கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”


ஜன்னல் மலர்  |  

‘ஜன்னல் மலர்‘  பற்றி சுஜாதா…..

சினிமாவாக எடுத்துக் கெடுக்கப்பட்ட என் கதைகளில் மற்றும் ஒன்று  ‘ஜன்னல் மலர்’.

விகடனில் நான் எழுதிய முதல் தொடர்கதை ‘ஜன்னல் மலர்‘.   தொடர்கதை என்பதைவிட குறுநாவல் என்று சொல்லலாம்.   அப்போது விகடனில் துணை ஆசிரியராக இருந்த பரணீதரன் எனக்கு ஒரு முறை போன் செய்து, ‘இந்தக் கதையின் முடிவில் ஒரே ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார்.   நான் ‘தாராளமாக‘ என்று அனுமதி கொடுத்தேன்.  அந்த ஒரு வார்த்தை கதைக்கு மெருகூட்டியது.

சிறையிலிருந்து திரும்பி ஆவலுடன் மனைவியைச் சந்திக்க வரும் கணவன், தான் உள்ளே இருந்தபோது மனைவி எப்படி உயிர் வாழ்ந்தாள் என்பதை அறிந்து, அதிர்ச்சியுற்று மீண்டும் சிறைக்குச் சென்று விடுவான்.  இந்தக் கதையுடன் எந்த விதத்தொடர்பும் இல்லாமல் ஒரு படம் எடுத்தார்கள்.  நடிகவேள் எம்.ஆர். ராதாவும். ஸ்ரீப்ரியாவும், ஸ்ரீகாந்தும் நடித்தார்கள்.  வேறு எதுவும் எனக்குச் சுத்தமாக ஞாபகம் இல்லை.  அதில், கே. ஜே. ஜாய் என்கிற மலையாள இசையமைப்பாளரின் ஒரு பாடலை இன்னும் சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.  படத்தின் தயாரிப்பாளர்கள் வைத்த பெயர் மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  ‘யாருக்கு யார் காவல்?’ யாராயிருந்தால் எங்களுக்கென்ன என்று ரசிகர்கள் விலகிக்கொண்டார்கள்.

யாருக்கு யார் காவல் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

4 Responses to கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

  1. சாரதா says:

    இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சுஜாதா புரியாத மனிதராக தெரிகிறார். முதல் ஒன்றிரண்டு தரம் “திரைப்படமாக்கல்” முறையில் தனது கதைகள் சிதைக்கப்பட்டு ஜீவனை இழந்தன என்பதைக் கண்கூடாகத் தெரிந்துகொண்டே, ஏன் திரைப்படமாக்க தன் கதைகளை திரும்ப திரும்ப கொடுத்தார்..?.

    சரி, வருமானத்துக்காகக் கொடுத்தாரென்றால், அதன்பின் ‘சிதைத்து விட்டார்கள்’ என்ற பிலாக்கணம் பாடுவது ஏன்?.

  2. srinivas uppili says:

    அருமையான கேள்வி சாரதா…

    உங்கள் கேள்விக்கு சுஜாதா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்…

    என் பத்திரிகைத் தொடர்கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு எதுவும் வியாபார வெற்றி பெறவில்லை. எனக்கும் சில்லறை புரளவில்லை. ஆனால், ஒரு நன்மை நிகழ்ந்தது. ‘வேண்டாங்க.. ராசியில்லாத எழுத்தாளர். ஏதும் சரியாப் போகலை. படம் பாதில நின்னு போய்டுது. எடுத்தாலும் படுத்துக்குது. எதுக்குங்க எழுத்தாளரை நாடணும் ? நூறு கதை நாமளே செய்துக்கலாம். தேவைப்பட்டா….” என்று என்னை விட்டுவிட்டார்கள். பத்திரிகைத் தொடர்கதைகளை சினிமா எடுக்கும் வழக்கமே ஒழிந்து போனதற்கு, என் கதைகள் முக்கியக் காரணம்.

    படிக்க நன்றாக இருப்பது நடிக்க நன்றாக இருக்கும் என்பது கட்டாயமில்லை. ஆனால் நான் வசனம் மட்டும் எழுதிய படங்கள் பெரும்பாலும் வெற்றி கண்டன.

  3. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

  4. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக