நடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்…


ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாக…..
https://i0.wp.com/lh5.ggpht.com/sharevivek/SH3P95HwqmI/AAAAAAAAB3s/xxjgrlT5sdE/kaviyarasar_thumb.jpg
சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

கவியரசு கண்ணதாசன்

https://i0.wp.com/www.sangam.org/2008/11/images/Sivajiwithhispalsonhisweddingday1952May1.jpg

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கம்: சிவாஜி பற்றி வைரமுத்து

9 Responses to நடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்…

  1. மனதுக்குப் பிடித்தவர்கள் இரண்டு பேர் படங்களும் போட்டு கவிஞர் நடிகர்திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை வரிகள் எடுத்துப் போட்டு அசத்திட்டீங்க..

  2. srinivas uppili says:

    வெற்றிவேல்/கருணாகரசு,

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  3. RV says:

    எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம். ஆனால் திருமண ஃபோட்டோ பிரமாதமாக இருக்கிறது!

  4. விமல் says:

    /**
    இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
    நியாயமாக இருக்கும் ?
    **/

    அருமையான வரிகள்.

    இந்த மாதிரி அறிய தகவல்களை
    பற்றி அடிக்கடி எழுதுங்கள்.

    நன்றி

    – விமல்

  5. BaalHanuman says:

    சுஜாதா பதில்கள்….

    சேஷாத்ரி.
    பல முறை வைரமுத்துவைச் சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கண்ணதாசனைப் பற்றி எழுதுவதில்லை. கண்ணதாசனை விட வைரமுத்து சிறந்த கவிஞரா ?

    இல்லை .

  6. பிங்குபாக்: சிவாஜி பற்றி சில வரிகள்: « கண்ணதாசன்

  7. chandramouli says:

    எத்தனையோ மேதைகள், கலைஞ்சர்களுக்கு அவர்கள் காலத்திலேயே உரிய விருதுகள் கிடைக்காமல் போனது தமிழகத்தின் தலைவிதியென சொல்லலாம். பாமசிவன், வ.உ.சி, பாரதியார், அப்பர், கட்டபொம்மன், வீர சிவாஜி , ராஜ ராஜ சோழன், இன்னும் பல காவிய நாயகர்கள் (இன்னும் பலரை நான் மறந்திருக்கலாம்) இவர்களை நாம் பார்த்தது இல்லை. அனால் இவர்களை பற்றி நாம் நினைத்தால், சிவாஜியின் உருவம் தானே நினைவில் வருகிறது? “என்னைப்போல போல அவரால் நடிக்க முடியும், அனால் என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது” என மார்லன் பிராண்டோ பாராட்டிய , சிவாஜி ஹாலிவுட் நடிகராக இருந்திருந்தால், உலகமே அவரைப் போற்றி கொண்டாடி இருக்கும் அனால் நாம் ஒரு சிறந்த தமிழ் நடிகரை இழந்திருப்போம்!!

பின்னூட்டமொன்றை இடுக