சிரஞ்சீவி (Chiranjeevi)


1984இல் வந்த படம். 1964இல் வந்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். இருபது வருஷம் லேட்டான கதை சிவாஜியின் மைனஸ் பாயிண்டுகளை அழுத்தமாக காட்டுகிறது. உதாரணமாக சிவாஜி தான் ரிடையர் ஆகப் போகிறோம் என்று தெரிந்ததும் “நடிக்கும்” காட்சியை 1964இல் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று கொண்டாடி இருப்பார்கள். அஃப் கோர்ஸ், 1964இல் வந்திருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் யாராவது 2008இல் பார்த்துவிட்டு என்னா ஓவர் ஆக்டிங் என்று கமென்ட் அடித்திருப்போம்.

சிவாஜி, ஜெய்கணேஷ், ஸௌகார், ஸ்ரீப்ரியா, விஜயகுமார், கோபி, மனோரமா, தேங்காய், ஒரு விரல் கிருஷ்ணாராவ் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ் எஸ் பாஸ் அடியாள் ரேஞ்சில் வில்லனாக வருகிறார். எம்எஸ்வி இசை. கே. சங்கர் இயக்கம்.

இந்த கொடுமைக்கு கதை சுருக்கம் எல்லாம் தேவை இல்லை. ஆனால் பாட்டுகளும் சுகம் இல்லை, என்னதான் எழுதுவது?

கப்பலில் நிகழும் கதை. வடிவேலு பாணியில் சொன்னால் சிவாஜி ரொம்ப நல்லவஅஅஅர். ஃப்ளாஷ்பாக்கில் ஸௌகார் தன் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறார். பிற்காலத்தில் அடையாளம் கண்டுபிடிக்க வசதியாக அதற்கு ஒரு மச்சம் இருக்கிறது. ரவிக்கையை கிழித்து காட்டுவதற்காக மச்சம் முதுகில் ப்ரா ஸ்ட்ராப்புக்கு கொஞ்சம் மேலே இருக்கிறது. ப்ரயாச்சித்தமாக ஸௌகார் சொத்தை எல்லாம் அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்க விரும்புகிறார். அவருக்கு பேங்க் ட்ராஃப்ட், வைர் ட்ரான்ஸ்ஃபர் பற்றி எல்லாம் தெரியாததால் எல்லா பணத்தையும் வைரமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருகிறார். அதை திருட விஜயகுமார், சத்யராஜ், இரண்டு மூன்று சைடிக்களோடு வருகிறார்கள். அதிக பிரசங்கித்தனமாக பேச ஒரு சின்னப் பையன். சென்னைக்கு போய் தூக்கில் தொங்கப்போகும் சரத்பாபு. அவரைக் காப்பாற்ற பைத்தியமாக நடிக்கும் ஸ்ரீப்ரியா. ஸ்ரீப்ரியா, ப்ரா ஸ்ட்ராப், மச்சம் என்றதும் அவர்தான் சௌகாரின் மகள் என்று கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு ஒரு நாற்பது வயது என்று நான் கண்டுபிடித்துக்கொள்வேன். சிவாஜியை பற்றி உருக கப்பலின் காப்டன் ஜெய்கணேஷ், கப்பலின் டாக்டர் கோபி. சிவாஜி படம் பூராவும் நம்ம உயிரை வாங்கிவிட்டு கடைசியில் அவரும் உயிரை விட்டுவிடுகிறார்.

திரைக் கதை, நடிப்பு எல்லாமே sloppy. உதாரணமாக ஜெய்கனேஷிடம் ஒரு சைடி வந்து தான் ஸௌகாரின் மகள் இல்லை, ஸ்ரீப்ரியாதான் அது என்று சொல்வாள். அவள் உண்மையை சொல்வதற்கு முன்னாலேயே ஜெய்கணேஷ் ஒரு அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டிவிடுவார். நம்ம வேலையை நம்ம முடிச்சுடுவோம் என்று நினைத்துவிட்டார். உண்மையை சொல்லப் போனால் இந்தப் படத்திலும் திறமையாக நடிப்பவர் சிவாஜி மட்டும்தான்.

சிவாஜிக்கு ஓவரால் போட்டால் ஒரு பீப்பாய் தோற்றம் வருகிறது. நல்ல வேளையாக இந்தப் படத்தில் அவர் வயதானவராக வருகிறார், கோரமாக தெரியவில்லை.

பாட்டுக்கள் ஒன்றும் சுகம் இல்லை.

காலேஜ் படிக்கும்போது பார்க்காமல் தவிர்த்துவிட்டேன். வயதாக ஆக புத்தி குறைந்துகொண்டே போகிறது, அதனால் இப்போது பார்த்து தொலைத்துவிட்டேன். இதெல்லாம் முத்தான படம் என்றால், சண் டிவிக்கு எதுதான் மோசமான படம்?

10க்கு 3 மார்க். இதுவும் சிவாஜிக்காகத்தான். சிவாஜி இல்லை என்றால் இவ்வளவு மார்க் கூட கிடைத்திருக்காது. D grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to சிரஞ்சீவி (Chiranjeevi)

  1. Bags says:

    >>>சிவாஜி படம் பூராவும் நம்ம உயிரை வாங்கிவிட்டு கடைசியில் அவரும் உயிரை விட்டுவிடுகிறார்.

    LOL. என் “வெறுப்பேற்றிய சிவாஜி படங்கள்” லிஸ்டில் மேலும் ஒன்று. இந்த லிஸ்டை வரிசைப் படுத்தி வேறு எழுத வேண்டுமா?

  2. plum says:

    chiranjeevi was a nightmare. Doordarshanla paarthirukkaen.
    Jaiganesh eppavume appadi thaan. ivaroda female counterpart Vijayakumari(SSR). Pongal appo paanai pongi varum paarthurkeengala? Adhai apdiye humanize pannina, male version jaiganesh, female version Vijayakumari dhaan 🙂

    Indha padamellam sivajiyin sabakedu – indha kedu keta tamil film industry-la irundhadhukku. Self-promotion techniques illadhadhanala, he had to be part of such movies. Hm…avar talent-ai exploit panna aale illai 70’s-80’s la.

  3. bsubra says:

    உங்க விமர்சனத்துக்காகவே இப்படிப்பட்ட படம் எல்லாம் சன் டிவியில் அடிக்கடி போடணும் 🙂

  4. RV says:

    bsubra,

    நீங்களும் பார்க்கணும். :-))

  5. sen says:

    It has the hit song “Anbenum Oliyaga Alayamaniyaga”. MSV-TMS Combo.

  6. RV says:

    எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, ஆனால் படத்தில் சிறந்த பாட்டு “அன்பெனும் ஒளியாக” தான்.

  7. இந்த படத்தில் சிவாஜி ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ..TOPAZ..!

    க்ளைமாக்சில் ஏசு சிலுவையில் அறையப்பட்டதுபோல சிவாஜியை கட்டிவைத்து அடித்துக் கொல்வதெல்லாம் ரொம்ப அழும்பு..!

  8. RV says:

    ராஜா,

    சிவாஜி பற்றி சொன்னது ரொம்ப சரி – ஓவர் அழும்புதான்.

பின்னூட்டமொன்றை இடுக