முதலாம் ஆண்டு நிறைந்தது – இரண்டாம் ஆண்டு உதயமாகிறது


நேற்று எங்கள் ”அவார்டாகொடுக்கிறாங்க?” பிளாக்கின் முதல் ஆண்டு நிறைந்தது. எங்கள் ப்ளாக்கின் முதல் போஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் நாள் 2008ல் வெளிவந்தது. இந்த ப்ளாக்கிற்கு முதல் பதில் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் ”வாழ்த்துக்கள்”. நேற்று முதலாம் ஆண்டு நிறைவுபெற்ற பொழுது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த ஓர் ஆண்டில் தான் எத்தனை புதிய அனுபவங்கள்! எத்தனை புதிய நண்பர்கள்!
எத்தனை புதிய நல்ல வாசக நண்பர்கள்! சாரதா, டோண்டு, சூர்யா, சுபாஷ், சேதுராமன்,அரைடிக்கட், ராஜநாயகம், பாலாஜி, உள்ளதைச்சொல்வேன், ரிங்ஸ்ட்டர், ப்ளம், நடிகர்திலகம், நல்லதந்தி, இன்னும் எத்தனை எத்தனையோ…

(இந்த லிஸ்ட் முழுமையானதல்ல – அவருடைய பெயரை முதலில் சேர்க்காததற்கு நல்லதந்தி செல்லமாக கோவித்துக்கொண்டார்.  பெயர்கள் விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும் 🙂 )

எத்தனை குறைவான கெட்ட “வாசக நண்பர்கள்”! (ஒன்று அல்லது இரண்டே)

உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.

இந்த ஒரு வருடத்தின் புள்ளி விவரங்கள்

இதுவரையில் 49,661 பார்த்துள்ளார்கள்

சுறுசுறுப்பான நாள்: — Tuesday, October 14, 2008 (இன்று மட்டும் 461 பார்வையாளர்கள் )

இந்த நாளில் இட்ட இடுகைகளின் சுட்டி கீழே:

சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்

( Click here for the whole page)

எம்ஜிஆர் லிஸ்ட்

சிவாஜி லிஸ்ட்

(Click here for the whole page)

இதுவரையில்: 311 இடுகைகள் (கிட்டத்தட்ட தினம் ஒன்று)

Comments: 1,263 (இதில் எங்களுடைய மறுமொழிகளும் அடங்கும்)

RV மொத்தம் 276

Bags மொத்தம் 36

(என்னுடைய பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவாக இருந்த்தாலும்  ஒரு பக்கவாத்தியமாக இருப்பதால் RVக்கு எழுதுவதில் சுமை குறைந்த ஒரு ஃபீலிங் இருக்கும் என நினைக்கிறேன்)

எங்களுக்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று நம்பும்

RV and Bags

பற்றி Bags
Trying out

11 Responses to முதலாம் ஆண்டு நிறைந்தது – இரண்டாம் ஆண்டு உதயமாகிறது

  1. சாரதா says:

    வாழ்த்துக்கள் – இன்னும் பல்லாண்டுகள் தொடர்வதற்கு.

    நன்றிகள் – என்னையும் நல்ல வாசகர்களில் சேர்த்துக்கொண்டதற்கு.

  2. Bags says:

    நன்றி பாஸ்டன் பாலா, சாரதா

    சாரதா, இதுவரையில் RVக்கு அதிகமாக எழுத முடிந்தது. எதிர்காலத்தில் அதிகம் எழுத முடியாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் எழுத உத்தேசமே.

  3. சாய்கணேஷ் says:

    வாழ்த்துகள் நண்பரே

  4. நல்லதந்தி says:

    வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!. (என்னை நல்ல வாசகர் பட்டியலில் சேர்க்காமல் விட்டதற்கு கொஞ்சம் கோபத்துடன்! (சும்மா தமாஷூக்கு! :))

    நல்லதந்தி

  5. Bags says:

    சாய்கணேஷ், நல்லதந்தி – நன்றி

  6. surya says:

    என்னாச்சு..?? Very Long Leave.. எனக்கும் வேலை பளுவால் முன்பு போல் எழுத முடியவில்லை.

    இங்கேயும் வந்து பார்த்தால் கடை மூடியே கிடக்கு..

    சீக்கிரம் கடைய தொறங்க…

  7. Bags says:

    ஆமாம் சூர்யா. வேலை பளுதான். திறக்கிறோம்.

  8. ஞாநி says:

    நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

    அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

    கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

சாரதா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி