அண்ணாவின் ஓரிரவு பற்றி கல்கி சொன்னது


ஓரிரவு பற்றி இப்போதுதான் எழுதினேன். தற்செயலாக சாண்டில்யனின் memoirs-ஐ – போராட்டங்கள் என்ற புத்தகம் – புரட்டியபோது கல்கி எழுதியது கண்ணில் தென்பட்டது. இதை கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுந்தா எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஓவர் டு கல்கி!

தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.

ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாததுரை.

(கல்கி இதழ் 07-12-47)

My two cents: என்னுடைய கருத்துப்படி ஓரிரவை விட வேலைக்காரி நல்ல நாடகம். Duex ex machina என்று சொல்லப்படும் தற்செயல் நிகழ்ச்சிகள் அண்ணாவின் நாடகங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உண்மையில் நாடகங்கள் அவரது இயக்கத்தின் கருத்துகளை முன் வைக்கும் வசனங்களை கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு சாதனம் என்று தோன்றுகிறது. அப்படி இருப்பதில் தவறில்லை. ஷாவும் இப்சனும் ப்ரெக்டும் கூட அப்படிப்பட்ட நாடகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அண்ணாவின் நாடகங்களில் செயற்கைத்தன்மை அதிகமாக காணப்படுகிறது.

கல்கி எழுதுவதிலிருந்து ஒன்று விளங்குகிறது. அந்த கால நாடகங்களை விட இவை நல்ல கதை அம்சம் கொண்டவை ஆக இருக்க வேண்டும். சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதிய சாரங்கதாரா, இரணியன் நாடகங்களை படிக்க முடிவதில்லை. சாமிநாத சர்மா எழுதிய அந்த காலத்தில் பிரபலமான பாணபுரத்து வீரன், அபிமன்யு போன்ற நாடகங்களும் அப்படி சிறந்த நாடகங்கள் என்று சொல்லிவிட முடியாது. அவற்றுடன் ஒப்பிட்டால் வேலைக்காரி, ஓரிரவு இரண்டுமே நல்ல கதை அம்சம் உள்ளவைதான். நல்ல வசனங்களும் இருப்பதால் கல்கி பூரித்துப்போய் இருக்கவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்: ஓரிரவு திரைப்பட விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to அண்ணாவின் ஓரிரவு பற்றி கல்கி சொன்னது

  1. verummaramum says:

    why bramins are opposing Tamileelam?
    Bramins cannot earn in Tamileelam thr’ “PARIKAARA POOJAI”

  2. RV says:

    Verummaramum,
    What are you talking about?

  3. Karthik says:

    RVS, sambantham illatha comments allow pannatheenga

பின்னூட்டமொன்றை இடுக