மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)


சில நாட்களுக்கு முன்னால் இந்த ப்ரோகிராமில் பார்த்த படம். சாரதா/ப்ளம் ஆகியோரின் சில கடிதங்களால் நினைவு வந்தது.

1966இல் வந்த படம். ஜெமினி தயாரிப்பு. இயக்குனர் ஆனந்தவிகடன் ஆசிரியரான பாலசுப்ரமணியம் என்று நினைக்கிறேன். டைட்டில்களில் “பாலு” என்று போட்டிருந்தார்கள். அவர் இயக்கிய முதல் படமாம். சிவாஜியைத் தவிர, சௌகார் ஜானகி, மணிமாலா, முத்தையா(விவரத்துக்கு நன்றி, சாரதா), ஜெயலலிதா, காஞ்சனா, சிவகுமார், ரவிச்சந்திரன், நாகேஷ், எஸ். ராமாராவ், மேஜர் சுந்தரராஜன், நாகையா, சச்சு என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இசை எம்எஸ்வி. நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக தெரியவில்லை.

நவராத்திரியில் சிவாஜிக்கு ஒரு டாக்டர் வேஷம் உண்டு. அந்த நடிப்பை இங்கே மீண்டும் உபயோகப்படுத்தி இருக்கிறார். ஒரு சாந்தமான, அன்பான (பெரிய) குடும்பத் தலைவன். 9 குழந்தைகள். கதையின் ஆரம்பத்தில் சௌகார் மீண்டும் கர்ப்பம் வேறு. பெரிய பணக்காரர். பட்டணத்தில் ஃபாக்டரி. ஒரு சிறு நகரத்தில் (காலேஜ் எல்லாம் இருக்கிறது) குடும்பம். வார இறுதியில் மட்டும் வீட்டுக்கு வருவார். அவரது வரவை எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகள். கொஞ்சம் அசடான அக்கா பையன் தான் வீட்டின் ஆண் பிள்ளை. திருமணமாகி இன்னும் கணவன் வீட்டுக்கு போகாத முதல் பெண் காஞ்சனா. காலேஜில் படிக்கும் இரண்டு பெண்கள், அதில் ஒன்று ஜெ. (ஜெ வேறு எந்தப் படத்திலாவது சிவாஜிக்கு மகளாக நடித்திருக்கிறாரா?) அவர்கள் இருவருக்கும் காதல். ஜெ காதலிப்பது லோகல் காலேஜ் ப்ரின்சிபல் மகன் ரவிச்சந்திரனை. இரண்டாவது பெண் ஸ்டேஷன் மாஸ்டர் பையனான காலேஜ் ப்ரொஃபஸரை காதலிக்கிறாள். காதலுக்கு பச்சை கொடி காட்டும் குடும்பங்கள். நிச்சயதார்த்தத்தின்போது சிவாஜிக்கு இன்னொரு மனைவியும் குடும்பமும் இருப்பது தெரியவருகிறது. ஊர் பெரிய மனிதனுக்கு இருக்கும் ஒழுக்க குறைவால் ஷாக்காகும் எல்லாரும் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட, சௌகார் கிடைத்தது சான்ஸ் என்று அழ ஆரம்பிக்க, கடைசியில் சிவாஜி சௌகாரின் தங்கை மணிமாலாவைத்தான் சௌகார் இறந்துவிட்டார் என்று நினத்து கல்யாணம் பண்ணிக்கொண்டது தெரிகிறது. இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, நின்று போன கல்யாணங்கள் நடக்க, சுபம்!

பாட்டுக்கள் சூப்பர். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “மனமே முருகனின் மயில்வாகனம்”தான். பாடியது ராதா ஜெயலக்ஷ்மி. எழுதியது பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்பு ஜெமினி பிக்சர்ஸை தூக்கிப் பிடித்த ஒரு தூண். அவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். 4 வரிகள்தான், எல்லா வரிகளையும் தருகிறேன்.
மனமே முருகனின் மயில் வாகனம் – என்
மாந்தளிர் மேனி குகனாலயம்
குரலே செந்தூரின் கோவில் மணி – அதில்
குகனே ஷண்முகனே என்றொலி கூவு நீ

சில சினிமா பாட்டுக்கள் பொதுவாக புழங்கும் பக்தி பாடல்களை விட என் மனதை தொடுகின்றன. ‘மனம் கனிந்தருள் வேல்முருகா”, “சுந்தரி சௌந்தரி நிரந்தரியே”, “ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்”, “முருகா முருகா முருகா வருவாய் மயில் மீதினிலே”, “மாசறு பொன்னே வருக”, இந்த பாட்டுகளுக்கும் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் துதித்தேன்”, “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்” போன்ற பாட்டுகளுக்கும் என் மனதில் வித்தியாசம் தெரியவில்லை. உண்மையை சொல்லப் போனால் “டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு” போன்ற வரிகள் வரும் கந்த சஷ்டி கவசத்தை விட இவற்றையே நான் விரும்புகிறேன். (இப்படி எழுதியதற்காக என் அம்மா என்னை மன்னிக்கப் போவதில்லை. ஆனால் அம்மா, காலையில் கந்த சஷ்டி கவசம் சொன்ன பிறகுதான் காப்பி என்று நீ சொன்ன நாட்களையும் நான் மறக்கவில்லை. :-))

“குபுகுபு நான் எஞ்சின்” ஒரு துள்ளலான பாட்டு. ஏ.எல். ராகவனின் கலக்கலான குரல் நாகேஷுக்கு (ஜெமினிக்கும்) நன்றாக பொருந்துகிறது. எல்.ஆர். ஈஸ்வரி இணைந்து பாடியது. “எதிரில் வந்தது பொண்ணு” என்றும் ஒரு ஏ.எல். ராகவன் பாட்டு உண்டு.

“காத்திருந்த கண்களே” பி.பி. ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பாடிய இனிமையான பாட்டு. எழுதியது கண்ணதாசன். ரவிசந்திரனும், ஜெயும் சாத்தனூர் அணைக்கட்டில் பாடுவார்கள். இந்த அணைக்கட்டு இன்னும் அழகாகத்தான் இருக்கிறதா? தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

“துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு” சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இணைந்து பாடும் ஒரு நல்ல பாட்டு.

இதைத் தவிர “காதல் என்றால் என்ன” என்றும் ஒரு பாட்டு உண்டு.

பல பாடல்களை இங்கே கேட்கலாம்.

சிவகுமார் இப்போதும் இளமையானவர்தான். ஆனால் இதிலே உண்மையிலேயே காலேஜில் படிக்கும் பையன் போல இருந்தார். பார்த்ததும் நானும் என் மனைவியும் சிரித்துவிட்டோம்!

சிவாஜி இதிலே மிகவும் அடக்கி வாசித்திருப்பார். கடைசி காட்சியில் தான் மணிமாலாவை கல்யாணம் செய்து கொண்ட காட்சியிலேதான் கொஞ்சம் நடித்துப் பார்ப்பார். தான் 25 வருஷங்களாக பட்ட நரக வேதனையை விவரிக்கும் வசனத்தில்தான் நான் சிரித்துவிட்டேன். அந்த 25 வருஷங்களில் சௌகாருக்கு ஒன்பதோ பத்தோ குழந்தைகள், மணிமாலாவுக்கு நாலோ ஐந்தோ. ஆனால் இவருக்கு நரக வேதனையாம். இவரது சொர்க்கம் எப்படி இருந்திருக்குமோ?

நாகேஷின் நகைச்சுவை பகுதி துப்பறியும் சாம்புவிலிருந்து inspire ஆனது. சாம்புவைப் போலவே இவரும் ஏதாவது செய்யப் போய் திருடர்கள் அகப்பட்டுக்கொள்வார்கள். சிரிக்கும்படி இருந்தது.

நல்ல குடுமப்ப் படம். அருமையான பாட்டுக்கள். நல்ல நகைச்சுவை. சிவாஜியின் மிருதுவான நடிப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

12 Responses to மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)

  1. ullathaisolven says:

    சிவாஜியின் திரைப்படங்களில் அவர் மிகவும் அழகாக
    handsome என்று சொல்வார்களே அது போல அசாத்திய தோற்றத்தோடு அமைந்த படம்
    அருமையான நடிப்பு + தவிப்பு
    அது என்னமோ தெரியவில்லை அவரும் சௌகார் ஜானகியும் நடித்த படங்கள் எல்லாமே ஒரு தனித்தன்மை
    போட்டி போட்டுக் கொண்டு அசத்துவார்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    ஜெயலலிதா + ரவிச்சந்திரன் ஜோடிப்பொருத்தம் கனக்கச்சிதம்
    பாட‌ல்க‌ள் அருமை..மேடையிலே வ‌ருகிற காதல் என்றால் என்ன பாட்டில் TMS & P Susheela பின்னியிருப்பார்கள் !
    காத்திருந்த‌ க‌ண்க‌ளே காட்சிய‌மைப்பும் A1
    எத்த‌னை த‌ட‌வை வேண்டுமானாலும் பார்க்க‌லாம்

  2. RV says:

    சிவாஜி நல்ல கம்பீரமான, சாந்தமான தோற்றத்தில் வருவார். ஸௌகார் எனக்கு அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை. எனக்கு பிடித்த ஜோடி சிவாஜி-பத்மினிதான். பாப்புலரான ஜோடியும் கூட.

  3. rinkster says:

    <>

    lol. Tell me abt it.

    I think Motor Sundaram Pillai was a remake of hindi movie “Grahasthi”… an Ashok Kumar, Nirupa Roy starrer.

    Sivaji’s performance was likable. It was a pretty good family entertainer and I liked the songs. Kaathiruntha kangale was an absolutely lovely duet by PBS and Suseela.

    But the screenplay was a bit implausible at parts. I don’t approve of the scene where Sivaji decides to leave the house impetuously, when sowcar throws a hissy fit after coming to know about his other family. His character was so ruthless.

    Obviously any woman is bound to be perturbed when she comes to know that she has been cheated for 25+ years.

    He would never try to explain his strand to her.

    அப்பறம் கடைசியா சம்பந்தி வீட்டு காரங்க கிட்ட உண்மையை போட்டு உடைக்கும் போது. இப்பக் கூட பொறுமையின் மறு உருவமான என் மனைவி ஒருவளுக்காகத் தான் இதையெல்லாம் சொல்றேனு சௌகாரை ஒரேடியா ஹைப் பண்ணி பேசுவார். 🙄

  4. rinkster says:

    oops I meant to quote this but its not showing up. Sorry about the double post. Please kindly delete it.

    >>தான் 25 வருஷங்களாக பட்ட நரக வேதனையை விவரிக்கும் வசனத்தில்தான் நான் சிரித்துவிட்டேன். அந்த 25 வருஷங்களில் சௌகாருக்கு ஒன்பதோ பத்தோ குழந்தைகள், மணிமாலாவுக்கு நாலோ ஐந்தோ. ஆனால் இவருக்கு நரக வேதனையாம். இவரது சொர்க்கம் எப்படி இருந்திருக்குமோ? >>

  5. RV says:

    rinkster,

    I didn’t feel that the scene of Sivaji walking out was implausible. There are times when you know that the other party is not going to listen to you. Perhaps you are single yet!

    I didn’t know that this was a remake. Thanks for the info!

  6. rinkster says:

    என்னால என்னமோ அதை ஏற்று கொள்ள முடியல. துளி கூட சஞ்சலமே இல்லாமல்… இர்ரேஸ்பான்சிபிலா ஒரு ரிலேஷன்ஷிப்பிலிருந்து, ஈசியா walk out பண்ண முடியுமா? It slightly appeared male chauvinistic to me.

    ஆனால் சிவாஜி அலட்டிக்காமல் ரொம்ப நாட்சுரலாக நடித்திருந்தார் அந்த காட்சியில்.

    I liked his acting but can’t get along with his character.

  7. பிங்குபாக்: பிடித்த பிடிக்காத சிவாஜி படங்கள் « Rinks Weblog

  8. Surya says:

    நல்ல அலசல் & Nice Discussions..

    Good. Keep it up

    Nice to read all.

    Surya
    Chennai
    http://butterflysurya.blogspot.com/

  9. இந்தப்படத்தில் சிவாஜியின் நடிப்பு அபாரம். சிவாஜி ஒரு சாந்தமான பாத்திரத்தில் நடித்திருப்பார்.

    காரின் ஹாரன் சத்தத்தைக்கேட்டு பிள்ளைகள் ஓடி வரும் காட்சியினைக்கண்டபோது எனது பிள்ளைப்பருவம் நினைவில் வரும்.

  10. பிங்குபாக்: துப்பறியும் சாம்பு | சிலிகான் ஷெல்ஃப்

  11. பிங்குபாக்: கொத்தமங்கலம் சுப்பு – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக