கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”


அனிதா - இளம் மனைவி  |  

அனிதா இளம் மனைவி பற்றி சுஜாதா கூறுகிறார்….

குமுதம் இதழில் நான் எழுதிய இரண்டாவது தொடர்கதை அனிதா- இளம் மனைவி. 1971ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு வைத்த தலைப்பு;அனிதா; மட்டுமே. குமுதம் எடிட்டோரியல் .அதை ‘அனிதா – இளம் மனைவி’ என்று மாற்றினார்கள். இதனால் இக்கதையின் மேல் ஆர்வம் கூடுகிறது என்று எண்ணியிருக்கலாம்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். பஞ்சு அருணாசலம் நிறைய சென்டிமென்ட் பார்ப்பவர்.’  அனிதாவை திரைப்படமாக்குகையில் அதன் பெயரை ‘இது எப்படி இருக்கு’ என்று மாற்றினார். படம் ஓடவில்லை.  அது எடுக்கப் பட்ட விதத்தில் எந்தப் பெயரிலும் ஓடியிருக்காது.

இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.

பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களைப் படமாக எடுப்பதை விட்டுவிட்டார்.
இந்தத் தொடர்கதையை நீண்ட இடைவெளிக்குப் பின் படித்த போது…..
சுஜாதாவின் அதே துள்ளல் நடை.  கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.!


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி

11 Responses to கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

  1. சுஜாதாவின் நாவல் பெயரை கெடுக்காமல் சரியாக செய்தால் மகிழ்ச்சி!

  2. இப்பதிவில் நான் என்பது யாரை குறிக்கிறது? சுஜாதாவையா? ஸ்ரீனிவாஸ் உப்பிலியையா? சுஜாதா இக்கதை பற்றி சொன்னதை கொட்டேஷன் குறிகளுக்குள் போட்டிருக்கலாம்.

    மேஜர் சுந்தரராஜன் உப்பிலியுடன் பேசியிருப்பதாக இப்பதிவில் வர வாய்ப்பில்லை. அதே நேரத்தில், “பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களைப் படமாக எடுப்பதை விட்டுவிட்டார்.
    அனிதா இளம் மனைவியை நீண்ட இடைவெளி கழித்து மீண்டும்படித்தபோதும் சுஜாதாவின் நடை அதே துள்ளலுடன் இருந்ததை உணர்ந்தேன். கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார்” என இப்பதிவில் வந்திருப்பது குழப்பத்தை இன்னும் கூட்டுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. srinivas uppili says:

    அன்புள்ள டோண்டு ராகவன்,

    தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி. திருத்திய பதிவு உங்கள் பார்வைக்கு.

    அன்புடன்,
    ஸ்ரீநிவாஸ்

  4. சாரதா says:

    ‘இது எப்படி இருக்கு’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘அனிதா – இளம் மனைவி’ என்ற பெயரிலேயே எடுத்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் கூடுதலான நாட்கள் ஓடியிருக்கும். அட்லீஸ்ட் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களையாவது டைட்டில் இழுத்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் சற்று அதிகமாகவே ‘ரஜினி, இளையராஜா’ பித்துப்பிடித்து அலைந்தார் பஞ்சு அருணாச்சலம் என்பது உண்மை.

  5. Rajagopalan says:

    It was sad to see that none of Sujatha’s stories were translated into movies in their true spirits. “Karaiyellam shenbagappoo…” was an excellent example.The way sujatha narrates the last railway platform sequence was awe inspiring.But ,sadly, we were not able to see that “impact” in the movie.

  6. இந்தப் படத்தை பற்றி சொல்ல நிறைய விஷ்யம் இருந்தாலும், இதைப்பற்றி இராணி பத்திரிக்கையில் படித்த துணுக்கு ஞாபகம் வருகிறது இதழ் (25.12.77)

    “இது எப்படி இருக்கு?”
    இரஜினிகாந்தினால் புகழ் பெற்று விட்ட இந்த வசனம், இப்போது ஒரு படத்தின் பெயர் ஆகிவிட்டது. ஜெய்சங்கரும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடிக்கிறார்கள் . இந்தப் படத்தை விஜயமீனா பிலிம்சார் தயாரிக்கிறார்கள்.
    டைரக்சன்: பட்டாபிராமன்.

  7. “இது எப்படி இருக்கு?” படத்திற்கும் பார்த்திபன் கனவு படத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் கஷ்டப்பட்டு பார்க்கலாம்.
    பார்த்திபன் கனவு வெளியான போது அது தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது. கல்கி எழுதி தொடராக வந்தபோது பல்லவர்களின் எதிரியான சோழமன்னனின் மகனுக்கு ஒரு சாமியார் கதை முழுக்க உதவி செய்வார். அந்த சாமியார் ஒரிஜினல் சாமியார் அல்ல என்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் யார் என்பது சஸ்பென்ஸ். இந்த சஸ்பென்ஸ் கதைமுடியும் போதுதான் உடையும். திரைப் படத்தில் இந்த பூடகம் முதலிலேயே கிழிந்து போய்விடும். பல்லவ மன்னராக வரும் ரங்காராவ் சாமியார் வேடத்தில் வந்த உடனேயே இரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காலி!. நாவலின் முக்கிய நீரோட்டமே படத்தில் காலி!, எனவே படமும் காலி!.
    இதே போல் இது எப்படி இருக்கு படத்திலும் நடந்தது. இளம் மனைவியின் வயதான கணவரான தொழில் அதிபர் கொலை செய்யப் படுகிறார். அவரைக் கொலை செய்தது யார் என்பதுதான் சஸ்பென்ஸ். கடைசியில் கிளைமாக்ஸில்தான் கொலையுண்டது தொழில் அதிபரின் வேலைக்காரன் அவரைக் கொலைசெய்த்தே தொழில் அதிபர்தான் என்ற உண்மைத் தெரியவரும். படத்தில் தொழில் அதிபரான மேஜர் உயிரோடு இருப்பது இரசிகர்களுக்குத் தெரிந்து தேமே என்றே படம் பார்த்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் முன்னமே உடைந்து படம் ஒரு பிடிப்பே இல்லாமல் ஊறும்.
    இதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று அப்போது யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. தோல்விக்கு காரணம் ஜெய்சங்கர் சீசன் முடிவுக்கு வந்து கொண்டு இருந்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.

  8. srinivas uppili says:

    நன்றி நல்லதந்தி. அருமையான கோணத்தில் இந்த இரண்டு படங்களையும் அலசி இருக்கிறீர்கள்.

    அன்புடன்,
    ஸ்ரீநிவாஸ்

  9. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

  10. senthil says:

    YOU ARE SAYING THAT PARTHIBAN KANAVU & ETHU EPPADI ERUKKU HAVE NOT MAINTAINED THE SUSPENSE, SO THE ABOVE MOVIES FAILED. IF THIS ARGUMENT IS CORRECT THEN WHAT ABOUT MALAIKKALLAN -M.G.R IN THE THIEF AND BUSINESS MAN (NORTHERN STATE ORIGIN)- HAVE TREMENDOUS VICTORY EVEN EVERY ONE KNOW THE TWO ARE SAME PERSON. THEN ANOTHER FILM THIGAMBARA SAMIYAR BY DUAL ROLE -M.N.NAMBIAR WITH HIGHLY POPULAR MOVIE FOR HIM WITHOUT ANY CLIMAX.
    T.SENTHIL SRIVILLIPUTTUR

  11. பிங்குபாக்: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக