவித்ரியை  உல்டா செய்தது.

  தளபதி – மகாபாரத உல்டா

  கன்னத்தில் முத்தமிட்டால் கதை “stuart little” கதையை ஒத்து இருக்கும்.

  ஆயத எழுத்து – Amerros perros {நிறைய ஒத்து இருக்கும்}

  ‘குரு’ – ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட ‘சிட்டிசன் கேன்’ என்னும் படத்தின் அதே கதைதான்

  ரித்விக் கட்டக் இயக்கிய “மேகதாரா” (1962 என்று ஞாபகம்) பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை”யின் கதையும் காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.

  கண்ணெதிரே தோன்றினாள் —- உயிரா? மானமா ? {ஜெய்சங்கர் & முத்துராமன் } அப்ப்டியே காப்பி..

  மே மாதம் – Roman Holiday

  கஜினி—- Memento

  பட்டியல் – Bangkok Dangerous -இன்  தமிழ் பதிப்பு

  அவ்வை ஷண்முகி – Mrs Doubtfire

  தெனாலி – What about bob

  ருத்ரா – பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது

  சூரியன் – Point of impact by stephen king

  நான் சிகப்பு மனிதன் – Death wish

  காதல் கோட்டை – Shop around the corner

  தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். – Double jeapordy

  யுவா – Amerros perros

  அருணாச்சலம் – Brewster’s Millions

  ஆத்மா .- The Miracle

  வசூல்ராஜா – Patch Adams

  காதல் கொண்டேன் – Klassenfahrt

  சதி லீலாவதி – She Devil

  மகளிர் மட்டும் – Nine to Five

  பச்சைக்கிளி முத்துச்சரம் – Derailed

  எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ‘உலகம் சுற்றும் வாலிபன்’  —  ராமண்ணா இயக்கிய ‘மூன்றெழுத்து’

  அந்நியன் – சிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்’

  அன்பே சிவம் —  Planes Trains and Automobiles (1987)

  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  —  Sense and Sensibility

  உள்ளத்தை அள்ளித்தா அப்படியே சபாஷ் மீனா

  எல்லாம் இன்ப மயம் அப்படியே ஹலோ பார்ட்னர் கதை.

  தெய்வச்செயல் ஹாதி மேரா சாதியாக இந்திக்குச் சென்று மீண்டும் யூ டர்ன் அடித்து தமிழில் நல்லநேரமாக ஆனது.

  கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘முதல்வன்’


  [muthalvan.jpg]


  சுஜாதா கூறுகிறார்….

  ‘முதல்வன்’ திரைப்படத்தின்  உருவாக்கத்தில் (வசனம்)  பங்கு கொண்டவன் என்ற தகுதியில்,  தமிழ் சினிமாவின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது.

  ‘முதல்வன்’ ஒரு பெரிய நடிகருக்காகப் ‘பண்ணப்பட்ட’  கதை.  அதைக் கேட்டு அவர் மிகுந்த சிந்தனைக்குப் பின்,  ‘இந்தக் காலகட்டத்தில் நான் இந்தப் படத்தில் நடித்தால் பிரச்னைகள் வரும்’  என்று வருத்தத்தோடுதான் நிராகரித்தார்.  இதை அவர் துவக்க விழாவிலேயே சொன்னார்.  நிஜவாழ்வும்,  சினிவாழ்வும் தமிழ்நாட்டில் இரண்டறக் கலந்திருப்பதினால் வரும் தயக்கம்.  அவர் எடுத்த முடிவு சரியா என்பதைப் படம் வந்ததும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

  https://i1.wp.com/icdn.raaga.com/Catalog/CD/T/T0000002.jpg

  கதை சுவாரஸ்யமாக இருந்ததால்,  ‘பெரிய நடிகர் இல்லாமல்,  ஒரு நல்ல நடிகர் இருந்தாலே போதும்’ என்று சொன்னேன்.  ஷங்கர் இறுதியில் தன்னுடைய முதல் வெற்றிப் படமான ‘ஜென்டில்மேன்’ னில் நடித்த அர்ஜுனைத் தேர்ந்தெடுத்தார்.  கதாநாயகிக்கு ‘இந்தியனி’-ல் நடித்த மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தார்.
  முதல்வன்’ ஒரு எளிய கருத்தைச் சொல்லும் படம்.  புராணக் கதைகளில் தீடீரென யானை வந்து மாலை போட்டதும்,  ‘நீதான் இந்த நாட்டுக்கு ராஜா’  என்று சொல்வார்களே….  அது போன்ற கதை.   தற்செயலாக ஒருவனுக்கு ஒரே ஒரு நாள் முதல்வராக இருக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிற ஒரு fairy tale .  அதன் விளைவுகளை,  ஷங்கரின் பாணியில் பிரமாண்டமான காட்சிகள்,  பிரமிப்பூட்டும் படப்பிடிப்பு,  டி.டி.எஸ்.,  ஏ.ஆர்.ரஹ்மான்  போன்ற சமாச்சாரங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறார்.
  இதற்கு வசனம் எழுதும்போது,  தமிழ்நாட்டு அரசியலின் எந்த நிழலும் படாமல்,  எந்த மாநிலத்திலும் நிகழக்கூடிய  கற்பனைக் கதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது.  கதையின் களம்தான் தமிழ்நாடு,  அரசியல் இந்தியா.முதல்வனின் டிஸ்கஷன்  ஊட்டியில் ஏப்ரல் மாதம் நடந்தது.  ஒரு வருஷத்துக்கு மேல் முனைந்த கதையை,  இப்போது திரை வடிவில் பார்க்கையில்,  ஒரு ஓட்டல் அறையில் மனதில் புறப்பட்ட கதையைக் கோடிகள்  கொடுத்து,  நாடு முழுவதும் திரை விரித்துக் காட்டும் இந்த ‘அல்கெமி’ யின் விதிகளும்,  விபத்துகளும்  அவஸ்தைகளும் புரிகின்றன.

  Mudhalvan

  முதல்வன்‘  வீசிடீயும் வீடியோவும் மதுரையில் கேபிளில் திரும்பத் திரும்ப காட்டப்பட்ட நிகழ்ச்சிகளையும்,  அவற்றின் உள்நோக்கம் பற்றியும் செய்திகள் பல பத்திரிகைகளில் வந்துவிட்டன.  எனக்கு இதில் வியப்பாக இருந்தது,   சினிமாவில் சொன்னது மிகையில்லை….  ஏறக்குறைய அதே பாணியில் சினிமாவுக்கு வெளியிலும் சம்பவங்கள் நடந்ததுதான்.


  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்மையில் அவர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது.

  முதல்வன்‘ல நீங்க நடிச்சிருக்கலாமே?”  என்றேன்.
  “ஐயோ,  வேண்டாங்க….   அர்ஜுன் நடிச்சதுக்கே இவ்வளவு ஸ்ட்ராங்கா  ரீயாக் ஷன்   இருந்திருக்கு.  பத்து நாளா  யோசிச்சு தான் வேண்டாம்னேன்ங்க.   நான் நடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும் !””நிஜமாவே சி.எம்.  ஆகியிருப்பீங்க”  என்றேன்.சிரித்து,  “அது ஒண்ணு மட்டும் நிச்சயமா வேணாங்க!”    என்றார்.

  இயக்குனர் ஷங்கர் கூறுகிறார்…..
  https://i0.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2009/06/images2.jpg
  சாருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் முதல்வன். அதை அவர்கிட்ட சொன்னப்போ ஒவ்வொரு காட்சிக்கும் அவர் முகத்தில் தெரிந்த ரீயாக் ஷன் பார்த்து, இந்தப் படத்தை சார் நிச்சயம் பண்றார்னு முடிவே பண்ணிட்டேன்.ஆனா அவர் சில நடைமுறை சிக்கல்களை எனக்கு புரிய வைச்சார். படம் வெளியானப்ப அதை நானும் புரிஞ்சிக்கிட்டேன். அர்ஜூன் இந்தக் கதைக்கு தன்னைப் போலவே பொருத்தமாக இருப்பார் என்று என் மனதிலிருந்ததை அப்படியே சொன்னார் ரஜினி. முதல்வன் பெரிய வெற்றிப் படம்தான். அதை ரஜினி சாரை வைத்து நான் பண்ணியிருந்தா, அது வேற ஒரு சிகரத்தைத் தொட்டிருக்கும்..”, என்றார் ஷங்கர்.

  Mudhalvan

  முதல்வன் படத்தில் ஒரு சீன்.  ஒரு நாளைக்கு முதல்வனாக நியமிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் மக்களிடமிருந்து தொலைபேசியில் வரும் புகார்களை வாங்கிக்கொண்டு உடனே அவைகளை நிவர்த்திக்க ஏற்பாடு செய்கிறான்.  இந்த சீனை டைரக்டர்  ஓர் அலுவலகத்தில் வைத்திருந்தால்,  இதன் அழுத்தம் குறைந்திருக்கும்.  மாறாக மேம்பாலத்தருகே போக்குவரத்தின் நடுவே மேசை போட்டு மக்களிடையே தெருவில் தற்காலிகமாக டெலிபோன்களை அமைத்துத் திறந்த வெளியில் மக்கள் முன்னிலையில் வைத்தது அந்த சீனின் தாக்கத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.
  முதல்வனே…….

  ஷக்கலக்க பேபி…….

  அழகான ராக்ஷசியே…..

  குறுக்கு சிறுத்தவளே……

  [sujatha.jpg]

  (கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

  தொடர்புடைய பதிவுகள்:

  ‘முதல்வன்’ படத்தை சூப்பர் ஸ்டார் தவிர்த்தது சரியா? ஒரு அலசல்!!   http://onlysuperstar.com/?p=1532