நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி


இந்த விவரங்களும் விமல் அனுப்பியது என்பதை குறிப்பிட மறந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடித்த பாணா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால் அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொரு புறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. (ஆர்வி: Murali comes across a simple, straightforward man with no hangups.) கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை. அந்தப் பேட்டி கீழே.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

பார்க்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக விவரம் கீழே.

எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம். ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.

என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்‌‌டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்பேன். அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.

பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட் நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.

நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்‌டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாத‌டா நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.

இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பாணா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் – அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.


எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப் பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.

அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.

இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

(நன்றி : தினமலர்)

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
முரளி பட லிஸ்ட்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

  1. விமல் says:

    இது சில வருடங்கள் முன்பு நடந்த சம்பவம். முதல்வரை சந்தித்து தங்களது கோ‌ரிக்கையை வலியுறுத்த திரையுலகினர் செல்கிறார்கள். முதல்வ‌ரின் அறைக்குள் பிரதிநிதிகள் செல்லும் நேரம், “முக்கியமான ஒரு விஷயம்” என ஓடி வருகிறார் சத்யரா‌ஜ். எல்லோரும் என்ன என்று பதறிப் போகிறார்கள். சத்யரா‌ஜ் அவர்களிடம் சொன்னார்,

    “நம்ம முரளி ரொம்ப வருஷமா காலே‌ஜ் போய்ட்டு இருக்கார். சி.எம். கிட்ட சொல்லி அவரை எப்பிடியாவது பாஸ் பண்ண வச்சிருங்க.”
    சீ‌ரியஸான அந்த சபை சி‌ரிப்பொலியில் நிறைகிறது.

    நாற்பதை தொட்ட பிறகும் முரளி கல்லூ‌ரி மாணவராக நடித்ததையே சத்யரா‌ஜ் இப்படி கிண்டல் செய்தார். நான்கு பத்தாண்டுகள் கழிந்த பிறகும் கல்லூரி மாணவராக நடிக்கும் அளவுக்கு இளமையுடன் இருந்த முரளி ஐந்தாவது பத்தாண்டை எட்டிப் பிடிக்கும்முன் இறந்து போனது திரையுலகை மட்டுமல்ல, தமிழக ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு முரளிக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. 2007-08 வருடங்களில் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த காலகட்டத்தில் அவரது கவனம் வா‌ரிசுகளின் வளர்ச்சியில் குவிந்திருந்தது. மகனை நடிகனாக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் முதலில் கைநழுவி பிறகு இந்த வருடம் பாணா காத்தாடி மூலம் நிறைவேறியது. மகளின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முரளி நாள் குறித்திருந்தார். காலன் அவர் உயிரை பறித்த நேரம் அவர் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களை சிறப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார், அது குறித்து கனவு கண்டு கொண்டிருந்தார்.

    அந்தக் கனவுகள் நனவாகும் முன்பே காலன் தமிழகத்தின் மென்மையான காதலனின் உயிரை பறித்துக் கொண்டுவிட்டான். இளமை தீரும் முன்பே முரளி இவ்வுலகை ‌வி‌ட்டு நீங்கிவிட்டார். காலம் உதிர்த்த கண்ணீர் துளி என்றில்லாமல் இந்த மரணத்தை எப்படி எடுத்துக் கொள்வது ?

    ———————————
    நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம்.

    முரளி 5-10 வருடங்களுக்கு முன்பு பயங்கர குடிகாரராக (மற்றும் போதை பழக்கம்) இருந்ததாகவும், தற்போது தன் காதல் மனைவியுன் அன்பு மற்றும் கண்டிப்பு காரணமாக குடிப்பழக்கத்தையும், போதை பழக்கத்தையும அறவே விட்டு விட்டதாகவும், ஆனால், முன்பு இருந்த அந்த பழக்கங்களால் தான் இந்த மாதிரி ஒரு முடிவு ஏறபட்டுவிட்டது என்றும் கேள்விப்பட்டேன்

    இது எந்த அளவு உண்மை உள்ள செய்தி என்று தெரியவில்லை.
    விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம் .

    • RV says:

      சாரதா, 37 வயதில் மரணம் என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. விமல் விவரங்கள் அனுப்பி இருக்கிறார், பதிவாக போட்டுவிடுகிறேன். விமல், அப்படியே சிவாஜி பாட்டு பற்றிய விஷயங்களையும் பதிவாக போட்டுவிடுகிறேன். முரளி பற்றிய விவரனக்ளுக்கு நன்றி! சத்யராஜ் நன்றாக ஜோக் அடிக்கிறார்!

      கண்பத், சாமிக்கண்ணு பற்றி எழுதியதற்கு நன்றி!

      • விமல் says:

        டியர் RV, சிவாஜி பாட்டு பற்றிய 3 விஷயங்களையும் ஒரே பதிவாக போடுவதை விட, அந்த 3 விசயங்களையும் தனித்தனி பதிவுகளாக போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். இந்த முடிவை எடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். 🙂

  2. விமல் says:

    நடிகர் முரளியின் இறுதி பத்திரிக்கை பேட்டி ! (நன்றி – தினகரன்)

    46 வயதில் மாரடைப்பால் நடிகர் முரளி காலமானார் என்ற செய்தியை இன்னமும் நம்ப முடியவில்லை.

    திரையுலகின் நிரந்தர மா‘ண’வர்… இப்போது நிரந்தர துயிலில்.

    03.09.2010 தேதியிட்ட ‘தினகரன் வெள்ளி மலரில்(கவர் ஸ்டோரி பகுதியில்)’ அவரது மகன் ஆதர்வாவுடன் இணைந்து அவர் பேசியதை டூயட் பேட்டியாக வெளியிட்டிருந்தோம்.

    அதுவே அவரது இறுதிப் பேட்டியாக அமைந்துவிட்டது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

    —————————————————————
    தன் மகனை கலைத்துறையில் ஒப்படைத்துவிட்டு பிரியா விடை பெற்ற முரளியின் இறப்பு இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.

    அந்த மகத்தான மனிதன் தினகரனுக்கு அளித்த பேட்டியே அவரது கடைசியாக பேட்டியாக அமைந்து விட்டது.

    என்றும் சிரிப்பும், இளமையும் தன்னுடன் வைத்திருந்த முரளி தற்போது நம்மிடம் இல்லை. இதொ அந்த ஆன்மாவின் கடைசி பேச்சு உங்களுக்காக…..

    முரளி: ஷோமுல் நீ பாட்டுக்கு ஹீரோவா நடிச்சிட்ட. நான்தான் தியேட்டர் தியேட்டரா அலைஞ்சிட்டிருக்கேன் தெரியுமா?.

    (செல்லப்பெயர் விளக்கம்: அம்மா ஷோபா + அப்பா முரளி = ஷோமுல்)


    அதர்வா: நீங்க ஏன் டாடி, வயசான காலத்துல இப்படி அலையுறீங்க?

    முரளி: என்னது… ஒரு படத்துல நீ ஹீரோவா நடிச்சிட்டா நான் வயசானவனா? நான் இன்னிக்கும் ஹீரோதான்டா. இன்னும் மெடிக்கல் காலேஜ் பைனல் இயர் ஸ்டூடண்டுதான் தெரியுமா? நீ சினிமால அறிமுகமாகுறதுக்கு முரளி மகன்கற அடையாளம் போதும்தான். ஆனா, அடுத்த கட்டத்துக்கு போகணும்னா எல்லார் மனசுலயும் நீ ரிஜிஸ்டர் ஆகணும். அது ‘பாணா காத்தாடி’ல கிடைச்சிருக்கு. அதுக்காக நான் சும்மா இருந்துட முடியுமா? தியேட்டர் தியேட்டரா போயி, ‘இவன் என் மகன். பார்த்துக்குங்க’னு ரசிகர்கள்கிட்ட, ஒரு தகப்பனா கேட்க வேண்டியது என் கடமையில்லையா?

    அதர்வா: சந்தோஷமா இருக்குப்பா. உங்க நம்பிக்கையையும், ஆசையையும் நிச்சயமா காப்பாத்துவேன். அதுக்காக நீங்க இன்னும் மெடிக்கல் காலேஜ் ஸடூடண்டா நடிப்பேன்னு சொல்றதைத்தான் தாங்கிக்க முடியல. உங்களை வச்சே, உங்களை கிண்டல் பண்ணி ‘பாணா காத்தாடி’ல சீன் வச்சும் திருந்த மாட்டேங்றீங்களே?

    முரளி: நீ ஆயிரம் இருந்தாலும் அம்மா புள்ளைதானடா. அதான் அப்பாவை கிண்டல் பண்ற. சரி, என் மகன்தானே பண்ணிக்கட்டும்னு அந்த சீன்ல நடிச்சுக் கொடுத்தேன். இன்னிக்கும் ‘இதயம் ராஜா’னு சொன்னதும் ரசிகர்கள் என்னமா கைதட்டுறாங்க. 19 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம் இன்னும் ரசிகர்கள் மத்தியில நிக்குதுன்னா பாத்துக்க… அந்த மாதிரி உன் படங்களும் சாதிக்கணும்.

    அதர்வா: உங்களோட எல்லாப் படமும் எனக்கு பிடிக்கும். ஆனா, ஏன் டாடி 14 ரீல் வரைக்கும் காதலைச் சொல்லாமலே இருக்கீங்க?

    முரளி: ஷோமுலு குட்டி… அப்பா படத்துலதான்டா அப்படி. நிஜத்துல உங்கம்மாவை காதலிச்ச ஒரு வாரத்துல ‘ஐ லவ் யூ ஷோபா’னு அத்தனை லாங்குவேஜ்லேயும் சொல்லிட்டேன். ஏன்னா அரை இஞ்சுக்கு மேக்கப் போட்டாலும் அப்பா கலரு உனக்குத் தெரியும். ஆனா, உங்கம்மா ரோஸ் கலரு. கொஞ்சம் அசந்தா வேற எவனாவது காதலைச் சொல்லிடப் போறானோன்னு பயம். அதனால டக்குன்னு சொல்லிட்டேன். நீயும் யாரையாவது காதலிச்சா டக்குன்னு சொல்லிடு. ஆனா, காதலிக்கிற பொண்ணு வெறும் மனைவியா மட்டும் இல்லாம ஒரு தாயாவும் இருப்பாளானு மட்டும் பாத்துக்க. ஏன் சொல்றேன்னா இன்னிக்கும் நான் இளமையா, மகிழ்ச்சியா இருக்கேன்னா அதுக்கு காரணம், உங்கம்மா எனக்கும் அம்மாவா இருக்கறதுதான்…

    அதர்வா: அம்மாவுக்கு என்னமா ஐஸ் வைக்குறீங்க… (முரளி முகம் சுருங்க) சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டாடி. அம்மா மேல நீங்க வச்சிருக்குற பாசம் எங்களுக்குத் தெரியும். அதேமாதிரிதான் நான், அக்கா, தம்பி எல்லாருமே. நீங்க ஷூட்டிங், ஷூட்டிங்குன்னு பாதிநாள் வெளியூர்லதான் இருப்பீங்க. ஸோ, நாங்க அம்மா கூட இருந்த நேரம்தான் அதிகம். அதனால அம்மா பிள்ளையாவே வளர்ந்துட்டோம். ஆனாலும் அதே அளவு பாசம் உங்க மேலயும் இருக்கு. எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அப்படி பாத்துக்கிட்டீங்க டாடி. ஆனா, நடிக்க மட்டும் சொல்லித்தர
    மாட்டேன்னு மறுத்துட்டீங்களே?

    முரளி: அப்படியில்ல ஷோமுலு. நான் உனக்கு நடிப்புச் சொல்லித் தந்தா, நீ இன்னொரு முரளியாத்தான் வருவே. ஒரு முரளியவே தாங்க முடியாம சினிமாத் தவிக்குது. இதுல இன்னொரு முரளி தேவையா?. அதான் நாசர்கிட்ட அனுப்பினேன். நானெல்லாம் சும்மாடா… வேட்டிய மடிச்சுக் கட்டி அரிவாளைத் தூக்கிக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டு, மைக்கை தூக்கி பாடிக்கிட்டு, சட்டைக் காலரை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசி, கடைசி வரைக்கும் காதலைச் சொல்லாத கேரக்டர்லேயே நடிச்சு முடிச்சாச்சு. என்னை விட நாசர் சார் மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்
    டுங்ககிட்டதான் நடிப்பு கத்துக்க முடியும். அதான் அவர்கிட்ட அனுப்பி வச்சேன்.

    அதர்வா: அக்காவை டாக்டராக்கின மாதிரி, என்னை இன்ஜீனியராக்கணும்னு ஆசைப்பட்டீங்க. நான் திடீர்னு நடிக்கணும்னு சொன்னப்போ நீங்க வருத்தப்பட்டீங்களா?
    முரளி: நிச்சயமா இல்லை. நீ என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே, நானும் உங்க அம்மாவும் உனக்குள்ள நடிக்கிற ஆசை இருக்குனு புரிஞ்சுகிட்டோம். நீ எங்களுக்கு பயந்து கதவைப்பூட்டிக்கிட்டு விடிய விடிய திருட்டுத்தனமா படம் பார்த்துக்கிட்டிருந்ததை கண்டுபிடிச்சோம். அப்பவே முடிவு பண்ணினேன். ஆஹா… நம்ம வீட்டுல இன்னொரு ஹீரோ இருக்கான்னு. அதுக்குப் பிறகுதான் நீ வந்து சொன்னே. சந்தோஷமா இருந்துச்சு. என்னைவிட உங்கம்மாவுக்கு பெரிய சந்தோஷம். ஏற்கெனவே ஒரு விஜய் இருக்குறதால உன்னோட பெயரை அதர்வான்னு மாத்தினா. (உச்சிஷ்ட மகா கணபதியின் இன்னொரு பெயர் அதர்வா!) நானும் சண்டை, டான்ஸ் கத்துக்க அனுப்பி வைச்சேன்.

    அதர்வா: நல்ல காலம் டான்ஸ் கத்துகிட்டேன் டாடி. இல்லேன்னா, ‘முரளி பையன் அவர் மாதிரியே ஆடுறான்’னு எல்லாரும் கிண்டல் பண்ணியிருப்பாங்க.

    முரளி: ‘பிரபுதேவாவப் பாருங்க, எப்படி ஆடுறாரு’னு என்னை கிண்டல் பண்ணுவ. நானும், ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாமிரபரணி தண்ணிய வச்சுன்னு…’ ஆடியிருக்கேன். ஆனா, பிரபுதேவா பிரேக் உள்ள பைக். நான் பிரேக் இல்லாத மாட்டுவண்டி. என்னோட டான்ஸ் அவ்ளோதான் இருக்கும். ஆனா நீ ‘பாணா காத்தாடி’ல சூப்பரா ஆடியிருக்க. நம்மளால முடியாததை நம்ம பையன் செய்யறானேன்னு
    சந்தோஷப்பட்டேன்.

    அதர்வா: உங்கள பாத்து ஹீரேவாக ஆசைப்பட்டாலும் கமல் சாரைப் பார்த்துதான் நடிக்க ஆசைப்பட்டேன். அவர்தான் எனக்கு மானசீக குரு. முதல்பட பூஜைக்கு நீங்க எனக்கு நான் ஆசைப்பட்ட காரை பிரசண்ட் பண்ணி, சர்ப்ரைஸ் கொடுத்தீங்க. கமல்
    சார் பூஜைக்கு வரலை. ஆனா, மறுநாள் அவர் ஆபீசுக்கு கூப்பிட்டு என்னோடு போட்டோ எடுத்து, அதை ஆள் உயரத்துக்கு புளோ&அப் பண்ணி அதுல, ‘தோளுக்கு மிஞ்சிய தோழா, தொழிலிலும் மிஞ்ச வாழ்த்துகள்’னு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ரெண்டுமே எனக்குப் பொக்கிஷங்கள்.

    முரளி: உனக்கு கமல் சார் மாதிரி, எனக்கு சிவாஜி சார். என்னதான் முட்டி மோதிப்பார்த்தும் அவர் பக்கத்துல கூட நெருங்க முடியல. நீயாவது கமல் சார் கிட்ட நெருங்க முடியாட்டியும் அவர் மாதிரி புதுசு புதுசா நடி. சினிமாவை வெறித்தனமா நேசி. சினிமால கிடைச்சதை சினிமாவுக்கே கொடு. வாழ்த்துகள் ஷோமுலு.

    அதர்வா: தேங்க்ஸ் டாடி.
    —————————————————————

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி