மந்திரி குமாரி


மந்திரி குமாரியின் உண்மையான கதாநாயகன் ஜி. ராமனாதன்தான். என்ன அற்புதமான பாட்டுக்கள்? உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய் இரண்டும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை.

உலவும் தென்றல் காற்றினிலே western classical முறையில் உன்னதமாக் அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளும் அருமை – “தெளிந்த நிலவை போலவே காதல் கொண்டோம் நாம்” என்று நாயகி பாட “களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்” என்று நாயகன் பதில் அளிக்க, “குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ” என்று நாயகி சொக்க, “உனது கடைக்கண் பார்வை காட்டும் ஜாடை தன்னிலே” என்று நாயகன் ஸ்டைலாக பதில் அளிக்க பிரமாதம் போங்கள்! பாட்டை எழுதியது அனேகமாக மருதகாசியாக இருக்கவேண்டும்.

வாராய் நீ வாராயும் அபாரம். “முடிவிலா மோன நிலை நீ மலை முடியில் காணுவாய் வாராய்” என்று கள்ள பார்ட் நடராஜன் மாதுரி தேவியை மலையிலிருந்து கீழே தள்ளிவிடப் போவதாக hint கொடுக்கிறார் பாருங்கள்! அருமை. நண்பர் சிமுலேஷன் வாராய் நீ வாராய் பாட்டை படத்திலிருந்து டி.ஆர். சுந்தரம் நீக்க நினைத்ததையும் ஜி. ராமநாதன் கஷ்டப்பட்டு அவர் மனதை மாற்றியதையும் பற்றி இங்கே குறிப்பிடுகிறார்.

ஜி. ராமநாதனிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒன்று highbrow, classical பாட்டுக்கள். இல்லை என்றால் lowbrow, டப்பாங்குத்து பாட்டுகள். நடுவில் மெல்லிசை கில்லிசை ஒன்றும் கிடையாது. இந்த படத்திலும் இரண்டும் சூப்பர் குத்து பாட்டுகள் உண்டு. ஒன்று “எருமை கன்னுக்குட்டி என் எருமை கன்னுக்குட்டி” என்று வருவது. அடுத்தது ஒரு அருமையான சிந்து –
“அந்தி சாயுற நேரம்
மந்தார செடி ஓரம்
ஒரு அம்மாவைப் பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு
அவ சிரிச்சாளாம் பொண்ணு”
படிக்கும் போதே ஒரு மெட்டு கிடைக்க வேண்டுமே!

வேறு பாட்டுகள் எதுவும் எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை.

1950-இல் வந்த படம். எம்ஜிஆர் கதாநாயகன். கலைஞர்தான் எம்ஜிஆரை நாயகனாக போட சிபாரிசு செய்தாராம். ஜி. சகுந்தலா கதாநாயகி. நம்பியார், கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன்(தவறை திருத்திய ராஜநாயஹம் அவர்களுக்கு நன்றி!), மாதுரி தேவி, எஸ்.எஸ். சிவசூரியன் ஆகியோரை நினைவிருக்கிறது. கலைஞர் கதை வசனம். குண்டலகேசி என்ற பழைய காவியத்தை அடிப்படையாக வைத்து எழுதினாராம். கலைஞரை இந்த படம் ஒரு ஸ்டார் ஆக்கியது. எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கம். மாடர்ன் தியேட்டர்ஸ் படம். டி.ஆர். சுந்தரமும் ஒரு இயக்குனர் என்றும் படித்தேன். முக்தா ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனராம்.

இந்த படத்தில் பங்கேற்றவர்கள் பற்றிய பல விவரங்களை ராஜநாயஹம் இங்கே எழுதி இருக்கிறார். அவருக்கு நன்றி!

அப்போதெல்லாம் எம்ஜிஆருக்கு தன் தாடையில் ஒரு பிளவு இருப்பதை பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாம். இந்த தாடையை வைத்துக் கொண்டு தான் பெரிய ஹீரோ ஆக முடியாது என்று ஒரே கவலையாம். கலைஞர் அவரை ஒரு குறுந்தாடி வைத்து அந்த பிளவை மறைத்துக் கொள்ள சொன்னாராம். உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் எம்ஜிஆருக்கு இந்த படத்தில் குறுந்தாடி உண்டு – தில் சாத்தா ஹை படத்தில் ஆமிர் கானுக்கு இருப்பதை போல.

இன்னொரு கட்டுரையை இங்கே படிக்கலாம். குறுந்தாடிக்கு இங்கே வேறு ஒரு கதை சொல்லப்படுகிறது. எம்ஜிஆரின் இரட்டை நாடிக்குமேல் ஒரு சிறு தாடி ஒட்டப்பட்டது.இதை எம்ஜிஆர் விரும்பவில்லை. ஆனால் அவரது அருகில் இருந்தவர்கள் டி.ஆர். எஸ்.சின் கண்டிப்பான குணத்தை எடுத்துக் கூறி, எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தனர்.

கதை அந்த காலத்துக்கு ஒரு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கலாம். ராஜகுரு நம்பியாரின் மகன் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் தான் தளபதி ஆக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எம்ஜிஆர் தளபதி ஆகிவிடுகிறார். ஏமாற்றம் அடைந்த கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். நம்பியார் சொல்வதை கேட்க மறுக்கிறான். இளவரசிக்கும் எம்ஜிஆருக்கும் காதல். ஆனால் இளவரசி மீது ஆசைப்படும் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் ஒரு காதல் கடிதம் எழுதி அதை இளவரசியின் அந்தப்புரத்தில் போட்டுவிடுகிறான். இளவரசியின் தோழியும், மந்திரியின் மகளும் ஆன மாதுரி தேவி அதை பார்த்து இளவரசி மீது சந்தேகப்படுகிறாள். அந்த கடிதத்தில் சந்திக்க வர சொன்ன இடத்துக்கு தான் போகிறாள். அங்கே இவளைப் பார்த்து கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் லவ் ஆகி விட, இருவருக்கும் உலவும் தென்றல் காற்றினிலே பாட்டு. எம்ஜியார் கள்ள பார்ட்டை எஸ்.ஏ. நடராஜனை பிடித்து விடுகிறார். நம்பியார் எவ்வளவோ முயற்சி செய்தும் கள்ள பார்ட்டுக்கு எஸ்.ஏ. நடராஜனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் மாதுரி தேவி அம்மன் சிலைக்கு பின்னால் நின்று கொண்டு அம்மனே சொல்வது போல நடராஜன் குற்றமற்றவர் என்று சொல்கிறார். எல்லாரும் நம்ப, நடராஜன் விடுதலை அடைய, பொய்க்குற்றம் சாட்டியதற்காக எம்ஜிஆர் நாடு கடத்தப்பட, நடராஜன் தளபதி ஆகிறார். மாதுரியை மணந்து கொள்கிறார். நம்பியாரும் நடராஜனும் ராஜாவை கொன்று விட சதி செய்கின்றனர். ஜி. சகுந்தலா மீது இன்னும் ஆசை வைத்திருக்கும் நடராஜன் மாதுரி இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொன்று விட அவரை ஒரு மலை உச்சிக்கு வாராய் நீ வாராய் என்று அழைத்து செல்கிறார். உண்மையை தெரிந்து கொள்ளும் மாதுரி கணவனை தள்ளி விடுகிறார். பிறகு எல்லா உண்மையும் தெரிந்து, எம்ஜிஆரும் தப்பிக்கிறார். மாதுரி கணவனை கொன்ற துயரம் தாங்காமல் இறக்கிறார். சுபம்!

படத்தின் live-wire கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன்தான். அவரது ரோல் மிக energetic ஆக இருக்கும். நம்பியாருக்கும் பெரிய ரோல். எம்ஜிஆருக்கு கொஞ்சம் டம்மி ரோல்தான். சிவசூரியன் நன்றாக ஒரு கோமாளித்தனமான ராஜாவாக நடித்திருப்பார். அவருக்கு இம்சை அரசன் புலிகேசி மீசை வேறு. வசனங்களும் நன்றாக இருக்கும்.

பாட்டுகளுக்காவும், ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காகவும் இந்த படத்தை பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
1950-இல் வந்த படங்கள்
ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்
ஆர்.பி. ராஜநாயஹத்தின் பதிவு
மாலை சுடர் கட்டுரை
வாராய் நீ வாராய் பாட்டை தூக்க நினைத்த டி.ஆர். சுந்தரம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

15 Responses to மந்திரி குமாரி

  1. dear RV

    மந்திரி குமாரி படத்தில் நடித்திருப்பவர் எஸ் .ஏ .நடராஜன் . கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் .இந்த எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த எஸ் ஏ நடராஜன் .

    கள்ளபார்ட் நடராஜன் ‘ சித்தாடை கட்டிக்கிட்டு’ பாட்டிற்கு நடனம் ஆடியவர் . டப்பாங்குத்து டான்ஸ் அருமையாக ஆடுவார் . சிவாஜியின் பராசக்தியிலே கூட ஒரு காட்சியில் நடித்தவர் .”தெய்வப்பிறவி ” படத்தில் சிவாஜிக்கு தம்பியாக கள்ளபார்ட் நடராஜன் நடித்திருக்கிறார் .மதராஸ் டு பாண்டிச்சேரி ,கண்காட்சி ஆகிய படங்களின் வில்லன் . இவர் ” ‘ஊதாப்பு கண் சிமிட்டுகிறது ‘படத்தில் படகு ஒன்றில் ” ஆண்டவன் இல்லா உலகமிது, ஆசைகள் இல்லா உலகமிது ” பாட்டிற்கு நடித்த பின் அதன் பிறகு சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாமல் இருந்து நீண்ட காலத்திற்கு பின் ” தேவர் மகன் ” படம் தான் அடுத்து வாய்ப்பு கிடைத்து இவர் நடித்த படம் !

    With Kind regards,

    R.P.Rajanayahem

  2. Krishnan says:

    Dear RV, pasting the contests of Typist Gopu interview

    NOT EVERYONE can be candid when fielding queries — more so when one is talking about dull patches in his career. But not `Typist’ Gopu. The last time you saw him was in the K. Bhagyaraj film, “Rudra,” some years ago. Ask him why he’s not been seen in films for quite a while, his immediate response is, “I wasn’t called … ” The simple reply was the beginning of an hour-long chat with the actor, about his five decades and more in theatre and cinema, and several anecdotes related to them.

    `Typist’ is the sobriquet he earned for his popular role in T. S. Seshadri’s stage play, “Nenjae Nee Vazhga.” Even as a student of Vivekananda College, Gopalarathnam, as he was known then, had decided that his future would be in theatre.

    Given the unpredictable nature of the profession was it sensible of him to take up acting as his livelihood? “The choice did not bring affluence, but it flooded me with opportunities to interact with giants in the field including MGR and Sivaji Ganesan and Kamal Haasan. With a bank balance of just Rs. 120, can one dream of travelling to the U.S., U.K. and Switzerland? I have … thanks to Y.G. Mahendra, as part of his drama troupe. My wants are limited. People on the road recognise me. At the railway station counter, if I’m called ahead of the others and issued the ticket it’s not only because I’m an old man but also because my face is a familiar one. And on buses they don’t even allow me to buy the tickets. What more can I ask for?” The argument sounds logical and it also reveals that the man is rich in contentment.

    “Lured by television and the work it could offer, many amateur actors took voluntary retirement from their regular jobs. But the move has not been a paying one. They feel they no more get the respect they earned when they were in service … Instead of wanting to be here, there and everywhere, you should be happy with your lot, that’s what is important,” are Gopu’s profound words.

    He played the role of a woman — a nurse, to be precise — in his guru, T. S. Seshadri’s play, “Nenjukku Needhi.” When it was made a feature film, “Dhaagam,” in Malayalam with Sathyan as hero, Gopu was called over to don the same role. Seshadri taught me everything about histrionics and I’ve played diverse characters in his troupe — villain, hero, comedian … ” But Gopu is known more for his last mentioned roles … “That’s because I did a lot of humorous roles in films … but on stage it’s been different.”

    From Seshadri and AVM Rajan, Gopu has worked with many stage veterans. Now he is a constant in Y. Gee. Mahendra’s plays. “Mahendra’s UAA is more like a home to me. His zest for theatre is incredible. I keep asking him whether he’s able to make any profit at all … but he brushes it aside. He can get terribly irritated when things go wrong during rehearsals, but when we perform well he would never hesitate to laud us…”

    Gopu recalls his association with actor Nagesh. I know him since his early days when he was with the Railways. He was with 10 different troupes and every evening he would be acting on one stage or the other. Long before he made it big I was his fan … ” laughs Gopu.

    In fact, it was Nagesh who accompanied Gopu when he went to `see’ his bride, Rajalakshmi. “She was just 16 and I was 23,” he reminisces and adds, “She’s still my source of strength.”

    In cinema Gopu has worked with many big names including Sridhar, Chitralaya Gopu, A. P. Nagarajan and Bharatiraaja. “I’ve visited Sivaji Ganesan often at his house, till his death … Mahendra would take me there. And the great actor always had a kind word for me … ”

    Gopu had his stint with television when Mahendra’s plays were televised. Now after quite some time, K. Balachander’s Min Bimbangal has approached him for “Veetukku Veedu Looty.”

    Does he ever think of calling it a day? “Never … even after another 20 years I’ll still be acting … ” says Gopu with a genial smile.

  3. மணிவண்ணன் says:

    RV க்கும் அடி சறுக்கும் 🙂

  4. Surya says:

    All very useful info.

    Thanx. RV, Bags,RPR

    Dear Krishnan. wow..

    Thanx for the info about Typist Gopu.

    I met Typist Gopu yesterday and requested for an appointment to share his association with director C.V.Sridhar.

    Positively I will be meeting him soon.

    Will keep you posted after his meet.

  5. Simulation says:

    //மந்திரி குமாரியின் உண்மையான கதாநாயகன் ஜி. ராமனாதன்தான். என்ன அற்புதமான பாட்டுக்கள்?//

    ஒரு குறிப்பிட்ட பாடல், படத்தின் உச்சக்கட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை என்று யாரோ கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பாடலைக் கத்தரித்து விடலாம் என்று எண்ணத் தொடங்கினார். இசை அமைப்பாளரான ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டதாம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் இசை அமைத்த் பாடல் அது. “படம் வெளியானதும் முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்” என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பார்த்துவிட்டுச் சென்ற ரசிகர்கள் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே சென்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் “மந்திரி குமாரி”. பாடல் “வாராய்…நீ வாராய்.. போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்” திருச்சி லோகனாதனின் அருமையான் குரலிலே வந்த அந்தப் பாடல் கத்திரியிட்மிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.

    http://simulationpadaippugal.blogspot.com/2009/10/blog-post_17.html

    – சிமுலேஷன்

    • RV says:

      சிமுலேஷன், இந்த பாட்டை தூக்க நினைத்தார்கள் என்பது ஆச்சரியம்தான். சுட்டிக்கு நன்றி, அதையும் இப்போது பதிவில் சுட்டி இருக்கிறேன்.

  6. Simulation says:

    சுட்டிக்கு நன்றி ஆர்வி அவர்களே!

    – சிமுலேஷன்

  7. படித்’தேன்’… ரசித்’தேன்’… தோழரே…

  8. பிங்குபாக்: கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க் | சிலிகான் ஷெல்ஃப்

  9. பிங்குபாக்: கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே | சிலிகான் ஷெல்ஃப்

  10. பிங்குபாக்: கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க் – சிலிகான் ஷெல்ஃப்

  11. பிங்குபாக்: ஷேக்ஸ்பியர் நாடகம்: மூன்றாம் ரிச்சர்ட் – சிலிகான் ஷெல்ஃப்

  12. பிங்குபாக்: திராவிட இயக்க எழுத்து 2 – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக