உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் II


கமலுக்கு பிடித்த உலகப் படங்கள் இரண்டாவது பகுதி கீழே. முதல் பகுதி இங்கே. என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பேரை க்ளிக் செய்தால் IMDB குறிப்புக்கு போகலாம். முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

  1. In a Year with 13 Moons (In einem Jahr mit 13 Monden), Rainer Werner Fassbinder – கேள்விப்பட்டதில்லை.
  2. The 400 Blows (Les quatre cents coups) Francois Truffaut – பார்க்க இன்னும் தைரியம் வரவில்லை. ரொம்பவும் ஆர்ட் படமாக இருக்கும் என்று ஒரு பயம்.
  3. Code Unknown: Incomplete Tales of Several Journeys (Code inconnu: Récit incomplet de divers voyages), Michael Haneke – கேள்விப்பட்டதில்லை.
  4. Amelie (Le fabuleux destin d’Amélie Poulain), Jean-Pierre Jeunet – நல்ல படம், ஆனால் என் சிறந்த படங்கள் லிஸ்டில் வராது. அமேலி அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறாள் – இங்க பாருங்க, இந்த படத்தை விவரிப்பது கஷ்டம். பேசாமல் பார்த்துவிடுங்கள்.
  5. Cinema Paradiso, Giuseppe Tornatore – நல்ல படம், ஆனால் என் சிறந்த படங்கள் லிஸ்டில் வராது. சின்ன வயதில் டெண்டுக் கொட்டாயில் பார்த்த படங்கள்தான் ஒரு புகழ் பெற்ற இயக்குனரின் உந்துசக்தி. டெண்டுக் கொட்டாயின் பேர்தான் சினிமா பாரடைசோ.
  6. 301, 302, Cheol-su Park – கேள்விப்பட்டதில்லை.
  7. Three Colours: Blue, White, Red, Krzysztof Kieslowski – பார்க்க வேண்டும் என்ற ரொம்ப நாளாக ஆசை. என்னவோ கை வரவில்லை.
  8. The Decalogue (Dekalog), Krzysztof Kieslowski – கேள்விப்பட்டதில்லை.
  9. A Short Film About Killing (Krótki film o zabijaniu) Krzysztof Kieslowski – கேள்விப்பட்டதில்லை.
  10. Life of Brian, Terry Jones, written by Graham Chapman – ஆஹா! என்ன ஒரு படம்! மாண்டி பைதான் படங்கள் எல்லாமே பிரமாதம்தான்; ஆனால் இதுவும் ஹோலி கிரேய்லும் அபாரமான படங்கள். பிரையன் ஏசு பிறக்கும்போது பக்கத்தில் எங்கேயோ பிறக்கிறார். அவரை அடிக்கடி ஏசு என்று நினைத்து அவருக்கு அடி விழுகிறது. கடைசியில் சிலுவையில் வேறு அறைந்துவிடுகிறார்கள்.
  11. Being There, Hal Ashby – சுமாரான படம். பீட்டர் செல்லர்ஸ் ஃபாரஸ்ட் கம்ப் மாதிரி ஒரு காரக்டரில் வருவார். இது ஏன் கமலுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரியவில்லை.
  12. The Party, Blake Edwards – இன்னொரு சுமாரான படம். பீட்டர் செல்லர்ஸ் இந்தியனாக வந்து இந்தியன் மாதிரி ஆங்கிலம் நன்றாக பேசுவார். இது ஏன் கமலுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரியவில்லை.
  13. Birth, Jonathan Blazer, written by Jean Claude Carriere – கேள்விப்பட்டதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கமல் சிபாரிசு செய்யும் உலகப் படங்கள் பகுதி 1
கமல் சிபாரிசு செய்யும் உலகப் படங்கள் – முழு லிஸ்ட்

பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்

உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I


கமலுக்கு பிடித்த உலகப் படங்கள் முதல் பகுதி கீழே. என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பேரை க்ளிக் செய்தால் IMDB குறிப்புக்கு போகலாம். முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

  1. Virgin Spring (Jungfrukällan), Ingmar Bergman – இங்கமார் பெர்க்மன் படம் எதுவும் இது வரை என்னால் பார்க்க முடிந்ததில்லை. அது என்னவோ ஒவ்வொரு முறை படம் கொண்டு வரும்போதும் ஏதாவது தடங்கல்.
  2. Wages of Fear (Le salaire de la peur), Henri-Georges Clouzot – மிக அருமையான படம். ஸ்லோவாக ஆரம்பிக்கும். முதல் பாதி வரை பில்டப்போ பில்டப். எங்கேயோ (தென் அமெரிக்கா?) ஒரு குக்கிராமம். அங்கே நாலு வெள்ளைக்காரர்கள். பணத்துக்கு ஏகத் தட்டுப்பாடு. ஒரு மல்டிநேஷனல் கம்பெனிக்கு வெடிமருந்து உள்ள இரண்டு லாரிகளை அபாயம் நிறைந்த ரூட் வழியாக கொண்டு போக வேண்டும். இரண்டாம் பாதி அப்படி கொண்டு போவது. அபாரமாக இருக்கும். இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கலக்கலாம்.
  3. Rashomon, Akira Kurosawa – ராஷோமானைப் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே. குரோசாவாவின் அற்புதமான படம். ஒரு இறப்பு, அதை நாலு பேர் நாலு விதமாக விவரிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் குரோசாவாவின் சாதனை என்பது அவர் இதை விட சிறந்த படங்களை – அதுவும் ஒன்றல்ல, இரண்டு எடுத்ததுதான். இகிரு மற்றும் ரான். இகிரு மாதிரி ஒரு படம் சிவாஜிக்கு கிடைத்து, அவரும் அடக்கி வாசித்து நடித்திருந்தால்! ரான் கிங் லியர் நாடகத்தின் ஜப்பானிய வடிவம்.
  4. The Cranes are Flying(Letyat Zhuravli), Mikhail Kalatozov – கேள்விப்பட்டதில்லை.
  5. Das Boot, Wolfgang Petersen – ஒரு நீர்மூழ்கிக் கப்பல், அதற்குள் நடக்கும் கதை. நல்ல ஆக்ஷன் படம்.
  6. Amadeus, Milos Forman – நல்ல படம். மொசார்ட்டின் வாழ்க்கை, அவரது எதிரியும் போட்டியாளருமான சாலியரியின் கண்களில்.
  7. Hair, Milos Forman – பார்த்ததில்லை.
  8. Duel, Steven Spielberg – என்ன ஒரு படம்! ஒரு கார், ஒரு பெரிய (கண்டெய்னர் லாரி மாதிரி) ட்ரக், ஒரு கார் டிரைவர் அவ்வளவுதான் படத்தில். ட்ரக் டிரைவருக்கு கார் டிரைவர் மேல் காண்டு. மலைப் பாதையில் காரை தள்ளி விடப் பார்க்கிறான்.
  9. The Tenant (Le locataire), Roman Polanski – கேள்விப்பட்டதில்லை.
  10. Chinatown, Roman Polanski – இது மிகவும் சிலாகிக்கப்படும் படம். நல்ல படம்தான், ஆனால் பில்டப் இருக்கும் அளவுக்கு பிரமாதம் இல்லை. ஜாக் நிக்கல்சன் ஒரு ரஃப் அண்ட் டஃப் டிடெக்டிவ். அவர் சின்ன ஒரு கேசை துப்புத் துலக்கப் போய் பெரிய ஊழல், குடும்பத்தின் தகாத உறவு ஆகியவற்றை கண்டுபிடிப்பார்.
  11. La Strada, Federico Fellini – பார்த்ததில்லை. 8 1/2 என்று ஒரு படம் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. அதிலிருந்து ஃபெல்லினி என்றால் கொஞ்சம் பயம்.
  12. Au Hasard Balthazar, Robert Bresson – கேள்விப்பட்டதில்லை.
  13. The Brutalisation of Franz Blum (Die Verrohung des Franz Blum), Reinhard Hauff – கேள்விப்பட்டதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கமல் சிபாரிசு செய்யும் உலகப் படங்கள் – முழு லிஸ்ட்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்

Lessons from 3 idiots movie


1. Never try to be successful , pursue excellence

  • Success is the bye product & the result
  • Excellence always creates Success & it is a process of continual improvement
  • Never run after success
  • Let it happen automatically in life
3 Idiots Gallery

2. Freedom to Life- Life is beautiful

  • Don’t die before the actual death
  • Live every moment to the fullest as if today is the last day
  • Life is gifted to humankind to live
  • Live & Live happily towards happiness

3 Idiots Gallery

3. Passion leads to Excellence

  • When your hobby becomes your profession , the passion becomes your profession
  • You will be able to lead up to excellence in life
  • Satisfaction, Joy, Pleasure & love will be the outcome of the passion
  • Following your passion for years , you will surely become somebody one day

3 Idiots Gallery

4. Learning is very simple- Never stop

  • Be humble
  • Teachers do fail, Learners never fail
  • Learning is never complicate or difficult
  • Learning is always possible whatever rule you apply
3 Idiots Gallery
5. Pressure at head

  • Current education system is developing pressure on students head
  • University intelligence is useful & making some impact in the life , but it cannot be at the cost of life

3 Idiots Gallery

6. Life is management of emotions & not optimization of intelligence

  • Memory and regular study have definite value and it always helps you in leading a life.
  • You are able to survive even if you can make some mark in the path of the life.
  • With artificial intelligence, you can survive & win but you cannot prove yourself genius.
  • Therefore, in this process genius dies in you.
3 Idiots Gallery
7. Necessity is mother of invention

  • Necessity creates pressure and forces you to invent something or to make it happen or to use your potentiality.
  • Aamir Khan in this film, 3 idiots, is able to prove in the film by using vacuum pump at the last moment.
3 Idiots Gallery

8. Simplicity in life

  • Life is need base never want base. Desires have no ends.
  • Simplicity is way of life and Indian culture highly stresses on simple living and high thinking, and this is the way of life: ‘Legs down to earth and eyes looking beyond the sky’

3 Idiots Galleryhttps://awardakodukkaranga.wordpress.com/wp-admin/post-new.php

9.Industrial Leadership

  • Dean of the institute in 3 idiots is showing very typical leadership. He has his own principles, values and ideology, and he leads the whole institute accordingly.
  • This is an example of current institutional leadership. In the present scenario, most of the institutes are fixed in a block or Squarish thinking.

3 Idiots Gallery

10.Love is time & space free

  • Trust your partner
  • Love is not time bound and space bound.
  • It is very well demonstrated in this movie same love was demonstrated by Krishna and Meera.
  • Love is border free, time free, unconditional and space free

3 Idiots Gallery

11.Importance of words in communication

  • If communication dies, everything dies.
  • Each word has impact and value in communication.
  • One word if used wrongly or emphasized wrongly or paused at a wrong place in communication what effect it creates and how is it affected is demonstrated very well in this movie.

3 Idiots Gallery

12.Mediocrity is penalized

  • Middle class family or average talent or average institute is going to suffer and has to pay maximum price in the life if they do not upgrade their living standards.
  • To be born poor or as an average person is not a crime but to die as an average person with middle class talent is miserable and if you are unable to optimize your potentiality and die with unused potentiality then that is your shameful truth.
  • One should not die as a mediocre. He/she has to bring out genius inside him/her and has to use his/her potentiality to the optimum level.

3 Idiots Gallery

Seek excellence  &  Success will follow…..
3 Idiots Gallery

சில நேரங்களில் சில மனிதர்கள் – சாரதாவின் விமர்சனம்


நானே பழைய சினிமா பைத்தியம். சாரதா என்னை விட பெரிய பைத்தியம். 🙂 இந்த ப்ளாக் எழுதியதில் பெரிய லாபமே அவரைப் போன்றவர்கள் பரிச்சயமானதுதான். அவர் ஸ்ரீகாந்த், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் படங்களை பற்றி forumhub தளத்தில் எழுதி இருக்கிறார். சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தைப் பற்றி அங்கே இருப்பதை இங்கே மீள்பதிவு செய்ய அனுமதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி!

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்பு வெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

…..இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப்போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த ‘அக்கினிப்பிரவேசம்’ என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி… அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. ‘ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்’ என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, ‘அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா’ என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா… (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் …..வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), மற்றும் மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, ‘ஐ ஆம் லீவிங்’ என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்….
‘வேறு இடம் தேடிப்போவாளோ – இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் வர மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், ‘பூவே பூச்சூட வா’ கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, ‘பீம்சிங் கொன்னுட்டாண்டா’ என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று ‘பாகப்பிரிவினை’ பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ என்ற பாடலும், ‘வேறு இடம் தேடிப்போவாளோ’ என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.

தமிழ்த்தாயின் தலைமகன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய ‘சாகித்ய அகாடமி’ விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர் மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது.

லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான ‘ஊர்வசி’ விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, “உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா”.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: ஆர்வியின் விமர்சனம், பக்சின் விமர்சனம்
ஸ்ரீகாந்த் – ஃபோரம்ஹப் திரி
ஜெய்ஷங்கர் – ஃபோரம்ஹப் திரி
ரவிச்சந்திரன் – ஃபோரம்ஹப் திரி

3 இடியட்ஸ் – ஆர்வியின் விமர்சனம்


3 Idiots

3 Idiots

சேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ன்ட் சம்ஒன் புத்தகம் பாப்புலரான ஒன்று. ஐஐடியில் சேரும் மூன்று மாணவர்கள். படிக்காமல் ஓபி அடிக்கிறார்கள். Losers. பத்து பாயிண்ட்டுக்கு ஐந்துதான் வாங்குகிறார்கள். அவ்வளவு வாங்கினால் தட்டுத் தடுமாறி பாஸ் என்று அர்த்தம். ஒருவனுக்கு ப்ரொஃபசர் பெண்ணுடன் டாவு வேறு. ஒரு முறை கேள்வித்தாளை திருட முடிவு செய்கிறார்கள். அப்போது ஒருவன் மாடியிலிருந்து கீழே விழுகிறான். திருடும் சீன்தான் கதையின் உச்சக் கட்டம். அப்படியே போகிறது. ஓரளவு ஐஐடி பி.டெக் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. (நான் ஐஐடியில் எம்.டெக் படித்தவன்) என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவன் ஐஐடியில் பி.டெக். இந்த சீன் தப்பு, அந்த சீன் சரி இல்லை என்று குறை சொன்னான். அவன் கண்டுபிடித்த குறைகள் உண்மைதான் – ஆனால் இந்த புத்தகம் ஐஐடி வாழ்க்கையை உண்மையாக எடுத்து சொல்ல எழுதப்பட்டது அல்ல. அதை சுவாரசியத்துக்காக கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்து எழுதி இருக்கிறார். படிக்கக் கூடிய புத்தகம், டைம் பாஸ் என்று சொல்லலாம்.

3 இடியட்ஸ் திரைப்படம் இந்த ஃபிரேம்வொர்க்கை எடுத்துக்கொண்டு அதில் பாலிவுட் மசாலாவை சேர்த்து கதை ஆக்கி இருக்கிறது. மசாலா ஜாஸ்தி, அதனால் நாவலுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் மூளையை கழற்றி வைக்க வேண்டும். 3 losers இல்லை, இரண்டுதான். அந்த இரண்டு பேருக்கும் கூட சின்ன பிரச்சினைதான். ஒருவனுக்கு எஞ்சினியரிங் பிடிக்காமல் அப்பாவுக்காக சேர்ந்திருக்கிறான். இன்னொருவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி. ஹீரோ ஆமிர் கானோ இடியட் இல்லை, கிட்டத்தட்ட ஜீனியஸ். ஜாலியாக இருக்கிறார்கள். ஆமிர் வகுப்பில் ஃபர்ஸ்ட். இந்த இரண்டு பேரும் கடைசி. இவர்களுக்கு counterpoint ராமலிங்கம். டப்பா அடித்தே பெரிய ஆளாக முயற்சி செய்கிறான். காலேஜ் சிஸ்டம் டப்பா அடிப்பதை ஊக்குவிக்கிறது. பொமன் இரானி ஃப்ரொபசர். ஐன்ஸ்டீன் மாதிரி தலை முடியோடு மாணவர்களை ஆட்டி வைக்கிறார். ஆமிர் எல்லாருக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மிச்சம் இருக்கும் நேரத்தில் ஃ ப்ரொபசர் மகள் கரீனாவோடு கடலை. காலேஜ் முடியும்போது ஃப்ரொபசரின் மூத்த மகளுக்கு பிரசவம் பார்த்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். ஐந்தாறு வருஷம் கழித்து மிச்ச இரண்டு இடியாட்களும் ஆமிரை தேடி போகிறார்கள். நடுவில் கல்யாண மேடையிலிருந்து கரீனாவை வேறு கிளப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கரீனாவும் ஆமீரும் சந்திக்க, இடியட்கள் ஒன்று சேர, சுபம்!

லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. உயிர் நண்பன் சிம்லாவிலோ எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் விமானத்தை நிறுத்தி ஓடி வரும் மாதவன் அதற்கு முன் உயிர் நண்பன் ஊர் எது என்று கூடவா தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்? அடப் பாவமே, இவ்வளவு பேக்கா அவர்? காதலி கரீனா, காலேஜ் டீன் பொமன் இரானி யாருக்கும் அவரது அட்ரசை கண்டு பிடிக்க முடியவில்லையா? ஆனால் பொமன் இரானிக்கு அமீரின் அப்பா மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கூட தெரிந்து இருக்கிறது!

ஆனால் லாஜிக் எல்லாம் படம் பார்க்கும்போது தெரியவில்லை. ஜாலியாக போகிறது. ராமலிங்கம் டப்பா அடித்து ஆற்றும் ஹிந்தி சொற்பொழிவு சூப்பரோ சூப்பர்! யாரோ தெரியவில்லை, கலக்குகிறார். கரீனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேரை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அரற்றுவது நன்றாக இருக்கிறது. ஷ்ரேயஸ் தல்படே பார்க்க மாணவன் மாதிரிதான் இருக்கிறார். ஆமிர் கானின் மேக்கப்மான் என்ன மாயம் செய்தாரோ, அவருக்கும் மாணவன் வேஷம் பொருந்துகிறது. (ரங் தே பசந்தியில் அவரை பார்த்தால் நாற்பது வயது மாணவர் மாதிரி தெரியும்.) மாதவன்தான் பொதுக் பொதுக் என்று இருக்கிறார்.

ஆமிர், கரீனா, பொமன் இரானி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சதுர் ராமலிங்கம் ரோலில் வருபவர் கலக்குகிறார்.

ஆல் இஸ் வெல் கலக்கலான பாட்டு. ஜூபி ஜூபி பாட்டு நன்றாக இருந்தது.

2009இல் வந்த படம். ஆமிர் கான், மாதவன், ஷ்ரேயஸ் தல்படே, பொமன் இரானி, கரீனா கபூர் நடித்து, சாந்தனு மொய்த்ரா இசையில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கிறார். பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: விகடன் விமர்சனம்

  • Five Point Someone, Excerpt
  • பணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்


    அறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்றங்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன?

    பணமா பாசமாவில் எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.

    தெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!

    கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீன்கள்.

    பகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெமினி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.

    கண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட்! ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.

    நினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக்! நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம்! ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.

    மாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.

    மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.

    1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார்? எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா? மாமாதான்.

    பார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.

    தொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வியின் விமர்சனம்


    பணமா பாசமா படம்தான் அடுத்தபடி லிஸ்டில் இருந்தது. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களுக்கு கட்சி மாறிவிட்டேன்.

    இந்த படம் முதல் முறை பார்த்தபோது நான் டீனேஜர். எனக்கு அப்போது படம் பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் இந்த கதைக்கும் சினிமாவுக்கும் இருந்த ஷாக் வால்யூவும் அதற்கு ஒரு காரணம். கெட்டுப் போன பெண், அதுவும் அய்யராத்துப் பெண், ஒய்ஜிபி “You can only be a concubine” அப்படின்னு சொல்றார்டா, கான்குபைன் அப்படின்னா வப்பாட்டிடா என்ற கண்டுபிடிப்புகள், என்னடா குளிச்சா எல்லாம் சரியாயிடுமா என்ற விவாதங்கள், இவளும் இஷ்டப்பட்டுதானே போனா என்ற யோசனைகள் எல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. கெட்டுப் போன பெண்கள், பெண்ணாசை பிடித்த கனவான்கள் எல்லாம் அப்போது திரைப்படங்களில் சர்வசாதாரணம். ஆனால் ஒரு எம்ஜிஆர் படத்தில் அசோகனை அப்படி பார்க்கும்போது இது சும்மா ஜுஜுபி என்று நன்றாகத் தெரியும். இது என்னவோ பக்கத்து வீட்டு பெரிய மனுஷனைப் பார்ப்பது போல, நாலு வீடு தள்ளி இருக்கும் ஒரு ஒண்டுக்குடித்தனத்து பெண்ணைப் பற்றி வம்பு பேசுவது போல (அந்த காலத்துக்கு) ரியலிஸ்டிக்காக இருந்தது.

    லக்ஷ்மியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. எனக்கு பக்ஸ் டெலிஃபோனில் பேசும்போது ஏன் அழ வேண்டும் என்று கேட்பதில் இசைவில்லை. அந்தக் கட்டத்தில் அழுகை வரத்தான் வரும் என்று தோன்றுகிறது. இதற்கு பிறகுதான் அவரை பொம்பளை சிவாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.

    ஸ்ரீகாந்த், ஒய்ஜிபி, நாகேஷ், சுந்தரிபாய் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். சுந்தரிபாய்க்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை. ஒரு சராசரி பிராமண பாட்டியை கண் முன் கொண்டு வந்திருப்பார். ரயில் எஞ்சின் மாதிரி புகை விடறான் என்று ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்வதும், தலையை மொட்டை அடித்துக் கொண்டு வருவதும் நல்ல சீன்கள்.

    இரண்டாவது முறை பார்த்தபோது இது சினிமா மாதிரியே இல்லையே, நாடகம் மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. பீம்சிங் கதையை விஷுவலாக மாற்ற முயற்சியே செய்யவில்லை. நாவலை அப்படியே எடுத்திருக்கிறார். இதற்கு சினிமா எதற்கு, புத்தகத்தையே படிக்கலாமே? அடிப்படையில் கதை வலுவானது, அதனால்தான் வீக்கான திரைக்கதையையும் தாண்டி படம் நிற்கிறது.

    இரண்டு விஷுவல் சீன்கள் இப்போது நினைவு வருகின்றன. நாகேஷ் கண்டதை சொல்லுகிறேன் பாட்டின் இறுதியில் அவரது பேப்பர்கள் பறக்கும், அவர் அதை எல்லாம் பிடிக்க படாத பாடு படுவார். கடைசியில் மிஞ்சும் ஒரு பேப்பரும் பறக்கும், அவர் அதற்கு அப்போது கூலாக டாட்டா காட்டுவார். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்தின் மகள் எல்லோரும் வாக்கிங் போவார்கள், அப்போது பகோடா காதர் (பகோடா காதர் கொஞ்சம் குண்டு) நடந்து வருவார், அவரைப் பார்த்து நடக்க முடியாமல் நடக்கும் ஸ்ரீகாந்த் நீ கூடவா என்று ஆசுவாசப் பெருமூச்சு விடுவார்.

    கண்டதை சொல்லுகிறேன் மிக நல்ல பாட்டு. நல்ல வரிகள். எம்எஸ்வியின் குரல் பாட்டுக்கு நன்றாக பொருந்துகிறது.

    இது நல்ல படம், அதற்கு காரணம் ஜெயகாந்தன், பீம்சிங் இல்லை. நல்ல நடிப்பு. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய் மூவரும் அசத்தினார்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்: பக்ஸின் விமர்சனம்

    சில நேரங்களில் சில மனிதர்கள்


    நடிகை – லக்‌ஷ்மி, சுந்தரிபாய், ராஜசுலோச்சனா, சுகுமாரி, புவனாதேவி, ஜெயகீதா
    நடிகர் –  ஸ்ரீகாந்த் (பழைய நடிகர்), நாகேஷ், ஒய்.ஜி. பார்த்தாசாரதி, நீலகண்டன்
    கதை – ஜெயகாந்தன்
    டைரக்டர் – A. பீம்சிங்

    1975ல் பீம்சிங் இயக்கத்தில் வந்தது.  சாகிதய அகடமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் கதை. கறுப்பு வெள்ளை படம். ராணி முத்துவில் நாவலாக மிகவும் பரபரப்பாக விற்கப்பட்டது. திரைப்படம் ஒரு அப்ரிட்ஜ்ட் வெர்ஷன் போல் இருக்கிறது.

    கல்லூரிப் பெண்ணாக இருக்கும் பொழுதே சோதனைக்கு ஆளாக்கப்பட்ட கங்கா (லக்‌ஷ்மி) தன் மாமாவின் (ஒய்.ஜி.பி) தயாவால் படித்து அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸராக பொறுப்பேற்கிறார். அதன் பிறகு ஒரு வலிமையான் பெண்ணாக பரிணமிக்கிறார்.

    சிக்கல் வரும்பொழுது அதை சமாளிக்கத் தெரியாத தாய் (சுந்தரிபாய்), கல்லூரி லைப்ரரியில் வேலை செய்யும் ஆர்.கே.யின் (நாகேஷ்) அக்னி பிரவேஷம் என்ற கதையின் மூலமாக தான் இப்படி செய்திருக்கலாமோ என்று வேதனைப்படுவது சிந்தனைத் தடுமாற்றம் கொண்டவர்களின் பலவீனத்தின் குறியீடு. சிறப்பாக வந்திருக்கிறது.

    கல்லூரி மேடையில் ஆர்.கே.யிடம் மாணவிகள் விவாதிப்பது முக்கியமான ஒன்று. ஆனால் மேலும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆர். கே. இறங்கிப் போய்விடுகிறார். மாணவிகளுக்கு ஏமாற்றமோ இல்லையோ, நமக்கு உண்டு. கங்காவின் நிலைமைக்கு காரணமான பிரபுவை 15 வருடங்களுக்கு பின்னர் போனில் சந்திக்கும் பொழுது பெண் சிவாஜி போல் மாறிவிடுகிறார் லக்‌ஷ்மி. (போனை எடுத்தாலே, அதுவும் பல வருடங்களுக்கு பின்னர் ஒருவரிடம் பேசும் பொழுது துடிக்கவேண்டும் என்று நம் நடிகர் நடிகைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?) அதை மறந்துவிட்டால் மிக நிதானமான, நேர்த்தியான நடிப்பு. கங்கா பாத்திரத்திற்கு பொறுத்தமானவர். ஜெயகாந்தனின் கங்காவின் மன பிம்பத்தை பீம்சிங் நம்முன் நிருத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். ”மெட்ராஸ்” பாஷை பேசும் பிரபு (ஸ்ரீகாந்த்) மிடுக்காக ஆங்கிலத்தில் உரையாடுவது வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கிலம் என்று சொன்னதும் நினைவுக்கு வருவது கால் பங்கு வசனங்கள் ஆங்கிலத்தில் உரையாடப்படுவதே. நிச்சயமாக B, C ஏரியாக்களில் வணிகரீதியாக வெற்றி பெறாமல் போவதற்கும், A செண்டர்களில் சக்கை போடு போடுவதற்கும் விரிக்கப்பட்ட வியூகமாகத் தெரிகிறது. மொத்தத்தில் வெற்றி பெற்றதா? அப்படித்தான் நினைக்கிறேன்.

    கங்காவின் வலிமையான ஆளுமைகள் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். தன் மாமாவின் தயவால் முன்னேறி வந்தாலும், அவர் தவறு செய்யும் பொழுது துணிந்து எதிர்த்து நிற்பது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது. கங்காவிற்கு கிடைத்த மிச்சமுள்ள வாழ்க்கையையும் கெடுப்பது போன்று குடும்பத்தார்கள் குறுக்கிடும் பொழுது, எல்லவற்றையும் உடைத்து எறிவது, மிஸஸ்.இம்மானுவேல் மீது ஆத்திரம் கொள்வது – இயற்கை. கங்கா மீது இரக்கமிருந்தாலும், கங்காவின் அம்மா மீண்டும் மீண்டும் தன் பழமையில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பது, அதனால் கங்காவிடம் கோபம் கொள்வது – யதார்த்தம். வீட்டுக்கு வந்திருக்கும் மாமாவை கிளப்ப கங்கா திருவல்லிக்கேணி அண்ணன் வீட்டுக்கு அம்மாவை அழைக்க வரும் பொழுது ”அத்தை வந்திருக்காங்க” என்று வரும் குழந்தைகளிடம் கனிவாகவும், கண்டிப்பாகவும் வரமுடியாது என்று சொல்வது, மன எழுச்சியில் குழந்தை பாட்டியுடன் அத்தையைப் பார்க்க வாசலுக்கு செல்ல முயலும் பொழுது கணேஷின் (நீலகண்டன்) மனைவி (சுகுமாரி) அதட்டி தடுப்பது, கங்கா கோபித்துக் கொண்டு வந்த அம்மவிடம் உரிமையுடன் கட்டளையிடுவது, போன்ற காட்சிகள் மிக இயற்க்கையாக, நம் வீட்டில் நடப்பது போல் இருக்கிறது.

    மாமா மனம் மாறுவது போல் காட்டியிருப்பது புரியவில்லை. இயற்க்கையாக அவர் மிகவும் ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.

    கான்குபைனாக (concubine) வாழவேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டால் அப்படியும் வாழமுடியும் என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாதங்கள் வலிமையாக சொல்லப்பட்டிருந்தாலும் சமுதாய எதிர்ப்பு (வசிதிக்காக?) ஆழமாக சொல்லப்படாதது இப்படத்தின் வீக்னெஸ் என்று நினைக்கிறேன். நாவல் வாசிக்கவில்லை. ஜெயகாந்தன் அதில் இன்னும் தீவிரமாக விவாதித்திருப்பார் என்று தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்தது கங்காவின் காரக்டரைசேஷன்.

    லக்‌ஷ்மிக்கு கங்கா பாத்திரத்தில் திறம்பட பணிபுரிந்ததற்கு தேசிய விருது கிடைத்தது.

    இரண்டு பாடல்கள். இரண்டும் தேறவில்லை.

    பத்துக்கு ஏழு.

    (இந்த திரைப்படத்தின் எக்ஸ்டென்ஷன் “சிறை” என்ற லக்‌ஷ்மி, ராஜேஷ் நடித்தப்படமா?)

    மேலும் Dr. கோபாலன் ரவீந்திரன் analysis கீழே:

    Part A

    Part B

    பணமா பாசமா


    1968 மார்ச்சில் படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

    பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை.

    கருத்து பழையதாக இருந்தாலும், கையாண்டிருக்கும் முறையிலே புதுமை பளிச்சிடுகிறது. போலி கௌரவமும், தாய்ப் பாசமும் மோதி உணர்ச்சிக் குவியல்களை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில் படம் பார்க்கிறோமா என்பதை மறந்து, கதாபாத்திரங்களுடன் ஒன்றி விடுகிறோம்.

    உதாரணத்திற்கு, இரண்டு இடங்கள்:

    தன் மகள் ஏழைப் பையனைக் காதலிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அதை மனைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார் கணவர். மாடிப்படியின் மேலே மகள்; கீழே தாய்; இந்தக் குடும்பப் புயலின் நடுவே, அமைதியே உருவாக ஒரு புறத்தில் தந்தை; அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்… ஏதோ ஒரு குடும்பத்திற்குள் இருக்கிறோமோ என்ற பிரமை நமக்கு.

    குடிசையில் வாழும் மகளுக்குத் தீபாவளிக்காகப் பட்டுப் புடவை கொடுத்து அனுப்புகிறாள் தாய். அதை எடுத்துச் சென்ற தகப்பன், மகள் கொடுத்த சாதாரண வேஷ்டியையும் துண்டையும் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். மனைவி முதலில் கொதிப்படைந்த போதும், கடைசியில் தானும் மகள் அனுப்பிய நூல் புடவையையே உடுத்திக் கொள்கிறாள். பாசத்தின் வெற்றியை இதைவிடச் சிறப்பாகச் சித்திரிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!

    எஸ்.வரலட்சுமி தாயாக வருகிறார். கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்வது என்பார்களே, அதை அற்புதமாகச் செய்திருக்கிறார்.

    தந்தையாக வருகிறார் பகவதி. இத்தனை நாள் வரை இப்படி ஒரு தந்தையைத் திரை உலகம் ஏன் புரிந்து கொள்ளவில்லை? பிரமாதம் என்ற வார்த்தை போதாது! உணர்ச்சிகளை ஆழமாகவும் அடக்கமாகவும் வெளிக்காட்டும் அந்தத் திறன் – இதுவரை எந்த அப்பா நடிகரும் கையாண்டிராத பாணி – ‘சபாஷ் பகவதி’ என்று எல்லோரையும் சொல்ல வைக்கிறது.

    சரோஜா தேவி சில இடங்களில் என்னவோ போல இருந்தாலும், தமது முத்திரையை ஆங்காங்கே பதிக்கிறார்.

    நாகேஷ் – விஜய நிர்மலா ஜோடி ஒரு சாராருக்கு மிகவும் பிடிக்கும். ‘எலந்தப்பழம்’ பாட்டு படு ஜோர் என்றால், அந்த ‘அலேக்’ – அது கொஞ்சம் அதிகமோ?

    ஆரம்பத்தில் படம் கொஞ்சம் ‘……..’ அடிக்கிறது. அதே போல, வில்லன் ஒருவன் வருவதும், விஷம் வைக்க முயல்வதும்…. இந்தக் கதைக்குத் தேவையா அதெல்லாம்?

    குறைகள் குறைவுதான். கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் திறமைக்கு இன்னொரு சான்றிதழ், ‘பணமா, பாசமா?’

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்: எதுவுமில்லை

    அபூர்வ ராகங்கள் – என் விமர்சனம்


    வேதாளத்தை தன முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் தூக்கி தூக்கி செல்லும் விக்ரமாதித்தன் கடைசியில் வேதாளம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பான் – ஒரு அப்பாவும் பையனும் முறையே மகளையும் அம்மாவையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு முறை என்ன? இதே கதையைத்தான் பாலசந்தர் சினிமாவாக ஆக்கி இருக்கிறார்.

    1975இல் வந்த படம். கமல் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு முதல் படம். நாகேஷுக்கும் பாலச்சந்தருக்கும் ஏதோ தகராறாம். ஒரு நாலைந்து வருஷம் நாகேஷ் பாலச்சந்தரின் எந்த படத்திலும் கிடையாது. இந்தப் படத்தில்தான் திரும்பி வருவார். ஸ்ரீவித்யாவுக்கும் ஹீரோயினாக இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன். ஜெயசுதா அறிமுகமோ? நினைவில்லை. இவர்களைத் தவிர மேஜர். இசை எம் எஸ் வி. இயக்கம் பாலச்சந்தர்.

    அடிதடி இளைஞன் கமல் அப்பா மேஜரோடு சண்டை போட்டுக்கொண்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருகிறான். யாரோ அடித்துப் போட்டுவிட, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ ராகம் பாடும் பாடகி பைரவி அவனை காப்பாற்றி வீட்டில் தங்க வைக்கிறாள். பைரவியின் கணவன் ஓடிப் போய்விட்டான். மகளை மகள் என்று சொல்லாமல் – சொன்னால் காரியர் முன்னேறாது என்று – வளர்க்கிறாள். விஷயம் தெரிந்த மகளோ கொஞ்ச நாள் முன்தான் வீட்டை விட்டு போய்விட்டாள். பைரவியின் மாணவிகள் கமலை சைட் அடிக்கிறார்கள். உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று பைரவி கேட்க, கமல் “ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி” என்று பாடுகிறான். பைரவி கடுப்பாகி தன் கணவன், மகளைப் பற்றி சொல்ல கமல் அதைப் பற்றி எல்லாம் கவலையே படவில்லை. பைரவியும் காதலில் விழுகிறாள். ஓடிப் போன ஜெயசுதா பெங்களூரில் மேஜரை சந்தித்து இரண்டு பெரும் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார்கள். மேஜர் ஜெயசுதாவின் அம்மாவை சந்திக்க வருகிறார். அவருக்கு விஷயம் தெரிகிறது. “கை கொட்டி சிரிப்பார்கள்” என்று பயப்படுகிறார். ஓடிப் போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வருகிறான். கமல் அவனை மறைத்து வைக்க, நாலு பேருக்கும் விஷயம் தெரிய, ஸ்ரீவித்யா கேள்வியின் நாயகனை இந்த கேள்விக்கு பதில் கேட்கிறார். ஜெயசுதாவும் சேர்ந்து கேட்க, ரஜினிகாந்த் அங்கே வந்து இறக்க, அப்பா-மகன், அம்மா-மகள் இணைகிறார்கள். ஆனால் எந்த ஜோடியும் இணையவில்லை.

    படத்திற்கு மூன்று பலங்கள். கமல், ஸ்ரீவித்யா, இசை.

    கமல் sizzles. ஒரு angry young man ஆக புகுந்து விளையாடுவார். உண்மையிலேயே இளைஞர் வேறு – என்ன ஒரு இருபது வயது இருந்திருக்குமா? தியேட்டரில் ஜன கன மன போடும்போது அசையாமல் நிற்காதவனை அடிப்பதாகட்டும், தன மேல் சேற்றை வாரி இறைத்து போகும் கார்க்காரனைப் பார்த்து தேவடியாப் பையா என்று திட்ட, அந்த கார்க்காரன் திரும்பி வந்து என்ன சொன்னே என்று கேட்க, அவனுக்கு information கொடுப்பது போன்ற பாவனையுடன் மீண்டும் அதையே சொல்வதாகட்டும், திரும்பி வரும் ரஜினியுடம் பேசும் இடங்களாகட்டும், கலக்குகிறார்.

    ஸ்ரீவித்யா எப்போதுமே அழகுதான். ஆனால் அது அழகுடன் இளமை சேர்ந்து வந்த காலம். அருமையான நடிப்பு. ஒரே குறைதான், ஜெயசுதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார், அம்மா மாதிரி இல்லை!

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்! எத்தனை அருமையான பாட்டு! கண்ணதாசனும் எம்எஸ்வியும் புகுந்து விளையாடுகிறார்கள்.

    அதிசய ராகம் இன்னொரு அற்புதமான பாட்டு. ஜேசுதாசின் குரல் தேனில் குழைத்ததுதான்.

    கேள்வியின் நாயகனே இன்னொரு அபாரமான பாட்டு. ஆனால் மற்ற இரண்டு போல அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை.

    கைகொட்டி சிரிப்பார்கள் என்ற இன்னொரு பாட்டும் உண்டு. பாடியவர் எ.ஆர். ஷேக் முஹமது என்று சாரதா தகவல் தருகிறார். எனக்கு இந்த பாட்டு தேறவில்லை.

    நாகேஷ் ஓவர்ஆக்டிங். மேஜர் ஓகே.

    நல்ல ஒளிப்பதிவு.

    நல்ல படம். பார்க்கக் கூடிய படம். பத்துக்கு எட்டு மார்க். (ஏழுதான் கொடுத்திருப்பேன், ஆனால் இசைக்காக எட்டாக்கிவிட்டேன்.) B+ grade.

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்: அபூர்வ ராகங்கள் விகடன் விமர்சனம்